14

காலை சூரியன் விடிய ஒரு சிவன் கோவிலின் உள்ளே தர்ப்பணம் கொடுக்கும் இடத்திலிருந்த குளத்தில் மொன்று முறை முங்கி எழுந்து வந்து தனது தமக்கையின் படத்தின் முன் க்ரோதம் கக்கும் விழிகளோடு அமர்ந்தாள் மஹதி.

இன்று மமதியின் மூன்றாம் வருட திதி அவளின் புகைப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டிருக்க மகதியின் நினைவுகளோ தன் தமக்கையுடனான தன் நாட்களை நினைவு கூர்ந்தது.

மமதி டெல்லியில் வளர்ந்த சென்னை வாசி .பிபிசியின் ரெசெர்ச் ஜௌர்னலிஸ்ட்டாக பணி ஆற்றிக்கொண்டிருந்தால் .மஹதிக்கும் மமதிக்கும் அன்னை தந்தையர் கிடையாது .கிடையாதென்றால் இறந்துவிடவில்லை பிரிந்து விட்டனர். அவர்களது அன்னையாரும் தந்தையாரும் வெவ்வேறு துணையை தேடிக்கொள்ள அனாதையாய் நின்றதென்னவோ ஒரு பாவமும் அறியாது அவர்களின் உறவிற்கு சாட்சியாய் பிறந்த இந்த தளிர்கள் தான் .

மமதி மகதியை விட 2 வயதே மூத்தவள் எனில் மஹ்தியின் அக்கா என்பதை விட மஹ்தியின் அன்னையாய் இருந்தால் மமதி .இருவரையும் அவர்களது அன்னை வழி பாட்டி வளர்க்க யாரிடமும் அதிகம் ஓட்டுதல் இல்லாத மஹதி அனுதினமும் ஒட்டிக்கொண்டலைவது மமதியின் பின் தான் .

உன்ன வேண்டுமென்றால் மமதி ஊட்டிவிட்டால் தான் உண்ணுவாள்,அவளது மடியில் தான் உறங்குவாள் ,அவள் சொல்லிக்கொடுத்தால் தான் பாடம் படிப்பாள் ,அவள் முகத்தில் முழித்த பின்பே தனது நாளையே தொடங்குவாள் இவள் இப்படி இருக்க மாமதிக்கோ மஹதி இன்றி ஒரு அணுவும் அசையாது மஹாதிக்கு ஊட்டிவிட்ட பின்பே தான் உண்ணுவாள்,அவளை கட்டிப்பிடித்து உறங்கவில்லை என்றால் மாமதிக்கு உறக்கமே வராது .வேண்டுமென்றே குறும்புகள் செய்து தன் பின்னே சுற்றிக்கொண்டு தனக்கு ஒரு தங்கை என்பதை விட ஒரு பாதுகாப்பு அரனாய் ஒரே தம்பியை போல் இருக்கும் தன் தங்கை என்றால் அவளிற்கு உயிரிற்கும் மேல்.

மமதியும் மகதியும் உடலால் ஈருடல் எனில் உயிரால் ஓருயிர் போன்றே ஒருவரை மற்றொருவர் பிரியாது வளர்ந்தனர் .மமதி இயற்கையிலேயே சிறுவயதில் இருந்து தன் தங்கையை தாயை போல் வளர்த்ததாலோ இல்லை பிறவி குணத்தாலோ மிகவும் சாந்தமான சுபாவத்தை உடையவள் .அவள் வதனத்தை பார்ப்பவருக்கே மனதில் ஒரு இனம் புரியாத அமைதி குடிகொள்ளும் அப்படி ஒரு சாந்தமான முகம்

அதிர்ந்து பேசவும் அறியாதவள். சமூகத்தில் நடக்கும் அநீதிகளை நேரில் தன்னால் எதிர்க்க இயலாது எனில் எதிர்க்க வேண்டும் என்று நினைத்தவள் ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்தது journalism .அதில் மிகவும் சிறப்பாகவும் செயல்பெற்று வந்தால் .

இவள் இப்படி இருக்க அவள் வளர்த்த மகதியோ அவளிற்கு அப்படியே நேரெதிர் .மமதி பேசி சமாளித்தாள் மகதியோ அடித்துவிட்டே பேசுவாள் .பெண்ணிற்குண்டான அச்சம், நாணம் ,மடம் எதுவும் அவளிடம் இருக்காது பெண் உருவில் ஆணாகவே வளர்ந்தால் அசாத்திய தைரியத்துடன் .அவளை மஹ"தீ " என்றே அழைப்பர் அவள் உடன் பயின்றோர்.

மமதியின் மேல் உயிரையே வைத்திருந்தவள் அவள் மேல் ஒரு சிறு கீறல் விழுந்தாலும் அவர்களை உண்டு இல்லை என்றாக்கி விடுவாள்.ஒருவன் காலேஜில் மமதியை காதலிக்க கூறி தொந்தரவு செய்து கொண்டே இருக்க அதை மஹதியிடம் கூறிய அடுத்த நாள் மமதியை தொந்தரவு செய்தவனோ  கால் தலை என அணைத்து இடத்திலும் கட்டுடன் வந்தவன் மமதியிடம் சாரி சிஸ்டர் என்று விட்டு அந்த கல்லூரியை விட்டே ஓடி விட்டான் .

அன்றொரு நாள் மஹதி "அக்கா அக்கா "என்று கொண்டே உள்ளே நுழைய மமதியோ மிகவும் ஆழ்ந்த யோசனையில் இருந்தால் .

அவள் அருகில் வந்தமர்ந்த மஹதி அவள் தோளை தொட்டு "என்னச்சுக்கா என்ன ஒரு மாறி இருக்க "என்க

மமதியோ மஹ்தியின் முகத்தை கனிவுடன் நோக்கியவள் "ஒண்ணுமில்லடா மதி மா இப்போ ஒரு புது கம்பெனி பத்தி research பண்ண சொல்லிருக்காங்க அதை பத்தி தான் யோசிச்சுற்றுகேன்"என்க

மஹதியோ ஒரு மூச்சை விட்டவள் "uff இது தானா நா கூட என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன் அதெல்லாம் என் அக்கா செம்மையா பன்னிருவ "என்று அவள் கன்னத்தை பிடித்து கொஞ்ச

சிரித்த மமதி "அது சரி என்ன என் செல்லத்துக்கு முகமலாம் வாடி போய் இருக்கு "என்க

மஹதியோ அவள் மடியில் தலை சாய்த்துக்கொண்டவள் "ips clear பண்ணிட்டேண்டி "என்க

மமதியோ அதீத மகிழ்ச்சி அடைந்தவள் "ஹே நெஜமாவாடா மதிமா செம என் குட்டி ips ஆஃபீஸ்ர் ஆக போறாளா.கேக்கவே எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா அதை ஏன்டா இவ்ளோ சோகமா சொல்ற"என்று அவள் கன்னத்தில் முத்தமிட

மஹ்தியோ முகம் வாடியவள் "ட்ரைனிங் சென்னைல போட்ருக்காங்கடி 3 மாசம் எப்படி உன்ன விட்டுட்டு இருப்பேன்"என்க

மமதிக்குமே அது அதீத வருத்தத்தை தந்தாலும் தன் தங்கை தன்னை இவ்வாறு சார்ந்தே இருப்பது அவளிற்கு நல்லதல்ல என்று உணர்ந்தவள் அவள் தலையை கோதி "மூணு மாசம் தானடா மதி சட்டுனு போய்டும் ."என்க

மஹதியோ அவள் தோளில் சாய்ந்து கொண்டவள் "உன்ன விட்டுட்டு ஒரு நாளே என்னால இருக்க முடியாது எப்படிடி மூணு மாசம்லாம் "என்க

மமதியோ அவளை விலக்கியவள் "மதிமா அக்கா எப்போவுமே உன்னோட இருக்க முடியாதுடா ஒரு வேலை நாளைக்கே நா போய்ட்டாலும்....."என்க

வேகமாய் எழுந்து அவளை அறைந்திருந்தால் மஹதி "கொன்றுவேண்டி நானே உன்ன இன்னொரு தடவ அப்டி சொல்லாத "என்க

மமதியோ "நெருப்புனு சொல்லிட்டா வெந்துராதுடா மதி மரணம் எப்போ யாருக்கு வரும்னு சொல்ல முடியாதுடா அப்டியே நா இல்லேன்னாலும் நீ என் கூடவே வர முடியுமா சொல்லு ?எல்லாரும் ஒரு கட்டத்துல ஒருத்தர பிரிஞ்சு தான்டா ஆகணும் இது சும்மா தற்காலிக பிரிவு தான போய்ட்டுவாடா "என்க

மஹ்தியும் அவளை அடித்த கன்னத்திலே தன் இதழை பதித்தவள் "ம்ம் வலிக்குதா "என்க

மமதியோ சிரித்தவள் "இது என்ன புதுசாவா வாங்குறேன் தூங்குடா "என்க மமதியின் மடியில் படுத்தவாறே உறங்கிப்போனால் மஹதி .

அடுத்த நாள் அவளை கிளப்புவதற்குள் மாமதிக்கு போதும் போதுமென்றாகி விட்டது .குளிக்க செல் என்றால் தலை தேய்த்து விடு என்றால் உடை உடுத்து என்றால் நீயே ஷர்ட் போட்டு விடு என்றால் சாப்பிடு என்றால் ஊட்டிவிடு என்றால் அவள் எங்கே சென்றாலும் அவள் ஷாலை பிடித்துக்கொண்டே சுற்றினால் .

மமதியோ அவள் செய்யும் அழிச்சாட்டியங்களை பார்த்து உள்ளே சிரித்தாலும் வெளியே கோபமாய் இருப்பதை போல் பாவலா செய்து அவளை உருட்டி மிரட்டி வண்டியில் ஏற்றி விட மஹதியோ கோபத்தில் அவளை ஒருமுறை கூட திரும்பி பார்க்கவில்லை அவளிடம் பேசவுமில்லை .

ட்ரைனிங் வெற்றிகரமாய் முடிய மஹதி முதல் இடத்தில பாஸ் ஆகி டெல்லியிலே அசிஸ்டன்ட் commisioneraaga பொறுப்பேற்று இருந்ததை அவள் தமக்கையிடம் பகிர நினைத்து கால் செய்ய நினைத்த அடுத்த நொடி அவளிற்கு கால் வந்தது .

அப்புறம் சொல்லப்பட்டதை கேட்டு போனினை கீழே போட்டவள் மமதிஇஇஇஇஇ........ என்று கத்திக்கொண்டே கீழே முட்டி இட்டமர்ந்தாள் .சட்டென்று டெல்லிக்கு flight பிடித்து அவதி அவதியாய் வந்தவளை வரவேற்றதோ மருத்துவமனையில் வெள்ளை துணியால் மூடப்பட்டிருந்த அவளது தமக்கையின் சடலம் தான் .

அதன் அருகே சென்றவள் நடுங்கும் கரங்களால் துணியை விளக்க மிகக்கொடூரமாய் ஒரு பக்க முகம் முழுதும் அசிடால் சிதைந்திருக்க மறுபக்க முகமோ நகக்கீறல்களாலும் பற்தடங்களாலும் சிதைந்திருந்தது .சிரித்த முகமாய் பார்த்த தன் தமக்கையின் அக்கோரக்கோலத்தை கண்டவள் மருத்துவமனை என்றும் தான் ஒரு போலீஸ் என்பதையும் மறந்து கதறிய கதறலில் அந்த ஒட்டுமொத்த மருத்துவமனையும் ஆட்டம் கண்டது .

மனதை கல்லாகியவள் போஸ்ட்மாடத்திற்கு ஏற்பாடு செய்து விட்டு வெளியே உடைந்து போய் அமர்ந்தாள் கடைசியாய் மமதி கூறிய "நா போய்ட்டாலும் நீ இருக்கனும்டா "என்ற வாக்கியம் மனதிற்குள் ஓட அவளை தனியாய் விட்டு சென்ற தன மீதே அவளிற்கு வெறுப்பு உண்டாக மாறி மாறி தன் கன்னத்திலே அறைந்து கொண்டவள் அப்படியே அமர்ந்திருந்தாள்.

உணவு தண்ணீர் என்பதையே மறந்து .மருத்துவர் போஸ்ட்மார்ட்டம் அறையிலிருந்து வெளியே வர எழுந்து நின்றவள் குரல் கம்ம "என்னாச்சு ?"என்க

மருத்துவரோ தலையை தொங்கப்போட்டவர் "most brutal rape ஐ have ever seen .ஒருத்தன் தான் ஆனா ரொம்ப ரொம்ப brutalaah handle பண்ணிருக்கான் .உடம்புல ஒரு எடத்துல விடாம கீறலும் பல் தடமும் இருக்கு.பாதி முகம் அசிடால செதஞ்சுருக்கு. அவுங்களோட உடம்புல துருப்புடுச்ச கத்திய"என்க

மஹ்தியின் கண்களோ கோவத்தில் ரத்த நிறத்தை கொள்ள தன் கை முஷ்டிகளை இருக்க  மூடியவள் "போதும் "என்று தன் கையை நீட்டினாள் ரெபோர்ட்ஸை பார்க்க .அதை பார்த்தவள் கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வழிய கோபமாய் அதை மூடியவள் அதை கையில் எடுத்துக்கொண்டு அந்த மருத்துவமனையில் இருந்த விநாயகர் சிலை முன் க்ரோதத்துடன் சென்று நின்றாள் "நல்லா பாரு பாத்துடேல .என் அக்கா என்ன பாவம் பண்ணா ஏன்? ஏன்? ஏன்? இப்டி அவளை பண்ண ?இது தான் நீ உன்ன நம்புனவங்கள காப்பாத்துற லட்சணமா ?ஹையோ ஒரு சின்ன கீறல் பட்டாலே தாங்க மாட்டாளே அவ உடம்பு முழுக்க ஓநாய் பேராண்டன மாறி செதஞ்சு போய் இருக்காளே எவ்ளோ வலில துடிச்சுருப்பா ? ஹய்யோஓஓஓஓஓ கடைசி நேரத்துல அவளை பத்தி யோசிக்கலேனாலும் என்ன பத்தி யோசிச்சுருப்பாளே இனி நீ இல்லாம எப்படி மமதி இருக்க போறேன் இப்டி என்ன விட்டுட்டு போய்ட்டியேடி "என்று அவ்விடத்திலேயே மடிந்து அழுதவள் கண்களில் போஸ்ட்மார்ட்டம் அறையிலிருந்து பதுங்கி பதுங்கி ஒரு பணியாள் வெளியே செல்வது தென்பட சந்தேகம் கொண்டவள் சத்தமின்றி அவனை பொல்லொவ் செய்து ஒரு இடத்தில அவனை மடக்கி பிடிக்க

அவனோ மிரண்டு மிரண்டு விழித்தவன் கையில் இருந்ததை கீழே நழுவவிட்டு பின்னே திரும்ப மஹதி அத்திசையை திரும்பிய அடுத்த நொடி அவள் கையை ஒரு துப்பாக்கி குண்டு பதம் பார்த்தது .

கண்ணில் வெறியோடு அவள் திரும்ப இருட்டில் ஒரு உருவம் ஓடுவது தெளிவாய் தெரிய அதன் பின்னே சற்று தூரம் ஓடியவள் காலை குறி பார்த்து சுட அவன் அங்கேயே மடங்கி விழ அங்கிருந்த போலீசிற்கு அழைத்தவள் அவனை பிடித்து கூறிவிட்டு அவள் நின்றிருந்த இடத்திற்கு சென்றவள் கீழே ஏதோ சிறு கேமராவும் ,memory கார்டும் இருப்பதை பார்த்தவள் அதை எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டாள் .

.தன் கையிலிருந்த காயத்தை பொருட்படுத்தாதவள் அந்த பணியாளையும் அவளை சுட்டவனையும் மருத்துவமனையின் பக்கவாட்டிலேயே வெளுத்து விளாசிக்கொண்டிருந்தால் யார் அனுப்பியதால் இக்காரியத்தை செய்தனர் என்று .

அப்பணியாளும் அவனும் கூறியது ஒரே பதிலை தான் "தாங்கள் வெறும் கை பாவைகளே தங்களை ஆட்டி வைப்பவனை தங்களுக்கு தெரியாதென்றே கூறினர்.அடித்து அடித்து ஓய்ந்தவள் அவர்களை சிறையில் தள்ளுமாறு ஆணை இட்டு விட்டு தன் காயத்தை குணப்படுத்தியவள் தனது தமக்கையின் பூத உடலை பெற்றுக்கொண்டு மருத்துவமனையிலிருந்து வெளி வந்தால் .

ஆண்கள் தான் கொல்லி வைக்கவேண்டும் என்று கூறிய பண்டிதரை பார்வையாலே எரித்தவள் தன் தமக்கைக்கு தன் கையாலே கொல்லி இட்டால் .

மமதியின் தேகத்தில் பற்ற வைத்த தீயை பார்த்தவளிற்கு உடலெங்கும் பற்றி எரிந்தது .எரியும் அவள் சடலத்தை பார்த்தவள் மனதில் "உன்ன சித்ரவதை பண்ணி கொன்னு என்ன அனாதை ஆக்குனவன சும்மா விட மாட்டேன் மமதி .உனக்கு அவன் குடுத்த வலிய விட ஆயிரம் மடங்கு வலிய அவனுக்கு நா திருப்பி தருவேன் .அது வர இந்த மஹதி ஓய மாட்டா இது உன்மேல சத்தியம் "என்றவள் வீட்டிற்கு வந்து அந்த மெமரி கார்டிலிருந்த கோப்புகளை பார்க்க அதிலோ ஏதோ

குழந்தைகள் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தில் நடக்கும் மோசடியை பற்றி சம்மந்தமே இல்லாமல் ஏதேதோ தகவலேஹ் புதிர் போல் இருந்தது .

எனில் அது என்ன ?எந்த நிறுவனம் என்றோ யார் காரணம் என்றோ எதுவும் கிடைக்கவில்லை.

பின் அந்த cameraavil இருந்த விடியோவை போட்டவள் கண்டதென்னவோ அவள் தமக்கையை ஒரு ஆடவன் அணு அணுவாய் சித்ரவதை செய்யும் காணொளியை தான் .ஒவ்வொரு முறை அவள் கதறிய கதறலும் மரண ஓலமும் மஹ்தியின் காதில் பெரும் இரைச்சலாய் ஒலித்துக்கொண்டே இருந்தது .

அவனிற்கு தெரியாமல் மமதி வீடியோ எடுத்திருக்கிறாள் போலும் வீடியோ தெளிவில்லாமல் இருந்தது அந்த ஆடவனின் முகம் சரியாக தெரியவில்லை,அவன் கையிலிருந்த v என்ற டாட்டூ தான் ஒரு இடத்தில தெரிந்தது .

அவள் ஒவ்வொரு முறை வலிக்குது விட்று என்று கெஞ்சியதனைத்தும் அவள் கண்முன்னே நிழலாட தன் தமக்கை எத்தகைய கொடுமையை அனுபவித்திருக்கிறாள் என்று கண்டவள் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் போட்டுடைத்தால் .தன் தமக்கையின் மாலையிட்ட படத்தின் முன்னிருந்த அவள் அஸ்தியை கையிலெடுத்தவள் தன் கையை அறுத்து மமதியின் அசதியோடு தன் ரத்தத்தை விட்டவள் உன்ன கொன்னவனை கண்டுபிடிக்குற வர இந்த அஸ்தியை நா கரைக்க மாட்டேண்டி என்றவள் இரவு பகல் பாராது அவளிற்கு கிடைத்த அந்த சிறு துறுப்பை வைத்து விசாரித்துக்கொண்டு இருந்தால் .

கடைசியில் அதில் விக்ரமின் echinos group of companiesudan உள்ள சிறு தொடர்பை கண்டுபிடித்தவன் விக்ரமை பற்றி விசாரித்து அவனது பழைய குணத்தை அறிந்து கொண்டவள் இவனாய் தான் இருக்க வேண்டுமென்றே முடிவெடுத்து சென்னைக்கு transfer வாங்கி வந்தால் .

எனில் அதுவும் தோல்வியில் முடிந்தது .இவை அனைத்தையும் யோசித்துக்கொண்டே திதி கொடுத்து முடித்தவள்.தன் தமக்கையிடம் ஒரு வழிகாட்டுமாறு பிரார்தித்துவிட்டு எழுந்து கரைக்கு வர அவளிற்கு விக்ரமிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது .குழப்பத்துடன் அதை எடுத்தவள் "ஹலோ மஹதி here "என்க

அப்புறம் விக்ரம் எதையோ கூற அதை முழுதாய் கேட்டு முடித்தவள் "ஓகே விக்ரம் ஐ வில் ஹெல்ப் யு. வில் be there இன் half an hour "என்றவள் தன் போனிலிருந்த தன் தமக்கையின் புகைப்படத்தை பார்த்து ஏதோ மானசீகமாய் பேசியவன் அவ்விடம் விட்டு விக்ரமிற்கு உதவி செய்ய புறப்பட்டாள் .

அவளது குழப்பங்கள் தீருமா?

பழிதீர்ப்பாள மஹதி ?

Indha part palaruku ganatha manasa kuduthurukum.rape victims anubavikura valiyayum avunga kudumbam epdi sedhanju poirum oru pennoda ezhappaalanguradhayum kaatanunu dhaan  eludhiruken.thappa irunchunaa mannichurunga.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top