3

அமைதியாய் நின்றுகொண்டிருந்தவனின் செல் போன் சினுங்க எடுத்து காதில் வைத்தவன் அப்புறம் சொல்ல பட்ட செய்தியை கேட்டு கலவரமானான் "வாட் "என்று அலறியவன் அடுத்த 10 நிமிடத்தில் தயாராகி தன் காரில் பயணிக்க ஆரம்பித்தான் .

ஒரு மணி நேரப் பயணம் நிறைவிற்கு வர அவன் கண் முன்னே அவனது ரைஸ் மில் தீயில் கருகிக் கொண்டிருந்தது .வேகமாய் செயல் பட்டவன் அங்கே இருந்த மானேஜரை அழைத்தான் "பிரதாப் "என்று

அவர் வந்து "அது வந்து சார் எப்படி "என்று துவங்க

அவனோ கையை உயர்த்தி நிறுத்த கூறியவன் "ஐ டோன்'ட் வாண்ட் எனி of யுவர் ப்ளடி explanations இப்போ எங்க எங்க தீ பரவிருக்கு "என்க

அவரோ "கோடவுன்லே இருக்குற வைக்கப்போருளை தான் சார் மொதல்ல தீ புடுச்சுச்சு அப்பறோம் கொஞ்ச கொஞ்சமா ஸ்பிரேட் ஆகி இப்போ ரைஸ் sacks கிட்ட பரவிற்றுக்கு சார் எங்க இருந்து தீ புடுச்சுச்சுனே தெரில சார் அணைக்கவே முடில "என்க

அவனோ சற்று நேரம் யோசித்தவன் சுற்றி முற்றி பார்க்க அங்கே மணல் மேடுகள் இருந்தது .சட்டென்று யோசித்தவன் "பிரதாப் தண்ணி பாய்ச்சி fire கண்ட்ரோல் ஆகலேன்னா machinesla ஷார்ட் circuit ஏதாச்சும் ஆகி current கசியுறதால தான் fire புடுச்சுருக்குனு நினைக்குறேன் usage of வாட்டர் in திஸ் கேஸ் மே become ட்ராஜிக் சோ சீக்கரம் இங்க இருக்குற பவர் supllyah cut பண்ண சொல்லுங்க.உள்ள யாரும் இல்லேல ஆர் யு sure "என்க

அவரோ "இல்ல சார் workersah எல்லாம் அப்புறப்படுத்தியாச்சு "எங்க

அவன் "குட் தென் அஸ்க் our ஒர்க்கேர்ஸ் டு இம்மீடிட்டேலி கெட் onto தோஸ் ஜேசிபி's அண்ட் அவுங்கள மண்ணை எடுத்து தீ பரவுற areasla போட சொல்லுங்க இட் வில் ஹெல்ப் அவுட் quick quick .மணல் குமாரி வுனிற்கு அப்பறோம் செட்டில் பண்ணிரலாம் "என்றவன் தானும் ஓடி பொய் ஒரு ஜேசிபி இல் ஏறி துரிதமாய் செயல் பட அடுத்த 15 நிமிடத்தில் தீ கட்டுக்குள் வந்தது.

100 மூடை அரிசி கருகியதை தவிர்த்து machinegaluku எந்த பாதிப்பும் இல்லாமல் போக சேதம் சற்று குறைவாகவே இருந்தது .நெருப்பு அடங்கியதும் "பிரதாப் "என்று கோபக் குரலில் அழைக்க அவரோ நடுங்கி கொண்டே அருகில் வர அவரை தீ பார்வை பார்த்தவன் "நா ஒன் இயர் முன்னாடியே fire aacidents நடக்கேல எல்லா இடத்துலயும் use பண்ற ஆட்டோமேட்டிக் வாட்டர் suppliers மாட்ட சொன்னேன் ,அங்கங்க fire extinguishers வைக்க சொன்னேன் ,fire safetyah மைண்டைன் பண்ண சொன்னேன் எவ்ளோ செலவானாலும் பரவால்லன்னு சொன்னேன் .சொன்னேனா இல்லையா "என்று ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி அழுத்தி சொல்ல

அவரோ வெலவெலத்து போனவர் "சார் சார் அப்... அப்பா தான் சார் ஏதும் ப... பண்ண வே... வேணான்னு சோ... சொன்னாரு "என்க

அவனோ உச்ச பட்ச கோபத்தை அடைந்தவர் "இந்த மில் என் controlla இருக்கா அவர் controlla இருக்கா ?நா சொல்றத செய்ங்க அது போதும் இன்னும் ஒரு வாரத்துல இது எல்லாம் பழைய நிலைமைக்கு வந்து இருக்கனும் நா சொன்னதும் செஞ்சு இருக்கனும் இல்ல "என்று நிறுத்தியவன் ஒரு ஆழப் பார்வை பார்த்து விட்டு "நீங்க வேற வேல தேட வேண்டி வரும் mr .பிரதாப் mind இட் "என்றவன் பணியாளர்களிடம் சென்று அனைவரும் நலமுடன் இருப்பதை உறுதி செய்து விட்டு காரில் வந்து அமர அவன் உள்ளமோ தீப்பிழம்பைப் போல் தகித்து கொண்டிருந்தது .

இது அவனிற்கு பழக்கப் பட்ட ஒன்றே எனினும் கோபம் மட்டும் மட்டுப்பட மறுத்தது அவனோ தன்னிடம் வேலை பார்ப்பவர்கள் முழு மனதோடு உழைப்போடு விசுவாசத்தையும் மரியாதையையும் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவன் அனால் அவன் தந்தையோ தொழிலாளர்களின் மொத்த உழைப்பையும் உறிஞ்ச வேண்டும் என்று நினைப்பவர் .

இவனோ லாபத்தை விட நேர்மையை வெற்றியென மதிப்பவன் அவரோ லாபத்தை மட்டுமே வெற்றியை எண்ணுபவர்.இவ்வாறே இவன் செய்ய கூறிய பல வேலைகள் இவ்வாறு தான் அவரால் பணம் செலவாகும் என்று முடக்கப்படும் அதனாலேயே விக்ரமிற்கு தன் தந்தையின் மேல் பாசம் என்ன மதிப்பு கூட கிடையாது .கோபத்தில் steeringai குத்தியவன் நெற்றியையும் கழுத்தையும் அழுத்தி தேய்த்து கோபத்தை கட்டு படுத்தினான் .

இங்கே இவன் கோபத்தை கட்டு படுத்த முயற்சித்துக் கொண்டிருக்க அடுத்து அவனிற்கு ஒரு அழைப்பு வந்தது .எடுத்து காதில் வைத்தவன் "ஹலோ "என்க அந்த புறம் எந்த பதிலும் இல்லை மீண்டும் "ஹலோ who is திஸ்" என்க

அந்த புறமோ

"நீ செய்த பழி

சிறு பொறியென சிதறிட

இன்று சிதைந்ததோ

சிறு படி

இனி தொடரும்

என் அடி

உன்னால்

சிந்தியது குருதி

உன் அழிவோ உறுதி "என்று ஆணா பெண்ணா என்று பேதம் பார்க்க முடியாது ஒரு குரல் இப்படி வரிகளை கூற இவனோ இருந்த கோபத்தில் எதையும் கவனியாதவன்

"நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரியும்"இந்த டயலாக் மெர்சல் படத்துல நான் ஏற்கனவே பாத்துட்டேன் இருக்குற டென்ஷன்ல நீ வேற எவண்டா நன்னாரி பயலே வைடா போனை"என்று கத்தியவன் அதை அப்புறமாய் போட்டு விட்டு வீட்டை நோக்கி தனது பயணத்தை செய்தான் .

(அதன் அர்த்தத்தை கவனித்திருந்தால் பின்னால் ஏற்படப் போகும் பிரெச்சனைகளை சமாளித்திருக்கலாமோ )

அடுத்த நாள் காலை புது விடியலை அனைவர் வாழ்விலும் ஏற்படுத்த இன்று தனது பணியின் முதல் நாளிற்காக தயாராகி கீழே வந்தால் நவ்யா .

வந்தவள் "அண்ணி வேலைக்கு போய்ட்டு வரேன் அண்ணி "என்று கிளம்ப போக

சைந்தவி "நவி இருடா ஒன் மினிட்"என்றவள் gulabjamun எடுத்து வந்து அவளிற்கு ஊட்டி விட்டால் .நவ்யா

"இன்னிக்கு என்ன ஸ்பெஷல் அண்ணி "என்க

அங்கே வந்த வித்யுத் "என் தங்கச்சி முதல் நாள் வேலைக்கு போறா ஸ்பெஷல் இல்லையா அது "என்றவன் அவளை லேசாய் அணைத்து "ஆல் தி பெஸ்ட் ட நவிமா prove யுவர் talent சரியா "என்க

அவளும் அவனை பதிவிற்கு அணைத்தவள் "தேங்க்ஸ் அண்ணா வில் டூ மீ பெஸ்ட் "என்றவள் பின் இருவரையும் பூஜை அறைக்கு அழைத்து சென்று காலில் விழுந்து எழ

அங்கே வந்த அதிதி "ஹுக்கும் "என்று செரும

நவ்யா "என்ன மேடம் "என்க

அவளோ "எங்களுக்கும் கால் இருக்கு "என்க

திடீரென்று அங்கே வந்த ஹரி "மனுஷ பிறவினா கால் இருக்கதான் செய்யும் அதை பெரிய கண்டுபிடுப்பு மாறி பேசுது பாரு இது "என்றவன் அவள் தலையில் லேசாய் கொட்ட அதிதி அவனை அடிக்க வழக்கம் போல் கையை ஒங்க ஏதோ நினைவு வந்தவள் சட்டென்று கையை இறக்கி விட்டு ஓடி விட்டால் அவள் செய்கையை பார்த்து மற்றவர் குழம்ப அதன் பொருள் புரிந்தவனோ ஒரு நமட்டு சிரிப்பு சிரித்து விட்டு நவ்யாவிடம் வந்தவன் "ஆல் தி பெஸ்ட் நவி "என்க

நவ்யா "தேங்க்ஸ் அண்ணா "என்றவள் பின் அனைவருடனும் அமர்ந்து உண்டு விட்டு தன் முதல் நாள் பணிக்கு சென்றால் .

அவள் விக்ரமின் பர்சனல் அசிஸ்டன்ட் என்பதால் அவனது கேபினிலேயே அவளிற்கு ஒரு டெஸ்க் போடப்பட்டிருந்தது .அங்கே சென்று அமர்ந்தவள் இன்னும் விக்ரம் வராததை கண்டவள் அந்த கேபினை நோட்டமிட்டாள் ஆங்காங்கே filegal சிதறிக் கிடக்க செய்தித்தாள்கள் sofaavil பரப்பி கிடக்க பேனாவில் பாதி மூடி இல்லாமலும் பாதி டெஸ்க்கிலும் இருக்க அந்த tabelil இருந்த பூக்கள் வாடி வதங்கி மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் இருந்தது .

அதை பார்த்தவளுக்கோ மனதில் "எல்லா பசங்களும் எப்படி தான் இப்டி களைச்சு போட்றதுல மட்டும் ஒரே மாறி இருக்காங்களோ.இந்த எடத்துல உக்காந்தா வேலை பாக்கவே தோணும் "என்று மனதிற்குள் விக்ரமை அரசித்துக்கொண்டே வாய்விட்டு முனகிக்கொண்டே அவனின் அறையை சீர்படுத்தினால் .

அதனதன் இடத்தில் பொருட்களை நேர்த்தியாய் அடுக்கி வைத்தவள் அந்த அறையை பார்த்து ஒரு மெச்சுதல் பார்வை பார்க்க அவள் பின்னே "வந்ததும் வேலையை ஆரம்பிச்சுடீங்களா மிஸ்.perfectionist "என்ற குரல் கேட்க திடுக்கிட்டு திரும்பியவள் கதவின் ஒரு ஓரத்தில் கைகளை கட்டிக்க கொண்டு சாய்ந்து தன் trademark புன்னகையுடன் நின்ற விக்ரமை கண்டவள் மிரண்டு விழித்து பின் சிறிது நேரத்தில் சமன்படுத்திக் கொண்டவள் "நாம இருக்குற இடத்தை சுத்தமா வச்சுக்கிட்டா தான் மனசும் relaxedaah இருக்கும் சார் அதான் "என்க

அவனோ அவ்வறையை ஒருமுறை நோட்டமிட்டவன் "இட்ஸ் ஜஸ்ட் perfect now and நா கொஞ்சம் நீட்டாக வச்சுக்குறதுல weak தான் இனி நீட்டாக வச்சுக்க ட்ரை பண்றேன் "என்றவன் தன் டெஸ்கில் வந்து அமர்ந்து பின் அவளை அழைத்தவன் அவளது தினசரி வேலைகளை அவளிற்கு விவரித்தான் "மிஸ் நவ்யா நீங்க என்னோட பர்சனல் அசிஸ்டன்ட் சோ என்னோட schedule , mails ,ப்ராஜெக்ட் quotations எல்லாம் உங்கள தாண்டி தான் எனக்கு வரும் .மோர் than being a personal assistant நீங்க எனக்கு ஒரு டிவிசாராவும் இருப்பீங்க .லீகல் advises problemsku solutionslaam நீங்க சொல்ற மாறி இருக்கும் .அண்ட் obviously as you know நமக்கு கிட்ட தட்ட எல்லா statelayum buisness இருக்கு சோ அடிக்கடி நாம travel பண்ண வேண்டி வரும் be prepared போர் இட் .உங்களுக்கு எத்தனை languages தெரியும் ?"என்க

அவளோ "8 சார் "என்றால்

அவன் "ஒஹ் என்றவன் பின் விழித்து வாட் ?"என்க

அவளோ "எனக்கு 8 மொழிகள் பேச தெரியும் சார் "என்க

அவன் "எந்தெந்த மொழிகள் பேசுவீங்க?"என்க

அவளோ "ஹிந்தி ,தமிழ் ,இங்கிலிஷ்,கன்னடம்,தெலுகு ,மலையாளம்,பிரெஞ்சு அண்ட் குஜராத்தி சார் "என்க

அவனோ ஒரு மெச்சுதலான பார்வை பார்த்தவன் "that 's pretty குட் மிஸ் நவ்யா சோ இன்னிக்கு உங்க வேலைய பார்க்க ஆரம்பிக்கலாம் ஆல் தி பெஸ்ட் "என்க

அவளோ " thank யு சார் "என்று விட்டு அவ்விடம் விட்டு அகல

அவனோ "நவ்யா "என்று அவளை அழைக்க

அவள் "சார் "என்க

அவனோ "sirundra வார்த்தைக்கு நான் உங்கள் அடிமைனு அர்த்தம் generally எனக்கு சார் அப்டினு கூப்டுறது புடிக்காது என்ன நீங்க விக்ரம்ன்னே கூப்பிடலாம் "என்க

அவளோ சிறு புன்னகை பூத்தவள்"ஓகே விக்ரம் "என்று விட்டு அமர அவனிற்கோ அவள் குரலில் தன் பெயரை கேட்டவனிற்கு தன் பெயர் இவ்வளவு இனிமையானதா என்று தோன்ற சிறு புன்னகை பூத்தவன் வேலையை பார்க்க துவங்கினான் .

இங்கே ஏதோ ஓர் இடம் சாரில் ஒரு உருவம் அமர்ந்து அதில் இப்படியும் அப்படியும் ஆடிக் கொண்டிருந்தது .பின் பக்கமே தெரிந்தமையால் அது ஆனா பெண்ணை என்றே தெரியவில்லை .ஆடிக் கொண்டிருந்த அவ்வுருவம் சட்டென்று அந்த சாறை தன் காலால் நிறுத்தி ஒரு அறைக்குள் சென்றது .

அவ்வறையின் தரையில் முட்டி யிட்டு அமர்ந்த அவ்வுருவத்தின் கையிலோ ஒரு புகைப்படம் இருந்தது அதை வருடிய அவ்வுருவம் "ஆரம்ப் ஹொதோ அந்த் ஹோகா .ஜோ உஸ்நெ ஆரம்ப் கியா தொ உசே அந்த் கர்னே கி வக்த் ஆகயா உஸ்கா அந்த் ஆகயா அந்த்...."(ஆரம்பம் என்று இருந்தால் முடிவொன்று இருக்கும் .எது அவர்களால் ஆரம்பிக்க பட்டதோ அதை முடிக்கும் நேரம் வந்து விட்டது .அவர்களின் முடிவு வந்து விட்டது முடிவு )என்று கூறிய அவ்வுருவம் மெல்லிதாய் ஒரு ஏளனச் சிரிப்பை உதிர்த்து அப்புகைப்படத்தை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டது .

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top