💗பகுதி 3💗
நிரோவின் கன்னம் விட்டு அவன் கை பிரிந்த மறுநொடி கண்கள் மூடி அவன் தன் தனி உலகை சென்றடைந்தான். அவன் தன் சுயநினைவை இழப்பதை அறிந்து கொண்ட நிரோ அவனுடைய தோள்களை உலுக்கி சுய நினைவிற்கு கொண்டுவர முயர்ச்சித்தாள்.
"ஹலோ! இங்க பாருங்க! கண்ண மூடாதீங்க பிலீஸ்! இன்னும் கொஞ்ச நேரம் முழிச்சிருங்க பிலீஸ்!!" என அவனை விழிக்க வைக்க முயன்று கொண்டிருந்தாள்.
அப்போது அவள் தோள்களின் மேல் ஆதரவாக ஓர் கரம் பட அவனிடமிருந்து தன் விழிகளை பிரித்தெடுத்து மேல் நோக்க அங்கு நைநிதா நின்று கொண்டிருந்தாள்.
நிரோஷிதாவுடன் பழகிய இந்த ஐந்து வருடங்களில் இதுவரை ஒரு நாளும் அவளை இவ்வளவு பலவீணமாக காண்பதை கண்டதில்லை நைநிதா. குறிப்பாக யார் என்றே தெரியாத ஒருவருக்காக இவ்வாறு அவள் வருந்துவதை கண்டு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. தன் தோழி இவ்வாறு கஷ்டப்படுவதைக் கண்டு ஒரு புறம் வருத்தமாக இருந்தாலும் எப்போதும் தான் என்ன செய்கிறோம் என அறிந்து செயல்படுபவள் இன்று இவ்வாறு நடந்து கொள்வதை நினைத்து புதிராக இருந்தது. எதுவாக இருந்தாலும் சரி தன் தோழி எல்லா நேரத்திலும் தனக்கு உறுதுணையாக இருந்தது போல் இப்போது தானும் இருக்க வேண்டும் என முடிவெடுத்தாள் நைநிதா.
"கவலைப்படாத நிரோ! அவருக்கு ஒன்னும் ஆகாது! நான் ஆல்ரெடி ஆம்புலன்ஸ்கு கால் பண்ணிட்டேன்! அவங்க ஆன் தி வே -ல இருக்காங்க. சீக்கிரமா இங்க வந்திடுவாங்க. நாம இவரை காப்பாத்திடலாம்" என்று ஆறுதல் கூறினாள் நைநி.
அவள் கூறியது போலவே ஓரிரு நிமிடத்தில் ஆம்புலன்ஸ்சும் அங்கு வந்து சேர்ந்தது. அவனை மெதுவாக ஸ்டச்சரில் வைத்து ஏற்றினர்.
"பேஷண்ட்டோட சொந்தக்காரங்க இல்ல அவருக்கு தெரிஞ்சவங்க யாராவது இருந்தா அவர் கூட ஆம்புலன்ஸ்ல ஒருத்தர் வாங்க" என்று கூறினார் ஆம்புலன்ஸ்சில் வந்த நர்ஸ்.
நிரோவால் ஏனோ அவனுக்கு யாரும் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனுக்கு தான் இருப்பதாக உள்ளம் கூற அதை மூளை உணர்ந்த பின் அவள் கூறியதை நினைத்து அவளுக்கே புதிராக இருந்தது. இருப்பினும் அவனை தனியே அனுப்ப அவளுக்கு மனம் வரவில்லை.
அவள் நிலை அறிந்தார் போல் நைநி அவள் தோளின் மேல் கை வைத்து, "நீ அவர் கூட போ நிரோ நான் டாக்சில அங்க வந்திடுறேன்" என ஆதரவு கூற அவளை கட்டி அனைத்து "தாங்க்ஸ் டீ " என்றாள் நிரோ.
"இவருக்கு யாராவது இருக்கீங்களா இல்லையா?" என மறுபடி அந்த நர்ஸ் கேட்க, "நான் இருக்கேன்! அவர் கூட நான் வரேன்!" என புதிதாய் பிறந்த தெளிவுடன் கூறினாள் நிரோ.
அவளை ஏற்றிக்கொண்டு அந்த ஆம்புலன்ஸ் அருகில் இருந்த மருதாதுவமனைக்கு விரைந்தனர். அதன் உள்ளே அவனுக்கு டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது, நிரோவால் ஏனோ அவனை அந்நிலையில் காண இயலவில்லை. நல்ல ஆறடி உயரத்தோடு கட்டுடலான தேகம் பார்பவரை வசீகரிக்கும் முகம் என ஆனழகனாய் இருப்பவனை இந்நிலையில் வைத்து யாரால் தான் பார்க்க முடியும்?
திடீரென தன் கையில் ஏதோ ஒருவித உணர்வு ஏற்பட நினைவிற்கு வந்த நிரோ அதை என்ன என்று குனிந்து பார்த்தாள். அப்போது அவள் கண்ட காட்சி அந்நிலையிலும் அவளின் இதழின் ஓரம் சிறு புன்னகையை தோன்ற வைத்தது.
அது என்னவென்றால் அவளின் சுண்டு விரலை ஒரு கரம் இறுக பற்றியிருந்தது. ஆம்! அது அவனின் கரம் தான். சுயநினைவற்று சோர்ந்து கிடக்கும் இவ்வேலையிலும் சிறுபிள்ளையாய் அவளின் சுண்டு விரலை பற்றிய அவனை நினைத்து அவளின் உள்ளம் பூரித்தது.
சிறிது நேரத்திலேயே அவர்கள் அருகில் இருந்த மருதாதுவமனைக்கு வந்து சேர்ந்தனர். ஸ்டச்சரை தயார் செய்து அதில் ஏற்ற முயர்ச்சி செய்த போது தான் அவன் நிரோவின் விரலை இறுக பற்றியிருப்பதை கண்டனர், எவ்வளவு முயர்ச்சி செய்தும் அதை அகற்ற முடியவில்லை வேறு வழியின்றி அவ்வாறே ஏற்றினர். அங்கிருந்த அனைவரும் இதை கண்டு ஆச்சர்யமுற்றனர். இளசுகள் ஆச்சர்யத்துடனும் முதிர்ந்தவர்கள் எதயோ அறிந்தவாறு மென்மையான புன்னகை உதிர்த்தனர்.
ஆனால் நிரோவோ கவலையோடும் கலவரத்தோடும் அவன் தலையில் கட்டியிருந்த ஷாலில் பெருகி வரும் சிவப்பு நிறத்தை நோக்கிக் கொண்டிருந்தாள்.
வேகமாக அந்த ஸ்டச்சரை ஐசியூ நோக்கி தள்ளினர், நிரோ உள்ளே செல்ல அனுமதியில்லை என்பதால் மிக கஷ்டப்பட்டு அவளது விரலை அவன் பிடியிலிருந்து பிரித்தெடுத்தாள், மறுநொடி அவ்விழப்பை நினைத்து அவள் மனம் வருந்திற்று. அவன் ஸ்பரிஸத்திற்காக அவள் ஏங்கினாள்.
இரண்டு டாக்டர்கள் அவளை கடந்து வேகவேகமாக ஐசியூ -வின் உள்ளே நுழைந்தனர். அவனோடு உள்ளே இருக்க அவள் மனம் பதைபதைத்தது அதை கட்டுபடுத்தி கொண்டு பார்வையாளர் கண்ணாடியில் முகம் புதைத்து உள்ளே நடப்பதை நோக்கினாள்.
அங்கே அவனை நோயாளிகள் உடையில் மாற்றியிருந்தார்கள், முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க் மாட்டப்பட்டிருநதது. கைகளில் டிரிப்ஸ்சும் இதயமாணியோடும் அவன் உடல் இணைக்க பட்டிருந்தது.
அதற்க்கு மேலும் அவனை இந்நிலையில் காண இயலாதவளாய் விலகி சென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து தன் கைகளில் முகம் புதைத்தாள். சிறிது நேரம் கழித்து கதவை திறந்து கொண்டு ஒரு நர்ஸ் வெளியே வந்தார்.
"நீங்க தான உள்ள இருக்க பேசன்ட் கூட வந்தது" என வினாவ,
உடனே அவரிடம், " ஆமா! அவர் எப்படி இருக்கார்? உயிருக்கு ஏதும் பாதிப்பில்லையே? " என விசாரித்தாள் நிரோ.
"இப்போ தான் டாக்டர்ஸ் செக் பண்ணிட்டிருக்காங்க மேடம். அவங்க முடிச்சதுக்கு அப்புறம் தான் எதுவா இருந்தாலும் சொல்ல முடியும். இந்தாங்க இது அவரோட திங்ஸ் அப்புறம் நீங்க போய் ரிஷப்ஷன்ல அவரோட அட்ம்ட் பார்ம் பில் பண்ணிடுங்க அப்போ தான் எங்களால பர்தரா டிரீட்மண்ட் கொடுக்க முடியும் என்றுவிட்டு நிரோவின் கைகளில் அவனுடைய வாலட்டையும் மொபைலையும் கொடுத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
நிரோ அட்மிட் பார்மை பில் பண்ணுவதற்காக ரிஷப்ஷன் சென்றிருந்தாள் அப்போது தான் அவளுக்கு நினைவிற்கு வந்தது தனக்கு அவனை பற்றி எந்த விவரமும் தெரியாது என்பது. சற்றுநேரம் இப்போது என்ன செய்வது என யோசித்தவளுக்கு அவனது வாலட்டின் ஞபகம் வர அதை திரந்து பார்த்தாள்.
அதில் பல விசிடிங் கார்ட்ஸ், கிரெடிட் கார்ட்ஸ் இருந்தன. அதில் அவனுடைய டிரைவிங் லைசன்சும் இருந்தது. அவனுடைய போட்டோவோடு அவனது பெயர் மற்றும் வயது அதில் குறிப்பிட பட்டிருந்தது.
அவனுடைய பெயரை மெல்ல அவளுள்ளேயே பலமுறை முனுமுனுத்தாள் நிரோ.
"சந்திருவிகேஷ்" , அப்பெயரை கூறும்போதே அவளுள்ளே எத்தனை எத்தனை மாற்றங்கள். நாவில் அப்பெயரை உச்சரிக்க உச்சரிக்க அது தேனாய் மாறி அவள் உள்ளம் வரை இனித்தது.
அப்போது அங்கே நைநிதா ஒரு சிலருடன் உள்ளே நுழைந்தாள். நிரோவை கண்டதும் அவளருகே வந்து சந்திருவின் நிலை விசாரித்தாள்.
"அவர டாக்டர்ஸ் செக் பண்ணிட்டிருக்காங்க நைநி அது முடிஞ்சா தான் எதுவும் சொல்ல முடியும்னு சொல்லிட்டாங்க" என வருந்தினாள் நிரோ.
"சரி அவரோட வீட்டுக்கும் இன்பார்ம் பண்றது ரொம்ப அவசியம் இப்போ அவங்கள எப்படி கான்டாக்ட் பண்ண" என யோசித்தாள் நைநிதா.
"ஹய் என்கிட்ட அவர் மொபைல் இருக்கு அதை வைச்சு டிரை பண்ணலாம்" என்றாள் நிரோ.
பத்து நிமிடம் கழித்து சந்திருவின் மொபைலுடன் நின்றிருந்தனர் நிரோவும் நைநிதாவும். அதில் ரீசன்ட் கால் லிஸ்டில் இருந்த நம்பருக்கு டயல் செய்தனர். அது சந்திருவின் நன்பனுடையது. அவனிடம் விபரம் கூறி ஹாஸ்பிடலிற்கு வரகூறினர்.
பத்து நிமிடத்தில் பதற்றத்துடனும் கவலையுடனும் அவன் அங்கு வந்துசேர்ந்தான். தன்னை வர்ஷான் , சந்திருவின் நன்பன் என அறிமுகம் செய்து கொண்டான்.
அனைவரும் ஐசியூ -வின் வெளியே பயத்துடன் நின்று கொண்டிருக்க அதன் கதவை திறந்து கொண்டு ஒரு டாக்டர் வெளியே வந்தார். அவர் கூறவிருக்கும் செய்திக்காக அனைவரும் படபடக்கும் இதயத்தோடு காத்திருந்தனர்.
அவர், "ஐயம் சாரி. அவர்......"
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top