💗பகுதி 14💗

நிரோ தன் மனதில் உள்ள உணர்ச்சிகளுக்கு உயிர் கொடுத்து உதடுகள் வழியே உதிர்க்க தாயத்தமாக அதை தடை செய்த தன்னவனின் தோழன் ஒலி வந்த திசை நோக்கி விழிகளால் வறுத்தெடுத்தாள்.

(அந்தோ பாவம்! அவனென்ன செய்வான்! கதையாசிரியரின் வஞ்சனையால் குற்றம் செய்யா குற்றவாளியாகிப் போனான்😁😁😂)

"டேய் விக்கீகீகீகீ!!!!!!" என மீண்டும் குரல் கேட்டது. அனைவரும் நடப்பதறியாது விழி பிதுங்கி நிற்க திடீரென அவர்கள் நின்றிருந்த இடம் நடுங்கத் தொடங்கியது. முதலில் மெலிதாக துவங்கி பிறகு தரை சிதறும் அளவிற்கு ஆடத் தொடங்கியது.

உறங்கிக் கொண்டிருந்தவனின் உச்சி மண்டையில் ஓங்கி கொட்டு வைத்து எழுப்பி விட்டது போல் இருந்தது சந்திருவிற்கு.

சிறிது நேரத்தில் இயல்பு நிலை திரும்பிய அவன் வாயடைத்துப் போனான்.

பின் என்ன செய்வான்?? ஆசை காதலி அன்போடு தன் காதல் கூறவிருக்கும் வேலையில் ஆயிரம் தடைகள் வர அதையும் பொறுத்துக் கொண்டு நிற்க இறுதியில் அவ்வனைத்தும் அரைக்கண் மூடிக்கொண்டு தான் கண்ட கனவே என உணரும் பொழுது எப்படி இருக்கும் ஒருவனுக்கு!!

நம் நாயகனின் நிலை அதைப் போல் தான்!

"டேய் சந்திரு உனக்கு என்னடா ஆச்சு!! கண்ண திரந்துட்டே தூங்குறியா என்ன! கால் மணி நேரமா கத்திட்டிருக்கேன் கல்லு மாறி உட்கார்ந்திடிருக்க!" என்ற தன் நன்பனின் குரல் கேட்டு நினைவிற்கு வந்தான் சந்திரு.

'அப்போ இவ்வளவு நேரம் நடந்தது!.... நிரோ கிட்ட பேசுனது.... அவ... அவ என்ன ஹஃக் பண்ணது!! அது... அது எல்லாம் என் கனவா?!!! ' என மனதினுள் அவன் வினாவ 'அட மரமண்ட அது இன்னுமா உனக்கு தெரியல! ' என்று கேலி செய்தது அவன் மனசாட்சி.

"டேய்! டேய்! திரும்ப என்னடா விட்டத்த பார்துட்டு இருக்க! எழுந்து வா நாம கிளம்பலாம்! மார்சுவரி போக இருந்தவன் மென்டல் ஹாஸ்பிடல் போயிடுவ போல!" என்றான் வர்ஷூ.

"அது... அந்த பையன்... இங்க இருந்தானே அவன்...." என குழம்பிய நிலையிலேயே சந்திரு உளர.

"எது கேர்ல்பிரண்ட பார்காம போக மாட்டேனு அடம்பிடுசுட்டு இருந்தானே அந்த பையனா! அவன் கிளம்பி அரை மணி நேரமாச்சு! என்ன ஒரு கலியுகம் பாத்தயா பொடுசில்லாம் கேர்ல்பிரண்ட் வச்சிருக்கு! ஆனா நான் உன் ஒருத்தன கட்டி மேய்கவே கதறிடிருக்கேன்! இதுல எங்க கேர்ல்பிரண்ட்! சரி வா நான் பில் பே பண்ணிட்டேன் கிளம்புவோம்" என்று தன் டெய்லி புலம்பல் கோட்டாவை முடித்து முற்று புள்ளி வைத்தான்.

               ▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫

"ஏய் நிரோ என்னடி இது? இந்த ரூம்ல யாருமே இல்ல!! உன் ஆள் எங்க? நல்லா பாரு நாம கரெக்டான ரூம்கு தான் வந்திருக்கோமான்னு!" என்று தன் தோழியை பார்த்தாள் நைநிதா.

"264, செகண்ட் பிளோர்! இந்த ரூம் தான் அந்த ரிசப்ஷனிஸ்ட் சொன்னா" என்று நிரோ கூற "ஒரு வேல நம்மல பழிவாங்க அந்த ரிசப்ஷனிஸ்ட் தப்பான ரூம் நம்பர சொல்லி இருப்பாளோ?!" என்றாள் நைநி.

"அப்படி மட்டும் இருக்கட்டும் செத்தா அவ!" என்று கடுகடுத்துவிட்டு ரிசப்ஷன் நோக்கி நடந்தாள் நிரோ.

"அய்யய்யோ! தூங்கிட்டிருந்த சிறுத்தைய துருப்பிடிச்ச கம்பியால தூண்டி விட்டுட்டாளே!! இனி அவ அவ்ளோ தான்" என முனுமுனுத்தபடி பின் தொடர்ந்தாள் நைநிதா.

அதே சமயம் சந்திருவும் வர்ஷனும் வாசல் நோக்கி நகர்ந்தனர்.

"ஒருவர் நெருங்க
ஒருவர் விலக
இருவர் பாதையும்
நேர்மறையாக
எதிர் கொள்வார்களா
இவ்விருவரும்?"

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top