💗பகுதி 6💗
சந்திரு தன்னவளின் நினைவில் தவழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் அவனது ஹாஸ்பிடல் அரையின் கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்டு அவன் திரும்பி பார்க்க அங்கே நின்றிருந்த நபரின் முகம் கண்டு முகம் மலர்ந்தான் அவன்.
அது வேறு யாரும் அல்ல நம் நாயகனின் ஆருயிர்........................
..................................................................
...............................................................................................................................................................................................................
....................... நன்பன் வர்ஷன் தான்!
தன் நன்பனை கண்ட மகிழ்ச்சியில் அவன் கொலை வெறியோடு தன்னை பார்த்துக் கொண்டிருப்பதை அறியத் தவறினான் சந்திரு.
"ஹய் வர்ஷன்!! வாடா!" என புன்னகையோடு அவனை வரவேற்க்க அவனோ ஓரிரு நிமிடத்தில் வெடித்துவிடும் எரிமலையாய் காட்சியளித்தான்.
பாவம் சந்திரு!! தன் நிலையறியாது தானே தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும் விதமாக, "ஏன்டா வர்ஷூ அங்கயே நிக்குற உள்ள வா!" என பொங்கி வரவிருக்கும் வெள்ளத்திற்கு தன் வாயாலே வாய்க்காலிட்டான்.
அவ்வளவு தான்! பாதி திறந்திருந்த கதவை உதறிவிட்டு பயங்கர வேகத்தில் சந்திருவை நோக்கி விரைந்தான் வர்ஷன். சிங்கமொன்று புறப்பட்டதே..... என பேக்கிரௌண்ட் மியூசிக் இல்லாத ஒரு குறை தான் கனல் பறக்கும் கோபத்தோடும் அனல் பறக்கும் வேகத்தோடும் சீறிப் பாயும் சிங்கம் போல் அவனிடம் சென்று நின்றான்.
"ஏன்டா ஒரு மாதிரி இருக்க? என்னாச்சு?" என அக்கரையோடு சந்திரு விசாரிக்க, சரமாரியாக தான் கற்றிராத குன்பூ கராத்தே வித்தைகளை காட்டினான் வர்ஷன்.
"டேய்! ஏன்டா என்ன அடிக்குற? அய்யோ வலிக்குதுடா!! நிறுத்துடா!!" என கத்தி கதறினான் சந்திரு.
ஆனால் வர்ஷன் இப்போதைக்கு நிறுத்துவதாயில்லை, இருந்தும் அடிபட்ட இடத்தை விட்டு மற்ற இடங்களை விட்டு சிவக்க வைக்க மறக்கவுமில்லை.
"டேய் போதும் நிறுத்து டா!! ஐயம் பாவம்! ஆக்சிடன்ட் ஆகி அடிபட்ட புள்ளைய இப்படி அடிக்குறியே கிராதகா!! நிறுத்துடா!" என வலியிலும் வாதாடினான் சந்திரு.
அவன் ஆக்சிடன்ட் பற்றி குறிப்பிடவும் வர்ஷனின் கோபம் மேலும் அதிகரிக்க கிக் பாக்சிங் மூவ்ஸையும் கலந்து காட்டினான்.
"ஆஆஆஆ!!!! டேய் நிஜமாலுமே வலிக்குதுடா! அட்லீஸ்ட் எதுக்காக அடிக்குறனாவது சொல்லிட்டு அடிடா!" என வெம்பினான் சந்திரு.
"உனக்கு தெரியாதா?" என சாமியாடியதை நிறுத்தி விட்டு கண்களாலே கோபக் கனைகளை வீசினான் வர்ஷன்.
"தெரியாததுனால தான கேட்குறேன்! சொல்லுடா. இப்ப நீ ஆங்கிரி பேர்ட் ஆகி என்ன கொத்தி கொதருனதுக்கு என்ன காரணம்?ஹூம்?" என சந்திரு கேட்க.
"இடியட்! உனகெல்லாம் யாருடா டிரைவிங் லைசன்ஸ் கொடுத்தது? ஒரு கார் கூட ஓட்டத் தெரியாதாடா உனக்கு? அதை கொண்டு போய் சுவத்துல பார்க் பண்ணிருக்க!! ஸ்டுப்பிட்! இடியட்!" என புல்லட் டிரெய்ன் போல நிற்காமல் பேசிக் கொண்டே போனான்.
அதை கேட்டு சந்திருவிற்கு தன் நன்பன் தன்மீது வைத்திருக்கும் அன்பு தெளிவாக புரிந்தது.
சந்திருவும் வர்ஷனும் சிறு வயதிலிருந்தே நன்பர்கள். தான் தன் வாழ்க்கையில் சந்தித்த ஒவ்வொரு கடினமான கஷ்டமான சூழ்நிலையிலும் தன்னுடன் தனக்கு துணையாய் இருந்த நன்பனை பார்க்கும் போது அவன் தன்மீது வைத்துள்ள பாசமும் அன்புமே சந்திருவுக்கு தென்பட்டது.
"டேய் நான் என்ன வேனும்னா ஆக்சிடண்ட் பண்னேன்!! எனக்கென்ன கார கொண்டு போய் சுவத்துல மோதனும்னு ஆசையா?? "
"அப்புறம் எப்படி காருக்கு கால் முளைச்சு தானா போய் செவுத்துல ஒட்டிகிச்சா?" என நக்கலடித்தான் வர்ஷன்.
"காருக்கு காலெல்லாம் முளைக்கல ஒடஞ்சுதான் போச்சு!"
இதை கேட்ட வர்ஷன் அவனை புரியாதது போல் பர்க்க அவன் சிரித்துக்கொண்டே "பிரேக் கட்டானத தான் அப்படி சொன்னேன் டா " என்றான்.
வர்ஷனிற்கு இதை கேட்டு ஒரே அதிர்ச்சி. "லாஸ்ட் வீக் தானடா கார சர்வீசுக்கு விட்டோம். அப்புறம் எப்படி.." என புலம்பி தள்ளினான் வர்ஷன்.
"அதான்டா எனக்கும் குழப்பமா இருக்கு. சரி விடு அதான் ஒன்னும் ஆகலல்ல கூல்" என்றுவிட்டு கைகளை தலைக்கு பின் வைத்து சரிந்து படுத்தான்.
"ஏன்டா பேச மாட்ட! உனக்கு ஏதாவது ஒன்னு ஆகிருந்த வீட்டுல இருக்கவங்க எவ்வளவு பீல் பண்ணிருப்பாங்கன்னு நினைச்சு பார்த்தியா?"
வீடு என்றவுடன் நினைவுக்கு வரவே பதறிப் போய் "ஹய் எனக்கு ஆக்சிடண்ட் ஆனத வீட்டுல சொல்லிட்டியா?" என்று கேட்க "சொல்லிருக்கனும்...... ஆனா சொல்லல. உனக்கு ஆக்சிடண்ட் ஆச்சுன்னு சொன்னா பாட்டிக்கு ஹார்ட் அட்டேக்கே வந்துடும்!" என்றான் வர்ஷன்.
"தேங்க்ஸ் டா வர்ஷூ!"
"நீ தேங்க்ஸ் சொல்லுறதா இருந்தா நிரோவுக்கு தான் சொல்லனும்! அவங்க தான் உன்ன காப்பாத்தி கரெக்ட் டைம்க்கு ஹாஸ்பிடலுக்கு கொண்டு வந்து சேர்த்தாங்க" என்று பேசிக் கொண்டே போக அவனை இடைமறித்தான் சந்திரு.
"நிரோவா?"
"ஆமா டா நிரோ! நிரோஷிதா! உன் உயிர காப்பாத்துனவங்க. நீ ஆக்சிடண்ட் ஆகி அடிபட்டு கிடந்தப்ப அங்கிருந்தவங்க எல்லாம் சும்மா வேடிக்கை தான்......" என வர்ஷூ இழுத்துக் கொண்டே போக சந்திருவோ சடன் பிரேக் போட்டு தன்னவளின் பெயரருகே நின்று விட்டான்.
'நிரோஷிதா! வாவ்! வாட் எ ஸ்வீட் நேம்! என்னவளின் பெயரைக் கூறும் போதை என் நாவெல்லாம் தித்திக்கிறதே ' என மனதினுள்ளேயே மகிழ்ந்து கொண்டிருக்க வர்ஷனோ டப்பிங் சீரியல் எபிசோட்ஸ் போல் வரைமுறை இல்லாமல் வாயை ஓட்டிக்கொண்டு இருந்தான்.
"......... அதுமட்டுமில்ல உனக்கு பிலட் தேவைப் பட்டப்போ கூட அவங்க தான் உனக்கு டொணேட் பண்ணாங்க."
"என்ன பிலட்டா?"
"ஆமா உனக்கு ஆக்சிடண்ட் ஆனதுனால நிறைய பிலட் லாசாகிருச்சு......." என வர்ஷன் தன் அறுவையை தொடங்க நமது நாயகனோ தன்னவளின் நினைவில் திளைத்திருந்தான்.
"இரத்தத்தால் என்னுள் நீ புகும் முன்னே
அடி பெண்ணே!!
சித்தத்தில் என் மொத்தத்தில் உட்புகுந்தாய்!
காலம் தோறும் உன் அனைப்பில் லையித்திருக்க
என் அனுவும் அனுவனுவாய் துடிக்கிறதடி!!"
".... அப்புறம் நர்ஸ் அவங்கள கூட்டிட்டு போய்....."
'ஷப்பா!! இவன் இன்னும் முடிக்கலயா! ' என அலுப்பாக நினைத்தான் சந்திரு.
".... ஒன்னு தெரியுமா அங்களுக்கு ஊசி -ன்னா பயமாம். டாக்டர் கிட்டயே சின்னவயசுல இருந்து போனதில்லையாம். செம கியூடில்ல! அவங்க செம அழகும் கூட. அப்படியே..." என வர்ஷன் நிரோவை வர்ணிக்க தொடங்க சந்திருவிற்கு பொறாமையும் பொசசிவ்னசும் சேர்ந்து பொங்கோ பொங்கென்று பொங்கியது.
"டேய் நிறுத்து! நீ எல்லாம் ஒரு அண்ணாவா! உன் தங்கச்சிய பத்தி இப்படி பேசுற!!"
"என்னது தங்கச்சியா!!?" என அதிர்ந்தான் வர்ஷூ.
"ஆமா! என்னோட டார்லிங் உன்னோடா தங்கச்சி தான!"
"என்னது டார்லிங்கா!!" என மேலும் அதிர்ந்தான் வர்ஷன்.
"என்னோட லவ்வர தான டார்லிங்னு கூப்பிடுறேன் இதுல என்ன தப்பிருக்கு!"
"என்னது லவ்வராஅஅஅஅஅ" வர்ஷனுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது.
"ஏன்டா தேஞ்ச ரெக்கார்ட் மாதிரி திரும்ப திரும்ப என்னது,,என்னதுனுட்டே இருக்க".
"ஏன்டா சொல்ல மாட்ட!! எப்பவும் கஞ்சி போட்ட காக்கி சட்ட மாதிரி வெறப்பாவே திரிஞ்சிடிருப்ப, பொண்ணுங்கன்னாவே மூக்க மூனு மொளம் தூக்கி முகத்த சுளிக்குறவன் இப்போ ஒரு பொண்ண லவ் பண்ணுறேன்னு சொன்னா ஜெர்க் ஆகாது!! டேய் விக்கி என் இதயம் ரொம்ப வீக் , ஒரு நாளைக்கு ஒரு அதிர்ச்சியதான் தாங்க முடியும் நீ இப்படி அடிக்கிட்டே போனா ஐயம் காலி டா" என இதயத்தில் கை வைத்து வலி கொண்டவன் போல் பாவனை காட்டினான் வர்ஷு.
அதைக் கண்டு சந்திரு விழுந்து விழுந்து சிரிக்க இமயத்தையும் மிஞ்சியது வார்ஷனின் ஆனந்தம். தன் நன்பன் இவ்வாறு மனம் விட்டு சிரிப்பது இதுவே முதல் முறை, அந்த சம்பவத்திற்கு பிறகு.
அந்த ஒரு சம்பவம் சந்திருவின் வாழ்கையையே திருப்பி போட்டது. அந்த நிகழ்விற்கு பின் தன்னை அனைவரிடமிருந்தும் தனிமை படுத்திக் கொள்ள ஆரம்பித்தான். எல்லோரிடமும் பேசுவான் ஆனால் அதில் மகிழ்ச்சி இருக்காது , பழகுவான் ஆனால் அதில் உரிமை இருக்காது , சிரிப்பான் ஆனால் அதில் உயிர் இருக்காது.
அந்த சம்பவத்தை இப்பொழுது நினைத்து பார்க்கையில் கூட உயிர் வரை உழுக்கியது வார்ஷானிற்கு. அது என்னவென்றால் சந்திருவி...........
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top