4

அன்றைய நாள் வழக்கம் போல் கரைய நவ்யாவின் முதல் நாள் பணியும் முடிவிற்கு வந்தது .மணி ஐந்தாக laptoppai மூடி வைத்த விக்ரம் நவ்யாவின் புறம் பார்க்க அவளோ மிகவும் உன்னிப்பாக லாப்டோப்பில் ஏதோ பதிவேற்றிக்கொண்டிருந்தால் .

அவள் ஒரு கையின் விரல்கள் keyboardil நர்த்தனம் ஆட அவள் உன்னிப்பாய் கவனம் முழுவதையும் குவித்து யோசித்துக் கொண்டே செய்ய அவள் பேனாவின் நுனி அவள் இதழின் மேல் பட்டும் படாமல் இருக்க அவளது முன் நெற்றியில் என்றும் போல் அவளிர்க்கடங்காத இரு முடிகள் அப்படியும் இப்படியும் ஆடிய படி இருக்க ஒரு அழகிய ஓவியமாய் தெரிந்தால் அவள் அவனின் கண்களில் .

யாரோ தன்னை பார்ப்பதை போல் உணர்வு எழ அவள் நிமிர்ந்து நோக்க விக்ரம் அவளை பார்த்து கொண்டிருப்பதை கவனித்து விட்டு என்ன என்று கைகளால் சைகையில் கேட்க அவனோ கண்களை கடிகாரத்தை நோக்கி சைகை காமித்தான் .

கடிகாரத்தை பார்த்தவள் நேரமானதை உணர ஒரு புன்னகை புரிந்தவள் 1 மினிட் என்று கண்களை சுருக்கி கையால் சைகை செய்து விட்டு அந்த வேலையே முடித்துவிட்டு laptoppai மூடி வைத்தவள் தோள்பையை போட்டு கொண்டு எழ அவள் அருகில் வந்தவன் "எப்படி போவீங்க நவ்யா ?"என்க

அவளோ "scooty இருக்கு si..."என்று கூற வந்தவள் அவன் முறைப்பதை பார்த்து லேசாய் நாக்கை கடித்து விட்டு "விக்ரம் நா scootyla பொய்க்குவேன் "என்றவள் அவனிடம் சிறு தலை அசைப்புடன் விடை பெற அவனும் சிறு தலை அசைப்புடன் விடை பெற்றான் .

உள்ளே வந்தவன் காரை ஸ்டார்ட் செய்து பாடலை ஓட விட அதிலோ "நான் போகிறேன் மேலே மேலே

பூலோகமே காலின் கீழே

விண்மீன்களின் கூட்டம் என்மேலே

பூவாளியின் நீரை போலே

நீ சிந்தினாய் எந்தன் மேலே"

என்று வரிகள் ஓட அவனிற்கோ அவளிடம் அழுக்குதண்ணீரால் அபிஷேகம் ஆனது ஞாபகம் வர சிறிதுஉக் கொண்டான்

"நான்

போகிறேன் பன்னீர் பூ போலே

தடுமாறி போனேன் அன்பே

உன்னை பார்த்த நேரம் "

என்ற வரி வர அவனிற்கோ அவளை முதல் முதலாய் பார்த்த பொழுது நடந்த நிகழ்வுகள் கண்முன் தோன்றி புன்னகையை உருவாக்கியது .

அடுத்த வரி "அடையாளம் இல்லா ஒன்றை

கண்டேன் நெஞ்சின் ஓரம்

ஏன் உன்னை பார்த்தேன்

என்றே உள்ளம் கேள்வி கேட்கும்

ஆனாலும் நெஞ்சம் அந்த

நேரத்தை நேசிக்கும் "

என்ற வரிகள் ஓட அவ்வரிகளில் திளைத்திருந்தவன் அப்பாடலோடு விசில் அடித்துக் கொண்டே வண்டியை செலுத்தினான் .

இங்கே இவன் இத்தனை குதூகலமாய் இருக்க அங்கே நவ்யாவோ வண்டியை எடுக்க போனவள் ஏதோ கால் வர எடுத்து பார்த்தவள் ஸ்வஸ்தி என்றிருக்கவும் அட்டென்ட் செய்து "ஸ்வஸ்தி என்னடி "என்க

அவளோ "அந்த பண்ணாடி பரதேசி dashuh ....... என்று திட்டிக் கொண்டே போக

இவளோ "ஹே ஹே ஹே என் காது அவுஞ்சுரும் போல என்னாச்சு "என்க

அவளோ "ஒன்னும் கேக்காத நா சொல்ற இடத்துக்கு வா செம காண்டுல இருக்கேன்"என்க

நவ்யா "என்ன ஏழரைய கூடி வச்சுருக்காளோ "என்று எண்ணிக்கொண்டே வித்யுதிடம் தான் ஸ்வஸ்திகாவை பார்க்க போவதாய் கூறி கொண்டு அவள் கூறிய காபீ ஷாப்பின் முன் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்றால் .

அங்கே ஒரு ஓரத்தில் இருந்த tableil ஸ்வஸ்திகா அமர்ந்திருந்தாள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது .மாநிறமாய் இருக்கும் அவள் முகமே கோபத்தில் அத்தனை சிகப்பாய் மாறி இருந்தது அவள் தோற்றத்தை பார்த்து நவ்யாவிற்கே சிறிது உதறல் எடுத்தது .அவள் முன் வந்து அமர்ந்தவள் ஸ்வஸ்தி என்று அவள் கையை பிடிக்க அவளோ "நா கேட்டேனா நா கேட்டேனா இப்போ நா பிஜி பண்ண போற காலேஜ்ல எனக்கு ப்ரோபஸோராஹ் வானு அவனை நா கேட்டேனா dashuh என்ன கூத்தடிக்குறதுனாலும் வெளிய போய் அடிக்க வேண்டி தான ஏன் என் கண்ணு முன்னாடி அடிக்கணும் "என்று பொரிந்து கொண்டே போக நவ்யாவுக்கோ தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.

அவள் அமைதியாய் ஸ்வஸ்திகாவின் முகத்தை பார்க்க அவளோ தண்ணீரைக் குடித்து சற்று ஆசுவாசமானவள் "ஒரு வாரத்துக்கு முன்னாடி என்னோட பிஜி first டே உனக்கே தெரியும்ல ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணி படுச்சதால மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்லயே சீட் கெடச்சுருச்சு பிஜிக்கு ."என்றவள் அன்றைய கதையை கூற துவங்க (வாங்கப்பா நாமும் கதை கேப்போம் மூணு எபிசோடியாக இவனுங்களையே பாத்தாச்சு )

ஒரு வாரத்திற்கு முன் காலையில் தனது பிஜி படிப்பின் முதல் நாள் மிகவும் உற்சாகமாக கிளம்பிய ஸ்வஸ்திகா "ம்மா நா காலேஜ் போய்ட்டு வரேன்மா "என்று பின்னாடி பார்த்து கொண்டே சென்றவள் சட்டென எதன் மீதோ மோதி தடுக்கி கீழே விழ தான் விழுவதற்கு காரணமாய் இருந்த அவ்வுருவதை க்ரோதத்துடன் அவள் ஏறிட்டு முறைக்க அவள் கண்முன் இருந்ததோ அவளை பார்த்து சிரித்து கொண்டிருந்த சரண் தான் .

எழுந்தவள் "அம்மா டேய்ய் வளந்து கெட்டவனே ஏன்டா இப்டி போஸ்டுஹ் மரம் மாறி வழில வந்து நிக்கிற சரி அதான் விழ போறேன்னு தெரியுதுல ஏன் கைய புடுச்சு காப்பாத்துனா கொறஞ்சா போயிருவ "என்க

அவனோ "தோடா கத்திரிக்காய்க்கு கை கால் முளைச்ச மாறி இருந்துட்டு சௌண்டாஹ் விடுற நீ கண்ணு மண்ணு தெரியாம மோதிட்டு கீழ விழுந்து இடுப்பொடிச்சா நா என்னடி பண்றது .அது மட்டுமில்லாம நீ கீழ விழேல அப்டியே உன் இடுப்பை புடுச்சு காப்பாத்த நீ என் லவர் பாரு போடி கத்திரிக்கா "என்றவன் அவள் தலையை கொட்டி விட்டு இன்னிக்கு என்ன சமையல் அத்தை என்று டைனிங் tabelil வந்து அமர

அவளது தாயோ பெற்ற மகள் அமர்ந்திருப்பதையே மறைந்தவர் போல் அவனை விழுந்து விழுந்து கவனிக்க அதில் கடுப்பானவளோ " பிசாசு பிசாசு எவ்ளோ திட்னாலும் திருந்துதா பாரு .எப்போ பாரு சாப்பாடு சாப்பாடு இவனுக்கு எங்கத்த சரன்னு பேரு வச்சதுக்கு பதிலா சாப்பாடு ராமன்னு பேரு வச்சுருக்கலாம்"என்று முனங்க அவள் முனங்கல் தெளிவாய் கெட்டவன் அவளை முறைத்து விட்டு பாதி சாப்பாட்டிலேயே எழுந்து செல்ல அவளிற்கோ கொஞ்சம் ஓவராக தான் பேசிவிட்டோமோ என்று தோன்றிய அடுத்த நொடி அவனோ வீட்டை விட்டு வெளியேறி இருந்தான் .

அதற்காக பல அர்ச்சனைகளை வாங்கி விட்டு வந்தவள் காலேஜ் முடித்த கையோடு அவனிடம் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணமிட்டுக் கொண்டே செல்ல அங்கோ அவளிற்கு பேரதிர்ச்சி அவளோ பிஜி peadiatricianeh எடுத்திருந்தால் அவளது கல்லூரித் தோழிகளும் அந்த துறையையே அதே கல்லூரியில் எடுத்து படிக்கச் அவளிற்கோ அங்கு வகுப்பறையில் ஒன்றுவது பெரும் சவாலாய் இருக்க வில்லை .

பேசிக் கொண்டே இருக்கையில் ப்ரோபஸ்ஸோர் உள்ளே வர அனைவரும் எழுந்து நிற்க இவளோ அங்கு வந்திருந்தவனை பார்த்து கண்கள் வெளியே தெறித்து விழும் அளவிற்கு விழித்துக் கொண்டிருந்தாள் பின்னே அங்கு நின்றிருந்தது சரணாயிற்றே.

அவன் ப்ரோபஸ்சரிற்கான நேர்காணல் சென்றான் என்று தெரியும் எனில் அவன் தனக்கே ப்ரோபஸ்சோராக வருவான் என்று கனவிலும் நினைக்கவில்லை .அவளோ அவனை விழித்தெறித்து விடும் அளவிற்கு பார்க்க அவனோ அவளை பார்த்து ஒரு வில்லச் சிரிப்பு சிரித்தவன் பின் lecture எடுக்க ஆரம்பித்தான்.அவன் என்னவோ நன்றாக தான் வகுப்பெடுத்தான் எனில் அவளிற்கு தான் மனதில் அனைத்து டீ ராஜேந்தர் குத்து சாங்குகளும் ஓடிக் கொண்டிருக்க அவன் நடத்துவதில் ஒரு வார்த்தை கூட மண்டையில் ஏறுவேனா என்றிருந்தது .

பின் lectureum முடிவடைய அவள் அவனிடம் சென்று மன்னிப்பு கேட்க எழுந்து செல்ல அவனோ அந்த கணப்பொழுதில் எங்கு சென்றான் என்றே தெரியவில்லை .இவ்வாறே ஒருவாரமாக அவன் அவளிற்கு lecture எடுக்கும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரம் ஏன் lecture எடுக்கும் போது கூட அவள் புறம் திரும்பவும் இல்லை.அவளிற்கு அது கூட பெரிதாக தெரியவில்லை எனில் அவளது ப்ரோபஸ்ஸோர் ஒருவள் மாலினி என்று புதியதாய் இந்த வருடம் சேர்ந்தவள் அவனை பார்த்து விடும் ஜொள்ளும் அதற்கு இவன் இளித்துக் கொண்டே பதில் கூறுவதும் தான் இவளிற்கு காது மூக்கு வாய் என்று நவ துவாரங்களிலிருந்தும் புகையை வர வைத்தது .

ஏனோ அவளோடு அவனை பார்க்கையிலெல்லாம் அவளிற்கு கோபம் தலைக்கேற ஒரு வாரமாய் டிமிக்கி கொடுத்துக்கொண்டிருந்தவனை இன்று கல்லூரி விடுகையில் இருவரையும் பிடித்து விட்டால் அவளிற்கு முன் அவன் பைக்கில் அவன் ஒருபுறமும் அந்த மாலினி ஒரு புறமும் சாய்ந்து கொண்டு நின்று பேசிக் கொண்டிருக்க இவளோ இரு கைகளையும் இடுப்பில் வைத்து முரைத்துக் கொண்டு நிற்க அவனோ எந்த பிரதிபலிப்பு காட்டாது போக பொறுமை இழந்தவள் "சரண் "என்று அழைக்க அவனோ அப்பொழுதும் திரும்பாது இருக்க மேலும் பொறுமை இழந்தவள் இம்முறை சத்தமாக "சரண் "என்று அழைக்க

அவனோ casualaaga திரும்பியவன் "யார் நீ "என்று கேட்க

அவளோ கொதிநிலைக்கே சென்று விட்டால் "ஹோ நா யாரா ஏன் நடக்க தெரியாம நடந்து கீழ விழுந்து அடி ஏதும் பட்ருச்சா தலைல .என்றவள் இவங்களோட உனக்கென்னடா பேச்சு "என்க

அவனோ "எது டாவா இங்க நா உன் ப்ரோபஸ்ஸோர் mind இட் அண்ட் moreover நா யாரோட வேணா பேசுவேன் இதோ இப்டி கைய புடிப்பேன் உனக்கென்ன "என்று அந்த மாலினியின் கையை பிடித்து கொண்டே பேச அவளிற்கு பனிமலை பொழிய இங்கு ஸ்வஸ்திகாவோ எரிமலையாய் வெடித்துக் கொண்டிருந்தாள்.

கோபத்தை கட்டுப் படுத்தமுடியாது போக இவனது கையை தட்டி விட்டவள் "டேய்ய் நீ தெரிஞ்சு பண்றியா தெரியாம பண்றியாடா .நீ இப்டி இழுச்சுட்டே பேசறதை பாத்து வந்த ஒரு வாரத்துலயே ஏதோ நீயும் அவுங்களும் கல்யாணம் பண்ணிக்க போறீங்கன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டானுங்கடா ஸ்டுடென்ட்ஸ் இப்படியா ஒட்டிட்டே திரிவ"என்க

அவனோ சிரித்தவன் "அட இது கூட நல்ல ideaava இருக்கே பொண்ணும் நல்ல தான் இருக்கா உன்ன மாறி பஜாரி கிடையாது பேசாம இவளையே கல்யாணம் பண்ணிக்குறேன் நீ என்ன நெனைக்குற கத்திரிக்கா எங்க ஜோடி பொருத்தத்தை பத்தி "என்று அவன் கூறி முடித்த அடுத்த நிமிடம் கன்னத்தில் கையை வைத்திருந்தான் ஆம் அவனை ஸ்வஸ்திகா அறைந்திருந்தால் .

கண்களில் கண்ணீருடன் அவனை பார்த்தவள் "மூஞ்சிலேயே முழிக்காத"என்று விட்டு கிளம்பி வந்து விட்டால் .

இங்கே நவ்யாவிடம் அனைத்தையும் கூறியவள் "என்ன தைரியம் இருந்தா அவளை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு என்டயே சொல்லுவான் "என்க

நவ்யா விஷமமாய் அவளை பார்த்து சிரிக்க

ஸ்வஸ்திகா "என்னடி அப்டி சிரிக்குற ?"என்க

அவளோ "இல்ல அவரு யாரா கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்கென்ன நீ ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற ஒருவேளை உனக்கெதுவும் ஐடியா இருக்கா ?"என்க

ஸ்வஸ்திகாவோ "ச்சேய் ச்சேய் அதெல்லாம் இல்லடி அவன் ஜஸ்ட் எனக்கொரு cousin அவ்ளோ தான் .அந்த mam பத்தி விசாரிச்சா இந்த காலேஜ்ல தான் படுச்சுச்சாம் படிக்கேலையே 5 வருஷத்துல நாலு பசங்களோட ரெளஷன்ஷிப்ல இருந்துருக்கு அதான் தப்பான சாய்ஸ் பன்னிரக்கூடாதேன்னு "என்க

நவ்யாவோ "அவ்ளோ தானா"என்க

அவளோ வேகமாய் "அவ்ளோ தான் அவ்ளோ தான் ஆனா அவனை அடிச்சுருக்க கூடாதோ கொஞ்சம் ஓவராக தான் பண்ணிட்டேன் இல்ல ஏன்தான் இவன்னு வரேல மட்டும் பொறுமையாவே இருக்க மாற்றேனோ தெரில "என்க

நவ்யாவோ அவள் கையை பிடித்தவள் "தப்புனு தெரியுதுல சாரி கேட்ரு சரண் அண்ணா மனசுல ஏதும் வச்சுக்குற type இல்ல இப்போ வேணாலும் கால் பண்ணி பாரேன் ஹே காத்திருக்கானு தான் எடுப்பாங்க "என்க

ஸ்வஸ்திகா சற்று யோசித்தவள் தயக்கத்தோடு அவனிற்கு கால் செய்ய அவனோ எடுத்த உடன் "ஹே கத்திரிக்கா என்னடி பொழுது போலன்னு போன் பண்ணியா.அப்ரோம் கத்திரிக்கா helmetல ஒரு நல்ல brand சொல்லேன் "என்க

அவளோ "இல்ல அது வந்து சரண் sorryda .என்றவள் பின் ஏன் கேக்குற ?"என்க

அவனோ "sorryaah நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது என்று கேவலமாய் பாடியவன் பின் நீ தான் மூஞ்சிலயே முழிக்காதான்னு சொல்லிட்டியே நா பாட்டுக்கு உன் முன்னாடி வந்து நீ ஆசிட் எதுவும் அடிச்சுட்டா ஏன் பொன்னான முகம் புண்ணாயிடும் பாரு அதான் safetykku "என்க

ஸ்வஸ்திகாவோ சிரித்தவள் "இடியட் உன்ட போய் சாரி கேக்கணும்னு நெனச்சேன் பாரு என்ன சொல்லணும் வைடா phoneah "என்றவள் பின் சிரித்துக்கொண்டே நவ்யாவோடு சிறிது நேரம் பேசியவள் வெளியே கிளம்பி செல்ல நவ்யாவும் தனது scootyil கிளம்பி சென்றால் .

தோழிகள் தங்கள் உலகில் சஞ்சரித்துவிட்டு சந்தோஷமாய் செல்ல புள்ளிமானை வேடுவன் நோட்டமிடுவதை போல் நவ்யாவினை இரு கண்கள் க்ரோததோடு நோட்டமிடுவதை எவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை .அவளது வண்டி செல்லும் பாதையை வெறித்த அவ்வுருவம் ஒரு மார்க்கமாய் சிரித்து விட்டு "ஷுருவாத் ஹோ சுகி "(ஆரம்பம் ஆகி விட்டது ) என்றது வண்டியை திருப்பி விட்டு சென்றது .

அவ்வுருவம் யார் ஆணா? பெண்ணா??

அதற்கும் நவ்யாவிற்கும் என்ன சம்பந்தம் ?

சூழ்ச்சியெனும் சிலந்தி வலையில் நவ்யா வீழ்வாளா?

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top