15
"ஐ will be there in half an hour "என்று விட்டு phoneai வைத்த மஹதி தன் காக்கி சட்டைக்கு மாறி அடுத்த இருவது நிமிடத்தில் விக்ரமின் குழந்தைகள் தொடர்பான பொருட்களை தயாரிக்கும் கம்பனியில் இருந்தால்.
தன் கம்பீர நடையுடன் உள்ளே சென்றவள் கண்ணில் பட்டதென்னவோ மொத்தமாய் ஒரேய இடத்தில குவிந்திருந்த பணியாளர்களுக்கு நடுவே நின்று கத்திக்கொண்டிருந்த விக்ரம் தான்.
விக்ரமின் ருத்ரதாண்டவத்தை பார்த்துக்கொண்டே தன் கண்ணில் உள்ள coolersai ஒருகையால் கழட்டிக்கொண்டே கையில் உள்ள ஒரு வெள்ளிக்காப்பை போன்ற அணிகலனை ஏத்தி விட்டு காக்கி சட்டையில் கம்பீரமாய் அங்கிருந்த பணியாளர்களை ஆராய்ந்துகொண்டே அவன் அருகில் சென்றால் மகதி .
மகதியின் முதல் தரிசனமே ஏனோ அங்கிருந்த அனைவருக்கும் மனதில் ஒரு பயத்தை உருவாக்கியது . .விக்ரமின் அருகில் வந்த மஹதி "விக்ரம் என்னாச்சு?"என்று அங்கே இருந்த அனைத்து பணியாளர்களையும் பார்வையால் துளைத்துக்கொண்டு கேட்க அவளது அந்த கழுகு போன்ற கூர் பார்வையில் அங்கே இருந்த அனைத்து பணியாளர்களுக்கும் நடுக்கம் பரவியது.
மகதியின் குரலில் திரும்பிய விக்ரம் நடந்தவற்றைக் கூறத்துவங்கினான் .நேற்று சரண் போனில் ஏதோ கூற விக்ரமோ அவதி அவதியாய் நவ்யாவுடன் கிளம்பி இந்தியா வந்திறங்கினான் .இந்தியா வந்தவன் நேரே ஹார்பரிற்கு செல்லப்போக அவன் சென்ற சாலையில் டிராபிக் ஜாம்மாக தனது போனில் யார் யாரிற்கோ கால் செய்ய அவன் செய்த அனைத்து callgalum divert செய்யப்பட்டது .
இவன் முயற்சிகள் தான் இப்படி வீணாகிறதென்றால் நவ்யா அதே நபரிற்கு அழைத்தாலும் அவளது கைபேசியிலுமிருந்தும் callgal divert செய்யப்பட்டது .
எவராலும் அந்த குறிப்பிட்ட அதிகாரத்தில் இருக்கும் நபர்களை தொடர்புகொள்ள முடியவில்லை.இது போதாதென்று traffic ஜாம் வேறு அவனை தடுக்க பத்து நிமிடமாய் உள்ளேயே காத்திருந்தவன் பொறுமை இழந்து வெளியே சென்று பார்க்க அங்கோ இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்தோர் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தனர் .
சுற்றி பார்வையை சுழற்றியவன் கண்களில் ஒரு டிராபிக் போலீஸும் சிக்க வில்லை அனைத்தும் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது என்று உணர்ந்துகொண்டவன் தனது பையை எடுத்துக்கொண்டு காரிலிருந்து வெளியேறி driveridam " அண்ணா இவள பத்திரமா வீட்ல விட்டுடுங்க "என்றுவிட்டு
நவ்யாவிடம்" நவ்யா நீ வீட்டுக்கு போ நா எல்லாத்தையும் solve பண்ணிட்டு உன்ன வந்து பாக்குறேன் .இப்போ நீ என்கூட வராது உனக்கு safe இல்ல "என்க
நவ்யாவுக்கோ தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை .
அவன் தோளை தொட்டவள் அவனை தன் அருகே காரில் அமர வைத்து "என்ன ஆச்சு விக்ரம் நானும் கேட்டுட்டே இருக்கேன் சொல்ல மாட்ரீங்க என்ன தான் ஆச்சு ?"என்க
அவனோ ஒரு பெருமூச்சை விட்டவன் "நம்ம பேபீஸ் ப்ரோடுக்ட்ஸ் தயாரிக்குற கம்பெனி இருக்குல்ல "என்க
அவளும் "ஆமா "என்க
அவனோ "ரெண்டு நாளா அங்க தயாரிச்ச பால் powder மற்ற children எனர்ஜி ட்ரிங்க்ஸ் எல்லாத்துலயும் ஒரு பயங்கரமான கெமிக்கல் யாரோட நோட்டீஸும் இல்லாம கலந்துருக்கு .அந்த productsah குழந்தைங்க சாப்ட்டா ரெண்டே நாளுல பிரைன் டெட் ஆயிரும் "என்க
கேட்டவளிற்கோ ஈரக்கொலையே நடுங்கி விட்டது "இவ்ளோ அலட்சியமாவா விக்ரம் இருப்பாங்க ?எத்தனை கொழந்தைங்களோட உயிர்.இப்போ மட்டும் எப்படி தெரிஞ்சுச்சு." என்க
அவனோ முகம் இறுக"cctv footagelaam கொஞ்ச நேரத்துக்கு மட்டும் manufacturing யூனிட்ல stillaah இருக்குறத பார்த்து சந்தேகப்பட்டு அனுப்புன ஸ்டாக்ள மிச்சம் இருந்த ஸ்டோக்ஸ மறுபடி டெஸ்ட் பண்ணி பாத்துருக்காங்க.அப்பவும் ரிசல்ட் எதுவும் காட்டல மறுபடி சந்தேகமா இருக்கவும் புது டெஸ்டிங் கெமிக்கல்ஸ் வாங்கி டெஸ்ட் பண்ணி பாத்துருக்காங்க அப்போ தான் இதுல இந்த கெமிக்கல் கலந்துருக்குன்னே தெருஞ்சுருக்கு .இங்க இருக்குற ஸ்டாக்க எல்லாம் மார்கெட்ஸ்க்கு போறதுல இருந்து தடுத்தாச்சு ஆனா export பண்ற ஸ்டோக்க்ஸ தான் தடுக்க முடில.நாம கெளம்பேலயே export formla நா sign பண்ணிட்டேன் இப்போ நா வந்தா தான் exportah தடுக்க முடியும் .பிளான் பண்ணி செஞ்சுருக்காங்க "என்க
அவளோ "இவ்ளோ பிரச்னை நடந்துருக்கு நானும் வரேன் விக்ரம்"என்க
அவனோ "இல்ல நவி இப்போ உனக்கு என்கூட வராது safe இல்ல இன்னிக்குள எல்லாத்தையும் சோர்ட் அவுட் பண்ணிடுறேன் ."என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்த விட்டு காரிலிருந்து இறங்கி ஓட்டமும் நடையுமாய் நடக்கத்துவங்கினான்.
cab புக் செய்து அது வருவதற்குள் நேராகிவிடும் என்பதை உணர்ந்தவன் அவ்வழியே போகும் ஆட்டோவில் ஏறி ஹார்பரிற்கு விரைந்தான் . ஆட்டோ ஹார்பரிற்கு வர .வேக வேகமாய் இறங்கியவன் export sectionirku செல்ல அங்கு விசாரித்த போதோ அந்த கப்பல் கிளம்பி இந்தியன் borderai தாண்டிவிட்டது என்று பெரும் குண்டை தூக்கி போட்டனர் .
சோர்ந்து போனவன் அப்படியே கடலை வெறித்தவாறு நிற்க அவன் போனிற்கு கால் வந்தது .அதை எடுத்தவன் காதில் வைக்க அவனிற்கு பழக்கப்பட்ட அந்த நாராசமாக சிரிப்பு சத்தம் காதில் விழுந்தது .கோபத்தில் விக்ரமிற்கு கண்கள் சிவக்க அப்புறம் அவனோ "என்ன விக்ரம் உன் கம்பெனியாலேயே அத்தனை ஆயிரம் கொழந்தைங்கள சாகடிக்க போறியேடா .எப்படியும் ஒரு பத்தாயிரம் கொழந்தைங்களாவது தேரும்ல பாவம் ."என்க
விக்ரமோ "****** மோதுறதுனா என் கிட்ட நேரா மோதுடா கோழை மாறி குழந்தைங்க குடிக்குற பால் பௌட்ர்ல விஷத்தை கலந்துருக்கியே வெக்கமா இல்ல "என்க
அப்புறமோ"ஹாஹாஹா இது கோழைத்தனம் இல்ல விக்ரம் சாணக்யத்தனம் "என்க
விக்ரமோ வந்த கோவத்தில்"விக்ராந்த் "என்று கத்தி போனினை உடைத்தவன் அடுத்து வேறு வழி தெரியாமல் போக அவர்கள் கம்பனிக்கு வந்தவன் அங்கிருந்த ஒரு தொடர்பு அறைக்குள் தன் கைரேகையை பதித்து உள்ளே சென்றான் .
அங்கிருந்து அந்த கப்பலில் உள்ள மாலுமியிடம் பேசியவன் life boatin மூலமாக அந்த கப்பலை விட்டு அகலுமாறு உத்தரவிட்டான் .அடுத்த பத்து நிமிடத்தில் அவர்களும் லைப் boatin மூலமாக அந்த கப்பலை விட்டு அகல அந்த அறையில் அவன் முன்னே இருந்த அந்த கப்பலின் self destruct பட்டனை அழுத்தினான் விக்ரம்
.அவன் இங்கே self destruct பட்டனை அழுத்திய அடுத்த 5 நிமிடத்தில் அந்த அக்கப்பல் வெடித்து கடலிற்குள் மூழ்கியது .அவர்களின் கம்பெனி கப்பல் அனைத்திலும் இவ்வாறு selfdestruct அமைப்பு இருக்கும் இங்கிருந்து விக்ரமின் கை விரல் தடமும் முகமும் identify செய்த பின் அவனால் மட்டுமே அந்த self destruct பட்டனை செயல்படுத்த முடியும் .
அதன் மூலம் அந்த கப்பல் வெடித்து சிதறிவிடும் .இது போன்ற ஆபத்தான சூழல்களில் இருந்து தப்பவே அந்த அமைப்பை பொருத்தியிருந்தான் விக்ரம் .
இதன் மூலம் குழந்தைகள் காக்கப்பட்டனர் எனில் அவனிற்கு இருநூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது .எப்படி பார்த்தாலும் அவனிற்கு இழப்பு தான் .
தன்னை பொறிக்குள் சிக்கிய எலியை போல் தவிக்க விட்ட விக்ராந்தின் மேல் விக்ரமிற்கு கோபம் கட்டுக்கடங்காமல் வர இங்கே வேலை பார்க்கும் பணியாட்கள் உதவி இன்றி அவனால் இதை செய்திருக்க இயலாது என்று உணர்ந்தவன் அங்கிருந்த பணியாட்கள் அனைவரையும் ஒன்று கூட்டி காத்தது துவங்கினான்.உண்மையான கருப்பாடை கண்டுபிடிக்க தனது போலீஸின் துணை வேண்டும் என்று எண்ணியவன் மகதியை தொடர்பு கொண்டான்.அவளிடம் அனைத்தையும் கூறி முடிக்க மகதிக்கு அவன் உதிர்த்த விக்ராந்த் எனும் பெயர் உள்ளுணர்வில் ஏதோ சொல்லமுடியாத உணர்வுகளை ஏற்படுத்தியது .
எங்கோ கிணற்றுக்கடியில் இருந்து அந்த பெயரை யாருடைய குரலிலோ தெளிவில்லாமல் கேட்பதை போல் தோன்ற அனுமதியே இன்றி மமதியின் முகம் அவள் கண்முன்னே வந்து சென்றது.
சட்டென்று கண்கள் கலங்க தன்னை சுதாரித்துக்கொண்டவள் அங்கிருந்த பணியாளர்களிடம் தன் பார்வையை செலுத்தினால்.விக்ரம் நடந்ததை கூற கூற பணியாளர்களிடம் மகதியின் பார்வை மொத்தமும் இருக்க அவன் cctv footage still ஆனா பகுதியை கூறும் போது ஒரு ஆணின் கண்கள் சற்று திகைப்பை வெளிப்படுத்தியதை அந்த நபரை சரியாக கவனித்துவைத்திருந்தவள் விக்ரம் கூறி முடித்த அடுத்த நொடி கூட்டத்தில் அந்த ஆடவனை சுட்டிக்காட்டியவள் கைகளால் இங்கே வருமாறு சைகை செய்ய அந்த நபரிக்கரோ உடல் எல்லாம் நடுங்கத்துவங்கியது .
நடுங்கிக்கொண்டே வந்தவனின் கண்களை ஒரு முறை உருது நோக்கியவள் விக்ரமை பார்த்து "மத்தவங்கள போக சொல்லு விக்ரம் "என்க விக்ரமும் அனைவரையும் நகலுமாரு தலை அசைக்க அனைவரும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து நகன்றனர் .
அனைவரும் நகன்றுவிட அந்த நபரை அங்கிருந்த விக்ரமின் அறைக்குள் அழைத்து சென்றவள் விக்ரமை கண்களாலேயே பின்தொடருமாறு சைகை செய்ய விக்ரமும் உள்ளே சென்றான் . அங்கிருந்த ஒரு சாரை காட்டி அந்த நபரை அமரச்சொன்னவள் தன் ஒற்றை காலாலே அங்கிருந்த மற்றொரு நாற்காலியை இழுத்துப்போட்டு அவரின் எதிரே அமர்ந்து அவனையே உருது நோக்கினால் .
அவளது ஆக்கூற்ப்பார்வை அவரனிற்கு உடல் எங்கும் கிலியை ஏற்படுத்த அவர் "நா நா ஒண்ணுமே பண்ணல மேடம்"என்க
அவளோ அவனை ஒரு பார்வை பார்த்தவள் coolaaga சாய்ந்து தன் பாக்கெட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்து அதை அவனது பொட்டை பார்த்து குறி வைத்து விட்டு மீண்டும் தன் கையில் வைத்துக்கொண்டு அவனைப் பார்க்க அவனோ அதீத பயத்தில் உளரத்துவங்கினான் "உ உண்மையிலேயே நா நா எதுவும் பண்ணல மேடம் எனக்கு எனக்கு எதுவும் தெரியாது.நா leadah சேக்கல "என்க
அவளோ அவனை நிமிர்ந்து ஒரு முறை பார்த்தவள் கால் மேல் கால் போட்டு அந்த நாற்காலியில் சாய்ந்து "நா எந்த கெமிக்கல்னு சொல்லவே இல்லையே உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?"என்று கேள்வியாய் நோக்க
அவனோ திகைத்து விழித்தவர் "அது அது "என்று விழிக்க
அவளோ எழுந்தவள் துப்பாக்கியை நெற்றி பொட்டிற்கு நேராய் வைத்து "இப்போ உண்மையா சொன்னா உயிரோட வெளிய போவ இல்ல ஒரே அழுத்து தான் ஸ்ட்ரெயிட்டாஹ் பரலோகத்துக்கு டிக்கெட் வாங்கிருவ எப்படி வசதி ?"என்க
அவனோ பயத்தில் அனைத்தையும் உளரத்துவங்கினான் "ஒருநாள் ஒருத்தன் முகத்தை மூடிட்டு வந்து எந்த கட்டு கட்டா பணத்தை குடுத்து leadah மனுபாக்ட்டரிங் யூனிட்ல இருக்குற பொருள்ல எப்படியாச்சும் சேக்க சொன்னான் .முதல்ல முடியாதுனு தான் சொன்னேன் பட் பணம் என் கண்ணை மறைச்சுருச்சு மொதல்ல cctv காமெராவை நிறுத்திட்டு மனுபாக்ட்டரிங் யூனிட்ல பொய் leadah கலந்தேன் அப்பறோம் டெஸ்டிங் யூனிட்க்கு போய் டெஸ்ட் பண்ணா lead சேத்துருக்குறது தெரியாம இருக்க chemicallah மாத்தி வச்சேன் .அவன் யாருனு எனக்கு தெரியாது"என்க
விக்ரமோ கோவம் கண்மூடித்தனமான வர சென்று அந்த நபரை கன்னத்தில் அறைய அவனோ அவன் அறைந்த அறையில் சுருண்டு கீழே விழுந்தான் விக்ரம் "பணம் பணம் பணம் உன் கொழந்தை அதா சாப்பிட்டு இறந்துருந்தா பணத்தை வச்சு அதை காப்பாத்திருப்பியாடா. ஏன்டா இப்டி பணம் பணம்னு அலையுறீங்க ச்ச ."என்று மீண்டும் அவன் அடிக்க போக
அவன் கையை பிடித்து தடுத்த மஹதி "ஸ்டாப் இட் விக்ரம் இதை நா பாத்துக்குறேன் "என்றவள் வெளியே நின்றிருந்த கான்ஸ்டபிலேசை வைத்து அவனை அர்ரெஸ்ட் செய்து அழைத்து செல்லக்கூறியவள் அவனிடம் திரும்ப விக்ரமோ "தேங்க்ஸ் மஹதி "என்க அந்நேரம் உள்ளே சரண் உள்ளே நுழைந்தான் .விக்ரமிடம் ஜாடையால் "எல்லாம் செரியானதா என்று கேட்க விக்ரமும் கண்களை மூடித்திறந்து "ஓகே "என்றான் .
பின் மகதியிடம் திரும்ப அவளோ விக்ரமை உறுத்து நோக்கியவள் "யாரு விக்ராந்த் ?"என்க விக்ரமிற்கு அப்பொழுதே தான் அவளிடம் விக்ராந்தின் பெயரை உளறிவிட்டது புரிய முதலில் திகைத்தவன் "அது "என்று இழுக்க சரண் "நா சொல்றேன் மேடம் "என்க விக்ரம் அவனிடம் வேண்டாம் என்று சைகை செய்ய
சரணோ அவனை முறைத்தவன் "இதுக்கு மேலயும் சொல்லாம இருந்த நம்மளவிட முட்டாள் இந்த உலகத்துலயே எவனும் இருக்க மாட்டான் என்றவன் மகதியிடம் திரும்பி கூறத்துவங்கினான் மூன்று வருடங்களுக்கு முன் நடந்த அந்த அச்சம்பவத்தை ........"
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top