31

 ஸ்வஸ்திகாவை கல்லூரியில் இருந்து தன் பைக்கில் ஒரு அம்மன் கோயிலிற்கு அழைத்து வந்திருந்தான் சரண்.

கோவில் வந்ததும் "ஸ்வஸ்தி இறங்குடி "என்க கண்களை திறந்து பார்த்த ஸ்வஸ்திகா கோவிலை கண்டதும் சரணை குழப்பமாய் பார்த்தாள்.

ஏனெனில் இது வரை சரண் கோயிலிற்கு சென்றோ கடவுளை வழிபட்டோ அவள் பார்த்ததே இல்லை .வருடம் ஒரு முறை அவர்களது குல தெய்வம் கோயிலிற்கு செல்கையில் அங்கிருக்கும் சிறுசுகளுடன் விளையாடிக்கொண்டிருப்பனே ஒழிய கடவுளை கும்பிட்டதில்லை அப்படிப்பட்டவன் இன்று தானே அவளை கோயிலிற்கு அழைத்து வந்திருந்தது குழப்பமாய் இருந்தது .

அவனுடன் குழம்பியபடியே நடந்தவள் அவன் அவள் முடியில் மல்லிகை சரம் சூட்டும் ஸ்பரிசத்தில் தான் தெளிந்தாள்.அவனை பார்த்து லேசாய் முரவளித்தவள் அவனது கையை தன் கையோடு கோர்த்துக்கொண்டு அர்ச்சனை தட்டை வாங்கியவள் அம்மனின் சந்நிதியில் சென்று கண்கள் மூடி பிரார்த்திக்க சரணும் அம்மன் சன்னதியில் கண்களை மூடி அவளுடன் பிரார்தித்தவன் பிரசாதமாக வழங்கப்பட்ட குங்குமத்தை தன் நெற்றியில் வைத்து கொண்டு அவளை பார்க்க அவளோ நீயே வைத்து விடு என்பதை போல் சைகை செய்தாள்.

பின் அவள் கரத்திலிருந்து குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் இட கோவில் மணி அழகாய் ஒலித்தது அதை கேட்ட செவஸ்திகாவிற்கு மனம் நிறைந்தது.பின் அந்த கோவிலை ஒட்டி இருந்த குளக்கரையில் படித்துறைக்கு சென்றவர்கள் அங்கே அமர சரணின் முகமோ அவன் ஏதோ ஒரு சிந்தனையில் உழன்றிருப்பதை எடுத்துரைத்தாது .

அவனது சிந்தனை ரேகைகள் நிறைந்த முகத்தை கண்டவள் அவன் அருகில் நெருங்கி அமர்ந்து அவன் கையை தன கையோடு கோர்த்துக்கொண்டவள் "என்னாச்சு சரண் என் ஏதோ திங்கிங்க்லயே இருக்க ?எப்போவும் சாமி கும்புடாதவன் திடீர்னு நா கேக்காமயே கோவிலுக்கு கூட்டிட்டு வந்துருக்க எனி ப்ரோப்லேம் ?"என்க

அவனோ இடவலமாய் தலை அசைத்தவன் அவள் கையை மேலும் இறுக்கமாய் பிடித்துக்கொண்டு "ப்ரோப்லேம் இல்லடா ஸ்வஸ்தி பட் ...ஏதோ தப்பா நடக்க போற மாறி மனசுல தோணிட்டே இருக்கு பயமா இருக்கு "என்க

அவளோ அவன் கன்னத்தை பிடித்தவள் "achoo சரண் ஒண்ணுமில்லடா ஒன்னும் நடக்காது positiveaah நெனைச்சா நல்லதே நடக்கும் தேவை இல்லாம மனச போட்டு கொழப்பிக்காத "என்க

அவனோ இன்னும் தெளியாதவன் அவளை நோக்கி திரும்பி அமர்ந்து "ஸ்வஸ்தி என்ன விட்டுட்டு போயிற மாட்டீல"என்று ஒரு எதிர்பார்ப்புடன் கேட்க

அவளோ சிரித்தவள் "உன்ன விட்டுட்டு எங்கடா போக போறேன் அப்டியே போச்சுன்னா போறது என் உயிரா தான் இருக்கும் "என்க அவளது கரத்தை இறுக்கமாய் பிடித்தவன் அந்த கோவிலிலிருந்து அவளுடன் வெளியேற அவன் அறிந்திருக்கவில்லை தன் வாழ்வை விட்டு போகாதே என்று கூறிய அவனே அவளை தன் வாழ்வை விட்டு மொத்தமாய் போ என்பான் என்று .

பின் அவனுடன் பைக்கில் பின்னால் அமர்ந்தவள்" அடுத்து எங்கே சரண் ?"என்க

அவனோ "அத்தை மாமாவோட 30rth wedding anniversary வருதுல்லடி அதுக்கு டிரஸ் எடுக்கணும் போலாமா "என்க

அவளோ "ஹான் போலாம் ஆனா ஒரு கண்டிஷன் எனக்கும் ஒரு saree வாங்கி தரணும் ஓகேவா"என்க

அவனோ சிரித்தபடி தலை ஆட்டியவன் "சரிங்க மேடம் ஜி உனக்கு இல்லாததை செல்லமே"என்றவாறு அவளை ஒரு துணிக்கடைக்கு அழைத்து சென்றவன் அவளிற்கு ஒரு சாம்பல் நிறத்தில் designer சேலை எடுத்து கொடுத்தவன் தனக்கும் அந்த நிறத்திலேயே கோட் வாங்கி கொண்டான்.

பின் நேரமாகிவிட அவளுடன் ஒரு restaurantil இரவுணவை முடித்தவன் அவளை அவளது வீட்டில் இறக்கி விட அவளோ இறங்கியவள் உள்ளே செல்ல போக அவள் கரத்தை பிடித்து அருகில் இழுத்தவன் "ஒய் என்ன அதுக்குள்ள கெளம்புற வேற ஒன்னும் இல்லையா ?"என்று ஏக்கமாய் கேட்க அவளோ அவனை அது மனதில் சிரித்தவள் "வேற என்ன ஹான் குட் நைட் சரண் "என்றுவிட்டு செல்ல போக ஆக்டிங் என்று அவள் கையை பற்றி இழுத்தவன் அவள் கன்னத்தில் தனது முத்திரையை இட்ட பின்பே அவளை விடுவித்தான் .

அவன் செய்கையில் செம்மையுற்ற ஸ்வஸ்திகா போடா இடிஒட் என்றவாறு உள்ளே ஓடிஏ அவள் ஓடுவதை பார்த்து சிரித்தவன் சந்தோஷமாய் தன் வீட்டை அடைந்து தன் அறைக்குள் விசிலடித்துக்கொண்டே செல்ல போக அங்கே ஹால்லில் இருந்த அவன் அம்மாவோ "சரண் "என்று அவனை அழைத்தார் .

அவனது அன்னையின் அழைப்பில் நின்றவன் "என்னம்மா ?"என்க

அவர் "உன்ட கொஞ்சம் பேசணும் இப்டி வந்து உக்காரு "என்று சொல்ல அவனும் அவரது வார்த்தைக்கு மதிப்பளித்து அவர் முன் இருந்த sofaavil அமர அவர் அடுத்தடுத்து கூறிய வார்த்தைகளில் அவனது தலையில் யாரோ பெரும் இடியை இறக்கியதை போல் உணர்ந்தான்.

அவர் பேச பேச அமைதியாய் இருந்தவன் கடைசியாய் அவர் "முடியாதுனு மட்டும் சொல்லிராத சரண் ப்ளீஸ் "என்க அவரை நோக்கி ஒரு விரக்தி புன்னகை சிந்தியவன் வாயில் வார்த்தை கூட வெளிவராது தலையை ஆமோதிப்பாய் ஆட்டியவன் தன் அறையை நோக்கி இடிந்து போய் சென்றான்.

இரண்டு நாட்களுக்கு பின் ,

இரண்டு நாட்கள் செல்ல ஸ்வஸ்திகாவை கல்லூரியில் கண்டும் காணாமல் சென்றான் சரண் .திடீரென்று அவனது விசித்திர செயல்களின் காரணம் புரியாமல் தவித்த ஸ்வஸ்திகா அவனிடம் பேச எத்தனையோ முயற்சி செய்தும் அவை அனைத்தும் வீணானது.என்ன ஆனாலும் இன்று அதற்கான காரணத்தை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டுமென்று நினைத்தவள் லைப்ரரியில் அவன் புகை எடுக்கும்பொழுது அவன் கையை பிடித்திழுத்து அங்கிருந்து ஒரு ஒதுக்குபுறமான இடத்திற்கு அழைத்து சென்றாள்.

சுற்றி முற்றி யாரும் இல்லை எந்தபாதை உறுதி படுத்திக்கொண்டவள் அவனிடம் பேசத்துவங்கினாள் "சரண் என்னாச்சுடா ஏன் என்கிட்ட பேசாம இருக்க நா ஏதாச்சும் தப்பு பண்ணிட்டேனா? அப்டி பண்ணிருந்தா sorryda ஆனா ஏன்டா பேசாம இருக்க ?"என்க

அவனோ பாறையை போல் முகத்தை இறுகி வைத்திருந்தவன் "பேச புடிக்கலன்னு அர்த்தம் "என்க

அவளோ திகைத்து விழித்தாள் பின் நடுங்கிய குரலில் அவள் "ஏன்"என்க அவனோ அவளை ஒரு பார்வை பார்த்தவன் அவ்விடம் விட்டு ஏதும் சொல்லாமல் நகர்ந்து விட அவனது திடீர் விலகளின் காரணத்தை புரியாது தன்னுள்ளே குழம்பித் தவித்தாள் ஸ்வஸ்திகா .

இங்கே இப்படி இருக்க இங்கே என்றும் போல் வேலை முடித்து வந்த நவ்யா ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்து தன் அறைக்குள் செல்ல போக ஹால்லிலிருந்த வித்யுதின் "நவ்யா "என்ற அழைப்பில் அந்த இடத்திலேயே நின்றாள் நவ்யா.

பின் அவனிடம் திரும்பியவள் "என்னண்ணா ?"என்க

அவனோ அவள் முன் சில போட்டோக்களை தூக்கி இருந்தவன் உச்சபட்ச கோபத்தை குரலில் காட்டி என்ன இதெல்லாம் என்றான் .அவன் கத்தியதில் அவ்விடத்திற்கு வந்த சைந்தவியும் திதியும் புரியாமல் விழிக்க அவன் கத்தியதிலேயே திகைத்து நின்ற நவ்யா அவன் தூக்கி எறிந்த புகைப்படங்களை கீழே குனிந்து எடுத்து பார்க்க அவை அனைத்தும் விக்ரமுடன் அவள் இருக்கும் படங்கள் .

அதை பார்த்தவள் பயத்தில் கண்கள் விரிய நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள "அது அது வந்து அண்ணா "என்க

அவளது பயந்த விழியை பார்த்து தன் கோபத்தை கட்டுப்படுத்தியவன் "என்னடா இதெல்லாம் "என்று மென்மையாய் வினவ அவளோ தலை குனிந்து ஏதும் பேசாது நின்றாள்.

அவள் தலை குனிந்து இருப்பதை பார்த்து அவள் அருகில் வந்த சைந்தவி தன் மேடிட்ட வயிற்றில் காய் வைத்துக்கொண்டு அங்கே வர அதிதியோ கீழிருந்த புகைப்படத்தை எடுத்து பார்க்க அதில் விக்ரமும் நவ்யாவும் கைகளை கோர்த்துக்கொண்டு இருக்க நவ்யா விக்ரமின் தோளில் சாய்ந்து கொண்டிருப்பதை போன்றும் விக்ரம் நவ்யாவை அணைத்திருப்பதை போன்றும் புகைப்படங்கள் இருக்க அதை பார்த்த இருவரும் திடைத்தனர் .

முதலில் தன்னிலை அடைந்த அதிதி ஆனந்த கூச்சலுடன் நவ்யாவை கட்டிக்கொண்டவள் "சூப்பர் டி செம. ஆனா பக்கி என் கிட்ட சொல்லாம மரச்சுட்ட பாத்தியா "என்றவள் அந்த புகைப்படத்தை மீண்டும் பார்த்து விட்டு "யு both make perfect pair டி அந்த doggum மறைத்து விட்டான் பாரேன் இரு அவனை "என்று போன் செய்து காதில் வைக்க போக வித்யுதின் அதிதி என்ற அதட்டலில் அவளது காய் ஆட்டோமேட்டிக்காக கீழிறங்கியது .

நவ்யாவை நோக்கி வந்த வித்யுத் "நவ்யா விக்ரமும் நீயும் லவ் பண்றீங்களா ?"என்க நவ்யாவின் தலை தயக்கமாய் மேலும் கீழும் ஆடியது .

அவள் பதிலில் கோவம் கொண்டவன் "அறிவிருக்காடி உனக்கு ?"என்று சீற அவனது சீற்றத்தை பார்த்து நடுநடுங்கிப்போனால் நவ்யா.

அவனது கோபம் உட்சபட்ச நிலையை அடைந்ததை உணர்ந்த சைந்தவி விது என்ன செய்ற பயப்படறா பாரு என்று அவன் கையை பிடிக்க அவள் கையை உதறியவன் "அப்பறோம் இவ செஞ்ச காரியத்துக்கு தூக்கி வச்சு கொஞ்ச சொல்றியா ?"என்க

அவனை கூர்மையாய் பார்த்த சைந்தவி "அப்டி என தப்பு பண்ணிட்டானு இப்டி எகிறிட்டு இருக்க லவ் தான பண்ணா ஏன் நாம லவ் பண்ணலயா?"என்க

வித்யுத் "நானும் அவனும் ஒண்ணா டி.ஒரு drunkard ,ஒரு pervert ஆஹ் இருந்த....... "என்று

அவன் முடிக்க கூட இல்லை அதற்குள் நவ்யாவோ குரலை உயர்த்தியவள் "அண்ணா என்ன பத்தி என்ன வேணா பேசுங்க அவரை பத்தி பேசாதீங்க அவரை பத்தி என் முன்னாடி தப்பா பேசறதை என்னால அனுமதிக்க முடியாது"என்று கூற அவளின் பதிலில் அவன் அவளை திகைத்து நோக்கினான் .

இது வரை அவன் வார்த்தைக்கு மறுபேச்சு பேசாத அவன் செல்ல தங்கை இன்று அவனையே எதிர்த்து பேசுவதை அதுவும் விக்ரமிற்காக பேசுவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .

அவள் அருகில் வந்தவன் பொறுமையாய் "நவ்யா புரிஞ்சுக்க ட்ரை பண்ணுடா அவன் behaviour சொல்லிக்கிற மாறி இல்லடா. அதிதி விஷயத்துல என்ன நடந்துச்சுனு உனக்கே தெரியும்ல ஏன்டா நெருப்புனு தெரிஞ்சும் எரிஞ்சு போவேன்னு அடம்பிடிக்குற ?"என்க

அவளோ "அண்ணா நீங்களே சொல்லிடீங்க இருந்தாருன்னு.அது அவரோட பாஸ்ட் அண்ணா முடுஞ்சு போனது presentlayum சரி futurelayum சரி அவர் என்ன நல்ல பார்த்துப்பாருன்னா ப்ளீஸ் beleive மீ"என்க

மட்டுப்பட்ட கோபம் வித்யுதரிற்கு மீண்டும் துளிர் விட துவங்கியது "முட்டாள் மாறி பேசாத நவ்யா. நீ அவனோட official விஷயத்தை தவிர்த்து இப்டி சுத்துறதுலாம் மத்தவங்க கண்ணனுக்கு உன்ன எப்படி பட்ட போனா காட்டும்னு கொஞ்சமாச்சும் யோசிச்சியா ?"என்க

அவளோ மிகவும் coolaai "தெரியும் அண்ணா "என்று கூறினாள்.

அவள் வார்த்தைக்கு வார்த்தை பதில் பேசுவது அவனுள் கோபத்தை தூண்டி விட்டுக்கொண்டே இருக்க அவளை கனல் கக்கும் பார்வை பார்த்தவன் சைந்தவியிடம் திரும்பி "உன் சித்தப்பா பையனுக்கு நம்ம கல்யாணத்துல நவ்யாவ பாத்துட்டு பொண்ணு கேட்டாங்கன்னு சொன்ன இல்லையா அவுங்கள கூப்டு நாளைக்கு பொண்ணு பார்க்க வர சொல்லு "என்க

நவ்யா கண்ணீர் நிறைந்த கண்களுடன் "அண்ணா..."என்க

அவனோ சைந்தவியிடம் திரும்பியவன் "நா சொன்னது கேக்கலையா சது உனக்கு "என்க

வாயிலில் விக்ரமின் குரல் கேட்டது "நா இருக்குற வரைக்கும் அது நடக்காது வித்யுத்" என்று அவனது குரலை கேட்ட நவ்யாவிற்கு அப்பொழுது தான் உயிரே வந்தது .விக்ரமை கண்டவள் அவனிடம் ஓட வித்யுதின் முறைப்பை பார்த்தவள் அந்த இடத்திலேயே வேரூன்றி நின்றுவிட்டாள்.

அவளை பார்த்து ஒரு கனிவான புன்னகையை சிந்திய விக்ரம் வித்யுதின் எதிரே நின்று "எனக்கு உன் தங்கச்சி நவ்யாவ புடுச்சுருக்கு கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் "என்க

அவனை ஏளனமாய் பார்த்த வித்யுத் "ஆறு வருஷத்துக்கு முன்னாடி ஏன் தங்கச்சி அதிதி இப்போ என் தங்கச்சி நவ்யாவா ?அப்போ அடுத்த ஆறு வருஷத்துல யாரை கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைப்ப விக்ரம் "என்க

அவனோ சிரித்தவன் "ஆறு வருஷம் இல்லை வித்யுத் ஆயுசு முழுசுக்கும் எனக்கு நவ்யா மட்டும் போதும் .உன் மன நிலை புரியுது அதான் பொறுமையா பேசிட்டு இருக்கேன் .இதோ பாரு நா முதல்ல இருந்த மாதிரி இப்போ இல்லை வித்யுத் அது உனக்கே தெரியும் அப்பறோம் என்ன பிரச்னை ?"என்க

வித்யுதோ "ஒருத்தன் வாங்கி வச்ச நல்ல பெயரை வேணா எல்லாரும் சீக்கரம் மறந்துரலாம் ஆனா ஒருத்தன் வாங்குன கெட்டப்பேரு அவன் சாகுற வரைக்கும் அவனையும் அவனை சேர்ந்தவங்களையும் தொரத்திட்டே தான் இருக்கும்.நீ இப்போ மாறிருக்கலாம் ஆனா நீ வாங்கி வச்ச பொம்பள பொறுக்கின்ற பெரு இன்னைக்கு வரைக்கும் மாறாம தான் இருக்கு இனியும் மாறாது .உனக்கு ஏத்தமாரி ரிச் millionarre பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோ என் தங்கச்சியை விட்டுரு.என் தங்கச்சியால ஏச்சு பேச்சையெல்லாம் தாங்க முடியாதுடா "என்க

விக்ரமோ சிரித்தவன் "சரி நவ்யாவ என்ன வேணான்னு சொல்ல சொல்லு நா விட்டுருறேன் "என்று நவ்யாவை பார்த்தவன் "நான் இல்லாம இருந்துருவியாடி ?"என்க

அவளோ அவன் கண்ணை பார்த்தவள் "செத்துருவேன் விக்ரம் "என்க

அவள் கூறிய பதிலில் வெற்றிச்சிரிப்புடன் வித்யுத்தின் புறம் திரும்பிய விக்ரம் "இதோ பாரு வித்யுத் எனக்கு எப்படி என்ன புரிய வைக்கிறது உனக்குன்னு சத்தியமா தெரில ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் நவ்யாவ நான் உயிரா காதலிக்கிறேண்டா. அவ இல்லேன்னா நா உயிரில்லாத பிணம் தான்." என்றவன் சற்று நிதானித்து விட்டு "உன் சம்மதம் இல்லாம எங்க கல்யாணம் நடக்காது அப்டி நடந்தா அது அவளை எவ்ளோ ஹர்ட் பண்ணும்னு எனக்கு தெரியும்.சோ நல்லா யோசிச்சு சரினு சொல்லு "என்க

வித்யுத் "அப்டி நா முடியாதுனு சொன்னா?" என்க

விக்ரமோ சிரித்தவன் "காலம் பூராம் காத்திருப்பேன்னு சொல்லுவேன்னு எதிர் பார்க்காத வித்யுத் உனக்கு ஒரு மாசம் தான் டைம் இல்லை தரமாட்டேன் விடமாட்டேன்னு சொன்னன்னு வையேன் எந்த பழைய விக்ரம காரணம் காமிச்சு எங்களை பிரிக்க நினைக்கிறியோ அதே பழைய விக்ரம நீ பாக்க வேண்டி வரும். உனக்கே தெரியும் நா எல்லாருக்கும் நல்லவன் கிடையாது "என்றவன் இனி பேசுவதற்கு எதுவும் இல்லை என்பதை போல் எழுந்து நவ்யாவின் அருகில் வந்தவன் வித்யுதின் கண்முன்னே அவள் நெற்றியில் இதழ் பதித்து அவள் கண்ணீரை துடைத்து "உள்ள போடி எல்லாம் சரி ஆயிடும் .இப்போ கொஞ்சம் சிரியேன்"என்க

நவ்யாவோ சிரித்தவள் சரி என்பதை போல் தலையை ஆட்டினாள் .பின் அவள் தலையை வருடிய விக்ரம் வெளியே செல்ல வித்யுத்தோ நவ்யாவிடம் வந்தவன் அடிபட்ட பார்வையுடன் "என்ன விட இப்போ வந்த அவன் முக்கியமா போய்ட்டான் இல்லை நவ்யா "என்க

அவளோ அவசரமாய் அவன் கையை பிடித்தவள் "ஐயோ அண்ணா அப்டிலாம் இல்லன்னா ரெண்டு கண்ணுல எது முக்கியம்னு கேட்டா நா எப்படின்னா பதில் சொல்ல முடியும்? எனக்கு நீங்களும் வேணும் அவரும் வேணும் அண்ணா "என்றுவிட்டு எழுந்துவிட

அவனோ உறைந்தார் போல் அப்படியே அமர்ந்திருக்க அவன் அமர்ந்திருந்த தோரணையே சைந்தவிக்கு அவன் கோபத்தை அடக்குகிறான் என்று தெளிவாய் எடுத்துரைக்க அவளோ "அதிதி நவ்யாவ உன் ரூம்க்கு கூட்டிட்டு போடா நா லக்ஷ்மிம்மாட்ட சொல்லி சாப்பாடு குடுத்தனுப்புறேன் "என்றவள் நவ்யாவிடம் திரும்பி "நவி நீ அதிதியோட போடா "என்க

நவ்யா "ஆனா அண்ணி "என்க சைந்தவியோ கண்களால் தான் பார்த்துக்கொள்வதாய் சைகை செய்தவள் அதிதியுடன் அவளை செல்ல கூறினாள் .

hi guys ippodhaikku ennaala indha update dhaan kuduka mudunjadhu.guess pannirupeenga innum 5-6 or maximum 8 chaptersla kadhaya muduchuruven.romba izhukkura maari irukku kadha enaku.

and another thing is naa NIFT  second round ezhudha poren so oorukku kelamburen so may 5th varaikum update varaadhuppaa.konjam adjust karo .take care ba byeee

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top