💗பகுதி 7💗

வர்ஷன் சந்திருவின் வாழ்வில் ஏற்பட்ட அச்சம்பவத்தை பற்றி தன் நினைவுப் பெட்டகத்தில் திருப்பி பார்க்க எத்தனிக்கும் வேளையில் இடைமறித்தான் அக்கதையின் நாயகன்.

"டேய் வர்ஷூ என்னடா யோசிச்சுகிட்டிருக்க?" என வினாவ எங்கே தான் நினைத்துக்கொண்டு இருந்ததை கூறினால் தன் நன்பனின் வாழ்வில் சற்று முன் தோன்றிய இன்பமும் காணல் நீராய் மறைந்து விடுமோ என அஞ்சி அவனிடம் இதை பற்றி கூற வேண்டாம் என முடிவெடுத்தான்.

"இல்ல நிரோவுக்கும் உன் மேல ஏதோ ஒரு பீல் இருக்குன்னு நினைக்குறேன் விக்கி. டாக்டர் உன்னோட ஸ்டேட் கிரிடிகளா இருக்குன்னு சொன்னப்ப அவ அப்படியே உரைஞ்சு உடைஞ்சு போய்டா தெரியுமா. அவளோட நிலமைய பார்த்து எனக்கே ரொம்ப கஷ்டமாகிடுச்சுடா" என்று கூறிக் கொண்டிருக்க நடந்தவை யாவும் அவன் கண் முன் தோன்றியது.

யாரென்றே தெரியாத ஒருவர் மீது இவ்வளவு அன்பு, அவருக்காக இவ்வளவு வருத்தம் மேலும் இவ்வளவு.............. காதல் வைக்க முடியுமா!! வர்ஷனிற்கு அதை கண்டு சிறிது பொறாமையாக இருந்தாலும் பாலைவனமாய் இருந்த தனது நன்பனின் வாழ்வில் குளிர்ந்த நீரூற்றாய் தோன்றிய இவ்வுணர்வு நீங்காது என்றென்றும் நீடிக்க வேண்டினான்.

அங்கு சந்திருவின் மனமோ தன்னவளும் தன்னை நேசிக்கின்றாள் என்ற மகிழ்ச்சியில் துள்ளிக் கொண்டிருந்தது.

"ஆனா எனக்கு ஒன்னு தான் புரியல!! எல்லாம் நல்லா தான் போய்டிருந்துச்சு, உனக்கு சர்ஜரி முடிஞ்சு உன்ன பார்க்க வந்தோம் அப்போ நிரோக்கு பிரைவசி கொடுக்கலாம்னுட்டு நானும் அவ பிரண்டும் வெளிய வந்துட்டோம் பட் பத்து நிமிஷம் கூட ஆகல அவ வேகமா வெளிய வந்துட்டு டைம் ஆச்சு நாங்க கிளம்புறோம்னு சொல்லிட்டு உடனே கிளம்பிட்டா திரும்பிக் கூட பார்க்காம!! அதுதான் ஏன்னு ஒரே கண்பியூசனா இருக்கு எனக்கு" என தலையை சொறிந்தவாரே கூறினான்.

சந்திருவிற்கு அப்போது தான் நியாபகம் வந்தது வர்ஷன் வருவதற்கு முன் தான் என்ன செய்து கொண்டிருந்தோம் என்று. அவனுடைய சுண்டு விரலை கள்ளப் பார்வையோடு நோக்கி தன்னவளின் நினைவில் தஞ்சமடைந்தான்.

"இரத்த ரேகை கொண்டு உனை என் உமையவளாக்க

முத்த ரேகை கொண்டு எனை மூழ்கடித்து சென்றாயோ!!

என் உள்ளத்தாசையை கூறிட உன் பாதச் சுவடை தேடும் முன்னே

உன் உதட்டின் சுவட்டில் காதல் கூறிச் சென்றாயோ!!"

"டேய் என்னடா உழரிட்டு இருக்க? தலையில பலமா அடி பட்டதுனால மூளை ஏதும் குழம்பிடுச்சா??" என தன் நன்பன் கேட்டவுடன் தான் சந்திரு தன் மனதில் நினைத்ததை வார்தைகளாய் உதிர்த்து விட்டோமென புரிந்து கொண்டான்.

"இல்லாத மூளைய வச்சு யோசிக்குறேன்னு சொல்லி ஏன் இவ்ளோ ஸ்டெரியின் பண்ணிக்குற? போ! போய் உருப்புடியா ஒரு வேலைய பாரு"

"ஏன்டா சொல்ல மாட்ட!! எல்லாம் என் நிலம!" என நொந்து கொண்டு வெளியேறினான் வர்ஷன்.

தன் நன்பன் சென்றவுடன் சந்திரு மீண்டும் காதல் எனும் கடலில் நீந்த ஆரம்பித்தான். தன் விரலில் பதிந்திருந்த தன்னவளிள் இதழ் சுவட்டில் தன் இதழ் பதித்து மனதில் மனைவியாக்கிக் கொண்டான்.

                   -------------------
ஹாஸ்பிடளில் இருந்து கிளம்பியதில் இருந்து நிரோ நைநிதாவிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நைநிதாவும் அவளாகவே ஆரம்பிக்கட்டும் என்று காத்திருந்தாள் ஆனால் அது நடப்பதாய் இல்லை.

அவள் கூறப் போகும் செய்திக்காக செவி மீது செவி வைத்து காத்திருந்தாள். செய்தியும் வரவில்லை அவள் செவிக்கும் வேலையில்லை.

அங்கு நிரோவின் நிலமையோ 'தி கிரேட் கண்பியூஷன் ஆப் தி லூஸ்மோஷன் ஆப் தி வாஷ்பேஷன்' என்பது போல் இருந்தது.

தான் ஏன் அவ்வாறு செய்தோம்!! யார் என்று தெரியாத ஓர் ஆடவனிடம் இப்படி போய் நடந்து கொண்டோமே என்ற நினைப்பு ஒரு புறம் தோன்ற மறுபுறம் அவன் தனக்கு சொந்தமானவன் என அவள் உள்ளம் உறுதிபடுத்தியது. அந்நிகழ்சியை நினைக்கும் போதெல்லாம் அவளது கன்னம் சிகப்பு மை பூச உதடுகள் மலர்ந்து புன்னகை பூ பூத்தன.

அவளுடைய அசைவுகள் யாவையும் நோட்டமிட்டுக் கொண்டிருந்த நைநிதா தன் பொறுமையை இழந்து அவளிடமே கேட்டுவிட்டாள்.

"நிரோ இதுக்கு மேல என்னால வெய்ட் பண்ண முடியாது!! நானும் நீ சொல்லுவ சொல்லுவனு காத்திட்டிருந்து நரை முடியே வந்திடும் போல!! ஒழுங்கா என்ன நடந்ததுனு சொல்லு! ஏன் ஹாஸ்பிடல்ல இருந்து அவ்வளவு அவசர அவசரமா என்ன இழுத்துட்டு வந்த?"

நிரோவோ தன் வயிற்றில் பறந்து கொண்டிருந்த பட்டாம் பூச்சை பாட்டிலுக்குள் போட்டு அடைத்து விட்டு முகத்தை ஒன்றுமறியா குழந்தை போல் வைத்துக் கொண்டு "என்ன நடந்தது? எதுவும் நடக்கலையே" என்று பதிலளித்தாள்.

'கிருஷ்ணா தயவு செஞ்சு இவகிட்ட இருந்து என்ன எப்படியாவது காப்பாத்து விட்டா உண்மைய எல்லாம் சுரண்டி எடுத்துடுவா... பிலீஸ் ஹெல்ப் மீ' என வேண்டிக் கொண்டே தங்கள் காலேஜ் வளாகத்திற்குள் நுழைந்தாள்.

"அய்யடா மூஞ்ச இப்படி பப்பா மாறி வச்சுகிட்டா நான் நம்பிடுவனா!! கேடி
உண்மைய சொல்லு"

'அச்சோ இப்படி சிங்கிளா மாட்டிகிட்டனே! இன்னைக்கு என்ன கைமா பண்ணாம விடமாட்டா போலயே' என்று மனதிற்குள் புலம்பித் தள்ளினாள் நிரோ. அப்போது "ஹய் நில்லுங்க!" என ஒரு குரல் கேட்க 'அப்பாடா நம்மல காப்பாத்த யாரோ வந்துட்டாங்க..' என்று மனதினுள் மகிழ்ந்தாள் நிரோ.

அப்போது நிரோ உணரவில்லை நடக்கப் போவது தான் நினைத்ததற்கு நேர்மாறாக என்று!! ஏனோ அவள் சிக்ஸ்த் சென்ஸ் அவள் சந்திக்க போகும் அபாயத்தை பற்றி அலர்ட் கொடுக்கவில்லை.

"நைநி யாரோ நம்மல கூப்பிடுறாங்க பாரு " என நிரோ கூற இருவரும் ஒலி வந்த திசை நோக்கி திரும்ப அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்கள் உடலில் உள்ள இரத்தத்தை உரையவைக்க அப்படியே ஸ்தம்பித்து நின்றனர்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top