32
அவன் அமர்ந்திருந்த தோரணையேஅவனின் கோபத்தின் அளவை எடுத்துக்கூற அதிதியையும் நவ்யாவையும் அவர்கள் அறைக்கு அனுப்பிய சைந்தவி வித்யுதின் அருகில் அமர்ந்து அவன் கரத்தை பற்றினாள்.
அவன் கையை உருவப்போக அவன் கையை மேலும் அழுத்தி பிடித்தவள் அவர்களின் அறையை நோக்கி அழைத்து சென்றாள்.
சைந்தவி கர்பம் தரித்தபின் கீழே இருந்த அறையையே தங்கள் அறையாய் மாற்றி விட்டிருந்தான் வித்யுத் .அவனை அழைத்து வந்து அங்கிருந்த sofaaவில் ஒரு ஓரத்தில் அமர்த்தியவள் இன்னொரு ஓரத்தில் அமர அனிச்சை செயலாய் அவள் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டான் வித்யுத் .
அவன் தலை முடியை கோதியவள் "ஏன்டா இவ்ளோ டென்ஷன் ஆகுற லவ் தான பண்ணா ?நானும் நீயும் லவ் பண்ணி தான கல்யாணம் பண்ணுனோம் ? அதிதியும் ஹரியும் கூட லவ் தான பன்றாங்க அதுவும் ஸ்கூல்ல இருந்து. ஸ்கூல்ல லவ் பண்றதே தப்பு அதுக்கே நீ திட்டல ஏன்டா இப்டி நவ்யா விக்ரம லவ் பன்றேன்னு சொன்னப்போ மட்டும் இவ்ளோ கோவப்படுற "என்க
அவனோ "சது நீயும் நானும் லவ் பண்ணோம்னா உங்க அப்பா பெர்மிஸ்ஸின் குடுத்பறோம் தான் நாம loversaave கமிட் ஆனோம்.உங்க அப்பா அம்மா சம்மதிக்கலேனா நா காலேஜ் முடுச்சு ஒர்க் ஜோஇன் பண்ற வரைக்கும் உன் பக்கத்துல கூட வந்துருக்க மாட்டேன் அண்ட் ஹரியும் அதிதியும் ஸ்கூல் படிக்கேல லவ் பண்ணப்போ ஏன் நா திட்டலேன்னா அப்போ அந்த வயசுல எதை செய்யாதான்னு சொல்றோமோ அதை தான் செய்ய தோணும் அதான் சுதந்திரத்தை தப்பா பயன்படுத்தாத வரைக்கும் பரவால்லன்னு விட்டு வச்சேன் .அதிதி மார்க்ஸ் down ஆனதும் உங்க அப்பட சொல்லி அவனை us அனுப்சு வச்சேன்(ஹெஹெஹெ இவன் பாத வேல தான்பா ஹரி ஆறு வ்ருஹ்ஷம் us போனது) .ஹரி நல்ல பையன் பட் இங்க அப்டி இல்ல "என்க
சைந்தவி "அப்போ இப்போ விக்ரம் நல்லவனா இல்லங்குறியா ?"என்க
வித்யுதோ இல்லை என்பதை போல் தலை அசைத்தவன் "இப்போ விக்ரம் ஒரு பக்கா gentlemannaah தான் இருக்கான்.அவன் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன் தான். ஆனா அவன் முதல்ல வாங்கி வச்ச பேரு?வினய் அன்னைக்கு கூட கால் பண்ணான் அன்னைக்கு பிஸ்னஸ் பார்ட்டிக்கு போனப்போ நவ்யா கிட்ட ரெண்டு பேரு வந்து நீ விக்ரமோட வந்தவ தான உன் ரேட் என்னனு கேட்ருக்கானுங்க .இப்டி இருக்கேல ஒரு அண்ணனா எப்படி என் தங்கச்சி எல்லா ஏச்சு பேச்சையும் வாழ்க்கை பூராம் கேட்கட்டும்னு அவனுக்கு கட்டி குடுக்க சொல்ற ?"என்றான்.
இதுவே அனைத்து அண்ணன்களின் எதிர்பார்ப்பாக இருக்கும் .என்ன தான் தான் தன் தங்கையுடன் சண்டை இட்டாலும் அவளிற்கு பாதுகாப்பு என்று வரும்பொழுது ஒரு தந்தை தரும் பாதுகாப்பை விட ஒரு அண்ணன் தரும் பாதுகாப்பு அதிகமானதாக இருக்கும்.தன தங்கையின் மகிழ்ச்சி என்பதை விட தங்கையின் நிம்மதியையே அதிகம் யோசிப்பர். அதே நிலையில் தான் இப்பொழுது வித்யுதும் இருந்தான் பூவை போன்ற மென்மையான தன் செல்ல தங்கையை வேறு எவரின் கடுஞ்சொல்லும் காயப்படுத்தி விடக்கூடாது என்பதையே நினைத்து நவ்யாவின் நிம்மதியை நினைத்தவன் அவள் சந்தோஷத்தை நினைக்க மறந்தான்.
அவன் பேசுவதையே கவனித்த சைந்தவி பின் "இதெல்லாம் நவ்யா யோசிக்காம இருந்துருப்பானு நெனைக்குறியா விது நீ?அவ ஒரு டிரஸ் எடுக்கவே ஆயிரம் தடவ அதோட துணி ,தரம் ,கலர் அது இதுனு யோசிச்சு யோசிச்சு வாங்குவா இதை யோசிக்காமயா இருந்துருப்பா ?"என்க
வித்யுத்தோ"யோசிச்சுருப்பா ஆனா அதோட வீரியம் தான் அவளுக்கு புரியல.எனக்கு என் தங்கச்சியோட நிம்மதி முக்கியம் சது "என்க
சைந்தவி "நிம்மதியை விட அவ சந்தோஷம் முக்கியம் இல்லையா விது ?நீயும் தான கேட்ட நா இல்லேன்னா என்னடி பண்ணுவன்னு விக்ரம் கேட்டப்போ செத்துருவேன்னு சொல்றா அவ .அவ அதை வெறும் வாய் வார்த்தையா மட்டும் சொல்லல அப்டினு அவ கண்ணுல இருந்த உறுதியே சொல்லுச்சு .வேணாம் விது பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துன கதையா அவளை நாலு பேரு நாலு விதமா சொல்லுவாங்கன்னு அவ ஆசைப்பட்டதை குடுக்காம அவளையே இழந்துருவோமோனு பயமா இருக்கு .ப்ளீஸ் அவ நிம்மதியா இருப்பான்னு யோசிச்சு அவளையே இழந்துராத இதை உன்ன பயமுறுத்த சொல்லல நிதர்சனத்தை சொன்னேன் "என்க சிறிது நேரம் அவனிடம் அசைவே இல்லை. அவனது புருவ முடிச்சே அவன் யோசனையில் இருக்கிறான் என்று கூற அப்படியே அவனை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் சைந்தவி.
நன்றாய் யோசித்தவன் ஒரு முடிவெடுத்தவனாய் அவள் மடியில் இருந்து எழுந்தமர்ந்தான் .அவள் அவன் முகத்தையே கேள்வியோடு நோக்க அவனோ மெலிதாய் சிரித்தவன் "அந்த fraudah சீக்கரம் முறைப்படி பொண்ணு கேட்டு வர சொல்லு இதுல என் கிட்ட டயலாக் வேற விக்ரம் எல்லாருக்கும் நல்லவன் இல்லனு. அதுக்கு முதல்ல என் அன்பு தங்கச்சி கிட்ட போய் சொல்லு எக்ஸாம் ரெசில்க்கு வெயிட் பண்ற ஸ்டுடென்ட் மாறி ரூமாஹ் அளந்துட்டு இருக்க போறா"என்றவன் அவள் வயிற்றுப்பகுதிக்கு குனிந்து "என்னடா செல்லம் அப்பா சொல்றது "என்க குழந்தையோ உள்ளிருந்து உதைத்தாள் .
அவள் அசைவை உணர்ந்த சைந்தவி "எப்பா ஆரம்பிச்சுட்டானுங்கடா அப்பாவும் பொண்ணும் என்று தன் வயிற்றில் கை வைத்தவள் "ஏன் பாப்பு இவ்ளோ நேரம் மூச்சாத்தி பேசி சம்மதிக்க வச்சது நானு சப்போர்ட் உங்கப்பாவுக்கா?"என்க மீண்டும் ஒரு முறை உதைத்தாள் அவளின் பெண் .அதை அவள் ஐந்து மாத மேடிட்ட வயிற்றின் மேல் தான் வைத்திருந்த கையால் உணர்ந்த வித்யுத் சிரித்து "ஏன் செல்லம் "என்று அவள் வயிற்றில் முத்தமிட சைந்தவியோ வழக்கம் போல்" சரியான அப்பா புள்ள" என்று செல்லமாய் திட்டிவிட்டு சென்றாள்.
மாடியை மெதுவாய் ஏறி அதிதியின் அறையை அடைந்து திறந்திருந்த கதவை திறக்க வித்யுத் கூறியதை போலவே அதிதி கையை கன்னத்தில் தாங்கி கட்டிலில் அமர்ந்திருக்க நவ்யாவோ நகத்தை கடித்து துப்பியவாறே அறையை அளந்துகொண்டிருந்தாள்.உள்ளே நுழைந்து அறைக்கதவை சாற்றிய சைந்தவி அவள் செய்கையை பார்த்ததால் சிரிப்பு வர சிரிப்பை அடக்கியவள் சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு நவ்யாவின் முன் சென்று நின்றாள்.
அவளை அறையில் கண்டதும் நவ்யாவும் அதிதியும் அவளிடம் வந்தவர்கள் என்னாச்சு என்பதை போல் பார்க்க சைந்தவியின் சோகமான முகத்தை பார்த்த இருவருக்கும் புஸ்சென்றாகிவிட்டது.
சைந்தவி "வித்யுத் நவ்யாக்கு சீக்கரம் கல்யாணம் பண்ணனும்னு பையன் வீட்டுகாரங்களை பொண்ணு கேட்டு வர சொல்ல சொன்னான்"என்க .
நவ்யாவோ சைந்தவியின் சித்தப்பா மகனை தான் கூறுகிறாள் என்று நினைக்க அவள் கண்களில் நீர் மறுபடியும் நிறைந்துவிட தரையை வெறித்தபடி அவள் நிற்க அதற்குமேல் அவளை சோதிக்க விரும்பாத சைந்தவி "அதுனால நவ்யா விக்ரம் இப்போ பிரீயாஹ் தான இருப்பான் நீ சொல்றியா இல்ல நா சொல்லவா அவன்ட பொண்ணு கேட்டு வர சொல்லி "என்க
விருட்டென்று நிமிர்ந்த நவ்யா தன் காதில் ஏதும் தவறாக விழுந்து விட்டதா என்பதை போல் சைந்தவியை பார்க்க அவளை பார்த்து கேலியாய் சிரித்த சைந்தவி "என்ன நவ்யா விக்ரம் கிட்ட நீ சொல்றியா நா சொல்லவா ?"என்க அடுத்த நொடி சைந்தவியை தோள் வழியாய் அணைத்த நவ்யா அவள் கன்னத்தில் இதழ் பதித்தவள் "thank you thank you சோ மச் அண்ணி"என்க அதிதியோ நவ்யாவை ஆனந்தத்தில் அணைத்துக்கொண்டாள்.
இந்த விஷயத்தை விக்ரமிடம் சைந்தவி கூற இந்த வெள்ளிக்கிழமை பெண் பார்க்கும் படலம் நடப்பதாக உறுதிசெய்யப்பட்டது .எனில் நவ்யாவை வெள்ளிக்கிழமை வரை வேலைக்கு செல்ல வித்யுத் தடா உத்தரவு பிறப்பித்துவிட்டான் (அம்புட்டு நம்பிக்கை தங்கச்சி மேலயும் விக்ரம் மேலயும் ).
வெள்ளிக்கிழமையும் வர நான்கு நாட்களாய் பார்க்காதது ,காதலன் என்பது போய் தனது வருங்கால கணவனாய் வீட்டு உறுப்பினர்களிடம் இருந்து அங்கீகாரம் கிடைக்க போகும் தருணம் தந்த பயம்,தன்னவனை காணப்போகும் வெட்கம் என்று கலவையான உணர்வுகளுடன் சைந்தவி மற்றும் அதிதியின் கிண்டல்களும் சேர்ந்துகொள்ள ஸ்வஸ்திகா இன்னும் வந்து சேராததாள் ஸ்வஸ்திகாவின் எண்ணிற்கு அழைத்தவளிற்கோ அது அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற பதிலே வந்தது .
மீண்டும் மீண்டும் முயற்சித்து சோர்ந்து போனவள் பின் கூறிக்கொள்ளலாம் என்று தயாராக அவர்களின் அறைக்கதவை கலவரமாக முகத்துடன் திறந்தான் வித்யுத் .
அவன் முகத்தில் இருந்த கலவரத்தை பார்த்து ஏதோ தவறாய் நடந்திருக்கின்றதென்பதை உணர்ந்த சைந்தவி அவனை கேள்வியாய் நோக்க வித்யுத் "சது ஒரு சீரியஸ் கேஸ் ஹாஸ்பிடல் போறேன் பாத்துக்க. sorryda நவ்யா அண்ணா எவ்ளோ முடியுமோ அவ்ளோ சீக்ரம் வந்துருறேன்டா அப்டி லேட்டா ஆய்ருச்சுனா மாமாவையும் அத்தயையும் வச்சு தட்டு மாத்த வச்சுரு சது "என்க
அதிதி "அண்ணா என்னாச்சுடா இவ்ளோ பதட்டப்படுற ?தெரிஞ்சவுங்களா"என்க
அவனோ சிறு தலை அசைப்புடன் ஆம் என்றவன் அவர்கள் அடுத்த கேள்வி கேட்பதற்குள் மருத்துவமனைக்கு தன் காரில் விரைந்தான். வழியில் சென்றுகொண்டிருந்தவன் மனதில் ஓடிய கேள்வி இது தான் "சா doctorku படுச்ச பொண்ணு இப்படியா உயிரோட மதிப்பு தெரியாம suicide அட்டெம்ப்ட் பண்ணுவா? இப்போ இப்டி ஆய்ருச்சுனு சொன்னா அதிதி,நவ்யா சைந்தவி மூணு பெரும் டென்ஷன் ஆய்ருவங்க மொதல்ல அவளை காப்பாத்தணும் "என்றவன் சீறி பாய்ந்து மருத்துவமனையை அடைந்தான்.
அங்கே சென்றவன் கண்டதென்னவோ icuvin வெளியே இடிந்து பொய் அமர்ந்திருந்த சாரணையும் அவ்வாறாயின் வாசலையே பார்த்துக்கொண்டிருந்த ஸ்வஸ்திகாவின் அன்னை தந்தையையும் தான்.தனது மருத்துவர் உடைக்கு மாறியவன் உள்ளே சென்று பார்த்ததென்னவோ ஒரு கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க மற்றொரு கையில் மணிக்கட்டு அறுக்கப்பட்டதால் அங்கே கட்டுபோடப்பட்டு மூச்சிற்காய் oxygen மாஸ்க் போடப்பட்டிருந்த ஸ்வஸ்திகாவை தான் .
அங்கே இருந்த டாக்டரிடம் சென்று ரெபோர்ட்ஸை வாங்கியவன் அதை பார்த்துவிட்டு அவளை பரிசோதித்தவன் அங்கே அவளை அட்டென்ட் செய்த டாக்டரிடம் விபரத்தை கேட்க அவரோ "suicide அட்டெம்ப்ட் டாக்டர்,மணிக்கட்ட அறுத்து விட்ருக்காங்க. நெறைய பிளட் லாஸ் ஆயிருச்சு thank god சீக்கிரமே கொண்டு வந்துட்டாங்க.உயிருக்கு ஆபத்தில்லை "என்க
ஆமோதப்பிப்பாய் தலை அசைத்த வித்யுத் நேரத்தை கவனித்து இவ்ளோ நேரமாச்சே இன்னும் கண் முழிக்காம இருக்கா என்று அவளை பரிசோதிக்க அப்பொழுதே அவள் ஆழ்மனதில் எதையோ பயந்து எங்கே கண்முழித்தால் தன்னை எதுவும் செய்ய கட்டாயப்படுத்திவிடுவார்களோ என்று கண்களை திறக்க முடியாமல் Posttraumatic stress disorder ஏற்பட்டிருக்க கண்கள் த்ரிராக்க முடியாது இருப்பதை அறிந்துகொண்டான்.
பட்டாம்பூச்சியை சிறகடித்து திரிந்த பெண் எவ்வாறு இப்படி ஆனாள் என்று யோசித்தவாறு வெளியே வந்தவன் அவர்கள் பெற்றோரிடம் தகவலை கூறலாம் என்று நினைக்க அவன் கண்முன் கண்டதென்னவோ சரணின் சட்டை காலரை பிடித்து அவனை அடிக்க கை ஓங்கி இருந்த ஆதித்தனை தான் .
ஆதித்தன் "ஏன்டா இப்படி பண்ண எப்பிடிடா உனக்கு மனசு வந்துச்சு என் தங்கச்சி இப்டி இருக்குறதுக்கு முழுக்காரணம் நீ தான்டா "என்று கத்த சரணோ அவன் செய்வது எதையும் உணரும் நிலையில் இல்லை அவன் கண்கள் icu வாசலிலேயே உறைந்து நிற்க உள்ளே ஸ்வஸ்திகாவோ அரைமயக்க நிலையில் சரண் என்று முனகிக்கொண்டிருந்தாள்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top