💗பகுதி 16💗
பொதுவாக நாம் எதிர்பார்த்த ஒன்று நிறைவேறாமல் போனால் ஏற்படும் ஏமாற்றத்தைவிட நாம் ஏங்கிய ஒன்று நிறைவேறாமல் போகும்போது உண்டாகும் வலியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
சந்திருவை காண முடியாமல் பதுமையவள் மொழியற்று விலகிப் போக அங்கோ சந்திருவின் நிலையோ காணல் நீர் போல் தோன்றிய உணர்ச்சிகள் எல்லாம் காற்றிலே கரைந்துவிட்டது.
வர்ஷனிற்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை! உணர்வற்று உரைந்துவிட்ட தன் நன்பனை என்ன சொல்லி தேற்றுவது என்று அறியாமல் தடுமாறி போனான்.
'காலம் கடந்தும் உன்னவளுக்காக காத்திரு என கூறவா? அல்ல காலப் போக்கில் கரைந்துவிடும் அவள் நினைவுகள் என மனதை கடினபடுத்தி மொழியவா?' என தன்னுள்ளேயே பல்வேறு எண்ணங்களை உயிர்துக் கொண்டிருந்தான் அவன்.
ஹாஸ்பிடலை விட்டு வெளியேறிய நொடி முதலே சந்திருவின் முகவுணர்ச்சி முழுதும் துடைக்க பட்டு கலையற்று காணபட்டான். அவன் எண்ண அலைகள் எவ்வாறு ஓடிக்கொண்டிருக்குமோ என்ற பயம் வேறு வர்ஷனிற்கு. எவ்வாறேனும் அதை திசை திருப்ப வேண்டும் என முடிவெடுத்து காரின் ஸ்டீரிங்கை இறுகிப் பற்றி கொண்டிருக்கும் தன் நன்பனை பார்த்தான் வர்ஷன்.
"விக்கி இப்போ வலி எப்படி இருக்கு டா?" என மெல்ல தண்ணீரை பதம் பார்த்தான் வர்ஷன்.
அமைதி.
"நான் பர்ஸ்டே சொன்னேன் நான் டிரைவ் பண்றன்னு எங்க கேட்ட நீ! மனசுல பெரிய சூப்பர் மேன் -னு நினைப்பு உனக்கு! பேன்டேஜ் எடுத்த அடுத்த நிமிஷம் பேலே டாண்ஸ் ஆட ஆரம்பிச்சுட்ட!"
மீண்டும் அமைதி.
"சந்திரு வீட்டுக்கு கால் பண்ணி பேசிட்டியா? "
இறுதியாக ஓர் அசைவு. ஸ்டீரிங்கை பற்றியிருந்த விரல்களில் ஓர் துடிப்பு.
அதை கண்ட வர்ஷன் சிறு மகிழ்ச்சியோடு தொடர்ந்தான், "பாட்டி வேற விடாம கால் பண்ணிட்டே இருக்காங்க. உனக்கு இப்படி ஆனது கூட சொல்லல பாவம் உன்ன கான்டாக்ட் பண்ண முடியாம போனதுக்கே பதறிட்டாங்க! நான் ஏதேதோ சொல்லி சமாளிச்சு வச்சிருக்கேன்! நான் கால் பண்ணி தரேன் நீ பேசு ".
மேலும் சிறு முன்னேற்றம், அவன் தலையை சரி என்பது போல் லேசாக ஆட்டினான்.
வர்ஷன் வார்ல்ட் கப்பே வின் பண்ணது போல் வெற்றிப் புன்னகையோடு தன் மொபைலை எடுக்க பாக்கெட்டில் கைவிட்டான். பாகெட்டில் ஏதோ இல்லாதது போல் உணர்ந்தான், யோசித்துக் கொண்டே பாக்கெட்டை தடவிக் கொண்டிருந்தான். அப்போது தான் தன்னுடைய வாலட் தன்வசம் இல்லாததை உணர்ந்தான்.
"ஓ காட்! என் வாலட் மிஸ் ஆகிடுச்சே! எங்க வச்சன்னு தெரியலையே!" என காரினுள் முன்னும் பின்னும் தேடிக் கொண்டிருந்தான். திடீரென்று பொறி தட்ட கைகளால் தலையில் அடித்துக் கொண்டான்.
"விக்கி கார யூ டர்ன் போடுடா!"
சந்திரு புரியாமல் அவனை கண்டு விழிக்க " என்னோட வாலட் ஹாஸ்பிடல்ல விட்டுட்டு வந்துட்டேன், அப்புறம் நீ வேனான்னு சொல்லுறதுக்கு முன்னடி சொல்லிடுறேன் 'வர்ஷன்'னு ஒரு மனுஷன் இருக்குறதுக்கு முக்கியமான ஆதாரம் எல்லாம் அதுல தான் இருக்கு" என சந்திருவை இடைமறித்து பேச விடாமல் கூறினான் வர்ஷன்.
சந்திருவிற்கு அங்கு செல்ல விருப்பமில்லை என்றாலும் யூ டர்ன் போட்டு வண்டியை திருப்பினான்.
கிளம்பி சிறிது தூரமே சென்றிருந்ததால் ஓரிரு வினாடிகளில் ஹாஸ்பிடலை அடைந்தனர்.
"நீ போய் எடுத்துட்டு வா, நான் இங்கயே வெய்ட் பண்றேன் " என்றான் சந்திரு. அந்த இடமே அவனுக்கு நிரோவின் நினைவை திரும்ப தூண்டிவிட்டு அவன் வலியை அதிக படுத்தியது.
சரியென்று இறங்கி சிறிது தூரம் சென்ற வர்ஷன் திரும்பி வந்து சந்திருவையும் தன்னோடு வருமாறு அழைத்தான். அவனுக்கு ஏனோ தன் நன்பனை இன்நிலையில் தனியாக விட்டுச் செல்ல மனமில்லை. ஒரு சில மிரட்டல் கெஞ்சல் புலம்பல்களுக்கு பின் அவன் ஒப்புக் கொண்டான்.
இருவரும் ஒன்றாக உள்ளே நுழைந்து ரிஷப்ஷனை அடைந்தனர்.
"எக்ஸ்கியூஸ் மீ! நான் கொஞ்ச நேரம் முன்னாடி இங்க அட்மிட் ஆகிருந்த என் பிரண்ட் சந்திருவிகேஷ் -க்கு பில்
பே பண்ணிட்டு என் வாலட் மிஸ் பண்ணிட்டேன் நீங்க அத பார்த்தீங்களா?" என்று ரிஷப்ஷனிஸ்டிடம் வினாவினான் வர்ஷன்.
"ஓ எஸ் சார்! ஒரு வாலட் இங்க இருந்தது. வெய்ட் எ செகண்ட்" என்றுவிட்டு தான் எடுத்து வைத்திருந்த வாலட்டை எடுத்து வர்ஷனிடம் காண்பித்தால். பின் அது அவனுடையது என கண்பார்ம் செய்துவிட்டு ஒப்படைத்தாள். அதுவரை சந்திரு இவை எதையும் கேளாமல் வாசலையே பார்த்து நின்றிருந்தான்.
"ஹூம் வாலட் கிடைச்சிடுச்சு வாடா போலாம்! தாங்ஸ் மிஸ்" என்று ரிஷப்ஷனிஸ்டிடம் கூறிவிட்டு இருவரும் செல்ல அந்த ரிஷப்ஷனிஸ்டிற்கு பொறி தட்ட, "ஒன் செகண்ட் சார்!" என்று கூற இருவரும் நின்றனர்.
"நீங்க சந்திருவிகேஷ் தான?
"எஸ்" என்றான் அவன்.
"உங்கள பார்க்க இரண்டு லேடீஸ் வந்திருந்தாங்க சார்! பட் அன்பார்சுனேட்லி நீங்க அதுக்குள்ள கிளம்பிட்டீங்க!" என்று கூற கார்மேகம் சூழ்ந்துள்ள வானில் தோன்றும் மெல்லிய சூரிய ஒளி கீற்று போல் சந்திருவின் முகத்தில் உணர்வுகள் படரத் தொடங்கிற்று.
"இந்த பொக்கே கூட அவங்களோடது தான்!" என அருகில் இருந்த நிரோவின் பொக்கேவை கொடுத்தாள்.
அதிலிருந்த வண்ண மலர்களை காணக் காண வண்ணமற்றுப் போன அவன் விழிகளில் வானவில் வண்ணமிட்டது.
அப்பூவிதழ்களை மென்மையாக அவன் வருட தன்னவளின் கன்னம் வருடுவது போல் தோன்றிற்று அவனுக்கு. அப்போது அதில் இருந்த கிரீடிங் கார்ட் அவன் கண்ணில் பட தன்னிலை மறந்து அவன் கைகள் தானாக அதை தேடிச் சென்றது.
அதை பிரித்து படித்த அவன் கண்கள் அதிலிருந்த ஒவ்வொரு எழுத்தையும் அமுதம் போல் உறிந்து கொள்ள இதயம் அளவற்ற மகிழ்ச்சியில் பூரித்தது.
"அவங்க இப்போ எங்க" கேட்டது வர்ஷன்.
"ஜஸ்ட் டூ செகண்ட் முன்னாடி தான் வெளிய போனாங்க" என அவள் சொல்லி முடிப்பதற்குள் வாசலை நோக்கி ஓடினான் சந்திரு, அருகில் இருந்தவர்களின் கேள்விப் பார்வைகள் கூட அவன் கண்ணில் படவில்லை.
"காக்க வைத்த என் காதல்
தேவதையே!
உன் கால்தடம் கண்டு நான்
ஓடி வர
என் கண் முன் வந்து நிற்பாயா?
அல்ல
கடல் தாண்டி வந்து உன் கரம்
பற்ற வைப்பாயா?"
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top