💗பகுதி 8💗

நைநிதா கேள்வித் தீ மூட்ட நிரோ அதை அணைக்க எண்ணி காற்றை கூட்ட அது அணையாமல் மேலும் கொழுந்து விட்டு எரிய யாரோ திடீரென்று தண்ணீரை ஊற்ற நிரோவோ மகிழ்ச்சியில் திரும்ப, திரும்பிய பின் தான் ஊற்றியது நீரல்ல எண்ணெய் என அறிந்து கொண்டாள்.

ஆம்! தன்னை காப்பாற்ற யாரோ வந்து விட்டார்கள் என எண்ணி அவசரகுடுக்கை போல் திரும்பி முதலில் டக் அவுட் ஆனது நம் நிரோ தான். அங்கு நின்றிருந்தவர்களை கண்டு அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.

'இவ ஏன் இப்படி ஷாக் ஆகி நிக்குறா!! இப்படி நின்னு நின்னே இன்னைக்கு காலைல இருந்து எனக்கு பீதிய கெலப்புறா!! அப்படி யார் தான் நிக்குறது? பார்த்துருவோம்! ' என மனதில் நினைத்துக்கொண்டு திரும்ப, பாதி திரும்பும் போதே நிற்பது யார் என அறிந்து அவளும் ரண் அவுட் ஆனாள்.

அப்படி யார் தான் அங்கு நின்று கொண்டிருப்பார்கள்? எதற்கு அவர்களை பார்த்து இவ்வளவு பயபடுகின்றார்கள் இவ்விருவரும் என யோசிக்கின்றீர்களா?

நாம் பொதுவாக தனியாக பாதி நாள் கிளாஸ் கட் அடித்துவிட்டு (நோட் த பாய்ண்ட் யுவர் ஆணர் 'தனியாக') காலேஜ் திரும்பினால் சந்திக்க கூடிய விளைவுகள் என்னவாக இருக்கும்?

அத்தகைய நிலை தான் நிரோ மற்றும் நைநிதாவுடையது. ஏறத்தாழ பத்தடி தள்ளி ருத்திர காளியாய் மூன்று உருவங்கள் நின்றிருக்க நடுநடுங்கி போனது நிரோவிற்கும் நைநிதாவிற்கும்.

அவர்கள் வேறு யாருமல்ல நிரோ மற்றும் நைநிதாவின் நன்பர்களே!!

ஸ்ருதி, கவிதா, ரேனுகா, நைநிதா மற்றும் நிரோஷிதா அனைவரும் நன்பர்கள். எது செய்வதாக இருந்தாலும் ஒன்றாகவே செய்வார்கள் கிளாஸ் கட் அடிப்பதிலிருந்து காம்பௌண்ட் சுவர் எகிரி குதிப்பது வரை.

நைநிதாவின் சொந்த ஊர் கோயமுத்தூர். அவளுக்கும் மெரிட்டில் சீட் கிடைத்ததால் சென்னையில் ஒரு ஹாஸ்டளில் தங்கி படிக்கின்றாள். அதே ஹாஸ்டளில் தான் நிரோவும் தங்குகின்றாள். அங்கு ஆரம்பித்தது தான் இவர்களது நட்பு. ஒரே காலேஜ் ஒரே கோர்ஸ் மற்றும் ஒரே ஹாஸ்டல் மட்டுமல்லாமல் ஒரே ரூம்மில் ரூம்மெட்ஸ்சாகி ஒன்றோடு ஒன்றாக ஒன்றி விட்டனர்.

அவர்களது குரூபில் உள்ள மற்ற மூவருக்கும் சென்னையே நேடிவ் என்பதால் தங்கள் வீட்டிலிருந்தே வருகின்றனர்.

ஏற்கனவே நிரோவும் நைநிதாவும் ஒரே ஹாஸ்டளில் தங்குவதாள் 'நீங்க மட்டும் ஜாலியா பேரன்ட்ஸ் கடுபிடி இல்லாம என்சாய் பண்ணுறீங்க எங்கள விட்டுட்டு' என அவ்வபோது கடிந்து கொள்வார்கள் மற்ற மூவரும்.

இப்போது இவர்கள் இருவர் மட்டும் கிளாஸ் கட் அடித்துவிட்டு இவ்வளவு லேட்டாக வந்துள்ள காண்டில் கையில் ஆயுதங்களோடு நின்றிருந்தனர். ஆயுதம் என்றால் உருட்டுகட்டை, அருவாள், கத்தி என கற்பனை செய்யாதீர்கள் சில சமயம் கேன்டீனில் கிடைக்கும் ஊசிப்போன வடை, எக்ஸ்பைரி ஆன கப்படிக்கும் கிரீன் டீ என பற்பல ஆயுதங்கள் உள்ளன.

இப்பொழுது புரிந்ததா நிரோவும் நைநிதாவும் ஏன் பயந்தார்கள் என்று!!

"ஏய் நைநி!! என்ன கால் உதறுது போல" என்றாள் நிரோ தன் கால் நடுக்கத்தை மறைத்து.

"க்கும்!! அங்க மட்டும் என்ன!! உன் கால் மட்டும் என்ன பிரேக் டான்ஸ் ஆடுதா?? இல்ல பெல்லி டான்ஸ் ஆடுதா??"

"பயத்துல உழராத டீ!! அது பெல்லி டான்ஸ் இல்ல. பெல்லி டான்ஸ்னா நன்பன் படத்துல இலியான ஆடுவால்ல 'ஒல்லி பெல்லி' சாங்கு அது டீ "

"இலியானாவோ எதிர்வீட்டு ஆயாவோ!! அங்க பாரு பக்கி டேஞ்சர் பக்கத்துல வருது" என கூற அப்போது தான் நிரோ அவர்களை நெருங்கி வரும் மூவரையும் கவனித்தாள்.

திடீரென ரேனுகா நிற்க மற்ற இருவரும் அவளை கண்டு பாதியிலேயே நின்றனர். அவள் பதற்றத்தோடு மற்ற இருவரிடமும் ஏதோ கூற அவர்கள் நிரோ மற்றும் நைநிதாவை பார்த்தனர்.

"நைநி அவங்க பார்வையே சரி இல்லடி ஏதோ பெருசா பிலான் பண்றாளுங்க".

"நீ கவலப்படாத நிரோ நான் உன்ன காப்பாத்துறேன்".

"அப்போ உன்ன யாருடீ காப்பாத்துவா??"

"தைரியம் சொன்னா கேட்டுக்கனும் இப்படி கேள்வி கேட்க கூடாது " என்று கூறி நிரோவை முறைத்தாள் நைநிதா.

"ஹீ! ஹீ! ஹீ! சாரி மச்சி ஒரு பிலோல.... ஏய் அங்க பாரு டீ அவளுக ஓடி வராலுங்க!!" என்று தங்களை நோக்கி பிடி உஷா பேத்திகள் போல் ஓடிவரும் மூவரையும் சுட்டிக் காட்டினாள் நிரோ.

ஒடி வந்தவர்கள் நிரோவை ஒரு சேர கட்டிக் கொண்டனர் அவளுக்கோ ஒன்றும் புரியவில்லை. அவர்களை பார்த்து மழங்க மழங்க முழித்தாள்.

"நிரோ உனக்கு என்ன ஆச்சு??"

"டிரஸ்லாம் ஒரே ரத்தக்கரையா இருக்கு!! உனக்கு எதும் அடிபடலையே?"

"டர்டீ பெலோ!! டிரஸ்லாம் ஏண்டீ இப்படி கரை பண்ணி வைச்சிருக்க " (கவிதா - கேங்கில் நீட் பிரீக்).

மற்றவர் அவளை முறைக்க அமைதியானாள் கவி.

யார் எந்த கேள்வி கேட்டார்கள் (கவிதாவை தவிர) என அறியாமல் என்ன பதில் கூறுவதென்று அறியாமலும் வாயடைத்து நின்றாள் நிரோ.

"சரி தனியா நின்னுட்டு இருக்க நைநி எங்க போனா? இப்போ தான அவள பார்த்தேன்!!" எனறாள் ரேனு.

"என்னாது தனியா நின்னுட்டு இருக்கனா!!" என சற்று முன் தன் அருகில் நின்றிருந்த நைநிதாவை சுற்று முற்றும் தேடினாள் நிரோஷிதா.

"ஏய் நைநி அங்க புதருக்கு பின்னாடி என்ன பண்ணிட்டிருக்க? அசிங்கம் பண்ணாம வெளிய வாடீ " என்றள் ஸ்ருதி.

அப்போது தான் புதரின் பின் ஒளிந்திருந்த நைநிதாவை அனைவரும் கண்டனர். திருட்டு முழியோடு அசடு வலிந்து கொண்டு அவர்களிடம் வந்து நின்றாள் நைநிதா.

"என்ன இவ்வளவு சாகசம் பண்ணி காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி டீ நைநி" என ஏலன பார்வையோடு பார்தாள் நிரோ.

"ஊசிப்போன வட உயிர் பயத்த காட்டிடுச்சு பரமா!!" என கூறி முகத்தை பயந்த படி வைத்துக் கொண்டாள் நைநிதா.

"ஏய் உங்க டீலிங்கலாம் அப்புறம் வைச்சுக்கோங்க முதல்ல உனக்கு என்னாச்சு நிரோ?" என வினாவினாள் ரேனு.

அதன் பிறகு தான் தன் நிலையை புரிந்து கொண்டாள் நிரோ. இரத்த கரை படிந்த உடையோடு ஷால் இல்லாமல் சோர்ந்து போய் காணப்பட்டாள்.

"அத அவட்ட ஏன் கேட்குரீங்க!! நான் சொல்லுறேன் இங்க வாங்க!" என்றாள் நைநிதா.

'போச்சு சும்மாவே பிட்டு பிட்டா போடுவா!! இன்னைக்கு நடந்தத வைச்சு எக்கசக்க பிட்டு போட போறா!! ' என மனதில் புலம்பினாள் நிரோ.

"பர்ஸ்ட் என்ன நடந்ததுனா நாங்க பஸ்ல போய்டிருந்தமா அப்ப அந்த மங்கி..................................................................................திடீர்னு அவசர அவசரமா என்ன இழுத்துட்டு இங்க வந்துட்டா!!" என ஆதி முதல் அந்தம் வரை கூறி முடித்தாள் நைநிதா.

"அடிப்பாவிகளா ஆப் டேல என்னென்ன பண்ணிருக்கீங்க" என வியந்தாள் கவி.

சற்று யோசனையோடிருந்த ரேனு நிரோவை பார்த்து, "நிரோ நீ அவர லவ் பண்றியா? " என வினாவினாள்.

இதை சற்றும் எதிர்பாராத நிரோ அப்படியே உரைந்து நின்றாள். நான் அவரை காதலிக்கின்றேனா? எனக்கு அவரிடம் தோன்றும் உணர்வுதான் காதலா? என அவள் தன்னுள்ளேயே வினாவ அவளது மனம் பதிலலிக்கும் முன் அவளது தோழிகள் விடை தந்தனர்.

"சான்சே இல்ல !! திஸ் ஈஸ் டிவண்டி பர்ஸ்ட் செஞ்சுரி ! இன்னுமா லவ் அட் பர்ஸ்ட் சைட் , சோல் மேட் மாதிரி கட்டு கதையெல்லாம் நம்புரீங்க! மே பி அது கிரிஷ் ஆ இருக்கலாம் பட் லவ்ங்குரதுலாம் டூ மச்" என்றாள் ஸ்ருதி.

பாவம் அவளுக்கு தெரியவில்லை காதல் தோன்றுவது மனதை பொறுத்தே அன்றி காலத்தை அல்ல என்று!!

"இல்ல ஸ்ருதி எனக்கென்னமோ அப்படி தோனல! நீ அங்க இருந்திருக்கனும். இரண்டு பேருக்கும் அப்படி ஒரு வேவ் லெண்த் !! நிரோ என் சைட்ல இருந்து பச்ச கொடி காட்டிட்டேன்!! என் ஆசிர்வாதம் உனக்கு அல்ரெடி கிடைச்சாச்சு" என்றுவிட்டு நிரோவின் தலையில் கை வைத்தாள் நைநிதா.

"நிரோ நீ எப்படி பீல் பண்ணுறனு எனக்கு தெரில பட் இப்போ நீ ஸ்டடீஸ்ல காண்சன்டிரேட் பண்ணு எக்சாம்கு இரண்டு நாள் தான் இருக்கு மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துகலாம்" என ரேனு கூற மற்றவர்கள் அதை ஆமோதித்தனர்.

"சரி வாங்க போய் மொதல்ல நம்ம டோக்கன் வாங்குவோம்" என்றாள் கவி.

"என்ன டோக்கனா!?" என மற்றவர் ஒரு சேர கேட்க "அதான் எக்சாம் எழுதனும்னா ஒரு சீட்டு கொடுப்பாங்களே அதுதான்!" என்றாள்.

"ஏய் அது ஹால் டிக்கட் டீ" என்றாள் நைநி.

"ஏதோ ஒன்னு !! இப்ப வந்து தொலைங்கடி போலாம்"

"ஒரு நிமிஷம் நாம நம்ம பணிஷ்மண்ட் கொடுக்கல இல்ல , ஸ்ருதி அந்த ஆயுதத்த எடு" என்று ரேனு கூற நிரோவும் நைநியும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு சிட்டாக பறந்தனர்.

' மே பி எனக்கு அவர் மேல கிரிஷ் ஆ இருக்கலாம்! ஆமா அப்படியா தான் இருக்கும்! கண்டீப்பா இதெல்லாம் கொஞ்ச நாள்ல மறந்திடுவேன்!' நிரோவின் மனம் இவ்வாறாக...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top