💗பகுதி 9💗
"டேய் பிலீஸ் டா விக்கி!! நான் சொல்லுரத கேளு டா " என சந்திருவிடம் போராடினான் வர்ஷன்.
"நோ!! நீ சொல்லுறது எதையும் நான் கேட்கமாட்டேன்!! நோ வே!!" என்று வர்ஷனின் கூற்றை கேட்காமல் இடைமறித்தான் சந்திரு.
"டேய் பிலீஸ் புரிஞ்சுக்கோ டா!! நீ சொல்லுர மாதிரி எல்லாம் செய்ய முடியாது விக்கி!! இட்ஸ் டூ மச் டா!!" என சந்திருவிற்கு புரிய வைக்க முயன்று தோற்றுப் போன குரலில் கூறினான் வர்ஷன்.
"ஏன்டா முடியாது? நாம என்ன சும்மாவா கேட்குறோம்!! நாம கேட்குறதுக்கு தகுந்த அமௌண்ட் பே பண்ணிடலாம். இல்ல இல்ல வேனும்னா இன்னும் எக்ஸ்டிரா கூட பே பண்ணலாம்! இட் மஸ்ட் பீ டண் " என்று பிடிவாதமாக கூறினான் சந்திரு.
"ஆஆஆ!! டேய் அமௌண்ட் பே பண்ணி எக்ஸ்டிரா டேஸ் தங்குறதுக்கு இது ஒன்னும் லாட்ஜ் அன்ட் ஹோடல் இல்ல!! இட்ஸ் எ ஹாஸ்பிடல்! இங்க டெய்லி நூற்றுக்கணக்கான பேஷன்ட்ஸ் உயிருக்கு போராடிட்டு வர்றாங்க!! நீ இங்க தங்க நினைக்குற இந்த ரூம் அவங்களுக்கு உதவும்!! பட் நீ இப்படி அடம்பிடிச்சுட்டு இருக்குறதுனால ஒரு உயிர்கு பாதிப்பு ஏற்பட வாய்பிருக்கு!" என ஆவேசித்தான் வர்ஷன்.
வர்ஷனிற்கு தெரியும் சந்திரு இங்கு இருப்பதால் யாருக்கும் உயிருக்கு பாதிப்படையும் அளவிற்கு ஏதும் ஏற்படாது ஆனால் சிறு பிள்ளை போல் அடம்பிடிக்கும் சந்திருவை சரி செய்ய வேறு வழியில்லை. கடந்த ஒரு மணி நேரமாக வர்ஷன் அவனுடன் போராடிக் கொண்டிருக்கின்றான் ஆனால் எந்த மாற்றமும் இல்லை.
"பட்..." என மனதில்லாமல் சந்திரு இழுக்க வர்ஷனே தொடர்ந்தான்.
"எனக்கு தெரியும் விக்கி நீ நிரோவ எந்த அளவுக்கு நேசிக்குறன்னு!! அவ உன்ன பார்க்க மறுபடியும் வருவாங்குற நம்பிக்கைல தான் இன்னும் கொஞ்ச நாள் இங்க தங்களாம்னு நீ நினைக்குறதும் எனக்கு புரியுது பட் பிராக்டிகலா திங்க் பண்ணி பாரு இவ்வளவு நாள் வராதவ இனிமே வருவாளா?? ".
சந்திருவிற்கு தெரியும் அவள் தன்னை காண வருவாள் என்ற நினைப்பு கண்மூடித்தனமான ஒன்று தான். அவன் ஹாஸ்பிடளில் அட்மிட் ஆகி இதோடு பத்து நாள் ஆகிவிட்டது. ஐந்து நாளிலேயே டாக்டர் சந்திருவிற்கு பச்சை கொடி காட்டி விட்டார் ஆனால் அவன் தான் இன்னும் ஐந்து நாள் எக்ஸ்டண்ட் பண்ணக் கூறி வாதிட்டு அதில் வெற்றியும் பெற்றான். இது எல்லாம் அவள் தன்னை காண வருவாள் என்ற நம்பிக்கையில் தான்.
ஒவ்வொரு முறை தன் ஹாஸ்பிடல் அறை கதவு திறக்கும் போதும் ஆவலுடன் நோக்கும் அவன் விழிகள் ஏமாற்றத்தையே கண்டன.
'ஒரு வேல அவ என்ன லவ் பண்ணலயா!! நான் தான் தெரியாம அவ காட்டுன சிம்பதிய லவ்னு தப்பா நினைச்சுட்டனா!! பட் அந்த பீல்!! அது பொய்யில்லையே!! ஒரு வேல எனக்கு மட்டும் தான் அப்படி பீல் ஆச்சா!! ' என தன் மனதினுள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தான் சந்திரு.
அவனது புலம்பல்கள் யாவும் முக உணர்வுகளாய் வெளிபட அவனை உற்று நோக்கிக் கொண்டிருந்த வர்ஷனிற்கு மனது கனத்தது. தன் நன்பனின் வாழ்வில் வசந்தம் பிறந்து விட்டது என அவன் எண்ணியது இவ்வாறாகும் என எள்ளளவும் எண்ணவில்லை.
'நிரோ சந்திருவை பார்த்த விதம், அவள் அவனுக்காக அழுதது, ரத்தம் கொடுத்தது, அவனுக்கு சரியாகி விட்டது என்ற பின் தான் தனக்கு உயிரே வந்தது போல் அவள் முகம் தெளிவுற்றது என அவளின் செயல்கள் அனைத்தும் அவள் அவனிடம் கொண்ட காதலினால் என நினைத்தேன் ஆனால் அது அனைத்தும் தவறோ!! அவை அவள் மனிதாபிமானத்தால் செய்த செயலோ?? ' என மனதில் பிதற்றி கொண்டிருந்தான் வர்ஷன்.
இவன் இவ்வாறு எண்ணி கொண்டிருக்கையில் அங்கு சந்திருவோ மூளையிடம் வாதிட்டு தோற்றுப் போன தன் மனதை தேற்றிக் கொண்டிருந்தான்.
"ஓகே வர்ஷன் நாம கிளம்பலாம்" என்று இறுகிப் போன குரலில் கூறினான் சந்திரு.
எப்போதும் வர்ஷூ என அழைப்பவன் தன்னை முழுப் பெயர் கொண்டு அழைக்கும் போதே உணர்ந்து கொண்டான் தன் நன்பன் வாழ்வில் தோன்றிய சிறு ஊற்று மறைந்து வரண்ட அப்பாலைவனத்தில் விரிசலை விட்டுச் சென்று விட்டது என்று.
"விக்கி நான் என்ன சொல்ல.." என கூறிக் கொண்டிருக்கும் போதே, " நோ வர்ஷன் நான் எதுவும் கேட்க விரும்பல! நௌவ் கேன் யூ கோ அண்ட் டூ த பார்மாலிடீஸ் ஆப் செக்கிங் அவுட்" என இடைமறித்தான் சந்திரு.
"விக்கி அது..."
"ஐ எம் ஆர்டரிங் யூ ஆஸ் யுவர் சிஈஓ!" என மறு வாதம் ஏதுமின்றி உத்தர விட்டான் சந்திரு.
"எஸ் சார்!" என்று விட்டு தன் நன்பனின் நிலையை காண இயலாதவனாய் வெளியேறினான் வர்ஷன்.
சந்திருவின் நிலையோ,
"காதலெனும் அழகிய ஓர் ஓவியத்தில்
நாம் இருவரும் கலந்து இனைந்து
விட்டதாய் எண்ணியிருந்தேன்
ஆனால்
என் உள்ளம் அறியவில்லை
அம்மாய உலகில் என் மனதை சிக்க வைத்து சிதறடித்து
சென்றுவிடுவாய் என்று..."
-----------------------------
"பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்... இரண்டே இரண்டுக் கண்ணா ஒவ்வொன்றும் காவியம்..." என பாடிக் கொண்டு கண்ணாடியில் தன் முக அழகை ரசித்துக் கொண்டே பத்தாவது பவுடர் கோட்டிங் கொடுத்துக் கொண்டிருந்தாள் நம் நைநிதா.
நிரோவின் நிலையை காண வேண்டுமே!! பார்க்க இரண்டு கண்கள் போதாது!! என்ன ஓர் அழகு! அப்படி ஒரு சிகப்பு! கண்கள் முதல் காதிலிருந்து கழுத்து வரை... அழகிய அந்த செவ்வானத்தையே வெட்கப்பட வைத்து விடும் போல!! வெட்கத்தால் கன்னங்கள் சிவப்பது சரி!! கண்கள் கூடவா சிவக்கும்??
இது வெட்கத்தால் ஏற்பட்டது என நீங்கள் நினைத்தீர்கள் என்றால் சற்று அவளின் காது மற்றும் மூக்கிலிருந்து வரும் புகையையும் நோக்குங்கள்!! உங்களுக்கே புரிந்து விடும் உண்மை என்னவென்று.
"ஏய்!! இதுக்கு மேல என்னால முடியாது!! இன்னும் எத்துன கோட்டிங் தான் குடுப்ப!! ஒரு மணி நேரமா அந்த கண்ணாடி முன்னாடி நின்னுட்டு அலப்பெற பண்ணுற. நீ முகத்துல குடுத்திருக்க கோட்டிங்க சுவத்துல கொடுத்தா லைப் லாங் வீட்டுக்கு பெய்ண்டே அடிக்க தேவையில்ல!! டைம் ஆச்சு ஒழுங்கா வாடி" என உருமினாள் நிரோ.
ரேனு, கவி மற்றும் ஸ்ருதி இவ்விருவரையும் ஹாஸ்டல் பெட்டில் அமர்ந்து கொண்டு மாறி மாறி பார்துக் கொண்டிருந்தனர்.
"இன்னும் எவ்வளவு நேரம் டீ பெய்ண்ட் அடிப்ப?" என ரேனு கேட்ட அதே நேரத்தில் கவி "எதுக்குடீ இவ்வளவு அவசர படுற?" என்று கேட்டாள்.
தேர்ட் அம்பெயர் டெசிசன்காக காத்திருப்பது போல் நான்கு செட் விழிகளும் ஸ்ருதியை நோக்க மொபைலில் கேண்டி கிரஷ் விளையாடிக் கொண்டிருந்த அவளோ என்ன சொல்வது என்று தெரியாமல் மழங்க மழங்க விழித்தாள்.
' அய்யய்யோ!! இப்படி பாக்குறாலுங்களே!! என்ன பண்ண! இப்படி போய் சதிகார கும்பல்ல சிக்கிட்டியே டா கைப்புள்ள....இனி நீ அழுதாலும் விடமாட்டாங்களே!! எப்படியாவது இவங்க மைண்ட டைவர்ட் பண்ணனும்' என தன்னுள்ளேயே புலம்பினாள்.
"ஆமா நிரோ!! சந்திரு பத்தி என்ன முடிவெடுத்திருக்க நீ!! அது லவ்வா கிரஷ்ஷானு கண்பார்ம் பண்ணிட்டியா?"
நிரோவிற்க பக்கென்றிருந்தது பத்து நாட்களாக தேர்வில் கவனமிருந்ததால் யாரும் அவளிடம் இதை பற்றி கேட்கவில்லை. அவளும் யாரிடமும் இதை பற்றி பேசவில்லை.
திடீரென நைநி 'ஆ' என்று கத்த அனைவரது கவனமும் அவளிடம் திரும்ப அசட்டு சிரிப்புடன் "எறும்பு கடிச்சுட்டேன்" என்றாள்.
"என்ன எறும்ப கடிச்சுட்டியா?" என கவி வினாவவும் நிரோ விழுந்து விழுந்து சிரிக்கவும் சரியாக இருந்தது.
"அய்யோ!! இல்ல எறும்பு கடிச்சிடுச்சுன்னு சொல்ல வந்தேன்" என்றுவிட்டு நிரோவை முறைத்தாள் நைநிதா.
"ஆமா ஸ்ருதி உனக்கு தான் லவ் மேல நம்பிக்கையே இல்லையே அப்புறம் ஏன் நிரோட அப்படி கேட்குற?" என்றாள் ரேனு.
"பாகுபலி டூ என் மைண்ட மாத்திடுச்சு!! ச்ச..வாட் எ பிரேவ் லாயல் அண்டர்ஸ்டான்டிங் லவ் !! அது மட்டும் இல்ல இந்த புள்ள கொஞ்ச நாளா ஒரு மார்கமா தான் திரிஞ்சிட்டிருக்கா!!" என ஸ்ருதி கூற அனைவரும் அதை ஆமோதித்தனர்.
ஆம்! சில நாட்களாக நிரோ அவ்வாறு தான் உள்ளாள். சந்திரு என்ற பெயர் கேட்கும் போதெல்லாம் திரும்பி பார்பது அது தன்னவன் இல்லை என அறிந்த பின் ஏமாற்றத்தில் முகம் வாடுவது, ஆம்புலண்ஸ் சத்தம் கேட்டால் அப்படியே உரைந்து நின்றுவிடுவது என என்னேரமும் செய்து கொண்டிருந்தாள்.
"நைநி போதும் டீ ஏய்!! இன்னும் எத்துன !!" என்ற கவியின் குரல் அனைவரின் எண்ண ஓட்டத்தை தடுத்தது.
அப்போது தான் அனைவரும் அவள் பதினெறாவது கோட்டிங் போட ரெடியாக இருப்பதை கவணித்தனர்.
"ஏய் ஒரு கிலோமீட்டர் தள்ளி இருக்க உங்க அத்தை வீட்டுக்கு போரதுக்கு எவ்வளவு அலபெற பண்ணுற!!" என்றாள் ஸ்ருதி.
"உங்களுக்கு பொறாம டீ! நான் அழகா இருக்கன்னு! அதுமில்லாம அங்க என் அத்தை பசங்க இருப்பாங்க" என்று கூறி கண்ணடித்தாள் நைநிதா.
"ஆமா! அவங்க செமயா தான் இருப்பாங்க பட் உங்க அத்த பேச்ச தாங்க முடியாதே!! மொக்கை போட்டே உசுர வாங்கிடுவாங்க டீ!!அதனால தான் நாங்க யாரும் வர்ல. பாவம் நிரோ தான் மாட்டிட்டா!" என ரேனு கூற நைநி நிரோவை ஓர் அர்த்த பார்வை பார்த்தாள்.
"சரி நாங்க கிளம்புறோம்!!" என்று விட்டு இருவரும் கிளம்பினர். பஸ்சில் சென்று கொண்டிருக்கும் போது நைநி நிரோவிடம் "எதுக்குடீ என் கால மிதிச்ச!!" என்று வினாவ "நான் எப்போடீ மிதிச்சேன்!!" என்றாள் நிரோ.
"அதான் ஸ்ருதி கேட்டாள்ல நீ சந்திருவ லவ் பண்ணுறியானு! அப்போ! ச்சை.... நான் வேற லூசு மாதிரி அத சமாளிக்க எறும்பு அது இதுன்னு உழரிட்டேன்!!" என்று கூறி நைநி முறைக்க நிரோ அதன் நினைவில் சிரித்துக் கொண்டே "நான் அப்படி செய்யலன்னா நீ அவங்ககிட்ட உண்மைய சொல்லிருப்ப!!" என்றாள்.
"என்ன உண்மை?" என நைநி விழிகளில் சிரிப்புடன் வினாவினாள்.
"அம்மா உங்க ஸ்டாப் வந்திருச்சு இறங்குங்க " என கண்டக்டர் கூற இருவரும் பஸ்சில் இருந்து இறங்கினர்.
இறங்கிய பின் நிரோ நைநியிடம் "அது நாம உங்க அத்த வீட்டுக்கு போல!! என் லவ்வர பாக்க ஹாஸ்பிடல் வந்திருக்கோம்குற உண்மைய !" என்று எதிரில் இருந்த ஹாஸ்பிடல் வளாகத்தை பார்த்துக் கொண்டே கூறினாள்.
இவார்கள் இருவரும் சந்திப்பார்களா?
நிரோ தன்னவனை காண்பாளா?
சந்திரு தன் காத்திருப்பின் பலன் காணும் முன்னே அதை கைவிட்டிருப்பானா??
அடுத்த பகுதியில் காண்போம்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top