💗பகுதி 17💗
"வாசல் தேடி வந்த அவள்
சென்ற திசை காண
வாசம் நுகர்ந்து நான் செல்ல
ஓர் நொடியில் கலந்து விட்டாள்
அவள்
தனிமையில் தவித்திருந்த
என் மூச்சுக் காற்றில்!"
தேடி வந்த தன் காதல் தேவதையை காணாமல் சென்றுவிடுவோமோ என்ற பதைபதைப்பில் சந்திரு அவள் சென்ற வழி நோக்கி ஓடினான். கோடைக்கால வெயில் போன்ற அவள் பிரிவின் தாக்கத்தால் காய்ந்திருந்த அவன் காதல் வனத்தில் மெல்லிய சாறலாய் அவள் காதல் மொழியின் ஸ்பரிசம் பட்டு மெய்சிலிர்த்தன அவனது ஒவ்வொரு உணர்வுகளும்.
இதயம் படபடக்க அந்த மருத்துவமனையின் வாயிலை வெகு விரைவில் அடைந்தான் அவன். ஆர்வத்தோடும் ஏக்கத்தோடும் அவனது விழிகள் அவளை தேட கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவளது நிழல் கூட காணவில்லை.
நிரோவை காண வேண்டும் என்ற வேகத்தில் அந்த மருத்துவமனையின் எதிரில் இருந்த சாலையில் அவளின் பெயரை உச்சரித்து கொண்டே தன் நிலையிழந்து ஓடினான்.
அவனது மனதில் ஓடிக் கொண்டிருந்த ஒரே எண்ணம் 'ஒரு முறையேனும் உன்னை கண்டு என் காதல் உணர்த்திட வேண்டும்'.
ஆனால் விதியோ இருவரையும் காணவிடாமல் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறது. நெடுந் தொலைவு ஓடியும் நிரோவை கண்டுபிடிக்க முடியாமல் வழியிலேயே நொறுங்கி நின்றான் சந்திரு.
அவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள் அலைமோத அவ்வனைத்தும் சிலைபோன்ற அவன் முகத்தில் கண்ணாடிச் சிதறல்களாய் பிரதிபலித்தது.
திசையறியாது நின்றிருந்த அவன் தோளில் ஆறுதலாக பதிந்தது ஓர் கரம். அங்கே அவன் அருகில் நின்றிருந்தான் வர்ஷன்.
தன்னுடைய நன்பனின் முகத்தில் மிளிரும் உணர்ச்சிகளை கண்டு செய்வதறியாமல் அவனும் தவித்து நின்றான்.
"டேய் விக்கி! அது..... வந்து... அது .....நிரோ........." என சொல்வதறியாமல் புலம்பி நின்றான் அவன்.
கடல் அலையாய் அலைந்து கொண்டிருந்த எண்ணங்கள் அமைதியடைந்து தெளிவு பெற்றது அவனது விழிகள். அவற்றினுள் ஓர் உறுதி, ஓர் ஏக்கம், ஓர் எதிர்பார்ப்பு மற்றும் ஓர் உணர்வு - 'காதல்' மிளிரியது.
தன்னை ஆறுதல் படுத்த முயற்சித்து கொண்டிருந்த தன் நன்பன் வர்ஷனை பார்த்து "ஏய் வர்ஷூ!" என்று அழைத்தான்.
தன்னுடைய நன்பனை சமாதானம் செய்ய முயற்சித்து கொண்டிருக்க அவனே தன்னை அழைப்பதை கேட்டு ஓர் நிமிடம் அப்படியே உறைந்து நின்றான் அடுத்த நொடி தீர்த்தம் தெளித்த பலியாடு போல் விழிகள் விரிய துள்ளி நின்று தன் நன்பனை கண்டு வாயடைத்து உற்று நோக்கினான்.
அவனது செய்கை கண்டு உதட்டில் சிறு முறுவல் தோன்ற அவனிடம், "விழியாலே எழுதிவிட்டேன் 'நீ என்னவள்' என்று அவள் இதயத்தில், காலத்தாலும் தூரத்தாலும் அழியாத ஓவியமாய் பதிந்துவிட்டாள் அவள் என் இதயத்தில்" என்று கூறி தன் இதயத்தின் மேல் கை வைத்து அங்கு அவன் வைத்திருந்த தன்னவளின் காதல் பரிசை கையில் ஏந்தி அவள் சென்ற திசை நோக்கி,
"யூ ஆர் மைன்! பிரிவு என்ற சங்கிலியால் நம்மை உடைக்க அந்த விளையாடும் விதியாளும் முடியாது கடுப்பேத்தும் கதையாசிரியராளும் முடியாது!!" என்றான்.
[Me: 😓😓🙄🙄😨😨 நான் என்னையா பன்னேன்!!! என்ன என்பா இழுக்குற!!! ஐ எம் பாவம் 🤗🤗]
அவன் ஏந்தியிருந்த அந்த வெள்ளை துப்பட்டா காற்றிலே அவன் காதல் மொழியை எடுத்து சென்றது பேருந்தில் சென்று கொண்டிருந்த தன் உரிமையாளரிடம்.
--------------------------------------------------------
Hello people 🙋
Ada irunga irunga pa enna avasaram porumai porumai🤗
Modala ivlo naal varadadhuku adikuravangalam right la nillungo 💁
Eppa inaiku update la hero and heroine ah sandhika vaikadhadhuku adikuravangalam left la nillunga.
Ok start 👌👍
Ayooooooooooooo sari sari adikaadinga 🤕🤕🤕 I am sorry ungala ivlo naal kaaka vachadhuku 🙆. Inime correct ah update podururen ok va 👼👼 pinky promise 🤙 Inda last dhadava mattum manichu vutrunga 🙎.
Aprom hero ve sema confidenta irukumbodhu y u all feel 🤷 don't worry rendu perum meet pannuvanga apo dhanae love n romance n comedy lam Panna mudium. So porumaiya irunga 🖐️ all will come soon ok va 👼.
Last but not least ..... New readers 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮 engaya irundeenga ivlo naala ... Naan story continue panitu irundhapa Koda ivlo per illiyae 🤔 oruvela adikadi discontinue panitu pona neraya readers Namma story ah padipangalo 🤔 ayooo ayooo mummy!!!! Adikadheenga marubadi apdi vitutu pogamaten🤗🤗.
Jokes apart ... Truly I was shocked... Neraya per last one year la enoda Inda story ah padichirukeenga n comment panirukeenga 😍😍 love u all . Thanks for the support of all of u my dear readers 😘😘😘.
Ok ok romba pesiten 😗😌😌 ithoda aruvaya mudichukuren 🤗🤗.
(PS: naan eludhura kavidhaigal pidichirundha u can check out my kavidhai book named "இதய மொழிகள்" )
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top