13

இங்கே கலவரம் துவங்கப்பட்டிருக்க அங்கோ கதிரவனின் செங்கதிர்கள் தன ஒளியை இவ்வுலகத்திற்கு பரப்ப நவ்யாவோ தூக்கம் கலைந்தவள் கண்களை திறவாமலே தான் படுத்திருந்த இடமும் தான் பிடித்திருந்த இடமும் தந்த சுகத்தில் மேலும் அதற்குள் புதைய அவள் முகத்தில் துணி போன்ற ஏதோ ஒரு பொருள் தட்டுப்பட பட்டென கண்களை திறந்தவள் தான் இருக்கும் இடத்தை உணரவே சற்று நேரமானது.

அவள் தன் தலையை நிமிர்த்தி பார்க்க அங்கோ விக்ரம் கட்டிலின் பின்னே இருந்த தடுப்பில் தலையை சாய்த்து அவள் தலை மேலே ஒரு கையையும் அவள் கைகளுக்குள் மறுகையையும் வைத்துக்கொண்டு அமர்ந்த வாக்கிலே உறங்கிக்கொண்டிருந்தான் .தான் அவன் மடியில் படுத்திருப்பதை உணர்ந்தவள் சட்டென்று எழ அவனோ உறக்கத்திலேயே அவள் தலையை பிடித்து தன் மடியிலேயே அழுத்தியவன் அவள் தலையை தட்டி கொடுக்க அவளிற்கோ அவன் செய்யும் இச்செயல் இறந்த தன் அன்னையை ஞாபகப்படுத்தியது .

அவள் கண்களில் புறப்பட்ட கண்ணீர் அவள் கன்னத்தில் வழிந்து அவன் மடியை நனைக்க தன் மேல் ஏதோ ஈரம் படர்வதை உணர்ந்தவன் அப்பொழுதே கவனித்தான் நவ்யா அவன் மடியில் படுத்துக்கொண்டு அழுவதை ,உடனே தூக்கம் தூரமாய் போக அவளை நிமிர்த்தியவன் "என்னாச்சுடா நவி என்னாச்சு ஏன் அழுகை" என்க

அவளோ அவனை அணைத்துக்கொண்டவள்"மேரி மேரி( என்னுடைய என்னுடைய ) மா .....ஏன் ஏன் என்ன விட்டுட்டு போனாங்க விக்ரம் ".உங்களுக்கு தெரியுமா அவுங்க இருந்தவரைக்கும் என் கையாள நா சாப்பிட்டதே இல்ல, ஸ்கூலுக்கு போகேல எங்கம்மா ஊட்டிவிடுவாங்க எங்கப்பா சடை பின்னி விடுவாங்க .

ஏன் அத்தனை கார் இருந்தும் எனக்கு பைக் புடிக்கும்னு எங்கப்பா என்ன பைக்ல தான் கூட்டிட்டு போவாரு .ஒரு ஒருநாள் கூட நா அவுங்கள விட்டுட்டு இருந்ததே இல்ல விக்ரம் எங்கம்மாவையும் அப்பாவையும் கட்டிபுடுச்சுட்டு தான் தூங்குவேன் தெரியுமா ஏன் ?ஏன்? விக்ரம் அவுங்க என்ன விட்டுட்டு போனாங்க ?"என்றவள் உடைந்து அழ

அவனிற்கோ அதிதி ஒருநாள் நவ்யாவை பற்றி கூறியது தான் நினைவில் வந்தது .

ஒருநாள் அதிதியிடம் பேசிக்கொண்டிருக்கையில் அதிதி தானாகவே நவ்யாவை பற்றி கூறினால் "ஒரே பொண்ணுடா அவ அவுங்க அப்பா அம்மாக்கு .ஒரு நாள் கூட விட்டுட்டு இருக்க மாட்டா அவுங்கள. எல்லாரும் கேம்ப் போகேல கூட வர மாட்டேன்னு சொல்லிருவா .

அவங்க எல்லாரும் ஒண்ணா carla போய்ட்ருக்கேல ஒரு டிரக் கட்டுப்பாட்டை இழந்து அவுங்கள நோக்கி வரத பாத்ததும் அவுங்கம்மா இவளை புடுச்சு தள்ளி விட்டுட்டாங்க அவ கண்ணு முன்னாடியே டிரக் கார் மேல ஏறிறுச்சு .

அடுத்து இவ சொந்தகாரங்க வேற இவளை ஒரு கிழவனுக்கு கல்யாணம் பண்ண வைக்க ட்ரை பண்ணி ரொம்ப ஒடைஞ்சுட்டா .இங்க வந்தப்போ அவ அழுதது தான்டா கடைசி அதுகப்ரோம் ரொம்ப ஒரஞ்சு போய்ட்டா .

ஒரு சொட்டு கண்ணீர் கூட அவுங்க அப்பா அம்மாவை நெனச்சு அழலை எதுவுமே பேச மாட்டா முதல்லயே அவ silent தான் ஆனா அதுகப்ரோம் தேவைக்கு மீறி ஒரு வார்த்தை கூட பேசல .ரூம்ல விட்டத்தை வெரச்சுட்டே உக்காந்துருவா .doctorta கேட்டதுக்கு அவ அழுதா தான் சரி ஆவான்னு சொல்லிட்டாங்க நாங்களும் ஆறு வருஷமா போராடிட்டோம் அவ அழவே இல்லடா.நா என் பழைய நவிய ரொம்ப மிஸ் பண்றேன் "என்று கூறியது நினைவு வர அவளே அழுது ஓயட்டும் என்று விட்டுவிட்டான் .

அவள் அழுதாள் அழுதாள் ஒரு மணி நேரமாகியும் அழுது கொண்டே இருந்தால் .அவன் அவள் முதுகை ஆதரவாய் நீவி விட்டுக்கொண்டே இருந்தான் .ஒருவழியாய் அழுது முடித்தவள் விசும்பிக்கொண்டே அவன் மார்பில் சாய்ந்து அமர்ந்திருக்க அவள் முகத்தை நிமிர்த்தியவன் "நவி அப்பா அம்மாவை எழக்குறது எவ்ளோ கஷ்டம்னு எனக்கு புரியுதுடா ஆனா ஏத்துக்கிட்டு தான்டா ஆகணும் .உள்ளுக்குள்ளேயே வச்சுக்க கூடாது சரியா அழனுன்னு தோணுறப்போ அழுதுடனும் ஆனா அதுக்காக அழுதுட்டேவும் இருக்க கூடாது சரியா ."என்க

அந்த நிமிடம் அவன் அணைப்பில் இருந்தவளிற்கு இது வரை கிடைக்காத பாதுகாப்புணர்வு எழ அந்த நிமிடம் இனி தனது வாழ்வின் அனைத்துமாய் அவனை உணர்ந்தவள் சரி என்று தலை ஆட்ட அவள் நெற்றியோடு லேசாய் முட்டியவன்"குட் போய் பிரெஷ் ஆய்கோ "என்று விட்டு செல்ல பல வருடமாய் மனதை அழுத்திய பாரம் அகன்றதாய் உணர்ந்தவள் எழுந்து செல்லப்போக அவனது pursai அவன் அங்கேயே விட்டு சென்றிருந்ததை அப்பொழுதே கவனித்தவள் ஏதோ ஒரு உந்துதலில் அதை திறக்க அதில் வித்யுதின் திருமணத்தின் பொழுது அவள்முகத்தில் விழுந்த தலை முடியை ஒதுக்கி விடுமாறு இருந்த புகைப்படம் இருக்க ஒரு "திருட்டுப்பயலே "என்று ஒரு வெட்கச்சிரிப்பு சிந்தியவள் அடுத்த படத்தை பார்க்க அதிலோ அவன் கார் racingil ஜெயித்த பொது எடுத்த புகைப்படமும் அதன் கீழ் என் களைந்த கனவின் சிறு நினைவு என்ற வாக்கியமும் இருக்க அதை பார்த்தவளிற்கு அன்று தாங்கள் வெளியே buisness விஷயமாக சென்றிருந்த பொது அருகில் நடந்த கார் racingai பார்த்தவன் கண்களில் ஒரு இருந்த ஏக்கத்தை நினைவு கூர்ந்தவள் அதை வருடி மூடி வைத்து விட்டு சில வேலைகளை தன் லப்டோப்பில் பார்த்தவள் ரெப்பிரேஷ் ஆகி வந்தால் .

பின் டென்மார்க்கில் தரை இறங்கியவர்கள் அந்த நிறுவனத்தில் சென்று buisness dealingsai முடித்தவர்கள் papersai சரி பார்த்து சைன் பண்ணி விட்டு வெளி வர .நவ்யாவோ அவன் சார் சாவியை அவன் கையிலிருந்து வாங்கியவள் டிரைவர் சீட்டில் சென்று அமர்ந்தாள் .

அவளை வினோதமான பார்வை பார்த்தவன் "ஹே நவி நீ என்ன டிரைவர் சீட்ல போய் உக்காருற ?"என்க

அவளோ "நம்ம ஊரு time படி இப்போ மணி என்ன ?"என்க

அவனோ "மணி ராத்திரி பன்னெண்டு மணி "என்றவன் பின்னே தேதியை பார்த்து விட்டு தலையில் அடித்துக்கொண்டவன் "சாரி சாரி சாரி நவி எப்படி மறந்தேன்னே தெரில ஹாப்பி பர்த்டே என்ன வேணுன்னு சொல்லு இப்போவே வாங்கி தரேன் "என்க

அவளோ அவனை பார்த்து சிரித்தவள் "ஓஹ் என்ன கேட்டாலும் கிடைக்குமா அப்போ சரி கண்ணை மூடுங்க " என்க அவன் விசித்திரமாய் பார்க்க அவளே தொடர்ந்தால்" அட மூடுங்கங்குறேன் "என்க அவனும் தன் கண்களை மூடிக்கொண்டான் .

அவன் கண்களை ஒரு துணியால் கட்டியவள் "நா சொல்ற எல்லாத்தையும் இன்னிக்கு செய்யணும் மீறவே கூடாது இதான் என் பர்த்டே விஷ் இப்போ என்ன பண்றீங்கன்னா வாய மூடிட்டு நா கூட்டிட்டு போற இடத்துக்கு வரீங்க "என்க

அவனும் தன் கையை நெஞ்சின் குறுக்கே வைத்து குனிந்து "ஓகே யுவர் honour தங்கள் சித்தப்படியே நடக்கட்டும் "என்க அவன் செய்த வைத்தில் சிரித்துக்கொண்டவள் தானே காரை ஒட்டிக்கொண்டு ஒரு இடத்தில நிறுத்தினால் .

பின் அவன் கண் கட்டை அவிழ்க்க கண்ணை விழித்து திறந்தவன் தான் முன்னே கண்ட இடத்தை பார்த்து ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்று விட்டான் .அவர்கள் இருந்தது டென்மார்க்கிலேயே மிகவும் புகழ்பெற்ற கார் racing trackkaana jyllandsringen.

இவள் ஏன் தன்னை இங்கே அழைத்து வந்திருக்கிறாள் என்று அவன் யோசித்துக்கொண்டிருக்க அவளோ அவன் கையை பிடித்தவள்" இன்னிக்கு இங்க பெரிய அளவுல ஒரு கார் ரேஸ் நடக்க போது. பாஸ்ட் racing ப்ரொபைல் சப்மிட் பண்ண அடுத்த 2 மணி நேரத்துல அவுங்களே செலக்ட் பண்ணி டிக்கெட்ஸ் குடுத்துருவாங்க "என்றவள் அவன் கையில் தான் அவன் ரசிங் profileai அவன் கம்ப்யூட்டரிலிருந்து தசக் செய்து சுட்டு ரிஜிஸ்டர் செய்ததில் தேர்வாகி இருந்த அவனிற்குரிய டிக்கெட்ஸை கொடுத்தவள் கண்ணை racing ட்ராசக்கை நோக்கி சைகை செய்ய அவனோ தயங்க .

அவன் கையை பற்றியவள் "பர்த்டே கேர்ள் கேக்குறேன் "என்க அவளை நோக்கி ஒரு புன்னகையை சிந்தியவன் நேரே உள்ளே சென்றான் . ரசிங் suitai அணிந்துகொண்டு அங்கிருந்த ஒரு racing காரிற்கு சென்றவன் அதை வருடிவிட்டு உள்ளே சென்று அமர்ந்தான் .

நவ்யாவும் அங்கே இருந்த galleriyil வந்து அமர்ந்தாள் .காரிலிருந்து அவன் ஒரு முறை நவ்யாவை பார்க்க அவளோ ஆல் தி பெஸ்ட் என்று சைகை செய்ய 1 2 3 என்ற count downirku பின் சீறிக்கொண்டு பாய்ந்தன அங்கிருந்த 20 racing கார்கள்.

முதல் லேப்பில் பல நாட்களானதால் சற்றே பின்னடைந்து தடுமாறியவன் அடுத்த லேப்பில் பழைய racing சாம்பியன் விக்ரம் முழித்துக்கொள்ள நைட்ரோ fuelai இழுத்து விட்டவன் 10 பேரை முந்தினான் .

மூன்றாவது lap நவ்யா சீட்டின் நுனியில் அமர்ந்து கொண்டே பார்த்துக்கொண்டிருக்க விக்ரம் 5 , 6 என முன்னேறிக்கொண்டே இருந்தான் .lap முடிய சற்று தொலைவில் 2 ஆவது இடத்தில அவன் இருக்க நவ்யாவோ எழுந்தே நின்றுவிட்டால் .

முன்னே அவன் செல்ல அந்த முதல் இடத்தில் யிருந்தவனும் இவனை முந்திக்கொண்டு சென்றான் இப்படியே கண்ணாமூச்சி ஆட்டம் தொடர கடைசி பத்து அடியில் எதிர்பாரா விதமாக மிச்சம் இருந்த நைட்ரோ பியூயலை இழுத்து விட்டவன் முதல் இடத்தை அடைந்து கோப்பையை கைப்பற்ற நவ்யாவோ துள்ளி குதிக்க ஆரம்பித்து விட்டால் .

காரை விட்டு வெளியே இறங்கியவன் கண்களில் தனக்கு இனி கிடைக்காது என்று நினைத்து பொருள் கை சேர்ந்த நிறைவு இருந்தது .கோப்பையை வழங்க அவனை அழைக்க மேடைக்கு சென்றவன் கண்களில் ஒளியுடன் அந்த கோப்பையை வாங்கியவன் அதை ஆசை தீர வருடினான் .

கண்கள் நவ்யாவை தேட அவளோ கைகளை கட்டிக்கொண்டு சிரிப்புடன் அவனை பார்த்துக்கொண்டிருந்தாள் .கோப்பையை வாங்கியபின் அவளிடம் வந்தவன் அவள் கையை பற்றி ஒன்றும் பேசாது காரை ஓட்டிக்கொண்டு அவர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு வந்தவன் உள்ளே நுழைந்த அடுத்த நொடி அவளை தலைக்கு மேல் தூக்கி சுற்றினான் "நவி நவி நவி "என்று

சுற்ற அவளோ அவன் தோளை பிடித்தவள் "ஐயோ விக்ரம் விடு விடு விடு விக்ரம் தல சுத்துது இறக்கி விடு "என்க

.அவளை இறக்கி விட்டவன் அவள் முகத்தை கைகளில் ஏந்தி "ரொம்ப thanksdi racing என் oxygen மாறிடி ஆனா என் அப்பாவால அதை நா குழி தோண்டி பொதச்சுட்டேன் இன்னிக்கு இப்போ உன்னால உன்னால மட்டும் தாண்டி நா ரொம்ப சந்தோஷமா இருக்கேன் "என்க

அவளோ அவனையே பார்த்துக்கொண்டு நிற்க அவன் "என்ன நா பேசிட்டே இருக்கேன் நீ என்னையே பாத்துட்ருக்க "என்க

அவளோ அவன் கையை பிடித்தவள் அவன் கண்களை நேராய் பார்த்து "இது எப்போ ஆரம்பிச்சுது என்ன எது எதுவுமே எனக்கு தெரியாது விக்ரம் ஆனா ஒன்னு மட்டும் தெரியும் உனக்கு oxygen racing எனக்கு oxygen நீ "என்க அவன் விழி விரித்து அவளை நோக்க அவன் கரத்தை தன் கரத்தால் பற்றியவள் தலையை தாழ்த்தி"ஐ லவ் யு விக்ரம் "என்று கூறி முடிக்க அவனிடமிருந்து எந்த அசைவும் இல்லை .

சற்று நேரம் கழித்து அவள் நிமிர அவனோ அவளை காதல் கசியும் பார்வையோடும் சிறு குறுநகையோடும் அவளையே பார்த்துக்கொண்டிருக்க அவன் பார்வை வீச்சில் தடுமாறியவள் அவனிடமிருந்து விலகி உள்ளே செல்லப்போக அவள் கையை பற்றி அவளை சுவற்றோடு சாய்த்தவன் "say இட் again "என்க

அவளோ அவன் கண்களை பார்த்துக்கொண்டே "ஐ லவ் யு "என்க

அவளை மேலும் நெருங்கியவன் "again "என்க

அவளும் சளைக்காது "ஐ லவ் யு" என்க அவள் இதழை தன் கட்டை விரலால் வருடியவன் "again "என்று தாழ்ந்த குரலில் அவள் முகத்தில் தன் மூச்சுக்காற்று படும் தூரத்தில் நின்று கேட்க

அவளோ உள்ளே சென்று விட்ட குரலில் "ஐ ...."

என்று துவங்க வார்த்தைகள் முடிவுபெறும்முன்னே அவள் இடையை பற்றியவன் தன் ஆளுமையை துவங்கியிருந்தான் தன்னவளின் இதழ்களில் தன் இதழ் கொண்டே.

முதலில் திகைத்தவள் பின் கண்களை மூடி சுவற்றோடு ஒன்றி விட அவனோ அவளை மேலும் ஒன்றியவன் தான் அவள் மேல் வைத்திருக்கும் மொத்த காதலையும் வார்த்தையில் வடிக்க நினைத்து தோற்று தன் செயலால் உணர்த்திவிடும் வேகத்தில் அவளை முத்தமிட்டுக்கொண்டிருந்தான் .

நேரம் நீண்டு கொண்டே செல்ல அவன் செல்போன் அடிக்க அதில் சுயநினைவை பெட்ரா நவ்யா அவனை தள்ளி விட்டு வெட்கத்தில் வேறுபுரம் திரும்பிக்கொள்ள ஜிவு ஜிவுவென்ற கோபத்தோடு phoneai எடுத்தவன் சரணின் எண்ணைக்கண்டு "கரடி" என்று அவனை திட்டு விட்டு அலட்சியத்துடன் காதில் வைத்தவன் அவன் கூறிய தகவலால் ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான் .பின் " நா உடனே கெளம்பி வரேன் மோர்னிங் அங்க இருப்பேன்.அது வர என்ன செய்ய முடியுமோ அதை செஞ்சு வை என்ன ஆனாலும் சரி அந்த ப்ரோடுக்ட்ஸ் இந்தியன் போர்டேரா தாண்ட கூடாது "என்று விட்டு வைத்தவன்

நவ்யாவிடம் சென்று "நவ்யா பேக் our திங்ஸ் வி ஆர் லீவிங் immediately "என்க

அவளோ அவனது கலவரமடைந்த முகத்தை பார்த்தவள் "என்னாச்சு விக்ரம் எனி ப்ரோப்லேம் "என்க

அவனோ ஆமோதிப்பாய் தலை அசைத்தவன் "வெரி சீரியஸ் ஒன் இப்போ கெளம்பு நம்ம கிட்ட நேரமில்லை "என்று துரிதப்படுத்த அவளும் உள்ளே சென்று பேக் செய்ய ஆரம்பிக்க அங்கிருந்த sofaavil அமர்ந்தவன் உதடுகள் தானாய் உச்சரித்து அவன் பெயரை "விக்ராந்த்"என்று .........

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top