28
ஸ்வஸ்திகா அவனை காதலிப்பதாக கூறி அவன் மார்பில் முகம் வைத்து சாய்ந்து கொள்ள அவன் கரங்கள் அவனது மூளை பிறப்பிக்கும் கட்டளைகளை மீறி அவளை அணைத்திருந்தது .பின் சற்று நேரத்தில் தான் செய்து கொண்டிருக்கும் காரியத்தின் வீரியம் உரைக்க பட்டென அவளை விளக்கியவன் ஏதும் பேசாமல் சாலையில் கவனத்தை வைத்து காரை செலுத்த துவங்கினான் .
அவன் முகத்தில் சிந்தனை ரேகைகள் தெளிவாய் இருக்க அதற்கு மேல் அவனை குழப்ப வேண்டாமென்று ஸ்வஸ்திகாவும் அமைதியாய் அமர்ந்திருந்தாள் .அவர்கள் தங்கி இருந்த காட்டேஜ் வந்துவிட காரை நிறுத்தியவன் அப்படியே அமர்ந்திருந்தான்.அவனும் இறங்க வில்லை அவளும் இறங்க வில்லை.
சற்று நேரத்த்திற்கு பின் அவன் பேசத் துவங்கினான் "இல்ல ஸ்வஸ்தி இது work ஆவாது"என்க
அவளோ அவனை கேள்வியுடன் பார்த்தவள் "ஏன்?"என்று கேட்க
அவள் புறம் திரும்பியவன் அவளின் கண்ணை பார்த்து பேசத்துவங்கினான் "உனக்கு நல்லா தெரியும் என் அப்பாவும் அம்மாவும் லவ் marriage பண்ணதால மாமா அவுங்கள ஏத்துக்கவே இல்ல இப்போ தான் ஆறு வருஷமா நம்ம உறவு நல்ல விதமா இருக்கு.இப்போ போய் நாம லவ் பண்றோம்னு சொன்னா நல்லாவா இருக்கும் .அதுமட்டுமில்லாம உன் அப்பா உனக்கு பாக்குற மாப்பிள்ளை எல்லாமே மினிமம் ரெண்டு வீடு சொந்தமா வச்சுக்கிட்டு monthly 2 lakhs வாங்குறவன தான் பாக்குறாரு. ஆனா நா இப்போ தான் அப்பா பண்ண பிஸ்னெஸ்ல லாஸ் ஆகி வித்த வீட்டை லோன் போட்டு வாங்கியிருக்கேன்.என் சம்பளமே டேக் ஹோம் 50 thousand தான் அதுல emiku 20 thousand போயிரும். உங்க அப்பா நெனைக்குற மாறி lifestyle உனக்கு என்னால குடுக்க முடியாது ஸ்வஸ்தி.நீ நெனச்சா ஷாப்பிங் போய் ஓரே நாளுல ஐயாயிரம் ரூபாய் செலவு பண்ணுவ. அது உன் தப்பு இல்ல சின்ன வயசுல இருந்து luxuriousaave வாழ்ந்துட்ட. இப்டி இருந்துட்டு என் lifestyleku அட்ஜஸ்ட் பண்ணனும்னா ரொம்ப கஷ்டப்படுவ ஸ்வஸ்தி.இது போதாதுன்னு நா உன்ன விட ஆறு வயசு மூத்தவன் சின்ன பொண்ணு டி நீ .இவ்ளோ drawbacks இருக்கு இப்போ ஒரு வேகத்துல எல்லாம் நல்லா தான் இருக்கும் பட் கல்யாணத்துக்கு அப்ரோம்னு வரேல இப்போ நல்லா தெரிஞ்சது எல்லாமே நாளைக்கு தப்பா தெரியும்.வேறுதுறுவ ஸ்வஸ்தி .வேணாம் ஸ்வஸ்தி நா ஏற்கனவே அடிபட்டுட்டேன் இன்னொரு தடவ அடிபட விரும்பல.இந்த எண்ணத்தை இதோட மறந்துரு "என்க
அவளோ அவனை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தால் அவள் சிரிப்பதில் குழம்பியவன் "என்ன நா பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன் நீ சிரிக்கிற "என்க
அவளோ "இவ்வளாவும் சொன்ன நீங்க ஒரு தடவ கூட என்ன உங்க பொண்டாட்டியா பாக்க முடியலன்னு சொல்லலையே சரண் "
என்க அவனோ விழித்தான்.அவன் விழிப்பதை பார்த்தவள் "என்ன என்ன சொல்லி மழுப்பலாம்னு யோசிக்கிறியா?"என்றவள் பின் அவன் புறம் நன்றாக திரும்பி அமர்ந்தவள் அவன் கரங்களுக்குள் தான் கரத்தை பிணைத்துக்கொண்டாள்.
ஒரு பெருமூச்சு விட்டவள் அவன் கண்ணை பார்த்து பேசத்துவங்கினாள் "சரண் நீங்க எதை மனசுல வச்சுட்டு இப்டிலாம் பேசுறீங்கன்னு எனக்கு புரியுது.பணத்தை விட பாசம் தான் lifeah அழகாக்கும்னு நெனைக்குறவ நா சோ எனக்கு உங்க lifestylela பொருந்துறது பெரிய விஷயம் இல்ல .சரண் எல்லா அப்பாவுக்கும் இருக்குற mindset தான் என் அப்பாவுக்கும் இருக்கும் தன் பொண்ணு வசதியான இடத்துல இருந்தா சந்தோஷமா இருப்பான்னு ஆனா என் சந்தோஷம் நீ தான்னு அவருக்கு புரியவைக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது .ஆமா நா நெனச்ச நேரம் ஷாப்பிங் போய் ஐயாயிரத்துக்கு வேட்டு வைக்குறவ தான் இல்லனு சொல்லல ஆனா அதுக்காக சூழ்நிலைக்கு ஏத்த மாறி அட்ஜஸ்ட் பண்ணிக்க தெரியாதவளும் இல்ல."என்க
சரண் "ஸ்வஸ்தி........"என்று ஏதோ கூற வர அவன் வாயை தன் கை கொண்டு பொத்தியவள் "ஷ்..... முதல்ல என்ன முழுசா பேச விடுங்க .ஹான் அப்பறோம் என்ன சொன்னீங்க ஆறு வயசு வித்யாசமா இதெல்லாம் ஒரு பிரெச்சனையா ?அவன் அவன் பதினேழு வயசு இருவது வயசு வித்யாசத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கான் இதெல்லாம் ஒரு மேட்டர்னு சொல்றீங்க .இதோ பாருங்க எனக்கு உங்கள புடுச்சுருக்கு உங்களுக்கும் என்ன புடுச்சுருக்கும்னும் எனக்கு தெரியும். பணமும் பணமும் சேருறது இல்லங்க கல்யாணம் மனசும் மனசும் சேருறது தான் கல்யாணம் ."என்றவள் சற்று நிதானித்து விட்டு "பணம் முக்கியம்னு உங்கள விட பெட்டரானவனா பாத்துட்டு போக நா நேஹா இல்ல .நல்லா யோசிச்சு புடுச்சுருக்குன்னு சொல்லீருங்க சரியா "என்றவள் கார் கதவை திறந்து பின் திரும்பியவள் மின்னல் வேகத்தில் அவன் கன்னத்தில் தன் முதல் முத்திரையை பதித்து விட்டு "அண்ட் மிஸ்டர் நா ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல உன் குழந்தையை பெத்தெடுக்குற வயசு ஆச்சு எனக்கு
"என்றவள் கண்ணடித்துவிட்டு மின்னல் வேகத்தில் உள்ளே ஓடி மறைந்தாள்
அவள் பேசிய பேச்சிலேயே குழப்பத்தில் ஆழ்ந்திருந்தவன் காரை எடுத்து கொண்டு தாங்கள் தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து சற்று தொலைவில் அமைந்திருந்த ஒரு பூங்காவிற்கு வந்தவன் அதீத குழப்பத்தால் எந்த முடிவும் எடுக்க இயலாதவாரு கையை தலையில் தாங்கி அமர்ந்து விட்டான்.பின் இந்த ஆறு வருடத்தில் அவளுடன் தான் இருந்த நினைவுகளை தன் மனதில் ஒட்டி பார்த்தான் .
வித்யுத்தின் வீட்டில் இருவரின் முதல் சந்திப்பு,பின் தன் அன்னை தங்களை ஒதுக்கிய மாமன் வீட்டார் மீண்டும் ஏற்றுக்கொண்டனர் என்று அவரது வீட்டிற்கு அழைத்து சென்ற போது நடு ஹாலில் ரிங்க ரிங்கா பாட்டிற்கு ஒரு drowserayum டீ- ஷர்ட்டையும் போட்டுக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தவள் அவர்களை பார்த்ததும் அப்படியே நின்று விழித்த ஒரு திருட்டு முழி,அதன் பின் இருவரும் என்றும் போட்டுக்கொள்ளும் சிறு சிறு சண்டைகள் என்று அனைத்தையும் நினைவு கூர்ந்தவனின் இதழ்கள் சிரிப்பில் விரிந்தது .அதன் பின் காலெஜ்ல் அவள் சந்தோஷிடம் பேசிய போது அவளிற்கு பாதுகாப்பு
இல்லை என்பதையும் தாண்டி அவள் அவனுடன் இணைந்து அமர்ந்து இருக்கையில் எல்லாம் அவனிற்குள் எழுந்த பொறாமை என்று ஒவ்வொன்றாய் நினைத்துப்பார்த்தவன் அவளது அக்கறை ஆறுதல் சேட்டை தன்னிடம் எடுத்துக்கொண்ட உரிமை இதை எல்லாம் வேறொருவருடன் நினைத்து பார்க்கவே அவனிற்கு கோபம் கோபமாய் வர அந்த நொடி உணர்ந்து கொண்டான் தன்னால் அவளை வேறு எவரிடமும் விட்டுக்கொடுக்க இயலாதென்று .தன் மனதை அறிந்தவனின் இதழ்கள் பெரிய புன்னகையை பூசிக்கொண்டது.
இறுதியாய் அவள் தந்த அவசர முத்தத்தாய் நினைவு கூர்ந்தவனின் கரம் அவள் தன் கன்னத்தில் விட்டு சென்ற முத்திரையின் தடத்தை தடவ "கத்திரிக்கா கெடச்ச gapula கெடா வெட்டிட்டு போராலேயா"என்று நினைத்தவன் மனது அவனையும் மீறி அவளது பெயரின் பின் தன் பெயரை இணைத்துப் பார்த்து ரசித்தது .
பின் காரை எப்படியோ ஒட்டி வந்து பார்க் செய்தவன்
ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன் அத்த பெத்த பூங்குயிலத் தேடி ஆடுறேன் என்ற பாட்டு போடாத குறையாய் காலின் கீழ் இருந்த கல்லை எத்தி, கார் கண்ணாடியை பார்த்து தானே சிரித்து வழியில் இருக்கும் மரக்கிளையை பிடித்து தொங்கி வழியில் இருக்கும் பூக்களை எல்லாம் கொஞ்சி அவள் இருந்த அறையை நோக்கி பறக்கும் முத்தத்தை கொடுத்து என்று அனைத்து லூசுத்தனங்களையும் செய்தவாறு அவன் அறைக்கு வந்து சேர்ந்தான். அவளது பெயரை தன் போனில் கத்திரிக்கா என்று save செய்திருந்ததை அழித்து விட்டு பொண்டாட்டி என்று save செய்து கொண்டான்.(ஹெஹெஹெ அதுக்குள்ள ஒன்னு சேர விட்ருவேனா)
சரண் தாங்கள் வந்திருந்த காரை எடுத்து சென்றதால் விக்ரம் அந்த cottageil இருந்த அவனது இன்னொரு காரை எடுத்து சென்றிருந்தான் .அது அவனது சொந்த காட்டேஜ் ஆகும்.பின் நவ்யாவுடன் நன்றாக ஊரை சுற்றிவிட்டு வந்தவன் சரண் ஸ்வஸ்திகாவுடன் இணைந்து இரவு உணவை உண்ண அமர சரண் முகத்தில் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தான் விக்ரம்.
அந்த நால்வர் அமரும் டேபிளில் விக்ரமும் சரணும் அருகருகே அமர்ந்திருக்க நவ்யாவும் ஸ்வஸ்திகாவும் அவர்களுக்கு எதிரே அமர்ந்து சப்பாத்தியை எடுத்து வைத்து உண்டு கொண்டிருந்தனர் .சப்பாத்தியையும் பன்னீரையும் கண்ட விக்ரம் ஒரு பிடி பிடித்துக்கொண்டிருக்க சரணோ அவன் பிய்த்த ஒரு துண்டு சப்பாத்தியை அந்த மசாலாவில் போட்டு பிரட்டி கொண்டே ஸ்வஸ்திகாவை பார்த்துக்கொண்டிருக்க இருக்க ஸ்வஸ்திகாவோ அவனை நேராய் நோக்காது தலையை குனிந்தவாறு உண்ணாமல் தட்டில் கோலம் போட்டுக்கொண்டிருந்தாள்.
இதை கவனித்த விக்ரம் நவ்யாவிடம் சைகை காட்டிவிட்டு" அப்பறோம் சரண் பாகற்காய் நல்லா இனிப்பா இருக்கா"என்க
அவனோ "ஹான் செம இனிப்பு விக்ரம் "என்றவன் அதன் பின்பே தான் என்ன சொல்கிறோம் என்பதை உணர்ந்து அசடு வழிய ஸ்வஸ்திகா தலையில் அடித்து கொள்ள நவ்யாவும் விக்ரமும் இருவரையும் ஒட்டியே ஒரு வழி ஆக்கி விட்டனர் .
பின் உணவை உண்டுவிட்டு அவ்விடத்தை விட்டு கிளம்பியவர்கள் சென்னையை நோக்கி பயணமாயினர்.காரை எடுக்குமுன் ஸ்வஸ்திகா பின் இருக்கையில் அமர்ந்திருக்க சரண் சிரிப்புடன் பின் இருக்கைக்கு செல்ல போக விரைந்து வந்த நவ்யா பின்னே அவளுடன் அமர்ந்து கொண்டவள் சரணை நோக்கி "என் அருமை அண்ணன் அவர்களே தங்கள் இருப்பிடம் முன்னே உள்ளது ஆதலால் தாங்கள் முன்னே சென்று அமரவும் "என்க சரணோ வடை போச்சே என்ற உணர்வுடன் விக்ரமுடன் முன் இருக்கையில் சென்று அமர அவனது அந்த முகத்தை பார்த்த விக்ரம் தன் சிரிப்பை அடக்க மிகவும் சிரமப்பட்டான் .
அனைத்து கலாட்டாக்களுடனும் அனைவரும் சென்னை நோக்கி புறப்பட்டனர் .
அங்கு நால்வரும் ஆனந்த களிப்புடன் அந்த மூன்று நாட்களையும் செலவழிக்க இங்கு ஆதித்தனோ நீ எப்போ புள்ள சொல்ல போற என்ற பாட்டு பாடாத குறையாக மஹதியின் வாயிலிருந்த அந்த மூன்று வார்த்தைக்காக ஏங்கிக்கொண்டிருந்தான் .அவனை உயிருடன் கண்டதே அவன் அம்மா அப்பாவிற்கு பெரும் பாரத்தை இறங்கியதை போல் இருக்க எத்தனையோ முறை அவனிடம் இந்த வேலையை விடக்கூறியும் அவன் கேட்கவில்லை அதிகபட்சசலுகையாய் அவன் செய்ததே சென்னைக்கு ட்ரான்ஸபெர் வாங்கியது தான் .
அவனது தொகுத்து வழங்கும் திறமையை இந்த ஆதாரங்கள் சேகரித்துக்கொடுக்கும் போது கண்டுகொண்ட அவனது நிறுவனத்தினர் அவனை cameramanilirundhu அந்த குற்றங்களை விவரிக்கும் தொகுப்பாளரின் பதிவைக்கு மாற்றினர்.ஆதலால் அவனிற்கு வாரத்தில் நான்கு நாட்களிற்கு தான் ஷூட்டிங் இருக்கும் .
அவனிற்கு மஹதி போலீஸ் வேலையை விடுவதற்கு எடுத்த முடிவில் துளியும் விருப்பமில்லை .அவள் இந்த வேலை பெறுவதற்காக கண்ணில் கனவுடன் காலேஜ் விடுமுறை நாட்களிலும் தனது உடல் வலிமையை பெருக்க கிரௌண்டேஹ் கதி எனக்கிடந்ததை அவனும் கண்டிருக்கிறானே.அத்தனை போராடி லட்சியத்துடன் அவள் வாங்கிய வேலையை ஒரு அய்யோக்கியனை கொன்ற குற்றஉணர்ச்சிக்காக அவள் விடுவதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை .அவள் இன்னும் வேலையை ராஜினாமா செய்யவில்லை இன்னும் ஒரு வாரத்தில் செய்வதாய் கூறியிருந்தாள் அது வரை விடுப்பு எடுத்திருந்தாள். இந்த ஒரு வாரத்திற்குள் எப்படியாவது அவளது மனதை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தான் ஆதித்தன் .அதற்கான சந்தர்ப்பமும் அவனிற்கு கடவுளால் அமைத்துக்கொடுக்க பட்டது.
விரைவில் ஆதித்தனின் அன்னை தந்தையரின் 30 வது வருடத்து திருமண நாள் வர இருப்பதால் மஹதியையும் அழைத்துக்கொண்டு விழா நடப்பதற்காக சென்னையில் இருந்து outer areavilirundha ஒரு ரெசார்ட்டிற்கு சென்று கொண்டிருந்தான் .
காரில் அருகே அமர்ந்திருந்த மஹதி "என்ன ரிஷி திடீர்னு என்ன ரெசார்ட்டிற்கு கூப்டருக்க "என்க
அவனோ அவளது ரிஷி என்ற அழைப்பில் விழித்தவன் "என்ன திடீர்னு ரிஷினு கூப்பிடுறீங்க மேடம் ?"என்க
அவளோ லேசாய் சிரித்தவள் "உன் பேர் ஹரிஷ் தான ஹரிஷ்னு கூப்பிட ரொம்ப பெருசா இருந்துச்சு அதான் ரிஷினு கூப்பிட்டேன் "என்க
அவன் "ஏன் இவ்ளோ நாள் அப்டி தான கூப்டுட்டு இருந்த இப்போ என்ன புதுசா "என்க
அவளோ "நமக்குள்ள இருக்குற relationship மாறுனா நாமளும் மாறுறதுல தப்பில்லையே ரிஷி "என்க
அவன் முகத்தில் ஒரு பொலிவுடன் அவளை ஓரக்கண்ணால் பார்த்தவன் "ஏன் என்ன change ஆய்ருக்கு நம்ம ரெளஷன்ஷிப்ல ?"என்று ஒரு வித எதிர்பார்ப்புடன் கேட்க
அவனை ஓரக்கண்ணால் பார்த்து சிரித்துக்கொண்டவள் "முதல்ல நீ என் எனிமி ஆனா இப்போ........... "என்று நிறுத்த
அவன் "இப்போ ?"என்க
அவளோ மனதில் சிரித்தவள் "இப்போ நீ என் friend நம்ம relationship எனிமி டு friendship ஆய்ருச்சுல்ல சோ உன்ன ஏனெம்யகு இருந்தப்போ கூப்பிட்ட மாறியே இப்போவும் கூப்பிட்டா நல்லாருக்காதுல்ல"என்க
அவனோ கடுப்பானவன் வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டான்"friendaam frienduh "என்று அவள் அந்த புறம் திரும்பி சிரிக்க ஆதியின் கார் திடீரென நின்றது .அவன் மீண்டும் மீண்டும் ஸ்டார்ட் செய்ய அதுவோ ஸ்டார்ட் ஆவேனா என்று அடம் பிடித்தது.
மஹதி "என்னாச்சு ரிஷி ?"என்க
ஆதி "தெரில மஹி ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது "என்க
மஹதி "இப்போ என்ன பண்ணலாம் ?"என்க
ஆதி "எனக்கு மெக்கானிக் வேலைலாம் தெரியாது என்றவன் வாட்சை பார்த்து லேட்டாக வேற ஆயிட்டு இருக்கு சிட்டிக்கு outerல இருக்கோம் இப்போ மெக்கானிக்கஹ் கூட்டிட்டு வரதுலாம் impossible சோ cab புக் பண்ண வேண்டியது தான் "என்க
ஆமோதிப்பை தலை அசைத்த மஹதி "ஓகே அது வர ஏன் உள்ளேயே இருக்கனும் வா வெளிய ஒரு சின்ன வாக் போலாம்"என்றவள் கதவை திறந்து வெளியேற ஆதியும் அவளுடன் நடக்க ஆரம்பித்தான் .
அந்த நிசப்தமான மங்கியும் மங்காத மாலை பொழுதில் ஆள் நடமாட்டம் குறைவாய் இருபுறமும் மரங்களால் நிறைந்திருந்த அந்த சாலையின் தன் மனம் கவர்ந்தவளுடன் நடப்பது அவனிற்கு புது தெம்பை கொடுக்க சற்று நேரம் அவனுடன் நன்றாய் பேசிக்கொண்டு வந்தவளின் முகபாவம் திடீரென்று தீவிரமாய் மாற அவன் முன்னே செல்வதை தன் கையை வைத்து தடுத்தவள் அவன் கேள்வியாய் நோக்க அவனை தீர்க்கமாய் பார்த்தவள் கூர்ந்து கேட்குமாறு சைகை செய்தாள்.
அவன் அந்த இடத்தை கூர்ந்து கவனிக்க துவங்க அங்கே வினோதமான சத்தம் எழுவதை கவனித்தவன் சட்டென்று அங்கிருந்த குட்டி சந்து போன்ற அமைப்பில் அவளால் இழுக்கப்பட்டு சுவற்றோடு அவள் அருகில் ஒன்றி நிற்க வைக்கப்பட்டான்.அவன் புரியாது நோக்க அவள் பேசாதே என்று சைகை செய்தவள் லேசாய் தலையை வெளியே விட்டு அங்கே அந்த ரோட்டின் சந்திப்பில் அவனை பார்க்க கூற அங்கே தான் கண்ட காட்சியில் உறைந்தான் ஆதித்தன்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top