💗பகுதி 5💗
வலி. ஆதி முதல் அந்தம் வரை உச்சி முதல் உள்ளங்கால் வரை சொல்ல முடியா வெல்ல முடியா வலி. முதலை வாயிலே மாட்டிக் கொண்ட தலை போல் தனது தலையை இரு கூராக உடைத்தது போன்று இருந்தது சந்திருவிகேஷிற்கு.
விட்டுப்பிரிந்த ஒவ்வொரு உணர்ச்சிகளும் புலன்களும் அதன் உறைவிடம் சேர்ந்தன.
மூளை தன் உணர்வை திரும்பப் பெரும் முன்னே அவனின் உணர்வுகள் உயிர் பெற்று விருத்திருந்த அவனது விரல்கள் விரும்பிய அதன் இனையை தேடின. ஆம்! சந்திருவின் விரல்கள் நிரோவின் சுண்டு விரலைத் தான் தேடியது.
முதல் நடை பயிலும் சிறுபிள்ளை தன் தாயின் கரம் பற்ற துடிப்பது போல் தவித்திருந்த அவன் விரல்கள் காற்றில் அவள் கரம் தேடின. தான் தேடிய ஒன்று கிடைக்காததால் அவை தோல்வியுற்று துவண்டு விழுந்தன.
இருள். சூரியனின் ஒளி மறைத்து நட்சத்திர பூக்கள் பூக்கும் வெண்ணிற இரவின் காரிருள் அல்ல தாயின் உணர்ச்சிகளை தவிர வேறொன்றும் உணராது தனித்திருந்த கர்ப இருள்.
அத்தகைய இருளைத் தான் அடுத்து உணர்ந்தான் சந்திரு. தன் இரு கண்களில் உள்ள இமையையும் பெஃவி குயிக் போட்டு ஒட்டியது போன்று திறக்கவே இயலாதவாரு இருந்தது அவனுக்கு. மிகவும் கடினப்பட்டு மெல்ல அவற்றை திறந்தான். திறந்த மறுகணம் அவற்றை இறுக்கி மூடினான், அவன் கண்ட இருளுக்கு நேர்மாறாக இருந்தது அந்த விழி விழுங்கும் வெளிச்சம்.
மெதுவாக தன் கண்களை அவ்வெளிச்சத்திற்கு பழக்கியவன் தன்னை சுற்றி உள்ளவற்றை குழப்பத்துடன் நோட்டமிட்டான். அவன் இருப்பது இதற்க்கு முன் அவன் பாத்திராத ஒரு அறை. அங்கு தூணிலிருந்து துரும்பு வரை அனைத்தும் வெண்ணிறத்தில் இருந்தது. அவன் அன்கம்பர்டபிலான ஒரு மெத்தையில் படுத்திருந்தான். பின் அவன் தான் ஹாஸ்பிடளில் நோயாளிகள் அணியக்கூடிய உடை அணிந்திருப்பதை கண்டான்.
சந்திருவிற்கு தான் எங்கு இருக்கிறோம், இந்த அறையில் ஏன் இருக்கின்றோம், எதற்காக நோயாளிகள் அணியும் உடை அணிந்திருக்கின்றோம் என ஏதும் புரியவில்லை.
விடை தேடி தன் கண்களை அங்கும் இங்கும் அலைய விட்டான். அப்போது தான் அவன் கண்ணில் பட்டது அங்கிருந்த பல்வேறு மாணிகள். அவற்றுள் சில அவன் உடலோடு இணைக்கப் பட்டிருந்தது. தனக்கு என்னவாயிற்று என தன் கைகளால் உடல் முழுவதும் தேட அவன் தலையில் போடப் பட்டிருந்த கட்டு கையில் பட்டது.
தனக்கு எவ்வாறு அடிபட்டது என யோசிக்க தொடங்கியவுடன் தான் நீரில் பட்ட நீலம் போல நடந்த அனைத்து சம்பவங்களும் அவன் நினைவில் பரவத் தொடங்கின.
சந்திரு தான் தங்கியிருந்த ஹோட்டளில் இருந்து தன் காரில் கிளம்பியதிலிருந்து தன் வீட்டினரிடம் வந்த காலை அடண்ட் செய்து பேசிவிட்டு சென்று கொண்டு இருக்கையில் காரின் பிரேக் பிடிக்காமல் போனது பின்பு யார் மீதும் மோதக் கூடாது என எச்சரிக்கையாய் ஓட்டிச் செல்லும் போது தனக்கு முன் வந்த பேருந்தில் மோதவிருந்தது அதை தடுக்க தனது காரை இடது புறம் இருந்த சுவற்றில் மோதியது என அனைத்தும் நினைவிற்கு வந்தது.
தனக்கு ஆக்சிடன்ட் ஆனதற்கு பிறகு நடந்தது என்ன என நியாபகப் படுத்தி பார்த்தான். ஆனால் அவன் முயச்சிக்க தலையில் வலி கூடியது. அவன் நினைத்திருந்தால் அதை பிறகு நியாபக படுத்திக் கொள்ளலாம் என விட்டிருக்கலாம் ஆனால் அவனது மனம் ஏனோ அதை ஏற்கவில்லை. தன் வாழ்வில் மிக முக்கியமான ஓர் நிகழ்வு தான் அடிபட்டு கிடந்த போது நிகழ்ந்துள்ளது அதை நினைவிற் கொண்டுவந்தே ஆக வேண்டும் என முடிவெடுத்து தன் முழு சக்தியையும் பயண்படுத்தி நினைவிற் கொண்டுவர நினைத்தான், அவ்வாறு செய்வதால் ஏற்படும் வலியையும் பொறுத்துக் கொண்டு முயற்சித்தான்.
சுவற்றில் மோதியவுடன் அவன் தலை ஸ்டியரிங்கில் பலமாக இடித்தது பிறகு உயிர் பிழியும் வலி, இரத்தம், மயக்கம் பிறகு இருள் அதன் பிறகு..... ஈரம்... ஈரம்??... ஆம்! ஈரம்... அதன் பிறகு..... அதன் பிறகு என்ன? என்ன?.... தலையை பிடித்தபடி கண்களை இறுக மூட்க் கொண்டு அதன் பிறகு என்ன என யோசிக்கலானான்.
ஈரம்..... என் கன்னத்தில்.... அது மழைத் துளியா? இல்லை எனது பிரம்மையா?..... ஏதோ ஒன்று என்னை கண் விழிக்க கட்டளையிட்டது... அது என்ன?... போராட்டம்... ஆம்! என் இமைகளுக்கிடையே போராட்டம்... என் இமைகள் ஒன்றோடு ஒன்று போராடின.... ஆம்! போராடின!.... பிறகு ஏன்? ஏன் போரடின?
ஆஆஆஆஆ...... என்ன நடந்தது?... எதற்காக என் இமைகள் போராடின?......... இமைகளுக்குள் போராட்டமா?..... அவை ஒன்றை இன்னொன்று பிரிய எண்ணியது!.... பிரிய நினைத்ததா? ஏன்? ஏன் பிரிய வேண்டும்?...... கண் விழிக்கவா?.... ஆம் கன்டீப்பாக கண் விழிக்க தான்!!
கண் விழித்தேனா?... ஆம் விழித்தேன்!... அங்கே என்ன பார்த்தேன்? என்ன?... நீலம்!.. நீலமா?.... நீலமாக என்ன?... நீல நிற வானத்தை பார்த்தேன்... வேறு? வேறு என்ன பார்த்தேன்?....... காந்தம்.... இருள்.... காந்தமா? இருளா? நான் தான் விழித்து விட்டேனே பிறகு எவ்வாறு இருள்?..... மீண்டும் மயங்கி விட்டேனா?.... இல்லை!! இல்லை!!..... பிறகு இருள் எப்படி.... விழிகள்!... இருள் போல் கருமையாக காந்தத் தன்மை கொண்ட இரு விழிகள்!.... யாருடையது? அந்த விழிகள் யாருடையது?...... பிறகு என்ன நடந்தது?..... பிறகு............... என்ன............................................................................................................................................................................................................................. அவள்!
ஆம் அவள் தான்! அவன் வாழ்வின் முக்கிய பகுதி! இல்லை!! இல்லை!! அவனுடைய வாழ்க்கை!
ஆம் இனி அவனுடைய வாழ்வே அவள் தான்!!
இது தான் பார்த்தவுடன் காதலா? பின் ஏன் அவனுக்கு அவளை முதல் தடவை பார்த்த உணர்வு ஏற்படவில்லை? ஏன் அவள் தன் மறுபாதி என அவனது மனம் கூறுகிறது?
எங்களது உறவு பல ஜென்மங்கள் கடந்து தொடர்வதா?
....... ஈரம்.... ஈரமா?...... அவள் அழுகிறாளா?.... ஏன்? ஏதற்காக அழுகிறாள்?.... அவள் அழுவதை கண்டு ஏன் என் மனம் ரணமாய் துடிக்கின்றது?........எனக்காக அழுகிறாளா? என் நிலை கண்டு அழுகின்றாளா?
என்னால் அழுகிறாள் என வருந்தவா இல்லை எனக்காக அழுகிறாள் என மகிழ்ச்சியில் குதிக்கவா?
இது தான் காதலா? ஒரு புறம் சுகம் மறுபுறம் ரணமும் தருவது?
"தேவதையாய் தேரிலே வந்து இறங்கியவள்
கண்ணிமைக்கும் நேரத்திலே என் கண் முன் வந்து நிற்க
கிரங்கிப் போனேன் அவள் பேரழகில்
மயங்கிப் போனேன் அவள் கண்கள் செய்த மாயத்தில்
வலிகளாளும் வருத்தத்தாளும் உடைந்த என் இதயத்தை
தன் ஒரு துளி கண்ணீரால் ஒட்டவைத்தாள்
ரிஷிகள் பல தவமிருக்கும் மோட்சம் தன்னை
ஒரு நொடியில் அவள் மடியில் நான் அடைந்து விட்டேன்
சுயநலம் படைத்தோன் அவளை என்னவளாக்க நினைத்து
என் இரத்தம் கொண்டு உடையவளாக்கி
சுயநினைவற்று சுருண்டு விழுந்தேன்!!"
அந்த சுயநினைவற்ற வேலையிலும் அவளோடு இணைய நினைத்து அவள் விரல் பிடித்து மயங்கி கிடந்தேன்.
உடல் மற்றும் உள்ளம் முழுதும் அவள் எண்ணங்களே நிறைந்திருக்க அவள் உடல் பட்ட தன் விரல்களை பார்த்துக் கொண்டிருந்தான் சந்திரு.
அப்போது அந்த அறைக் கதவை திறந்து கொண்டு ஒரு நபர் உள்ளே வர அவரை பார்த்து விட்டு மகிச்சியில் முகம் மலர்ந்தான் சந்திரு .
அது...............................
Hi makalae 🙋
Surprise epadi irundhuchu..😓😓..Dhayavu senju enna surprise nu matum keturadeenga..🙇🙇🙇🙇..mokaya irundha manichurungo 🙏🙏🙈🙈.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top