16
மூன்று வருடங்களுக்கு முன் ....
சாரதா மருத்துவமனையில் சரண் குழந்தைகள் நல நிபுணராக பணியாற்றிக்கொண்டிருந்தான் .அவனது கேபினில் ஒரு ஐந்து வயது பெண் குழந்தையை அவள் தாய் மடியில் வைத்திருக்க சரணோ சிரித்துக்கொண்டே "ஹே பார்பி டால் எப்படி இருக்கீங்க ?"என்று கேட்க
அந்த குழந்தையோ கண்களை விரித்து கையை ஆட்டி "சூப்பராக இருக்கேன் சாரு "என்றவள் அச்சு ஹச்சென்று அடுத்தடுத்து தும்ம
சரண் "ஆஹா என் பிரின்செஸ்க்கு சளி புடுச்சுக்கிச்சா ஐஸ்கிரீம் சாப்டீங்களா ?"என்க
அக்குழந்தையோ தலையை தொங்கப்போட்டது பாவமாய் "ஆமா சாரு "என்க
அவனோ "குளிர் காலத்துல ஐஸ்கிரீம் சாப்பிடலாமா ?"என்றவன்
அடுத்து அக்குழந்தையை பரிசோதித்து விட்டு அவள் அம்மாவிடம் "ஒண்ணுமில்ல mam கோல்டு தான் இந்த டேப்ளெட்ஸ் குடுங்க சரி ஆயிடும் என்றவன் மாத்திரைகளை எழுதிக் கொடுக்க
மாத்திரைகளை பார்த்த குழந்தை முகத்தை அஷ்டகோணலாய் மாற்றி "மாத்திரை வேணாம் சாரு கசக்கும் ஊவா "என்று நாக்கை வெளியே நீட்ட
அவள் மூக்கை பிடித்தாட்டிய சரண் "மாத்திரை சாப்ட்டா தான் பார்பி டால்க்கு கோல்ட் போகும். நீங்க டேப்லெட் சாப்பிடுவீங்களாம் சாரு உங்களுக்கு சாக்லேட் வாங்கி தருவேனாம் ஓகே "என்க
கைகளை தட்டி சிரித்த குழந்தை தலையை தலையை ஆட்டி" நெஸ்ட் தடவை எனக்கு சாக்லேட் வேணும் பை சாரு" என்று அவன் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு கை ஆட்டிவிட்டு சென்றது .
அக்குழந்தையை பார்த்து சிரித்தவன் அடுத்தடுத்து வந்த casegalai கவனிக்க துவங்கினான் .பின் வேலையை முடித்தவன் வெளியே சென்று காரை எடுத்து விட்டு தன் வீட்டிற்கு செல்ல அவன் வீட்டில் யாருமே இல்லை .
என்னடா இது இவ்ளோ அமைதியா இருக்கு சரி இல்லையே என்று யோசிக்க அவன் கழுத்தை வளைத்து கத்தியை வைத்து முகத்தை கருப்பு துணியால் மறைத்திருந்த ஒரு வலிமையான கை.
பின் அக்கைக்கு சொந்தக்காரன் "ஹே அசையாத அப்டியே இரு அசஞ்சு சங்க அறுத்துருவேன் "என்க
சரணோ கூலாய் "மச்சான் யாருனு தெருஞ்சுருச்சு முன்னாடி வா "என்க
தன் முகத்தில் இருந்த கருப்பு துணியை விலக்கிவிட்டு சரண் முன்னே வந்தான் அவன் .மாநிறத்திற்கும் சற்று குறைவான நிறம் சரணே நிமிர்ந்து பார்க்குமளவிற்கு நெடிந்துயர்ந்த உயரம் சிறிய கண்கள், பெரிய சிரிப்பாய் இருந்தவன் முகத்தில் நிச்சயம் ஏதோ ஒரு வசீகரிக்கும் ஷக்தி இருக்க வேண்டும் அவனை பார்ப்பவர் எவருக்குமே அவன் முகத்தில் இருக்கும் புன்னகை அவர்களுக்கும் ஒட்டிக்கொள்ளும் .
சிரித்தமுகமாய் அங்கிருந்த sofaavil "எப்படி கண்டுபுடுச்ச மச்சான்"என்று கேட்டவாறே அமர்ந்தான் ஆதித்தன் ஸ்வஸ்திகாவின் உடன்பிறந்த அண்ணன்.
அவனிற்கு எதிர் சோபியாவில் அமர்ந்த சரண் "வடிவேலு மண்டை மேல இருக்குற கொண்டையை மறந்த மாறி எல்லாத்தையும் மறைச்சவன் நா குடுத்த braceletah மறைக்க மறந்துட்டியே மச்சான் "என்க
தலையில் அடிக்க சரண் "நீர் மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கொருமுறை காட்டிக்கொண்டே இருக்கிறாய் "என்க அவன் சிரித்துவிட்டான் . பின் கலகலப்பாய் பேசத்துவங்கினர் இருவரும்.
சரண் "அப்பறோம் மச்சான் வேலைலாம் எப்படி போது?"என்க
அவனோ "சூப்பராக போது மச்சான் புதுசு புதுசா crime cases அண்ட் கம்பனிஸ் பத்தி investigate பண்ற ஷோவ்க்கு cameramannaah போட்ருக்கானுங்க .ரன்னிங் சேசிங் ஜம்பிங் firing எதுக்கும் பஞ்சமில்லை ஜஸ்ட் like ஹௌ ஐ wished "என்றவாறே juiceai குடிக்க
சரணோ அவன் கழுத்திலிருந்த chainai பார்த்தவன் "ஓய் என்னடா இது புதுசா" என்க
அவனோ சிரித்தவன் "வாங்குனேன் மச்சான் "என்க
சரணோ அவனை சந்தேகப்பார்வை பார்த்தவன் "பொண்ணுங்க போடற மாடல் மாறி இருக்கே "என்க
ஆதித்தனோ "ஈஈ பேஷன் மச்சான் "என்று இளித்துவைக்க
சரண் அவனை குறுகுறுப்பாக பார்த்தவன் "நம்பிட்டேன்டா ராசா என் அப்பா அம்மாலாம் உங்க வீட்ல தான இருக்காங்க ?"என்க
ஆதித்தன் தலை அசைக்க சரண் "அப்போ சரி வா வெளிய போலாம் "என்று வெளியே ஊர் சுற்றச்சென்றனர் .
இருவரும் கடற்கரைக்கு சென்று மணலில் அமர்ந்த்திருக்க சரண்"ஏன்டா எப்போ தான் கல்யாணம் பண்ணிக்குற ideala இருக்க ?எனக்கு ரூட் clear ஆக விட மாற்றியேடா"என்க
ஆதித்தனோ லேசாய் சிரித்தவன் மீண்டும் கடலை பார்க்க
சரண்"எல்லாத்துக்கும் சிரிச்சே மழுப்பு .எந்த பொண்ண காமிச்சாலும் வேணாம் வெண்ணானுட்டு இருக்க. அப்டி எந்த மாறி பொண்ண சார் எதிர்பார்க்குறீங்க ?"என்க
அவனோ லேசாய் சிரித்தவன் அந்த கடலை பார்த்து "அவ கண்ணு என் கண்ணா பார்த்து பேசணும் ,அவ நடைல ஒரு அலட்சியம் இருக்கனும் ,அவ பார்வைல ஒரு திமிரு இருக்கனும் ,அவ பேச்சுல ஒரு தெளிவிருக்கணும் ,மொத்தத்துல அவளோட அடையாளமே அவளோட தைரியமா இருக்கனும் "என்றவன் முகத்தில் புன்னகை தவழ
சரணோ அவ்விடத்தில் தன் பார்வையை சுழலவிட்டவன் "அந்த பொண்ணு மாறியா மச்சான் என்க அங்கே திரும்பி பார்த்தவன் கண்டதோ வாயில் வெற்றிலையை மென்றுகொண்டு நான்கு பேரை அடித்து துவைத்துக்கொண்டிருக்கும் ஒரு குண்டு பெண் தாதாவை தான் .
அதை கண்டவன் கொலைவெறியுடன் சரணை நோக்குவான் என்று நினைத்தால் அது தவறு அவனோ சிரித்தவாறு திரும்பியவன் "அவுங்க புருஷனுக்கு ஓகேனா எனக்கு ஓகே மச்சான் "என்க
சரணோ அடப்பாவி என்று வாய பிளந்து பார்க்க அவனோ வாயை மூடியவன் "உனக்கு நா சொல்றதோட பீல் புரியாது புரிஞ்சுக்க முயற்சி பண்ணாத "என்றவன் சரணுடன் அடுத்து நடக்கத்துவங்கினான் .
நடக்கையில் அவனது pursai ஒரு சிறுவன் திருடிவிட்டு ஓட சரணும் ஆதித்தனும் எவ்வளவு துரத்தியும் அந்த சிறுவனை பிடிக்க முடியவில்லை .
மூச்சு வாங்க நின்ற சரண் "சா புடிக்க முடிலையேடா "என்க
ஆதித்தனோ சிரித்தவன் "விடுடா அவன் தேவையை என் பணம் தீர்த்து வைக்கட்டும் "என்க
சரணோ அவனை வித்தியாசமாய் பார்த்தவன் "எப்பிடிடா எல்லாத்துலயும் நல்லதை மட்டும் எடுத்துக்குற ?"என்க
அவனோ சிறு புன்னகையை உதிர்த்தவன் "positivity makes யு happy மச்சி முடுஞ்சு போனதை பத்தி பேசி என்னாகப்போது சொல்லு let இட் கோ மச்சான் "என்க
அவனை வினோதமான நோக்கிய சரண் "எப்போ வரிக்கும் லீவு ?"என்க
அவனோ "இன்னும் 1 மாசம் "என்றான் .பின் நன்றாக சுத்தியவர்கள் நீண்ட நாள் கழித்து சந்தித்ததால் சரணின் உபயத்தில் சரக்கடித்துவிட்டு 12 மணிக்கு ஆதித்தனின் வீடு வந்து சேர .அனைத்து லைட்டுகளும் ஆப் செய்யப்பட்டிருந்தது ஒரு பெருமூச்சு விட்டவர்கள் லைட்டை போட அங்கோ இருவரையும் இடுப்பில் கை வைத்து முறைத்தவாறே நின்றாள் ஸ்வஸ்திகா .
அவளை பார்த்த சரண் "அம்மா பேய்" என்க
அவனை முறைத்தவள் ஆதித்தனிடம் "வாடா வா இவ்ளோ நேரம் எங்கே போய் ஊர் சுத்திட்டு வர இந்த தடிமாடோட"என்க
சரண் "ஓய் கத்திரிக்கா நல்ல நடு hallah இருட்டுல பேய் மாறி நின்னுட்டு என்ன வந்ததும் என் மச்சானை நிக்க வச்சு கேள்வி கேடுற்றுக்க உள்ள விடுடி "என்க
அவளோ அவன் புறம் திரும்பியவள் "வாடா வா தமிழோட திருமகனே எங்கம்மாவோட மருமகனே சரி தான் உன்ன தான் கேள்வி கேட்ருக்கணும் நியாயப்படி .சரி சொல்லு எங்கட இவ்ளோ நேரமா போய்ட்டு வந்தீங்க "என்றவள் ஏதோ கெட நாத்தம் வர
பின் ஏதோ முகபாவத்தை மாற்றியவள் சரணின் சட்டையை கோத்தாகப் பிடித்து தன் அருகில் இழுத்தவள் "குடுச்சுருக்கியா ஊது "என்க
அவனோ நெளிந்தவன் "அடியேய் என்னடி பண்ற சட்டையை விடுடி "என்க
அவளோ "ஊதுடா "என்க மாட்டிக்கொள்வோம் என்று நினைத்தவன் உதட்டை குவித்து காற்றை உள்ளிழுக்க அவனை மேலும் நெருக்கமாய் அருகிழுத்தவள் "ஊத சொன்னா உரியுற ஊதுடா "என்க
அவளிற்கு எப்படி இருந்ததோ சரணிற்கு அவள் முகத்தை அந்த நெருக்கத்தில் பார்த்ததும் தாறுமாறாய் இதயம் துடிக்க ஆரம்பிக்க அவன் அனுமதியின்றி அவன் பார்வை அவளது இதழிற்கு சென்றது .
ஸ்வஸ்திகா "ஊத சொன்னா இவன் என்ன உத்துப்பாத்துட்ருக்கான் என்று நினைத்தவள் அப்பொழுதே தாங்கள் நின்றிருக்கும் நெருக்கத்தை உணர்ந்தவள் அவன் பார்வை போகும் இடத்தை உணர ஸ்வஸ்திகாவிற்கு கையில் நடுக்கம் பரவ அவனை அவள் விலக்க ஆதித்தனோ "என்னடா நடக்குதிங்க ?"என்று கேட்க
அவனை விட்டு பதட்டமாய் விலகிய ஸ்வஸ்திகா "நா நா தூங்க போறேன் என்னவோ பண்ணி தொலைங்க "என்றவள் ஒரே ஓட்டமாய் அறைக்குள் ஓடி விட்டால் .
ஆதித்தன் சரணை கேலியாய் பார்க்க அவனோ அசடு வழிந்தவன் "ஒ ஒண்ணுமில்ல மச்சான் சும்மா தூ தூக்கம் வருது குட் நைட் " என்று விட்டு அவனும் ஒன்றரைக்குள் ஓடி மறைய
ஆதித்தனோ சிரித்தவன் "நடத்துங்கடா நடத்துங்க "என்று நினைத்தவன் சிரித்தவாறே சென்று உறங்கத்துவங்கினான்.உறங்குமுன் அவன் போனிலிருந்த ஒரு புகைப்படத்தை பார்த்தவன் சிரித்தவாறே உறங்கினான்" .
இவ்வாறே ஒரு மாதம் செல்ல ஒரு நாள் ஸ்வஸ்திகாவும் ஆதித்தனுக்கு ஏதோ விவாதித்துக்கொண்டிருந்தனர் .அவர்கள் அருகே வந்த சரண் "என்ன ரொம்ப சீரியஸ் discussion போயிற்றுக்கு?"என்க
ஸ்வஸ்திகா"ஒண்ணுமில்லடா சும்மா இருக்க போர் அடுச்சுச்சுனு நாங்க friendslaam சேர்ந்து ஒரு சோசியல் research பண்ணோம் அதுல இப்போ recentaah நெறய குழந்தைங்க வயசானவங்களும் இறந்துருக்காங்க அப்டினு தெரிய வந்துருக்கு "என்க
சரண்"அதுல என்ன இருக்கு இறப்புன்றது natural தான "என்க
ஆதித்தன் "எல்லாமே குடல் வெந்து இறந்திருக்காங்க இல்ல பிரைன் டெட் ஆகி இறந்துருக்காங்க mostly இந்த மாறி deathslaam தேவை இல்லாத கெமிக்கல் consumptionaala தான் வரும் "என்க
சரணோ அலட்சியமாய் தோலை குலுக்கியவன் "சுத்த நான்சென்ஸ் ஒவ்வொருத்தரும் என்ன டேப்ளெட்ஸ் சாப்டங்கனு ரெசெர்ச் பண்ண போறீங்களா .கடைசில பாரு கோய்ன்ஸிடென்ட் ஆகி பல்பு வாங்க போறீங்க "என்று விட்டு மருத்துவமனைக்கு கிளம்பினான் .
மருத்துவமனையில் குழந்தைகளை செக் செய்து கொண்டிருந்த சரண் ஒரு பெரும் அழுகுரல் கேட்டு வெளியே வர அங்கே ஸ்ட்ரெச்சரை சுற்றி ஆட்கள் நிற்க அங்கே ஸ்ட்ரெட்சரின் அருகில் சென்றவன் கண்டதோ தன் கடைசி நொடியை எண்ணிக்கொண்டிருந்த அவனது பார்பி டோல்லை தான் .பதட்டமாய் அவள் அருகில் சென்றவன் அவளை சோதிக்க அவளிற்கோ உடல் தூக்கி தூக்கி போட்டுக்கொண்டிருந்தது.
அவசர அவசரமாய் அவளை icuvirkul அனுமதித்தவன் எவ்வளவோ முயன்றும் அவளை காக்க முடியவில்லை .கடைசி நொடியில் அவனை அருகில் அழைத்தவள் "டேப்லெட் சாப்பிட்டேன் சாக்லேட் எங்கே சாரு "என்று கேட்டவாறே மரிக்க அவனிற்கோ சர்வமும் அடங்கி விட்டது .
ஒரு மருத்துவனாய் இறப்புகளை சந்திக்க வேண்டியது சாதாரணம் என்றாலும் ஏனோ அவனால் ஒரு மாதம் முன்பு வரை தன்னிடம் சிரித்து சிரித்து தலையாட்டி அன்றலர்ந்த மலர் போல் இருந்த அந்த பிஞ்சு இறந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை .
reportsai ரெடி பண்ணிவிட்டு அப்படியே தன் கேபினில் வந்து அமர்ந்தவனின் மூலையில் ஏதோ பொரித்தட்ட இறந்த அக்குழந்தையின் ரெபோர்ட்ஸை பார்த்தவன் அதில் குடல் வெந்து இறந்திருப்பதாய் இருக்க அவளின் ரெத்த சம்ப்ளெய் டெஸ்ட் செய்ய கொடுத்தான் .
அந்த ரிபோர்டும் வர அவனிற்கு அது மேலும் சந்தேகத்தை கொடுத்தது .அந்த குழந்தையின் பழைய ரெபோர்ட்ஸில் coldirkaaga அவள் வந்தபோது எடுத்த பிளட் ரிசல்ட் இருக்க அதில் எந்த பிரெச்சனையும் இல்லை .
ஒரு குருட்டு சந்தேகத்தில் அவளிற்கு கொடுக்கப்பட்ட மாத்திரை samplegalai அவள் பெற்றோரிடமிருந்து வாங்கியவன் அதை சோதனையிட கூற அம்மாத்திரையோ எஸ்பிஐரி ஆகி 4 வருடங்கள் ஆகி இருந்ததாய் ரிப்போர்ட் வந்தது .
கைகள் நடுங்க அந்த ரிப்போர்ட்டை மடித்து வைத்தவன் இங்கே அவர்கள் மருத்துவமனையில் அந்த கம்பெனியிலிருந்து வந்த அனைத்து மாத்திரைகளில் ஒவ்வோர் sampleai டெஸ்ட் செய்யக்கொடுக்க அனைத்து samplegalilum ஐந்தில் மூன்று மாத்திரைகள் expiry ஆனதாய் இருந்தது .
அதை உட்கொண்டுகொண்டிருந்த வயதானவர்கள் குழந்தைகளை டெஸ்ட் செய்ததில் அவர்களின் உடலிலும் அது சிறிது சிறிதாய் பாதிப்பை ஏற்படுத்துவதை ரென்போர்ட்ஸ் தெளிவாய் சொல்ல
வித்யுதிடம் மாத்திரை எபிபிச்ட் நன்றாக இல்லை என்பதால் மாற்றி தருமாறு மட்டும் கூறியவன் மருத்துவமனையிலிருந்து வெளியேறினான் .
அவசர அவசரமாய் ஆதித்தனை கால் செய்து ஒரு பூங்காவிற்கு வரவழைத்தான் ஸ்வஸ்திகாவும் அவனுடன் வந்தால் .
ஸ்வஸ்திகா "என்னடா என்னாச்சு திடீர்னு கூப்டருக்க ?"என்க உணர்ச்சியற்ற முகத்துடன் தான் வைத்திருந்த ரிபோர்ட்ஸை அவள் கையில் கொடுக்க அதை வாங்கிய ஆதித்தன் அவளுடன் பார்க்க ஆரம்பித்தான்.அதை படித்தவனிற்கு தெளிவாய் புரிந்தது தாங்கள் சந்தேகித்து சரியானது என்று .
ஸ்வஸ்திகா கோபம் கண்ணை மறைக்க "எந்த பணத்தாசை புடுச்சி பேய் நடத்துற கம்பெனி டா இது ?" என்க
சேரனும் ஆதித்தனுக்கு ஒரே நேரத்தில் மொழிந்தனர் "விக்ரம் "என்று
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top