💗பகுதி 18💗
"நிரோ அந்த டூத்பிரஷ் எடுத்து வச்சியா? ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் வாங்குனது! பீ கேர்புல்!!"
"அப்புறமா நம்ம பக்கத்து ரூம் வர்ஷ்ணி கிட்ட இருந்து சூட்டா போட்ட சன்கிலாஸ் ... அது.. அத மறந்துடாத"
"நம்ம கவிதா ரூம்ல இருந்து உருவிட்டு வந்தேனே! அந்த பிங்க் டாப்ஸ்!! அதையும் எடுத்து வை"
"என்னோட Bts photo போட்ட பில்லோ, ஃபோஸ்டர் அப்புறம் சைன் பண்ண ஆல்பம்ஸ் எல்லாம் எடுத்து வை!
" Bts முக்கியம் பிகிலு!! உசிரே போனாலும் ஒரு கிவ்அவேவ கூட தொலைச்சிட கூடாது! Ok வா!"
"அப்படியே அந்த ....." என தொடங்கிய நைநிதாவின் வாயில் ஒரு துணியை அடைத்து பேக்கிங்காக வைத்திருந்த பிளாஸ்டிக் ரேப்பை அவள் உடல் முழுதும் சுற்ற ஆரம்பித்தாள் நிரோ.
"வூம்ம்ம......ம்ம்ம்......ம்ம்ம்..." என திமிரினாள் கண்களை விரித்து நைநிதா.
"என்ன?" என அவளை வெறித்து பார்த்து "அதான் உன் எல்லா திங்ஸ்சையும் பேக் பண்ணுறல்ல உன்ன மட்டும் ஏன் விட்டுட்டு பண்ணணும் உன்னையும் சேர்த்து பேக் பண்ணி உங்க ஊருக்கே பார்சல் அணுப்பிடுறேன். உன் அப்பாவும் அம்மாவும் வந்து பிக் அப் பண்ணிட்டு போயிடுவாங்க. எனக்கு உன் டார்சர் இல்லாததோடு உங்க வீட்டுக்கு பஸ் சார்ஜ் மிச்சம் பண்ணி கொடுத்த சந்தோஷம் கிடைக்கும் பாரு!" என ஏலன புன்னகை பூரித்தாள் நிரோ.
"கொஞ்சம் ஓவரா தான் போயிட்டமோ!" என நைநிதா யோசிக்க நிரோ அவளை முரைத்துக் கொண்டு நின்றாள்.
"ம்ம்ம்..ம்ம்ம்....ம்ம்ம்" என ஊமை சைகையில் கெஞ்சினாள் நைநிதா.
"இதே என்னோட லாஸ்ட் வார்னிங்கா எடுத்துக்கோ! அமைதியா வாய மூடிட்டு இல்லனா அவ்வளவு தான்!" என எச்சரிக்கை செய்து கட்டையும் அவிழ்த்து துணியையும் எடுத்துவிட்டாள்.
"க்கும்!! என்னோட Bts போஸ்டரையும் ஆல்பத்தையும் தொடவே நீ பல ஜென்ம புண்ணியம் பண்ணிருக்கனும்" என மனதினுள்ளேயே திட்டிவிட்டு தன் முகத்தின் மூலம் நினைத்ததை கண்டுவிடுவாளோ என பயந்து முன்பு படுத்திருந்த பெட்டில் தஞ்சம் புகுந்தாள் நைநிதா.
பிறகு எல்லாம் சுமூகமாகவும் அமைதியாகவும் தான் இருந்தது. நிரோ தனது மற்றும் நைநிதாவின் பொருட்களை எல்லாம் பேக் செய்து ரூமை காலி செய்ய ஆயத்தமாகி கொண்டிருந்தாள் அப்போது........
......
............
..................
.....................
பிறகு என்ன!! வேதாலம் பழைய படி முருங்கை மரம் ஏறிவிட்டது.
கால் மேல் கால் போட்டுக் கொண்டு ஹாயாக இரு தலையணையை அடுக்கி அதன் மேல் சாய்ந்து கொண்டு காதில் இயர்போன் மாட்டிக்கொண்டு போனை நோண்டிக் கொண்டிருந்தவள் திடீரென.....
"Fireeeeeee...... O...A...O....... Fireeeeeeeee ...... O....A......O... என கத்த நிரோ பதறிப்போய் பார்க்க 'Bts' ன் 'Fire' சாங்கை பாடுகிறேன் என்ற பெயரில் கத்திக் கொண்டிருக்கிறாள் என்று பிறகு தான் புரிந்தது.
கடுப்பில் காலில் இருந்த பாத்ரூம் செப்பல் பரந்து வர பழக்க தோஷத்தில் அதை அலாட்டாக மிஸ் செய்து விட்டு பேய் துறத்துவது போல் அறையை விட்டு ஓடிவிட்டாள் நைநிதா.
இவ்வாறு ஒருவழியாக தங்கள் அனைத்து பொருட்களையும் பேக் செய்து அறையை காலி செய்து விட்டு ஷாஸ்டல் வெளியே காலை எடுத்து வைத்த முதல் நொடி
"Freedom... விடுதலை.. விடுதலை... விடுதலை...." என பாடத் தொடங்கினாள் .. இல்லை! இல்லை!! கத்த தொடங்கினாள் நைநிதா.
நிரோவோ பழக்கப்பட்டவள் போல் இரண்டு எட்டு பின் நகர்ந்து யாரோ ஒருவள் போல நடக்கத் தொடங்கினாள்.
அதை கண்ட நைநிதா ஏலனப் பார்வையோடு, "ஏய்! உடனே ஒரே அடியா சீன் போடாத. உனக்கும் உள்ளுக்குள்ள குஷியாதான் இருக்கும்! நாலு வருஷம் நரக வேதனைய அனுபவிச்சு இப்போ தான் அதுல இருந்து விடுதலை கிடைச்சிருக்கு! குட்பை மை ஹெல்! குட்பை நரித்தல நாராயனன் பிரபசர்! இப்படி சிரிக்காத அப்படி நடக்காதனு அந்த ஆளு சரியான அருவ! இதுல உனக்கு வேலையே கிடைக்காதுனு சாபம் வேர !! ஹூம் இந்த all in all அலகு ராணிக்கு வேலை கிடைக்காம வேர யாருக்கு கிடைக்க போது! ஆல் பிதற்றல்ஸ்!!" என சிலிபித்துக் கொண்டாள்.
"ஏய் நைநி! ஒரு பழமொழி கேள்வி பட்டு இருக்கியா?"
"என்ன?"
"நாய் வால நிமித்த முடியாதுனு சொல்லுவாங்க" என நிரோ சிரிக்க, "உன்ன என்ன செய்யுறேன் பாரு. என்னயவா நாயுனு சொல்லுற?!" என நைநிதா கோப பட, "நான் ஏதும் சொல்லலைப்பா பழமொழி தான் சொன்னேன்! நீயா உண்மைய ஒதத்துட்டா அதுக்கு நான் பொருப்பில்லையாக்கும்!" என்று கிண்டலடித்தாள் நிரோ.
இவ்வாறு ஒருவரையொருவர் வெறுப்பேத்தி கொண்டே ஒரு ஆட்டோவை பிடித்து தங்கள் ஊருக்கு செல்லும் பேருந்து நிலையத்தை அடைந்தனர்.
அங்கு இருவருக்கும் ஓர் அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது........
...............….... வேறு யாரும் அல்ல இரண்டாவது முறையாக நம் கதையில் குரூப் என்டிரி கொடுக்கும் நண்பர்கள் குழுவான கவிதா , ஸ்ருதி மற்றும் ரேணுகா தான்.
அவர்கள் மூவரை கண்டதும் நிரோவிற்க்கும் நைநிதாவிற்கும் ஒரே மகிழ்ச்சி. நான்கு வருடம் ஒன்றாக பழகி இப்போது பிரியப் போகின்ற கவலை கோடை கால மின்னலை போல் சட்டென தாக்கியது அவர்களை.
விடியலில் மலர் மேல் தோன்றும் பனித்துளி போல் அனைவர் விழிகளிளும் நீர் துளிர்த்தது.
'நண்பர்கள் நால்வர் ஒன்று சேர்ந்தால் நாட்கள் ஓடுவது தெரியாது' என்பதை போல் இந்த நான்கு வருட கல்லூரி வாழ்க்கையில் ஏற்பட்ட துண்பங்களுக்கு மருந்தாக ஒருவருக்கொருவர் இருந்த நேரங்கள் கண் முன் தோன்றின அவர்களுக்கு.
வகுப்பறையில் கடைசி பெஞ்சில் உட்காற்ந்து கொண்டு நொருக்கு தீணி உண்பது, ஆனுவல் டேவில் வட்டமிட்டு குத்தாட்டம் போட்டது, வெங்காயம் செய்த மேஜிகால் காய்சல் கொண்டு கேங்காக கிளாஸ் கட் அடித்து படத்திற்கு போனது, குரூப் ஸ்டடி என்று விடிய விடிய கொரியன் டிராமா சீரியஸ் பார்த்தது என பல்வேறு சம்பவங்கள் நினைவுக்கு வர இனி அதுபோல் இருக்கமுடியாது என நினைக்கையில் கசந்தது.
அம்மூவரையும் நெருங்க நைநிதா வேகமாக அவர்களிடம் ஓடி அனைத்துக் கொண்டு, "ஏய் மச்சீஸ் ! உங்களை இங்க பார்ப்பேன்னு நான் எதிர் பார்கவே இல்ல தெரியுமா! எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்க உங்களை பார்காம ஊருக்கு போயிருவோமோனு கவலையா இருந்துச்சு!" என்றான்.
"ஏன் டீ எங்க மேல உனக்கு அவ்வளவு பாசமா?" என ரேணுகா மகிழ்ச்சியில் வினாவ, "பின்ன! என்ன நெனச்சீங்க என்ன பத்தி! உங்களை பார்க்காம போனா எவ்வளவு லாஸ் பண்ணிருப்பேன் தெரியுமா!!" என்றாள் நைநிதா.
"பரவால்ல இந்த பக்கி எப்பவும் நம்மட்ட இருந்து எதையாவது ஆட்டைய போட்டுட்டே இருந்தாலும் மனசுல பாசம் நெறைய வச்சிருக்கு போல! பாசக்காற பயபுல்ல!! இதுக்காகவே இவ செஞ்ச அறகிறுக்கு வேலைகளை எல்லாம் மறந்து மண்ணிச்சிடலாம் என்று ஸ்ருதி மனதுள் நினைத்து கொண்டிருக்க தலைமேல் குட்டு வைத்தாற் போல நைநிதா தன் வேலையை தொடங்கினாள்,
" நல்லபடியா எல்லாரும் வந்து சேர்ந்தீங்க! எனக்கு ஒரு வேலை மிச்சம்! உங்களை தனித்தனியா வந்து பார்த்து பாக்கிய வசூலிக்க தேவையில்லை பாருங்க! சரி !ஆரம்பிங்க யார் யார் என்கிட்ட பெட் வைச்சு தோத்தீங்களோ, போஸ்டர்ஸ் அன்ட் கதை புக் கடன் வாங்குனீங்களோ எல்லாத்தையும் ஒன்னு விடாம எடுத்து வையுங்க பார்கலாம்".
இதை கேட்ட நால்வருக்கும் மனதில் தோன்றியது ஒன்றுதான் "நாய் வாலை நிமிர்த முடியாது ....நிமிர்தவே முடியாது".
நால்வரும் ஒருவரையெருவர் " யூ டூ புரூடஸ்! இவ சொன்னத ஒரு செகண்ட் நம்பி நாக் அவுட் ஆகிட்டமே" என்பது போல் பார்த்து கொண்டனர்.
"எனிவே ஜோக்ஸ் அபார்ட்! நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் பிரண்ட்ஸ். யார்? எவர்? -னு தெரியாம நாம சந்திச்ச முதல் நாள்-ல இருந்து இப்போ பிரிய போர கடைசி நிமிஷம் வர எல்லா நினைவுகளையும் நேரங்களையும் நான் பொக்கிஷமா வைச்சுப்பேன்! இனி நம்மல்ல சில பேர் எப்பவும் காண்டாக்ட்ல இருக்கலாம், இல்லை கால சூழ்நிலையால இல்லாமலும் போகலாம் ஆனா உயிர் உள்ள வர நினைவுல மட்டும் நீங்காம இருப்பீங்க. உங்க லைப் -ல அன்ட் கரியர்-ல நீங்க எப்பவும் சக்சஸ்புல்லா இருக்க என்னோட பெஸ்ட் விஷ்ஷஸ் டீ!" என நிரோ கண்கலங்க அனைவருக்கும் நீர் தேங்கியது கண்களில்.
ஒருவர் தோள் மற்றொருவர் கை கோர்த்து கேங் ஹக் கொடுத்துக் கொண்டனர்.
"வாழ்க்கை எனும் கடலில்
கல்லூரிப் படகில்
பயணிகளாய் தொடங்கி
நண்பர்களாய் மலர்ந்து
இறுதியில் பிரிந்தும்
மறையாத சுவடுகளாய்
மனதில் பதிந்தன
நாம் கலித்த ஒவ்வொரு நிமிடமும்!"
"திருச்சிக்கு போர ஆளுங்கல்லாம் ஏறுங்கப்பா! பஸ் இன்னும் 10 நிமிஷத்துல கிளம்ப போகுது" என பஸ் கண்டக்டரின் குரல் ஒலிக்க நிரோ திரும்பி பார்த்தாள். அது அவள் ஊருக்கு செல்லும் பேருந்து தான். அவளுடைய ஊரான கார்முகில் திருச்சியை சேர்ந்த ஓர் சிறிய கிராமம்.
தன் நண்பிகளுக்கு பிரியா விடை கொடுத்து பேருந்தில் ஏறினாள்.
அவர்களுடன் ஜன்னல் வழியாக பேசியவாறே நேரம் நகர்ந்தது.
"எல்லா உள்ள ஏறுங்க பஸ் கிளம்ப போகுது" என கண்டக்டர் கூற கீழே நின்றிருந்தவர்கள் ஏற தொடங்கினர்.
"சரிங்கடீ! நான் போய்டு வரேன்! எப்பவும் காண்டாக்ட்லயே இருங்க. என்ன மறந்துடாதீங்க! பை!" என விடை பெற்றாள் நிரோ.
"ஓகே டீ!"
"கண்டீப்பா மச்சி"
"பை டீ! அம்மா அப்பாவ கேட்டதா சொல்லு", என அவர்களும் விடை பெற்று கொண்டனர்.
பேருந்து நகர நகர நிரோ தன் நண்பிகளுக்கு கை ஆட்டிக் கொண்டே விடைபெற்றாள். அவள் முன்னோக்கி செல்ல செல்ல சிங்காரச் சென்னையின் சாயலும் வழியில் வீசும் தென்றல் காற்று போல் கரைய தொடங்கியது. சூரியன் மிளிர்ந்து கொண்டிருந்த அவ்வெண்ணிற வானத்தை ஜன்னல் வழியாக நோக்கி கொண்டிருந்த அவளுக்கு மனதில் தன் உள்ளத்தை கொள்ளை கொண்ட கல்வனின் நினைவுகள் வர தனிமை தாக்கியது.
'இனி அவனை காண்பேனா?' என்ற எண்ணம் திரும்ப திரும்ப கரை வந்து மோதும் கடல் அலை போல் மனதில் மோதிக் கொண்டிருந்தது.
" ஜன்னல் வழி செல்லும்
காற்றோடு
அவன் நினைவுகளும் நலுவி
செல்ல
மனதில் இழுத்து பூட்டி கொண்டேன்
பொக்கிஷமாய்!!"
--------------–--------------------------------------------
Hello makkalae 🙋♀️
Sorry for being in hiatus all this while!!🙆
Ivlo naal oru update kooda podamal ungalai underathil thonga vitadhuku romba sorry manichudungo 🙏
Actually inda story a continue pannu ven nu naanae ninaikkala ba 😅 kathai a marandhutuchu 😝 marubadi naan eluthunatha naanae padichu aparam thaan oru outline konduvandhu oru valiya update potuten 😁
Ini pathila vitutu pomaten promise 🤘
Naan clg padichutu irundha po eludha aarambichathu aparam enakku marriage aagi kolandhaiyae pirandhu andha kolandhaya next school k setha pogaporom but inamum idha mudika ma vachi irukurada ninaicha enake konjam shame ah thaan iruku 😖
Ini idha complete panitu thaan next velai. Weekly once update potruven ok va bcz of motherly situation 😝
Ok nxt updt ipovae elutha poren bye 🙋♀️.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top