💗பகுதி 11💗
நிரோவும் நைநிதாவும் தங்கள் குலதெய்வங்களை வேண்டிக் கொண்டிருக்க அந்த ரிஷப்ஷனிஸ்ட் தனது கணினியில் இருந்து விழிகளை பிரித்து அவர்களை பார்த்து "ஹீ ஈஸ் நாட்.." என கூறிக் கொண்டிருக்கும் போதே அவள் அருகில் இருந்த தொலைபேசி அலற "எக்ஸ்கியூஸ் மீ" என்றுவிட்டு அந்த கால்-ஐ அடெண்ட் செய்தாள்.
ஒரு ஐந்து நிமிடம் விடாது மந்திரம் ஓதிவிட்டு ரிசீவரை கீழே வைத்தவள் நிமிர்ந்து நிரோ மற்றும் நைநிதாவை பார்த்துவிட்டு "ஐ எம் சாரி! ஐ மஸ்ட் அடண்ட் த கால்! இட் ஈஸ் ஏன் இம்பார்டண்ட் ஒன்" என்று பொய்யான வருத்தக் குரலில் கூறினாள்.
"நோ பிராபிளம்! பட் நாங்க கேட்டது..." என நிரோவும் அதே குரலில் கூற " ஓ யா! ஹீ....."
இப்போது அவளது கை பேசி அலறிது. மொபைலை எடுத்து பார்த்தவள் இந்த தடவை 'எக்ஸ்கியூஸ் மீ' கூட கேட்கவில்லை. மொபைலில் வாயை புதைத்தாளா இல்லை வாய்க்குள் மொபைலை புதைத்தாளா என யோசிக்கும் அளவிற்கு அதை கடிகடியென்று கடித்துக் கொண்டிருந்தாள்.
இங்கு நிரோவும் நைநிதாவும் எந்த நிமிடமும் வெடிக்கவிருக்கும் எரிமலையாய் கொதித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவளோ இவ்விருவரையும் சட்டை செய்யாது ஒரு பென்சிலால் காதை குடைந்து கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தாள்.
பொறுமை இழந்த நிரோ அவள் எதிரில் இருந்த அந்த ஹாஸ்பிடல் விசிடிங் கார்டில் உள்ள நம்பரை தன் கை பேசியில் டயல் செய்துவிட்டு விடாது போனில் அளந்து கொண்டிருந்த அவளின் காதில் விழும் அளவிற்கு பேசத் துவங்கினாள்.
"ஹலோ! ஈஸ் இட் ராஜ்மோஹன், த ஓனர் ஆப் இந்தர்ஜித் ஹாஸ்பிடல்?" என கேட்க இவள் என்ன செய்கிறாள் என்று நைநிதாவும் அந்த ரிஷப்ஷனிஸ்ட்டும் அவளை விசித்திரமாக நோக்கினர்.
".................."
"சார் நான் உங்க ஹாஸ்பிடல்ல இருந்து தான் பேசுறேன்!! இங்க அட்மிட் பண்ணிருக்க என்னோட ரிலேஷன் எந்த ரூம்ல இருக்காருனு கொஞ்சம் சொல்லுங்களேன்!!" என்று அவள் கூற நைநிதாவிற்கு புரிந்து விட்டது நிரோ அரங்கேற்ற போகும் நாடகத்தை பற்றி. அந்த ரிஷப்ஷனிஸ்ட் தான் கஜினி அளவிற்கு முகபாவனைகளை காட்டிக் கொண்டிருந்தாள்.
"................."
எதிர்முனையில் இருந்து தான் எதிர்பார்த்த பதில் வந்தது போல் உதட்டில் புன்னகை ஒற்றிக் கொள்ள அவள் தொடர்ந்தாள், "எஸ் சார் ஐ நோ!! இந்த மாதிரி டீடெயில்ஸ் எல்லாம் ரிஷப்ஷனிஸ்ட் கிட்ட தான் கேக்கனும்!! பட் உங்க ஹாஸ்பிடல்ல அந்த மாதிரி ஒருத்தர் இல்லன்னா என்ன பண்ண?? பார் எக்சாம்பில் நாம சாப்பிடுற சாப்பாட்டுல உப்பில்லனா அத செஞ்சவங்ககிட்ட தான கேட்க முடியும்!!" என கூறி நக்கலான பார்வை ஒன்றை அந்த ரிஷப்ஷனிஸ்ட் மீது வீச அவளோ "பிலீஸ் மேம்!! ஐயம் சாரி மேம்! இனிமே இது மாதிரி நடக்காது மேம். சார்-க்கு தெரிஞ்சா என் வேலையே போயிடும் மேம்" என கெஞ்ச மனமிறங்கினாள் நிரோ.
"எக்ஸ்கியூஸ் மீ எ செகண்ட் " என்று மொபைலில் பேசிவிட்டு அந்த ரிஷப்ஷனிஸ்ட் பக்கம் திரும்பினாள் நிரோ.
"எதுக்காக இப்போ மன்னிப்பு கேட்குரீங்க! தப்பு செஞ்சிருக்கோம்னு தெரிஞ்சதுனால தான அப்புறம் தெரிஞ்சே ஏன் அதை செய்யுறீங்க!! பொதுவா ரிஷப்ஷனிஸ்ட் -ங்குறவங்க கஸ்டமர்ஸ்கு உதவ, அவங்களுக்கு தெரியாத டீடெய்ல்ஸ் பத்தி புரியவச்சு ஹெல்ப் பண்ணறவங்க அதுலயும் நீங்க ஹாஸ்பிடல்ல வர்க் பண்றீங்க!! இங்க அட்மிட் ஆகி இருக்கவங்களோட ரிலேஷன்ஸ் அவங்களுக்கு என்னாச்சோ ஏதாச்சோனு பயத்துல வருவாங்க அப்ப நீங்க இந்த மாதிரி நடந்துகிட்டா!! " என நிரோ ஆவேசித்தாள்.
"சாரி மேம் இனிமே இப்படி திமிரா நடந்துக்க மாட்டேன்" என்று கூறி தலை குனிந்தாள் அந்த ரிஷப்ஷனிஸ்ட்.
"சரி விடுங்க ரொம்ப பீல் பண்ணாதீங்க! இனிமே இப்படி நடந்துக்காம பார்துக்கங்க " என்றாள் நிரோ.
"அதெல்லாம் இருக்கட்டும் இப்ப அந்த ஓனர் கிட்ட என்ன சொல்லுவ?" என்று நைநி கேட்க "எந்த ஓனர்?" என புரியாமல் விழித்தாள் நிரோ.
"எங்க ஹாஸ்பிடல் ஓனர்" என சந்தடி சாக்கில் ரிஷப்ஷனிஸ்ட் கூறவும் நைநி "ஹூம்!! சரியா போச்சு" என தலையில் அடித்துக் கொண்டாள்.
"ஹீ! ஹீ! ஹீ! ஓ அவரா " என வலிந்துவிட்டு கை பேசியை காதில் வைத்தாள் நிரோ.
"சாரி சார் உங்க ஹாஸ்பிடல்ல லெப்ட் சைட் ரிஷப்ஷன் இருக்குறத இப்போ தான் பார்தேன்! நான் அத இவ்வளவு நேரம் ரைட் சைட் தேடிட்டிருந்தேன் மை பேட்!! சாரி பார் டிஸ்டர்பிங் யூ!" என்றுவிட்டு உடனே கால்-ஐ கட் செய்தாள்.
நிமிர்ந்து பார்க்க அங்கே நைநியும் அந்த ரிஷப்ஷனிஸ்ட்டும் 'ஞே' என்றபடி அவளை பார்த்து விழித்தனர்.
"இப்பவாவது நான் கேட்ட டீடெய்ல்ஸ் சொல்வீங்களா?" என நிரோ வினாவ இயல்பு நிலை திரும்பிய அவள் "சியூர்! எஸ் மேம்! கன்டீப்பாக சொல்லுறேன் மேம்! நீங்க எவ்வளவு அட்வைஸ் பண்ணீங்க கன்டீப்பாக உங்களுக்கு..." என வலவல என அறுக்க ஆரம்பித்தாள்.
'அடிங்!! நானே என் ஆளு இருக்காரா இல்லையானு ஒரே பதற்றத்தோடு இருந்தா இவ வேர நொய்நொய்னுட்டு!! ஏதோ ஹீ ஈஸ் நாட் -னு சொன்னாலே!! ஒரு வேல... ' என மனதினுள்ளே பற்பல கற்பனைகள் கரை புரண்டு ஓட அதற்கு அணை போடும் படி இருந்தது நைநிதாவின் கேள்வி.
"ஏம்மா நீ சொல்லப்போறியா இல்ல இப்படியே பேசி கொல்லப்போறியா!!?" என்று கூற பளிச்சென பல்லை காட்டி "தோ சொல்லுறேன் மேம்! ஹீ ஈஸ் நாட் எட் டிஸ்சார்சுடு" என்றாள் அவள்.
அதை கேட்டவுடன் தான் இருவருக்கும் நிம்மதி பிறந்தது. மேலும் தங்களது நேரத்தை வீணாக்காமல் தன்னவனது அறை நோக்கி விரைந்தாள் நிரோ.
அவளை இருகரம் பற்றி நிருத்த திரும்பிய அவள் முன் நைநிதா நின்றிருந்தாள்.
"ஏன் நைநி என்ன தடுக்குற நான் அவர உடனே பார்தாகனும்!!" என ஏக்கத்துடன் நிரோ கூற "ஏய் நான் உன்ன தடுக்கலன்னா போய் லிப்ட் டோர்ல மோதிருப்ப! கொஞ்சம் நிமிர்ந்து பாருடீ " என்றாள் நைநிதா.
அப்போது தான் தனக்கும் மூடியிருக்கும் லிப்ட் கதவிற்கும் இரண்டு இஞ்ச் இடைவெளி மட்டுமே இருப்பதை பார்த்தாள் நிரோ.
"அது... ஒரு ஆர்வத்துல.. ஹீ! ஹீ!" என நிரோ தலை சொறிய "முத்திருச்சு டீ!! முத்திருச்சு!!" என்றாள் நைநிதா.
இருவரும் கிட்ட தட்ட பத்து நிமிடங்கள் நின்றிருப்பர் ஆனால் லிப்ட் கீழே வருவதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை.
"ஏன்டீ பள்ளிவாசலே திரந்திடும் போல இன்னும் இந்த லிப்ட் வாசல் திறக்கலையே!!" என்று நைநி கூற "போடீ இதுக்கு மேல முடியாது நான் ஸ்டேர்ஸ்ல ஏறி போக போறேன் போ" என்று கூறி படிகட்டுகளின் அருகே சென்றாள்.
"அடியேய் !! உன் ஆள் ரூம் பிப்டீன்த் பிளோர்டீ!! பலனி மலை உச்சி!! அவ்வளவு தூறம் என்னால ஏற முடியாது டீ" என கூறிக் கொண்டிருக்க அதை சட்டை செய்யாது ஏறத் துவங்கினாள் நிரோ.
"காதல் வந்தா கண்ணு தெரியாதுன்னு சொல்லுவாங்க!! ஒன்னு இரண்டு பிளோர் தெரியலனா பரவால்ல இங்க பத்து பதினஞ்சுல்ல தெரிய மாட்டங்குது!! இவ கூட சேந்து என்னையும் ஏற வைக்குறாளே!!" என புலம்ப "உன்ன யார் என் கூட வர சொன்னது! நீ வெயிட் பண்ணி லிப்ட்லயே வரலாம்" என்று நின்று நைநியை பார்த்து கூறினாள்.
"பரவால்ல டீ உனக்காக இதுகூட செய்ய மாட்டனா"
"ஏய்! போதும்டீ! எதுக்கு இவ்வளவு பில்டப்பு! நீ ஏன் இவ்வளவு அலுத்துக்குறன்னா படிகட்டுல ஏறுனா உன் கோடிங் எல்லாம் ....." என நிரோ இழுக்க தன் குட்டு வெளிபட்டதை மறைத்து "சீக்கிரம் ஏறு இன்னும் நிறைய தூரம் போனும்" என்று நிரோவை ஓட்டினாள்.
அவர்கள் இவ்வாறு ஒருவரையொருவர் கலாய்த்து கொண்டே அவ்விடத்தைவிட்டு நகர்ந்து படியேறி மேலே சென்றுவிட அந்த லிப்ட் திறந்தது.
அதிலிருந்து வெளிவந்தது வேறு யாருமல்ல! நம் சந்திருவும் வார்ஷனுமே!!!!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top