💗பகுதி 15💗

'சிங்கமொன்று புறப்பட்டதே' என்ற பேக்ரௌன்ட் மியூசிகுடன் நிரோ வேகமாக படிகட்டுகலில் இறங்க அவளை தொடர்ந்து தட்டு தடுமாறி வந்தாள் நைநி.

"ஏய் மெதுவா இறங்கு டீ! உன்ன பாலோ பண்ணி வந்து என் கை கால் உடைஞ்சிடும் போல!" என்று நிரோவிடம் புலம்பிக் கொண்டே வந்தாள்.

உசெய்ன் போல்ட் போல் ஓடிவந்ததால் ஐந்தாவது நிமிடம் ரிஷப்ஷனை அடைந்தனர் இருவரும். அங்கு அவர்கள் சந்தித்த ரிஷப்ஷனிஸ்டிற்கு பதிலாக வேறொரு பெண் இருந்தாள்.

"எக்கியூஸ் மீ! இங்க கொஞ்ச நேரம் முன்னாடி இருந்த ரிஷப்ஷனிஹஸ்ட் லேடி எங்க போனாங்க?" என்று வினாவினாள் நைநி.

"அவங்களோட ஷிப்ட் முடிஞ்சு கிளம்பிட்டாங்க மேம்! கேன் ஐ ஹெல்ப் யூ வித் ஸம்திங்?" என்றாள் அந்த பெண்.

"ஆக்சுவளி எஸ்! நாங்க இங்க  அட்மிட் ஆகிருக்க சந்திருவிகேஷ் -ங்குறவர பாக்க வந்தோம். அவர் ரூம் நம்பர் கொஞ்சம் சொல்லுறீங்கலா?" என்றாள் நைநிதா.

நிரோவிற்கோ எதுவோ ஒன்று சரியாக படவில்லை! மனதின் அடியாழத்தில் ஒரு சலனம், முன்பு இங்கு வந்த போது தன்னை சுற்றி இருந்த காற்றில் இருந்த அந்த காந்த உணர்வு, அந்த ஓர் இனக்கமான உணர்வை ஏனோ தற்போது அவளால் உணரமுடியவில்லை. வெறுமையில் தன்னை மறந்த நிலையில் நின்றிருந்த அவளை நினைவிற்கு கொண்டுவந்தது அந்த ரிஷப்ஷனிஸ்டின் குரல்.

"அப்ஸலியூட்ளி வெய்ட் எ செகண்ட் மேம்"

"தேங்க் காட்! அட்லீஸ்ட் இந்த பொண்ணாவது மத்தவங்கள எப்படி டிரீட் பண்ணனும்னு தெரிஞ்சுவச்சிருக்கு" என்று நிரோவின் காதில் முனுமுனுத்தாள் நைநி.

ஆனால் நிரோவிற்கோ ஒவ்வொரு நொடியும் இதயத்தில் எதோ பாரம் ஏறிக்கொண்டிருந்தது.

சற்று நேரம் களித்து "ஐ எம் வெறி சாரி மோம்! நீங்க அவர இப்போ பார்க்க முடியாது" என்று அந்த ரிஷப்ஷனிஸ்ட் கூற "ஏன்? ஏன் பார்க்க முடியாதுனு சொல்லுறீங்க!" என சந்திருவிற்கு ஏதாவது ஆகிருக்குமோ என்று பதறினாள் நிரோ.

"பிகாஸ் மேம், மிஸ்டர்சந்திருவிகேஷ் ஹஸ் செக்ட் அவுட்!"

"நோ தட் காண்ட் பீ! இதுக்கு முன்னாடி இங்க இருந்த பொண்ணு அப்படி சொல்லலையே! ஹீ ஈஸ் ஸிடில் இன்னு சொன்னாங்க!" என்று அந்த ரிஷப்ஷனிஸ்ட் கூறியதை நம்பாமல் மறுத்தாள் நிரோ. என்னதான் அவளது உதடுகள் மறுத்தாலும் அவள் மனதின் ஆழத்தில் அது உண்மை என்று தெரியும் அந்த நிஜத்தால் ஏற்பட்ட பயம் தான் அவளை அதை ஏற்க்க முடியாமல் தடுத்தது.

"ஐ எம் சாரி மேம்! பட் இட்ஸ் டிரூ! இப்போ தான் அவர் பில் பே பண்ணிட்டு கிளம்புனார்"

நிரோ மனதில் ஓரத்தில் ஏற்பட்ட சலனம் தற்போது அவளை முழுதும் ஆட்கொண்டு சுவாசிக்க கூட முடியாமல் தடுமாறினாள். அவள் அருகில் இருந்த நைநி அப்போது தான் முகம் வெளிறிப்போய் தன்நிலை மறந்து தடுமாறும் நிரோவை பார்த்து பதறிப் போனாள்.

"நிரோ!! நிரோ! என்னாச்சு? நிரோ என்ன பாரு நிரோ!" என அவளை உலுக்கினாள்.

காதுகள் அடைத்து கண்கள் இருட்ட பாதம் முதல் தலை வரை விறுத்து நின்றிருந்த நிரோ, நைநியின் உலுக்கலில் அவளை திரும்பி நோக்கினாள். அவள் மனதில் ஒரே ஒரு எண்ணம் தான் ஓடிக் கொண்டிருந்தது.

"ஹீ ஈஸ் கான்!"

"ஹீ ஈஸ் கான் நைநி!" என குரலிலும் விழியிலும் உணர்வில்லாமல் கூறினாள் நிரோ.

நைநிதாவிற்கு நிரோவின் நிலை கண்டு இதயம் வலித்தது.

"அவரோட அட்ரஸ் பத்தி இன்பர்மேஷன் ஏதாவது கொடுத்துட்டு போய் இருக்காரா! ஐ நோ!அது கான்பிடன்சியல்னு எனக்கு தெரியும் பட் பிலீஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க! இது ரொம்ப அர்ஜெண்ட்!" என்று கெஞ்சினால் நைநி தன் நன்பியின் நிலை காணமாட்டாமல்.

சற்று தயங்கிய அந்த பெண் நிரோவின் நிலை கண்டு உதவ நினைத்தாள். ஆனால் சந்திருவை பற்றி எந்த விபரமும் பதிவாகவில்லை.

நம்பிக்கை இழந்து இருவரும் வெளியேற "எக்ஸ்கியூஸ் மீ!" என்ற ரிஷப்ஷனிஸ்டின் குரல் தடுக்க கருமேகம் சூழ்ந்த இரவில் தோன்றிய சிறிய தீப்பொறி போல் ஒளி தோன்ற திரும்பினாள் நிரோ.

"உங்க பொக்கேவ விட்டுட்டு போறீங்க!" என்று தன் அருகில் இருந்த  டெஸ்க் மேல் வைத்திருந்ததை காட்டினாள் அவள்.

அதற்க்கு தன் மான் விழிகளில் இருந்து வழிந்த ஒரு சொட்டு விழிநீரை பதிலாக தந்துவிட்டு திரும்பிப் பாராமல் வெளியேறினாள் நிரோ.

"தன்னவனோடு இனையக்
கண்ட கனவுகலெல்லாம்
பிரிவின் வலியால்
விழிநீரில் கரைந்தோட
உணர்வற்று
உடைந்து போனாள்
அவள்!"

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top