💗பகுதி 10💗
பேருந்தில் இருந்து இறங்கி நிரோவும் நைநிதாவும் ஹாஸ்பிடலை நோக்கி நடக்க துவங்கினர்.
"பேசாம அவங்ககிட்ட உண்மைய சொல்லிருக்கலாம் நிரோ!! அவளுங்களுக்கு நாம பொய் சொல்லிட்டு இங்க வந்திருக்க விஷயம் தெரிஞ்சதுனா அவ்வளவு தான்!! நினைக்கவே பயமா இருக்கு டீ!!" என்றுவிட்டு அவ்வாறு நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என கற்பனை செய்து பார்த்தவள் போல் பயந்த கண்களோடு உடல் சிலிர்த்தாள் நைநிதா.
"ஏன்டீ ஏன்!! இல்ல ஏன்னு கேட்குறேன்!! சும்மா கிடக்குற சங்க ஏன் ஊதி கெடுக்க சொல்லுர!! அவளுக சும்மாவே ஓட்டு ஓட்டுனு ஓட்டுவாளுக இதுல நான் லவ் பண்ணுற விஷயம் தெரிஞ்சதுனா அப்புறம் செலவில்லாம நம்ம காலேஜ் செவுத்துல எனக்கு போஸ்டர் ஒட்டிடுவாளுங்க!! சொந்த காசுல சூனியம் வைச்சுக்க எனக்கு ஆசை இல்ல சாமி!!" என தலை மேல் கை கோர்த்து கும்பிட்டாள் நிரோ.
"ஹ! ஹ! ஹ! ஹூம் நல்லா உசாரா தான் இருக்க நீ!! நான் கூட என்னமோ நினைச்சேன்!! படத்துல சொல்லுர மாதிரி காதல் உன் கண்ண திறந்துடுச்சுடா குமாரு!! தேரிட்ட போ!!" என்றாள் நைநிதா.
"ஆஹா!! அங்க மட்டும் என்னவாம்!! என் கூட ஹாஸ்பிடல் வர்றதுக்கு எதுக்கு டீ இத்துன கோட்டிங் குடுத்திருக்க?" என கேலிப் பார்வையோடு நிரோ கேட்க 'போச்சு! மாட்டிகிட்டியே நைநி!! ' என மனதில் புலம்பினாலும் வெளியில் ஏதும் காட்டிக் கொள்ளாமல் நிரோவை நோக்கி, "ஏன்? இங்க என்ன? அதுமில்லாம நீ சொன்ன பொய்ய நம்ப வைக்கத்தான் இவ்வளவு போராட்டமும்!! ஆனா! ஆனா!! நீ என்ன ஒரு நொடில சந்தேக பட்டுட்டல்ல!!" என்று சோகத்தை பிடித்து முகத்தில் ஒத்திக் கொண்டாள்.
'யப்பா!! புள்ள என்னாமா ஆக்ட் பண்றா!! ' என நிரோ வியந்து கொண்டிருக்கையில் நைநியோ 'விநாயகா என் நடிப்ப மட்டும் அவ நம்பிட்டான்னா டெய்லி உனக்கு வைக்குற பிரசாதத்த திருட்டுத் தனமா சாப்பிடுறத இன்னையோட நிறுத்திக்குறேன்' என கடவுளிடம் டீலிங் பேசிக் கொண்டிருந்தாள்.
"அய்யடா!! டிராமா குயின் போதும் இந்த அபலைப் பெண் நாடகத்த கொஞ்சம் நிறுத்து!! எலி ஏரோபிலேன் ஓட்டுற காலம் வரும்போது நம்புறேன் நீ சொன்னதெல்லாம் உண்மைனு!! நீ யாருக்காக இவ்வளவு பவுடர் பூசுன, எதுக்காக இவ்வளவு கரிசணம் காட்டி என் கூட வர்றன்னு ஆள் டீடெயில்ஸ் ஐ நோ!!" என்றாள் நிரோ.
"என்னடி உழரிட்டு இருக்க! என்ன? என்ன டீடெயில்ஸ்? அப்படிலாம் எதுவும் இல்ல!!" என்று கூறினாலும் மனதில் 'சிஐடி கிட்ட கூட பொய் சொல்லி மாட்டாம தப்பிச்சிடலாம் போல ஆனா இந்த பிரண்ட்ஸ்கிட்ட இருந்து தப்பிப்பது மிகவும் கடினமப்பா! '.
"சொல்லட்டா! நான் சொல்லட்டா! வேனாம்!! எதுக்கு பா! நீ வர்ஷன்னு பேர் வைச்சிருக்கவங்கள சைட் அடிக்கத் தான் என்கூட வர்றன்னு நான் எதுக்குப்பா சொல்லப் போறேன்!!" என்று கூறி நைநியை நோக்க அவளோ இவள் பார்வை பட்டு பாம்பு போல் நெளிந்தாள்.
"ஹீ! ஹீ! ஹீ! எப்படி டீ கண்டுபிடிச்ச!!"
"ஆமா இது பெரிய சிதம்பர ரகசியம்!! அதான் அன்னைக்கே ஹாஸ்பிடல்ல பார்தனே!! அது மட்டுமில்ல.. உனக்கு பில்டிங் ஸ்ராங்கா இருந்தாலும் பேஸ்மண்ட் வீக்கு!! முகத்துல ஒரு ரியாக்ஷன் காட்டாம மறைச்சாலும் உன் கை கால் நடுக்கம் காட்டி கொடுத்துடுச்சு டீ " என்று சிரித்தாள் நிரோ.
இவ்வாறு பேசிக் கொண்டே இருவரும் ஒரு வழியாக டிராபிக் அதிகமுள்ள ரோட்டை கடந்து ஹாஸ்பிடல் முன் வந்து நின்றனர்.
நிரோவின் இதயத் துடிப்பு இருமடங்கு அதிகரிக்க தொடங்கியது. அன்றைய தினம் சந்திருவின் ஹாஸ்பிடல் ரூமில் நடந்த நிகழ்வுகள் யாவும் நினைவிற்கு வர முகம் குங்குமமாய் சிவந்தது.
நிரோ நின்றுவிட்டதை கண்ட நைநிதா அவளருகே வந்து "ஏன்டீ இங்கயே நின்னுட்ட? வா போலாம் உள்ள " என்று அவள் கைகளை பற்றி உள்ளே அழைத்துச் செல்ல முற்பட்டால்.
"ஏய்! ஏய்! ஒரு நிமிஷம் இரு டீ!!" என்றாள் நிரோ.
'அச்சோ! அதுக்குள்ள மனசு மாறிட்டாளோ!! போச்சு! கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம போச்சே!! ' என மனதினுள் புலம்பினாள்.
"ஏன்டீ? என்னாச்சு? அவர பார்க்க தான வந்தோம்! இப்போ ஏன் உள்ள வரமாட்டங்குற!! நிரோ நாம எப்ப எந்த ஒரு முடிவெடுத்தாளும் அதுல நல்லா கன்னு மாரி இருக்கனும். எப்பவும் அதுல இருந்து மாறக் கூடாது" என தான் படத்தில் பார்த்த பிட்டுகளை எல்லாம் ஒன்று திரட்டி ஒப்பித்துக் கொண்டிருந்தாள் நைநிதா.
நிரோவோ அவளை ஏதோ ஒரு விசித்திர பிராணியை பார்பது போல் பார்துக் கொண்டிருந்தாள்.
"நைநி உனக்கு ஒன்னும் ஆகலல்ல!! எதுக்கு இப்போ உழரிட்டு இருக்க!! நார்மலான மனுசங்க யாரையாவது உடம்பு சரியில்லாதவங்கள பார்க்க போனா எதுனா வாங்கிட்டு போவாங்க! சரி விடு அதுலாம் உனகெப்படி தெரியும்!! நீ தான்.... நான் ஏதும் சொல்லலப்பா உன்ன பத்தி!!"
"அதான் ஆறிப்போற அளவுக்கு டீய ஆத்திட்டியே! இதுக்கு மேல என்ன இருக்கு! " என்று அவளை முறைத்தாள் நைநிதா.
"சரி! சரி கோச்சுக்காத வா ஏதாவது வாங்கிட்டு வரலாம்" என்று விட்டு இருவரும் அருகில் இருந்த மாலிற்கு சென்றனர்.
நைநிதா உள்ளே நுழைந்ததுமே புட் கோர்ட் பக்கம் செல்ல நிரோ தலையாட்டிவிட்டு பிளவர் ஷாபிர்குள் நுழைந்தாள்.
அங்கே தான் எத்தனை எத்தனை வண்ண மலர்கள்!! கண்டவுடனேயே காதல் கொள்ள செய்யும் வசீகரத்தை தன்னகத்தே கொண்டிருந்தது. அதன் தன்மை அறிந்ததால் தானோ அன்றே கணவன்மார்கள் தன் மனைவியை மலர் கொண்டு மயக்கும் விந்தை கற்றனரோ!!
நிரோவிற்கு எதை தேர்வு செய்வது எதை விடுவது என தெரியவில்லை. அனைத்தையும் ஆராய்ந்து இறுதியில் இரண்டு பொக்கேவில் நின்றாள்.
ஒன்று வானத்து பஞ்சு மேகங்களை பிச்சி பூவாக தொடுத்தார் போல வெண்மையாக இருந்தது.
மற்றொன்று.... அதன் அழகை வார்த்தைகளால் விளக்க முடியாது. சிகப்பு... இதயத்திற்கே உரிதான நிறம். காலம் காலமாய் காதலர்களுக்காகவே பூத்துக்குளுங்கும் பூவது.... ரோஜா!!
பார்த்தவுடனே அவள் மனதை பறித்து விட்டது அந்த பொக்கே!! அதை வாங்கிக்கொண்டு அடுத்த கடையை அடைந்தாள். அங்கு பிறந்த நாள் முதல் காதல் வரை அனைத்திர்கான கிரீடிங் கார்ட்ஸ் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது.
ஆனால் அவள் கண்கள் நிலை கொண்டு நின்றது ஒன்றின் மேலே!! அது என்னவாக இருக்கும் என நினைக்கின்றீர்களா!! இதோ!!
பூட்டி வைத்த நினைவுகள் நொடியில் வெளிவர பூரித்து நின்றாள் நிரோ.
அதை எடுத்து தன் விரல்களால் மிருதுவாக வருடிக் கொண்டே அருகில் இருந்த டேபில் மேல் அமர்ந்தாள். அதை விரிக்க உள்ளே வெண்நிற தாள் இருக்க அதில் என்ன எழுதுவது என யோசித்தாள்.
உன்னை பற்றி எண்ணும் போதெல்லாம் என் எண்ண அலைகள் எட்டுத்திக்கும் எழும்ப அதை எழுத நினைக்கையில் வருவதோ நான்கே வரிகள் !!!
மாலிற்கு வெளியே நைநிதாவை நிரோ சந்திக்க அவளோ, "என்னடி பொக்கேலாம் வாங்கிருக்க!! லவ் பிரபோஸ் பண்ண போரியா என்ன!!" என சிரித்துக் கொண்டே கேட்க "அமைதியா வாடி போலாம் டைமாச்சு!" என அவளை இழுத்துக் கொண்டு நடந்தாள் சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு.
இருவரும் ஒரு வழியாக ஹாஸ்பிடளை அடைய முன் சென்ற நிரோவை நிறுத்தினாள் நைநி. அவள் கேள்வியுடன் பார்க்க "இல்ல இவ்வளவு தூரம் வந்துட்டோம் ஒரு வேல அவர் டிஸ்சார்ஜ் ஆகி போயிருந்தா!! ஆல்ரெடி டென் டேஸ் ஆச்சு அதான்!!" என வார்த்தைகளை மென்று முழுங்கினாள்.
நிரோவிற்கும் அந்த பயம் உண்டு ஆனாலும் அவள் அதை வெளி காட்டாவில்லை.
"பி பாசிடிவ் டீ!!" என்றுவிட்டு மனதில் பயம் தொற்றிக் கொள்ள ரிஷப்ஷனிஸ்டிடம் சென்றாள்.
"எக்ஸ் கியூஸ் மீ! இங்க சந்திருவிகேஷ்-னு ஒரு பேஷன்ட் ஆக்சிடன்ட் ஆகி அட்மிட் ஆகியிருந்தார். அவர் டிஸ்சார்ஜ் ஆகிட்டாரானு பார்த்து சொல்லுறீங்களா.." என்று நிரோ கேட்க "ஒன் மினிட் பிலீஸ் " என்றுவிட்டு தன் முன் இருந்த கம்ப்யூட்டரை தட்டினார் அந்த பெண்.
தேடிய பதில் கிடைத்தவுடன் நிமிர்ந்து நிரோவையும் நைநியையும் பார்த்து, "ஹீ ................"
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top