12
அடுத்த நாள் காலை என்றும் போல் விடிய அலுவலகத்திற்கு வந்த நவ்யா இன்று ஏதும் கேட்பானோ என்று தயங்கிக்கொண்டே"குட் மார்னிங் விக்ரம் "என்க
அவனோ நேற்று எதுவுமே நடவாததைப்போல்"குட் மோர்னிங் நவ்யா . நவ்யா உண்ட பாஸ்போர்ட் இருக்குல்ல"என்க
அவளோ இவன் என்ன சம்மந்தமே இல்லாம ஏதோ கேக்குறான் என்று நினைத்தவள் "ஹான் இருக்கு விக்ரம் என்ன திடீர் கேக்குறீங்க ?"என்க
அவனோ "நாம ஒரு 10 டேய்ஸ்க்கு டென்மார்க் போறோம் "என்க
அவளோ "டென்மார்காஹ் எதுக்கு விக்ரம் ?"என்க
அவனோ "interior டிசைனிங் ப்ரோடக்ட்ஸ் எல்லாம் விக்குறதுக்கான ஷாப்ஸ் நோர்த்லா ஓபன் பண்ணதுல பெரிய லாபம் வந்துருக்கு சோ இங்கயும் அதே மாறி ஷாப்ஸ் செட் பண்ணலாம்னு chairman (அவன் அப்பாவை தான்பா சொல்றான் ) பிளான் பண்ணிருந்தாரு .இங்க வர பொருளையெல்லாம் டென்மார்க்ள இருந்து இம்போர்ட் பண்றதா இருந்துச்சு பட் இவ்ளோ நாளும் இம்போர்ட் பண்ண ரைட்ஸ் தர paperslaam சைன் ஆகாததால நம்மளால பண்ண முடியாம இருந்துச்சு அந்த paperslaam நேத்து சைன் ஆயிருச்சு சோ வி ஆர் heading டு டென்மார்க் for further buisness dealing . அங்க ஒரு 10 டேஸ் இருக்குற மாறி இருக்கும் "என்க
அவளோ "ஓஹ் okk விக்ரம் யார் யாருலாம் போறோம் "என்க
அவனோ அவளை சிறு சிரிப்புடன் பார்த்தவன் "நீயும் நானும் மட்டும் தான் போறோம்"என்க
இவள் நிலை சொல்லவா வேண்டும் மனதிற்குள்ளே விசில் அடித்தவள் வெளியே "ஓகே விக்ரம் எப்போ கெளம்புறோம் ?"என்க
அவனோ "within a couple of days உன் விசா இன்னும் 2 daysla ரெடி ஆயிரும் அதுகப்ரோம் நாம அங்க கிளம்பலாம் .என்றவன் தன் வேலையை பார்க்கத் துவங்க இவளிற்கோ அவன் எதுவும் கேட்காததே பெரும் நிம்மதியை தர அவள் முகத்தில் இருந்தே அவள் நினைத்ததை புரிந்து கொண்டவன் ஒரு விஷமாச்சிரிப்புடன் "அவ்ளோ சீக்ரம் உன்ன விட்டுற மாட்டேண்டி செல்லமே உன் வாயால நீ ஆரம்பிச்சதை உன் வாயாலேயே சொல்ல வைக்குறேன்"என்று நினைத்துவிட்டு தன் வேலைகளில் மூழ்க அவளும் தன் வேளைகளில் மூழ்கினால் .
அடுத்த இரண்டு நாட்கள் யாருக்கும் நிற்காமல் விரைய ஆயிரத்தெட்டு advicegalai வித்யுத் சைந்தவியிடமிருந்து பெற்றுக்கொண்டு விக்ரமின் அருகில் அவனது private ஜெட்டில் அமர்ந்திருந்தாள் நவ்யா .
அவனோ படு coolaaga அமர்ந்திருக்க அவளோ ஒருவித நடுக்கத்தோடு அமர்ந்திருந்தாள் .அவளது அரண்டிருந்த முகத்தை பார்த்தவன் "என்னாச்சு நவி ஏன் இப்டி பெயரஞ்ச மாறி உக்காந்துருக்க ?"என்க
அவளோ "அது அது விக்ரம் எனக்கு இது first flight அதான் கொஞ்சம் பயமா இருக்கு "என்றுவிட்டு திருவிழாவில் தொலைந்து போன பிள்ளையை போல் முகத்தை அரண்டவாறு வைத்திருக்க அவனிற்கோ அவளது அம்முகபாவனையை பார்க்க பார்க்க அவளை மடியில் அமர்த்தி கொஞ்ச வேண்டும் போல் இருந்தது. சிரமப்பட்டு தன்னை கட்டுப்படுத்தியவன் அவள் கையோடு தன் கையை கோர்த்துக்கொண்டவன் ஒன்னும் இல்ல ஜஸ்ட் ரோலர் கோஸ்டர் போற மாறி தான் இருக்கும் என்ன tightaah புடுச்சுக்கோ இந்த bubblegummah வாயில போட்டுக்கோ vomit வராது "என்க அவளும் அவனது கையை நன்றாக கெட்டியாய் பிடித்துக்கொள்ள விமானமும் வானை கிழித்துக்கொண்டு உயர உயர பறந்தது .
அவர்கள் கரம் கோர்த்தபடியே இருக்க இருவருக்குமே அதை பிரிக்க மனமில்லை .கோர்த்திருந்த தங்கள் கரங்களை பார்த்தவன் மனதில் லேசாய் சிரித்துக்கொண்டு வெளியே ஜன்னலில் தன் கவனத்தை பதிக்க சற்று நேரத்தில் தன் தோளில் ஒரு பாரத்தை உணர்ந்தவன் திரும்பி பார்க்க நவ்யாவோ ஏதோ தலையணையை கட்டிப்பிடிப்பதைப் போல் அவனது கையை இறுக்கிப்பிடித்துக்கொண்டு அவன் தோளில் தலை சாய்த்து ஏதோ அவள் வாய்க்குள்ளேயே முனகிக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தால் .
அவள் உறங்கும் அழகை ரசித்தவனிற்கோ பார்க்கப்பார்க்க தெவிட்டவில்லை எனில் இப்படியே இருந்தால் அவளிற்கு நாளை கழுத்து வலி ஏற்படும் என்பதை உணர்ந்தவன் அவள் தூக்கம் களையா வண்ணம் அவளை கைகளில் ஏந்தியவன் அந்த பிரைவேட் ஜெட்டில் இருந்த ஒரே படுக்கை அறையில் அவளை கட்டிலில் கிடத்திவிட்டு அவள் அருகில் அமர்ந்து அவள் முகத்தில் விழும் முடியை காதோரத்தில் ஒதுக்கியவன் நெற்றியில் மிக மிருதுவாய் முத்தமிட்டு எழப்போக அவளோ தூக்கத்திலேயே அவன் கையை பிடித்தவள் தலையணையிலிருந்து தலையை நகர்த்தி அவன் மடிமேல் வைத்துக்கொண்டு அவன் கையை பிடித்துக்கொண்டே உறங்க அவனோ எழ மனமில்லாதவன் அவள் தலை முடியை கோதிக்கொண்டே அமர்ந்த வாக்கில் உறங்கிப்போனான் .
கர்வத்தை கேடயமாக்கி
அலட்சியத்தை ஆடைகளாக்கி
அடங்காது அலைந்தவன் நானடி
ஒரே விழியசைவில்
என்னை தோற்கடித்தாய் நீயடி
தீயினை காக்கும் விழிகளோடு
திமிராய் திரிந்தவன் நானடி
உன்னை மடியேந்திட ஆண்மையில்
தாய்மையை உணர்ந்தேன் நானடி
விக்ரம் இங்கே நிம்மதியாய் உறங்கிப்போக சரணோ ஸ்வஸ்திகாவுடன் வெளியே வந்து அல்லோலப்பட்டுக்கொண்டிருந்தான் .
ஆறேழு கடைகள் ஏறி இறங்கிவிட்டால் இன்னும் ஒன்றை கூட வாங்க வில்லை என்ன வாங்க போகிறாள் என்றும் கூற வில்லை.ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்தவன் "என்ன தாண்டி பாக்குற எதையாச்சும் சொல்லி தொலையேன் இப்டி இத்தனை கடை ஏறி எறங்குற ஆனா ஒன்னும் எடுத்த பாடா இல்ல"என்க
அவளோ மிகவும் coolaai அவனை பார்த்தவள் "நீ தான வீட்டுல சும்மா இருந்தவளை வெளிய போலாம் வாடினு இழுத்துட்டு வந்த கம்முனு அங்க போய் உக்காரு எடுத்துட்டு வரேன்: என்றவள் சென்று ஷிஞ்சான் படம் போட்ட kerchefai எடுத்து விட்டு" கெடச்சுருச்சு சரண் போலாமா" என்க
அவனுக்கோ ஒரு kerchiefirkaaga இத்தனை தூரம் அலையை விட்டது நவதுவாரத்திலுமிருந்தும் புகையை வர வைக்க கடை என்றும் பாராமல் "அடிங் கொய்யால கத்திரிக்கா இன்னிக்கு உன்ன சட்னி ஆக்காம விடமாட்டேண்டி "என்று அவளை துரத்த அவளும் அவனிற்கு போக்கு காட்டிக்கொண்டே ஓட ஓடிய வேகத்தில் ஒருவன் மீது மோதிய சரண் அவன் முகத்தை பார்த்து சாரி boss என்று விட்டு மீண்டும் அவளை துரத்த அடுத்த நொடி அவன் மூலையில் அம்முகம் மின்னல் வெட்டியதைப்போல் தாக்க அவ்விடத்திலேயே உறைந்து விட்டான்.
மனதில் இது எவ்வாறு சாத்தியமாகும் எவ்வாறு அவன் திரும்பினான் .முடிவுற்றதாய் நினைத்த அத்யாயம் புதியதோர் சகாப்தமாய் சாத்தானைப் போல் உருவெடுத்ததாய் உணர்ந்தவன் அடுத்த நொடி அவனை அக்கூட்டத்தில் தேடிப்போக நொடியில் மறைந்திருந்தான் அவன் .அங்கே இங்கே தேடிய சரண் எங்கும் அவன் கிடைக்காமல் போக அவ்விடத்தை சுற்றியே தன் கண் பார்வையை சுழல விட்டவன் தோளில் யாரோ கை வைக்க அக்கையை பிடித்து முன்னாள் இழுத்து முகத்தில் குத்த போனவன் ஐயோ அம்மா என்ற ஸ்வஸ்திகாவின் அலறலிலேயே அது தான் நினைத்த அவன் அல்ல என்று உணர்ந்தவன் அவளை சரியாய் நிற்க வைக்க அவன் முகத்தை பார்த்து ஏதோ சரி இல்லை என்று உணர்ந்தவள் "என்னாச்சுடா ஏன் முகம்லாம் பெயரஞ்ச மாறி இருக்கு ?எனி ப்ரோப்லேம் ?"என்க
அவனோ அவளை காரிற்கு அழைத்து வந்தவன் இறுகிப்போய் அமர்ந்திருந்தான் .
அவனை தோள் தொட்டு தன் புறம் திருப்பியவள்"என்னாச்சுடா நல்லா தான இருந்த திடீர்னு என்னாச்சு ?"என்க
அவள் கண்ணைப்பார்த்தவன் "நா அவனை பார்த்தேன் இப்போ இங்க "என்க
ஸ்வஸ்திகாவோ குழம்பியவள் "யாரைப்பார்த்த ?"என்றவள் முகம் நொடியில் இருள அவனை திகைத்து பார்த்தவள் "யு யு மீன்..."
என்று அவள் தடுமாற
அவனோ ஆமோதிப்பாய் தலை அசைத்தவன்"விக்ராந்த் இஸ் alive " என்க ஸ்வஸ்திகாவிற்கோ வியர்வை துளிகள் வழிந்தோடியது 3 வருடத்திற்கு முன் நடந்த சம்பவங்களும் இழப்புகளும் மனதில் நிழலாட அவள் உடல் நடுக்கம் கண்டது .அவள் கையை ஆதரவாய் பற்றிய சரண் அவளை தன் நெஞ்சோடு சாய்த்துக்கொண்டான் இனி திரும்பாதென்று நினைத்த புயல் மீண்டும் அவர்கள் வாழ்வில் வந்ததை நினைத்து இங்கு இவர்கள் மனதோ சஞ்சலத்தில் ஆழ்ந்திருக்க அந்த சஞ்சலத்திற்கு காரணமானவனோ coolaaga கோக்கை குடித்துக்கொண்டிருந்தான் .
இது வரை இருட்டில் மட்டுமே இருந்த அவன் உருவம் இன்று வெளிச்சத்தில் தெளிவாய் தெரிந்தது .ஆறடி உயரத்திற்கு சற்று குறைவான உயரத்தில் மாநிறத்தில் கூர் விழிகளில் ஒளிந்திருந்த வெறியோடும் இதழுறைந்த புன்னகையில் ஒளிந்திருந்த அலட்சியமுமாய் இருந்தவனின் புறத்தழகு எப்பெண்ணையும் ஒரு முறை திரும்பி பார்க்க வைக்க அவனின் அகத்தழகு எமனே அஞ்சும் அளவிற்கு நஞ்சு கலந்ததாய் இருந்தது .
கோக்கை குடித்துக்கொண்டே தன் கைபேசியில் யாருடனோ பேசியவன் "குட் உனக்கான சன்மானம் உன்ன தேடி வரும் "என்றவன் அலட்சியமாய் அங்கிருந்த கண்ணாடி வழியே சரணின் கார் அங்கிருந்து நகர்ந்து செல்வதை பார்த்தவன் "மை கேம் ஸ்டார்ட்ஸ் " என்க
இப்புறமோ மஹதி அப்பெண்ணின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு அதனருகில் இருந்த கோப்புகளை பார்த்தவள் கண்ணில் பட்டது அவளது தமக்கை கடைசியாய் கதறிய மரணக்கதறல்களின் ஓலத்தை தன்னுள் பதிவேற்றி வைத்திருந்த காணொளிக்காட்சி .
அதை மீண்டும் மீண்டும் போட்டு பார்த்தவளிற்கு ஒவ்வொருமுறை உயிர் வலியோடு அவளது தமக்கை கதறும் கதறல்கள் அவளின் வெறியை பன்மடங்காய் கூட்டியது .
அதை ஒரு இடத்தில் நிறுத்தியவள் அதில் பதிவாகி இருந்த ஆடவனின் கையில் இருந்த" v "என்று பச்சை குத்தி இருந்த இடத்தை பார்த்தவள் .முகத்தில் அன்று விக்ரம் கை கொடுக்கும் பொழுது அவன் கையை ஆராய்ந்ததில் அந்த v என்ற தடம் இல்லாததைப்பார்த்து தான் நினைத்தவன் அவன் இல்லை என்று உணர்ந்துக்கொண்டவளிற்கோ மீண்டும் ஆரம்பப்புள்ளிக்கே வந்ததை போல் இருக்க கோபத்தில் எரிமலையாய் தகித்தால்.
நா பண்ண எல்லா முயற்சியும் மறுபடி ஆரம்பிச்ச இடத்துக்கே கொண்டு வருதேடி என்ன ?யார்டி உன்ன இப்டி பண்ணா ?ஏண்டி என்ன விட்டு போன ?ஒவ்வொரு நாளும் முள்ளுல நடக்குற மாறி இருக்குடி கண்ணாடில என் உருவமே என்ன பார்த்து உன் அக்கா செத்து 3 வருஷமாயியும் அவளை கொன்னவனை கண்டுபிடிக்காம இருக்கியே உனக்கெதுக்குடி இந்த காக்கிசட்டைனு கேட்டு என்ன கொல்லுதுடி .யார்டி உன்ன இப்டி பண்ணா பதில் சொல்லு மமதி"என்றவள் கதறிக்கொண்டே அந்த படத்தை தன்னோடு சேர்த்தணைத்தவள் மடிந்து அழுதாள் சிங்கமென கர்ஜிக்கும் மகதியின் அழுகுரல் அவ்வறை எங்கும் எதிரொலிக்க அவள் அழுகுரல் கடவுளின் செவிகளை எட்டுமா ?
யாரிந்த விக்ராந்த் ?
தொடரும் ...........
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top