26
எவ்வளவோ முயற்சி செய்தும் உறக்கம் வராமல் போக கட்டிலில் இருந்து எழுந்த நவ்யா அருகே ஸ்வஸ்திகா உறங்கி விட்டாளா என்று பார்க்க அவளோ தலையணையை கட்டிப்பிடித்துக்கொண்டு ஏதோ பிதற்றியபடியே உறங்கிக்கொண்டிருந்தால்.
அவள் உறக்கம் கலையா வண்ணம் எழுந்தவள் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த அறையில் இருந்து வெளியே வர ஜன்னல் வழியே வெளியே பார்த்தவள் கண்களில் பட்டான் அங்கே இருந்த பெஞ்சில் அமர்ந்து வானத்தை வெறித்துக்கொண்டிருந்த விக்ரம்.
அவனை கண்டவள் "இவரு எதுக்கு இங்க உக்காந்துருக்காரு ?"என்று நினைத்துக்கொண்டே உள்ளே அறையில் சென்று ஒரு சால்வயை எடுத்து தன் மேல் போர்த்திக்கொண்டவள் அவன் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி நடந்தால்.இரவு நேரம் ஒரு ஊசி விழுந்தாலும் பெரும் இரைச்சலாய் கேட்கும் அளவிற்கு அமைதியாய் இருக்க அவ்விடத்தின் குளிர் அந்த கனத்த சல்வரையும் மீறி அவள் உடலை நடுங்கச்செய்தது .
அவன் அருகில் நடுங்கிக்கொண்டே சென்றவள் "இந்நேரத்துல இங்க என்ன பண்றீங்க விக்ரம் மேல shawl கூட போர்த்தாம இப்டி குளுருது "என்க
அவனோ அவளை ஒரு பார்வை பார்த்தவன் மீண்டும் வானத்தை வெரிக்கத் துவங்க இவளோ மனதிற்குள் பொறுமியவள் இனி பொறுத்து போனால் சரிப்பட்டு வராது என்று அவன் எதிர்பாரா நேரம் அவன் மடியில் ஏறி அமர்ந்தவள் அவனிற்கும் சேர்த்து சால்வாயை போர்த்தி விட்டால் .
அவள் தன் மடியில் அமர்ந்ததும் அதிர்ந்து நோக்கியவன் அவளை விளக்க பார்க்க அவளோ மேலும் வசதியாய் அவன் மேல் ஏறி அமர்ந்து கொள்ள அவனோ பல்லை கடித்தவன் "நவ்யா எந்திரிடி "என்க
அவளோ "ஏன் கோவமா இருக்கீங்கன்னு சொல்லுங்க நா எந்திரிக்கிறேன் "என்க
அவனோ வேறு புறம் முகத்தை திருப்பி கொள்ள அவளோ உன்னை அவ்வளவு எளிதில் விட மாட்டேன் விக்ரம் என்று மனதில் நினைத்தவள் அவன் தோளில் தன் முகத்தை வைத்து கொண்டு அவனை கழுத்தோடு சேர்த்தணைக்க அவன் உடல் ஒருமுறை சிலிர்த்தடங்கியது.
அனிச்சையாய் அவன் கரங்கள் அவளை இடையோடு வளைத்து அணைக்க அவன் தோளில் முகத்தை வைத்தவாறே பேசினால் நவ்யா "ஏன் விக்ரம் என்மேல இவ்ளோ கோவமா இருக்கீங்க ?கோவமா இருந்தா திட்டிக்கோங்க பேசாம மட்டும் இருக்காதீங்கன்னு சொன்னேன்ல ஏன் இப்டி பேசாம இருந்து என்ன காயப்படுத்துறீங்க "என்க
அவனோ அவளை தன் தோளில் இருந்து நிமிர்த்தியவன் அமைதியாய் "நீ என்ன காயப்படுத்துனதை விடவா நவி ?"என்க
அவள் புரியாது விழிக்க அவனே தொடர்ந்தான் "ஏண்டி இப்டி பண்ண?கொஞ்சம் சந்தேகம் வந்திருந்தாலும் உன் நெலமைய யோசிச்சு பார்த்தியாடி நீ? "என்க
அவளோ அவன் கன்னத்தில் தன் கையை வைத்தவள் "அதான் ஒன்னும் ஆகலேலங்க?"என்க
அவள் கன்னத்தை தன் கைகளில் ஏந்தியவன் "ஏதாச்சும் அப்டி ஆய்ருந்தா நெனைக்கேலயே என் உடம்பெல்லாம் நடுங்குதுடி என்னால handle பண்ண முடியாதா ?இல்ல எனக்கு அவ்ளோ திறமை இல்லனு நெனச்சுட்டியா ?"என்க
அவளோ வேகமாய் மறுப்பாய் தலை அசைத்தவள் "achoo அப்டிலாம் இல்லங்க நீங்க கண்டிப்பா இந்த பிரச்னைய முடுச்சுருப்பீங்க ஆனா கொஞ்சம் நேரம் எடுத்திருக்கும் ஏற்கனவே நெறைய லாஸ் இன்னும் தாமதமான நெறைய இழப்பு வரும்னு தான் இதை பண்ண சம்மதிச்சேங்க"என்க
அவனோ "என் சந்தோஷமே நீ தானடி என் சொத்து மொத்தமும் அழுஞ்சுருந்தாலும் நா கவலை பட்டிருக்க மாட்டேன் நவி பட் இதுல ஏதாச்சும் ஒரு தப்பு ஆகி உனக்கு ஏதாச்சும் ஆய்ருந்தா i can 't bare the thought of living without you டி புருஞ்சுக்கோ இனியாச்சும் இப்டி ஏதாச்சும் பைத்தியக்காரத்தனம் பண்ணாத "என்க
அவன் கண்ணை பார்த்தவள் சிரித்தபடி தலை அசைக்க அவனோ அவள் நெற்றியில் முத்தமிட்டவன் அவளை தன் மார்போடு சேர்த்தணைத்துக்கொண்டான் .அவன் மார்பில் சாய்ந்து கண்மூடிட அவள் தலை முடியை கோதிக்கொண்டிருந்த விக்ரம் "நவி நா உன்ன ரொம்ப திட்டுறேனாடா?"என்க
அவளோ அவன் மார்பில் நன்றாய் புதைந்து படுத்தவள் "இதென்ன சினிமாவா விக்ரம் லவர் என்ன பண்ணாலும் ஹீரோக்கு கோவமே வராம இருக்க நா தப்பு பண்ணா திட்டுறதுக்கும் கோபப்படுறதுக்கும் உங்களுக்கு முழு உரிமை இருக்குப்பா actually இந்த மாறி சண்டைலாம் தான் நம்ம loveah ஸ்ட்ரோங் ஆக்கும்"என்க அவள் கூறிய பதிலில் சமாதானம் அடைந்தவன் அவள் நெற்றிப்பொட்டில் முத்தமிட்டு தன்னோடு மேலும் ஆழமாய் புதைத்துக்கொள்ள அவளோ அந்த சால்வயும் தன்னவனின் மார்பும் தந்த சூட்டில் சுகமாய் கண்ணயர்ந்து விட சற்று நேரம் கழித்து அவள் தன்மேலே அமர்ந்தபடி தூங்குவதை கண்டவன் சிரித்துவிட்டு அவளை கையில் ஏந்தியபடி அவள் அறையில் படுக்க வைத்தான் .
அவளை கட்டிலில் கிடத்தியவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அவள் தலையை வருடிவிட்டு தன் அறையில் வந்துறங்க அடுத்த நாள் காலை அழகாய் விடிந்தது .எழுந்து குளித்து தயாரானவர்கள் எலக்ரியின் பிரசித்தி பெட்ரா ஜெலகம்பாறை நீர்வீழ்ச்சிக்கு சென்றனர்.
அவர்கள் சென்ற நேரம் அங்கே நீர்ப்பொழிவு மிகவும் நன்றாய் இருக்க நால்வரும் அந்த நீரில் இறங்கி கும்மாளமிட்டனர் .அவர்கள் சென்ற நேரம் வேலை நாட்களாய் இருந்ததால் கூட்டம் அவ்வளவாக இல்லை .நன்றாக ஆட்டமிட்டவர்கள் அங்கிருந்த கோயிலிற்கு செல்வதற்காக உடை மாற்றும் இடத்திற்கு சென்று உடை மாற்றிக்கொண்டு வந்தனர் .
சரண் முன்னேயே உடை மாற்றிவிட்டு வெளியே வந்து விட அங்கே இருந்த பாறையில் காலை வைத்துக்கொண்டு இருந்தவன் எதேர்ச்சியாய் திரும்ப அங்கே ஸ்வஸ்திகா நடந்து வருவதை பார்த்தவன் அவளை பார்த்த மாத்திரத்தில் சிலை ஆனான்.வரலாற்றிலேயே முதல் முறையாக ஸ்வஸ்திகா புடவை அணிந்திருந்தாள் .
இடை தாண்டி வளர்ந்த கருங்கூந்தல் அவள் இட்டிருந்த கேட்ச் க்ளிப்பிற்கு அடங்காது அலை அலையாய் விரிந்திருக்க எவ்வித ஒப்பனையுமின்றி அருவியில் குளித்ததாலும் சூரியனின் தாக்கத்தாலும் இயல்பாகவே முகம் சற்று சிவந்து விட மெல்லிய சங்கிலியும் காதணியும் அணிந்திருந்தவள் அவனை நோக்கி ஒயிலாய் நடந்து வர முதல் முறையாய் சரணின் பார்வை அவளை வேறு ஒரு கோணத்தில் ரசிக்க துவங்கியது .
அவன் அவளையே பார்ப்பதை உணர்ந்துகொண்ட ஸ்வஸ்திகா "அப்படி வா வழிக்கு "என்று மனதில் சிரித்தவள் வெளியே எதுவும் தெரியாததை போல் அவன் அருகில் நின்றுகொண்டவள் அவன் தோளை தொட்டு "ஹே சரண் என்ன அப்டி பாக்குறீங்க ?"(நோட் தி மரியாதை )என்க
அவனோ அவள் உலுக்கியதில் சுயநினைவடைந்தவன் "ஒண்.... ஒண்ணுமில்ல டி "என்றுவிட்டு திரும்பி தன் தலை முடியை கோதிக்கொண்டவன் தன் செயலிற்கு தன்னையே கேவலமாய் கரித்துக்கொட்டிக்கொண்டான் .
பின் நவ்யாவும் விக்ரமும் வந்து விட கோயிலிற்கு உள்ளே சென்று வேண்டிக்கொண்டு வர நவ்யாவும் ஸ்வஸ்திகாவும் முன்னே செல்ல பின்னே வந்த சரணின் சட்டை காலரை பிடித்திழுத்து விக்ரம் அவனை நிற்க வைத்தான்
சரண் "என்னடா எதுக்கிப்போ நிக்க வைக்குற ?"என்க
விக்ரம் "டேய்ய் இங்க வந்ததுல இருந்து நவ்யா ஸ்வஸ்திகாவோடயே இருக்காடா பேசிக்க கூட முடியல அதுனால ........"
என்றிழுக்க
சரண் "அதுனால ?"என்று நிறுத்த
விக்ரமோ "அதுனால நீ ஸ்வஸ்திகாவை கூட்டிட்டு எங்கயாச்சும் போடா"என்க சரண் முன்னே என்றால் அந்த கத்திரிக்காவோடையா என்னால முடியாதுடா என்று ஒரு அழிச்சாட்டியமே செய்திருப்பான் எனில் இன்று அவனின் மனதே அவளுடனான தனிமையை விரும்பியதே ஆதலால் மனதிற்குள்" இதை இதை இதை தான் நா எதிர்பார்த்தேன்" என்று நினைத்துக்கொண்டவன் வெளியே கெத்தை விடாமல் "அதெல்லாம் முடியாதுடா "என்க
விக்ரமோ அவனை முறைத்தவன் "மிஸ்டர் சரண் நா உங்கட்ட போறீங்களானு கேக்கல போடான்னு சொன்னேன் சோ மூடிக்கிட்டு கெளம்புற வேலைய பாருங்க "என்க
சரணின் மனசாட்சி அவனை அசிங்கப்பட்டதிற்கு காறித்துப்ப அவனோ துப்புனா தொடச்சுக்குவேன் என்று அதை அலட்சியம் செய்தவன் ஸ்வஸ்திகாவை இழுத்துக்கொண்டு அங்கிருந்து நகன்றான்.
ஸ்வஸ்திகா "என்ன சரண் எதுக்கு இப்போ என்ன இங்க கூட்டிட்டு வரீங்க ?"என்க
அவனோ"அது விக்ரம் நம்மள ஏன்டா கரடி மாறி கூடவே இருந்து உசுர வாங்குறீங்க எங்கயாச்சும் போய் தொலைங்கடானு ரொம்ப டீசெண்டாஹ் சொன்னான் அதான் அவன் இன்னும் டீசெண்டாஹ் சொல்றதுக்குள்ள உன்னையும் இழுத்துட்டு வந்துட்டேன்" என்க
ஸ்வஸ்திகாவோ மனதில் விக்ரமிற்கு கோடி நன்றி கூறியவள் வெளியே சரணிடம் "சரி எங்கே போலாம் சொல்லுங்க "என்க
அவனோ"ம்ம்ம்ம் ....... நிலவூர் lake போலாமா ?"என்க அவளும் ஆமோதிக்க இருவரும் அங்கே சென்றனர் நிலவூர் lake சிறிய பரப்பளவில் அதிக அழகுடன் சுற்றுலாப்பயணிகள் மனதையும் கருத்தையும் கவரும் அழகோடும் அமைதியோடும் அமைந்திருக்கும் ஒரு அற்புதமான சுற்றுலாத்தலம் .
அங்கே சென்றவர்கள் சற்று நேரம் அவ்வேரியின் அழகை பார்த்தவர்கள் சற்று நேரம் அதை சுற்றி நடந்துவிட்டு அங்கே போட்டிங் சென்றார்கள் .ஸ்வஸ்திகா ஏரியை ரசித்துக்கொண்டே வர சரணோ தன் கண்ணை அவளிடம் இருந்து எடுக்க மிகவும் சிரமப்பட்டான் .
ரெண்டு நொடிக்கொருமுறை அவன் கண்கள் அவளை நோக்கி சென்றது .சரணின் மனது "ஐயோ ராட்சசி என்ன மாய மந்திரம் பண்ணி வச்சானே தேரிலேயே கண்ணு நகர மாட்டெண்டகுதே இவகிட்ட இருந்து சேலைக்கு அவ்வளோ பவர் இருக்குமா என்ன "என்று புலம்ப சற்று நேரத்தில் குழப்பத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்தவன் போட்டிங் முடிந்ததும் நடைபாதையில் அவளுடன் நடந்து கொண்டே அவள் தோளில் கைபோட்டவன் பழைய படி கலகலப்பாய் பேசத்துவங்கினான் .
சிரித்தபடியே அவளுடன் பேசிக்கொண்டிருந்தவன் பார்வை ஒரு நபரின் மேல் பட்டு அப்படியே அவ்விடத்தில் உறைய அவனது உடல் விறைத்து அவள் தோலை இருகைப்பற்ற திடீரென்று அவனிடம் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு குழம்பியவள் அவன் பார்வை சென்ற இடத்தில் பார்க்க அங்கே இருந்த நபரை பார்த்தவளிற்கு அவனின் மாற்றத்திற்கான காரணம் புரிய அவன் தன் தோளில் பற்றியிருந்த கையில் ஒரு சிறு அழுத்தம் கொடுத்தால் ஸ்வஸ்திகா .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top