23

அவன் சுயநினைவை பெற்ற அடுத்த நொடி அவன் கண்முன்னே கடைசியாய் மமதியை அந்த விக்ராந்தின் பிடியில் பார்த்தது ஞாபகம் வர உடனடியாய் அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறியவன். மமதியை பற்றி விசாரிக்கத்துவங்கினான் .அவள் வீட்டிற்கு வந்தவன் கல்லின் பெல்லை அடித்துக்கொண்டே இருக்க கதவு திறக்கப்படவில்லை .என்ன ஆனதோ ஏதானதோ என்று பதறிக்கொண்டு வந்தவனிற்கு இது மேலும் பதற்றத்தை தர அவன் கல்லின் பெல் அடித்த சத்தத்தில் பக்கத்துக்கு வீட்டில் இருந்து வெளியே வந்த ஒரு நடுத்தர வயதை எட்டிய ஒருவர் "யார் நீ என்ன வேண்டும் ஆளில்லாத வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறாய் ?"என்று ஹிந்தியில் வினவ

அவனோ ஏனோ தன் அடையாளத்தை மறைக்க நினைத்தவன் "நான் மமதியின் தோழன் .பல வருடங்களுக்கு பின் இப்பொழுதே இந்தியாவிற்கு வந்திருக்கிறேன் மமதி எங்கே ?"என்று கேட்க அந்த நடுத்தர வயது நிரம்பிய பெண்மணியின் முகம் சோகத்தை பூசிக்கொள்ள மமதிக்கு நடந்த அநீதியை கூறி முடித்தார் அவர் .

அவரின் வாயால் அவளது கொடூர மரணம் பற்றி அறிந்த ஆதித்தனுக்கு ரத்த நாளங்கள் அனைத்தும் கொதித்தது தன் தோழிக்கு நிகழ்ந்த அநியாயத்தை நினைத்து . மமதி அவனிற்கு தோழி என்பதை விட அனைத்துமாய் இருந்தவள் அவள் .ஆதித்தன் தன் வீட்டை பிரிந்து குடும்பத்தை பிரிந்து இங்கு வந்து தங்கி தன் வேலையே தொடர அவன் தன் குடும்பத்தை மிஸ் செய்யாதவாறு அவனை எப்பொழுதும் கலகலப்பாக வைத்துக்கொள்பவள் மமதி.எந்த ஒரு பெரும் துயரையும் தன் சாந்தமான ஆறுதல் பேச்சால் தீர்த்துவிடுவாள்.ஆதித்தனிற்கு இங்கு வந்ததிலிருந்து ஹோட்டல் உணவு ஒத்துக்கொள்ளாமல் போக அவன் கேளாமல் தானே அவனிற்கு சேர்த்து சமைத்து கொண்டு வருவாள் .

அவ்வப்போது கையில் அடிபட்டு விட்டால் தயங்காமல் ஊட்டிவிடுவாள்.ஆணையும் பெண்ணையும் இணைத்து பார்த்தாலே அவர்கள் காதலர்கள் என்று தவறாய் பார்க்கும் சமூகத்தில் அவனுடன் இணைத்து அவளை பேச அவள் ஒரே வார்த்தையில் முடித்தால்" என் ஆதித்தனின் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளதென்று".தன்னை அத்தனை தூரம் நம்பிய ஒருவள் கடைசி நேரத்திலும் அம்மா என்று கதறாமல் ஆதி என்றல்லவா அலறினாள் தன்னை எப்படியாவது தன் நண்பன் காப்பாற்றி விடுவான் என்றல்லவா நினைத்தால் அவள் நம்பிக்கையை பொய்யாகி அந்த மிருகத்திடம் பலிகொடுத்து தான் மட்டும் உயிர் வாழ்கிறோமே என்ற நினைப்பே அவன் உள்ளத்தில் அமிலத்தை ஊற்ற மஹதியின் நிலையை நினைத்தவனிற்கோ உடலில் உள்ள அனைத்து செல்களும் ரத்தம் சிந்தியது .

கண்ணார கண்டவனல்லவா அந்த அக்கா தங்கையின் பாசப்பிணைப்பை .அனைத்து எண்ணங்களும் சேர்ந்து அவன் உடலில் கோபமெனும் தீப்பிழம்பை ஊற்ற விக்ராந்தை வெட்டிப்போடும் வெறியில் இருந்தான் ஆதித்தன் .பின் தன் அடையாளத்தை மறைத்து விக்ராந்தை பற்றி விசாரித்தவனிற்கு அவன் இறந்துவிட்டான் என்று செய்தி கிடைக்க அவன் மனதும் மூளையும் ஒருசேர அதை நம்ப மறுத்தது.

.பைத்தியக்காரன் போல் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அவனை பற்றி அலசி ஆராய்ந்தான் .தன்னிடம் இருந்த மொத்த அறிவையும் பிரயோகப்படுத்தி எந்தெந்த வழிகள் இருக்குமோ அந்தந்த வழிகளிலெல்லாம் அவனை பற்றி விசாரித்தான் எனில் அவனிற்கு கிடைத்த விவரம் என்னவோ விக்ராந்த் இறந்துவிட்டான் என்பது தான் .மனமுடைந்தவன் பின் தான் வேலை பார்த்த நிறுவனத்திற்கே மீண்டும் சென்றான்.பத்திரிக்கை நிறுவனங்களில் சில குற்றங்களை ஆராயும் நிகழ்ச்சிகளில் ஆதாரங்கள் சேகரிக்க அவ்வப்போது வெளியுலகத்தை பொறுத்தவரை இறந்ததாக காட்டப்பட்டவர்களை பணியில் நியமிப்பார் அந்த ஆதாரங்கள் சேகரிக்கும் அணியில் நிழல் உலக தாதாக்களைப்பற்றி ஆராயும் குழுவில் பணியில் அமர்த்தப்பட்டான் ஆதித்தன்

நாட்கள் அதன் போக்கில் விரைய ஆதித்தனிற்கு ஒரு முக்கியமான பணி வழங்கப்பட்டது.

நிழல் உலகை ஆட்டிப்படைக்கும் பெரும் தாதா "காளியப்பன் " இந்தியாவில் இருக்கும் அனைத்து முக்கியமான கொலை கொள்ளை போன்ற பல குற்றங்களை நடத்தி வருபவன் அவன் .அவனைப்பற்றி விசாரித்துக்கொண்டிருந்தவனிற்கு கிடைத்தது அவனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் செய்தி .மறைந்து மறைந்து எப்படியோ சென்றவன் அங்கிருந்தவர்களை படமெடுக்க அப்பொழுதே அவன் கண்ணில் பட்டான் விக்ராந்த். இறந்து விட்டான் என்று நிஜ உலகில் கருதப்பட்டு நிழல் உலகில் அந்த தாதாவின் இடது கையை மாறிப்போன விக்ராந்த் .அவன் உயிரோடிருப்பதை கண்ணார கண்டவன் அவ்விடத்திலேயே ஸ்தம்பித்து நின்றுவிட அவன் கண்களில் ரௌத்திரம் கொப்பளிக்க அவனை அப்பொழுதே கொள்ளும் வெறியில் இருந்தவன் அவன் இருக்கும் நிலையை பார்த்து குழம்பி போனான்.எனவே அந்த கூட்டத்தை பற்றியும் அதில் விக்ராந்தின் வருகையை பற்றியும் தீவிரமாய் ஆராயத்துவங்கினான் .

தன் அடையாளத்தை மறைத்து அடிமட்டம் வரை சென்று அவனை பற்றி விசாரிக்க துவங்கினான் .அந்த கூட்டத்தில் அனைவரும் தங்கள் முகத்தை எப்பொழுதும் மூடி இருப்பது அவனிற்கு வசதியாய் போய்விட அந்த கூட்டத்தில் ஒருவனாய் கலந்தவன் விக்ராந்தை பற்றி ஆராயத் துவங்கினான்.

அப்பொழுதே அவன் அறிந்து கொண்டான் விக்ரம் கோடௌனிற்கு தீ வைத்து விட்டு வெளியேறிய அடுத்த சில நிமிடங்களில் சுயவிநினைவடைந்த விக்ராந்த் எப்படியோ தட்டு தடுமாறி அந்த கோடௌனை விட்டு வெளியேற அந்த இடத்தில தான் கொன்ற ஒருவனின் சடலத்தை புதைக்க வந்த சில கொலைகாரர்கள் கண்களில் சிக்கிய விக்ராந்த் அவர்களால் காப்பாற்றப்பட்டு அவர்களின் நிழல் உலக தாதாவிடம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறான் .அவர்களின் கும்பலில் தன்னை இணைத்துக்கொண்டவன் சிறிது சிறிதாய் பற்பல குற்றங்களையும் கொலைகளையும் செய்து அந்த தாதாவின் வலது கையாய் மாறும் அளவிற்கு நிழல் உலக rowdigalin மத்தியில் செல்வாக்கை பெற்றிருந்தான் .

அந்த இடத்தை எட்டிய பின் தற்பொழுது அவன் குறி வைக்க துவங்கியது விக்ரமிற்கு

அவனது அனைத்து தொழில்களிலும் தன்னால் முயன்ற அளவிற்கு குளறுபடியை ஏற்படுத்தினான் தனது அடையாளத்தை மறைத்து .அவன் செய்த மொத்த குற்றங்களையும் எந்த வித பிசகும் இன்றி நிரூபிக்குமாறு பக்காவாக ஆதாரத்தை திரட்டிய ஆதித்தன் காத்திருந்தது அவன் நிஜத்தில் நேருக்கு நேர் வெளிப்படுவதற்காக மட்டுமே .

அன்று பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கடைசியாய் பார்த்த விக்ராந்தை அதன் பின் பார்க்க சந்தர்ப்பமே கிடைக்கவில்லை . விக்ராந்த் அனைத்தையும் தன் இடத்தை மறைத்து ,தன் அடையாளத்தை மறைத்து முற்றிலும் தலை மறைவாய் அவன் காய்களை நகர்த்த ஆதிதனால் அவனை வெளிக்கொண்டு வர இயலவில்லை .எவ்வாறு அவனை வெளிக்கொணர்வது என்று அவன் யோசித்துக்கொண்டிருக்கையிலேயே அவன் கண்ணில் பட்டால் விக்ரமின் உயிர் மூச்சை மாறி போன நவ்யா

விக்ராந்தின் புத்தியையும் அவனது பெண்களுக்கான weaknessayum அறிந்தவன் நவ்யாவை வைத்து காய் நகர்த்த நினைத்தான் .

அன்று விக்ரமை எப்பாடு பட்டும் சமாதானம் செய்ய முடியாமல் போக ஆட்டோவில் வந்துகொண்டிருந்த நவ்யா ஆட்டோ ஏதோ ஒரு கோபீ சோப்பின் முன் நிற்கவும் குழம்ப அந்த ஆட்டோ drivero "சார் உங்களை உள்ளே காத்திருக்க கூறினார் "என்று கூற நவ்யா விக்ரம் தான் அவ்வாறு கூறியிருக்கிறான் என்று நினைத்து தன் கை பையை தூக்கி கொண்டு உள்ளே சென்று அமர அவளின் எதிரே அடுத்த ஐந்து நிமிடத்தில் முகத்தை மூடியவாறு வந்தமர்ந்தான் ஆதித்தன் .நவ்யா வேறு இருக்கைக்கும் மாறப்போக ஆதித்தனோ "நவ்யா உன்ட பேசணும் உக்காரு "என்க

அவளிற்கு அந்த குரல் எங்கோ கேட்டது போல் இருக்க நவ்யா "யார் நீங்க என்ன பேசணும் ?"என்க சுற்றி முற்றி பார்த்த ஆதித்தன் தன் முகத்தை மறைக்கும் hoodiயை அவிழ்க்க ஆதித்தனை உயிருடன் கண்ட நவ்யா அதிர்ச்சியில் உறைந்துவிட்டால்.

நவ்யா "ஆ ஆ ஆதி அண்ணா நீங்க உயிரோட தான் இருக்கீங்களா .கடவுளே என் அண்ணா நீங்க வரல எல்லாரும் எவ்ளோ கஷ்டப்பட்டோம் தெரியுமா நீங்க இறந்துட்டிங்கன்னு நெனச்சு "என்றவள் தன் கைபேசியை எடுத்து "இதோ இப்போவே ஸ்வஸ்திக்கு சொல்றேன் ரொம்ப சந்தோஷப்படுவா "என்று கால் செய்யப்போக

அவள் போனிnai பிடுங்கிய ஆதித்தன் தன் hoodiயை இழுத்துவிட்டுக்கொண்டு "நவ்யா நா உயிரோட இருக்குறது வேற யாருக்கும் தெரியவேணாம் நான் இப்போ உண்ட தனியா பேசணுன்னு தான் இங்க கூப்பிட்டேன் விக்ரம் is in danger "என்க

புருவங்கள் முடிச்சிட்டு நிமிர்ந்த நவ்யா "விக்ரமுக்கு என்ன ?"என்க

அவளிடம் பிரச்னையின் ஆதி முதல் அந்தம் வரை கூறிய ஆதித்தன் பின் "விக்ராந்தஹ் வெளிய கொண்டு வரணுனா உன்ன பகடை காயா வச்சு தான் நகர்த்த முடியும்.ரொம்ப ரிஸ்க்கான விஷயம் கொஞ்சம் மிஸ் ஆனாலும் உயிர் போய்டும் "என்க

அவன் முடிக்குமுன்னே நவ்யா "நா செய்றேன் அண்ணா "என்றால் அவள் உடனே ஆமோதிக்க ஆதித்தனோ அதிர்ந்து   விழித்தான் அவன் விழிப்பதை கண்டு சிரித்தவள் "அண்ணா என் விக்ரம்காக நா என்ன வேணா செய்வேன் அண்ணா இதை செய்றதுல அவர் பிரச்னை தீரும்னா நா செய்றேன் என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லுங்க "என்க ஆதித்தனுக்கு கூறினான் தன் திட்டத்தை .

ஆதித்தனின் கணக்கின் படி நவ்யாவும் விக்ரமும் வெளிப்படையாய் நெருங்கி பழகவும் விக்ரமிற்கு நவ்யாவின் மேல் இருக்கும் காதலை அவன் வெளிப்படையாய் காட்ட துவங்கினால் நிச்சயம் விக்ராந்தின் அடுத்த குறி நவ்யாவின் மீதே பாயும்.அவளை கடத்த நினைப்பான் அதற்காக அந்த நிழல் உலக தாதாவின் உதவியை நிச்சயம் நாடுவான் என்பதே ஆகும்.

அதற்கேற்றாற்போல் அனைத்தும் அமைந்தது நவ்யா அவள் காதலை வெளிப்படுத்தி விக்ரமையும் வெளிப்படுத்த வைத்தால்.விக்ராந்த் அந்த நிழல் உலக தாதாவை அணுகும் முன்னே ஆதித்தனால் அந்த நிழல் உலக தாதாவின் வெளிநாட்டில் இருக்கும் மகன் அங்கிருக்கும் ராகுலின் உதவியோடு யாரும் அறியா வகையில் கடத்தப்பட்டான்.

தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பதற்கேற்ப நிழல் உலகில் மொத்த இந்தியாவையும் ஆட்டிப்படைக்கும் அந்த தாதாவை அவனது மகனின் கடத்தல் நிலைகுலைத்தது .எத்தனை முயன்றும் அவனால் தன் மகனின் இருப்பிடத்தை அறிந்துகொள்ள முடியாமல் போக அவனிற்கிருந்த ஒரே வழி ஆதித்தனின் சொல்லை கேட்பது தான் .அதன் படி விக்ரமிற்கு நவ்யாவை கடத்துவதற்கு ஏற்பாடு செய்தாகிற்று.

எனில் ஆதித்தன் எதிர்பாரா ஒன்று விக்ராந்த் ஸ்வஸ்திகாவையும் கடத்தியது தான் .பின் எப்படியும் சம்மாளித்துக்கொள்ளலாம் என்று நினைத்தவன் விக்ராந்த் இருவரையும் ஆட்களை வைத்து ஏதோ ஒரு ஆள் நடமாட்டமில்லாத வீட்டிற்கு அழைத்து செல்ல திட்டமிட ஆதித்தனோ அந்த தாதாவை மிரட்டி விக்ராந்தை நேரிடையாக நவ்யாவையும் ஸ்வஸ்திகாவையும் இந்த பாழடைந்த மண்டபத்திற்கு மாற்றக்கூறினான் .அவன் திட்டப்படி விக்ராந்த் ஓட்டிவந்த vanirku பின்னே வந்த மூன்று வாகனங்களையும் காட்டுப்பாதையில் மறைந்திருந்த மூன்று வண்டியை வைத்து அடித்து தூக்கியவன் விக்ராந்தின் வருகைக்காக அந்த பாழடைந்த மண்டபத்தில் இரை தேடும் கழுகாய் காத்திருந்தான் .

விக்ராந்த் உள்ளே இருவரையும் மயக்க நிலையில் தூக்கி வந்து அங்கிருந்த தூண்களில் கட்ட அவன் எதிர்பாரா விதமாய் பின்னிருந்து விக்ராந்தை மயக்கமருந்தின் உதவியோடு மயக்கமடைய செய்தான் ஆதித்தன்.எத்தனை பெரிய அறிவாளியாய் இருந்தாலும் அவன் ஒரு இடத்தில சறுக்குவான் அதே போல் விக்ராந்தும் இது வரை தனது அதனை திட்டங்களையும் பார்த்து பார்த்து எந்த தடயமும் இன்றி செய்தவன் ஆதித்தனால் இன்று பொறியில் சிக்கிய எலியை மாட்டிக்கொண்டான்.

விக்ராந்த் மயக்கமடைய நவ்யாவையும் ஸ்வஸ்திகாவையும் மயக்கத்திலிருந்து எழுப்பினான் ஆதித்தன்.நவ்யாவிற்கு திட்டம் வெற்றி அடைந்தது தெரிந்து மனது குத்தாட்டம் போடா ஸ்வஸ்திகாவிற்கோ ஒன்றும் விளங்கவில்லை .நவ்யாவின் அருகே வந்தவள் "நவி நாம எப்படி இங்க வந்தோம்?"என்றவள் அங்கே மயங்கி கிடந்த விக்ராந்தை பார்த்து "வி விக்ராந்த் இவன் எப்படி இங்க ? எந்த இடம் இது யார் இது ?"என்று முகத்தை மூடி இருந்த ஆதித்தனை சுட்டிக்காட்ட ஆதித்தனோ தன் முகத்தில் இருந்த துணியை எடுத்தவன் "அம்லு "என்று கைகளை விரிக்க ஸ்வஸ்திகாவிற்கோ ஆனந்த அதிர்ச்சி தாங்கவில்லை அவனை ஓடி சென்று அனைத்துக்கொண்டவள் அண்ணா அண்ணா என்று பிதற்றிக்கொண்டே அவனை இறுக்கி அணைத்துக்கொண்டாள் .அவளிற்கு என்றோ தொலைந்த உயிரின் ஒரு பகுதி மீண்டும் இணைந்தாற்போல் இருக்க அவனிற்கோ மீண்டும் அவளை பிறந்த பொது கையில் ஏந்தியதை போல் இருந்தது .அவளை நிமிர்த்தியவன் இங்கே நடந்த அனைத்தையும் கூற அவள் நவ்யாவை நன்றியுடன் நோக்கியவள் விக்ராந்தை முறைத்து சரண்கு போன் பின்னணி சொல்லுன்னா இன்னிக்கு இவனுக்கு இருக்கு சங்கு .என்றவள் நவ்யாவுடன் இனைந்து நின்றுக்கொன்றால்.

இந்த திட்டத்தில் சிறு பிழை,சிறு சந்தேகம் விக்ராந்திற்கு ஏற்பட்டிருப்பினும் நவ்யா ஸ்வஸ்திகா இருவரின் உயிரும் போய் இருக்கும் .எனில் எப்படியோ திட்டம் வெற்றி அடைய சரனிற்கு கால் செய்து அவர்களை இங்கே வரவழைத்தான் .

(பிளஷ்பக் ஓவர் )

விக்ரம் "இந்த பொறுக்கிய என் கையாலேயே சாவடிக்கனும்டா "என்று முன்னேற

ஆதித்தனோ அவன் கையை பிடித்து இழுத்தவன்"உன் கையாள சாவணும்னா இவன் மூணு வருஷத்துக்கு முனையே செத்துருக்கனும்டா ஆனா இவன் சாவ வேண்டியது என் கையாலயோ உன் கையாலயோ இல்ல "என்றவன் திரும்பி கண்களில் க்ரோதத்துடன் கைகள் இறுக முகம் கோபத்தில் ரத்த சிவப்பு நிறம் கொண்டிருக்க அசல் காளியாய் கண் முன் ரௌத்திரமாய் நின்ற மஹதியை காட்டியவன் "இவை இவை கையால தான் இவன் சாவணும் .அவளுக்கு எல்லாமுமா இருந்த அவ அக்காவை துடிக்க துடிக்க கொன்னு இவளை அனாதை ஆக்கினவன் இவன். இவன கொல்லுறதுக்கான மொத்த உரிமையும் இவளுக்கு தான் இருக்கு "என்றவன்

அவர்களை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான் .

செல்லுமுன் மஹ்தியின் அருகில் வந்து அவள் தோளில் கை வைத்தவன் அதில் சிறு அழுத்தம் கொடுத்துவிட்டு வெளியேறினான் .அவன் வெளியேறிய அடுத்த நொடி அந்த மண்டபத்தின் கதவை அடைத்த மஹதி ஒவ்வொரு அடியாய் க்ரோதத்துடன் விக்ராந்தின் அருகில் எடுத்து வைத்தால் .............

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top