💗 பகுதி 1 💗

சோர்ந்திருந்த சூரியன் தன் சோம்பலை முறித்து காலை கதிர்களை பரப்ப அது அவ்வினிய காலை பொழுதில் ரவிவர்மனின் கைவண்ணமாய் அழகோவியமாய், பாய்ந்து கொண்டிருக்கும் நகரப் பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டிருந்த அத்தேவதை மேல் தெறிக்க... அவள் ஸ்பரிஸம் பட்டு அவை மெய் சிலிர்து புன்முறுவளிட்டன.

ஆனால் அவளோ அவ்வபோது தன் முகத்தை வருடிச் செல்லும் கற்றை முடிகளை நகர்த்தி விட்டு நகரழகை ரசித்துக் கொண்டிருந்தாள்.

ஆம்! அவள் தான் நம் கதையின் நாயகி நிரோஷிதா. கார்முகில் என்னும் சிறிய கிராமத்தில் பிறந்து பிளஸ் 2 வில் நல்ல மதிப்பெண் பெற்றதால் சென்னையில் மிகப்பெரிய கல்லூரியான நாயக் மல்டி பிரௌபஷ்னல் இன்ஸ்டிடியூட் இல் தன் நான்கு வருட மல்டி பிரௌபஷ்னல் கோர்சை முடித்துவிட்டு தற்போது இறுதி ஆண்டு தேர்வு எழுத ஆயத்தமாகிக் கொண்டு இருக்கின்றாள்.

காலை 8 மணிக்கு தொடங்கும் தன் கல்லூரிக்கு தன் தோழி நைநிதா வோடு பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போதுதான் அச்சம்பவம் நிகழ்ந்தது.

"ஏய் நிரோ அந்த மங்கிய பாரு இங்கயே எப்படி பாத்துட்டு இருக்கான்" என தன் அடிக்குரலில் நிரோஷிதாவிடம் கூறினாள் நைநிதா.

ஆனால் அவளோ வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்ததால் நைநிதா கூறியதை சரியாக கேட்கவில்லை.

"என்ன? யார்? யார சொல்லுர ஹூம்?" என வினவினாள் நிரோ.

"அதோ அங்க முன்னாடி கம்பிய பிடிச்சுட்டு நிக்குது பாரு ஒரு எருமை மாடு அவன தான்! இவனுக்கு இதே வேலையா போச்சு... எருமை! எருமை " என்று கடுகடுத்த குரலில் கடிந்து கொண்டிருந்தாள் நைநிதா.

அவள் கூறியது போலவே இவர்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கு இரு இருக்கைகள் தள்ளி இருந்த கம்பியை இறுக பற்றிக்கொண்டு நின்றிருந்தான் அவன். நடுவீட்டில் குடைபிடிப்பார் என்பார்களே அவர்கள் இனத்தை சேர்ந்தவன் போல, ஏனெனில் குளிந்த காற்று வீசுகின்ற இக்காலை வேலையிலும் குப்பை போல் குவிந்திருக்கும் கூட்டத்திலும் காமெடி பீஸ் போல் கருப்பு கூளிங்கிளாஸ் போட்டுக் கொண்டு நின்றிருந்தான்.

அவன் மட்டுமல்ல இது போல் சி(ப)ல இளைஞர்கள் இவ்வாறு தான் செய்து கொண்டிருக்கின்றார்கள். கூளிங்கிளாஸ் அணிவது கெத்து தான் ஆனால் அதற்கொரு வரைமுறை வேண்டாமா!!

அவர்களது உயர அளவைவிட சற்று நீளமான பேண்டை போட்டுக்கொண்டு தரதரவென இழுத்தது கொண்டு நடப்பது, கலர் கலர் கர்சீபை கழுத்திலும் கையிலும் கட்டிக் கொள்வது, பிராண்டட் மொபைல் பேனலை லோகல் செட்டிர்க்கு போட்டுக்கொண்டு சீன் போடுவது என பல்வேறு பாஷனைகளை தன் பாக்கெட்டில் வைத்திருக்கின்றார்கள்!!
அவர்களை கூறி தப்பில்லை சி(ப)ல பெண்களும் அதைத்தான் விரும்புகின்றார்கள்.

நைநிதாவின் கடுப்பான உணர்வு வெளிபாட்டிற்கு நேர்மாறாக இருந்தது நிரோவின் புன்னகை. ஆம்! அவனை நினைத்தால் அவளுக்கு சிரிப்பு தான் வந்தது. அவனும் கடந்த இரு ஆண்டுகளாக இவர்களை தினமும் பின் தொடர்ந்து தான் வருகின்றான் ஆனால் அவன் பிடித்து கொண்டிருக்கும் கம்பியோடே அவனது எல்லை முடிந்துவிடும். இவர்களை பார்த்து பல் இளிப்பது, தன் மொபைலில் காதல் பாடல்களை போட்டு பல்வித உணர்ச்சிகளை காட்டுவதில் சிவஜியையே தோற்கடித்து விடுவான் போல!!

"பசங்கன்னா அப்படி சைட் அடிக்க தான் செய்வாங்க. அதுக்கு ஏன் அவன இப்படி போட்டு திட்டிட்டு இருக்க?" என்று விழிகளில் கோபக் கனைகளை வீசிக் கொண்டிருந்த நைநிதாவை பார்த்துக் கேட்டாள் நிரோ.

இதை கேட்ட மறுநொடி மின்னலின் வேகத்தை மிஞ்சும் வேகத்தில் தன் தலையை திருப்பி நிரோவை நோக்கினாள் நைநிதா. கொளுந்துவிட்டு எரிந்த நெருப்பில் குளிர்ந்த நீரை ஊற்றியது போல் அவள் கோபம் மறைந்து தன் விழிகளை அகழ விரித்து நோக்கினாள்.

அதை கண்டு பூத்த சிரிப்பை இதழ் கடித்து விழுங்கி விழிகளில் குறும்பு பார்வையுடன் அவளை நோக்கி, "ஏன்? ஏன் என்ன அப்படி பாக்குற? நான் சொன்னது உன்மை தான. இன்பாக்ட் இதுல நீ தான் முக்கிய குற்றவாளி!" என்றாள்.

"ஏய்! என்னடீ சொல்லுர!!" என அதிர்ந்தாள் நைநிதா.

"ஆமா நான் உண்மைய தான் சொல்லுறேன்! சரி இதுக்கு பதில் சொல்லு, அவன் உன்ன பார்க்குறது உனக்கெப்படி தெரியும்?" என்று நிரோ கேட்க, "என்னடீ கேள்வி இது அவன் பார்குறத தான் நான் தினமும் பார்குறனே!!" என்றாள் நைநிதா.

"அப்போ நீ பாக்குறத பார்த்துட்டு அவனும் உன்ன மாதிரி நீ தான் அவன டெய்லி பார்க்குறனு நினைச்சிருந்தான்னா?" என்று நிரோ கூற, நைநிதா முகத்தில் பல்வேறு உணர்ச்சிகள் தையதக்கா என தாண்டவமாடின.

அதிர்ச்சியில் தொடங்கி புரிதல் பிறந்து குற்றவுணர்வாய் திரிந்து இறுதியில் அனைத்தும் இறந்து கன்பியூஷன் குருவிகள் தலை சுற்றி பறந்தன.

இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நிரோவால் பீரிட்டு வந்த சிரிப்பை அதற்க்கு மேல் அடக்க முடியாமல் வயிற்றை பிடித்து கொண்டு விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.

முதலில் ஏதும் புரியாமல் அவளை பார்த்த நைநிதாவிற்கு பிறகு தான் நிரோவின் இன்னிலைக்கு தான்தான் முக்கிய காரணி என்று புரிந்தது.

"உன்ன!!!!" என்று கூறி நிரோவின் தலையில் ஒரு கொட்டு வைத்து, "நான் நீ சொன்னத நம்பி நிஜமாலுமே என்மேல தான் தப்போனு நினைச்சுட்டேன் ஒரு நிமிஷம் தெரியுமா!" என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கூறினாள் நைநிதா.

"சரி விடு நைநி குட்டி ரொம்ப பீல் பண்ணாத! மத்தவங்க சந்தோஷத்துக்காக நாம எதவேனும்னா தியாகம் செய்யலாம்!" என்று கூறி பற்களை காட்டினாள் நிரோ.

"ஏன்டீ பேசமாட்ட அதன் என்ன வைச்சு நல்லா செஞ்சுட்டியே!!" என போலி கோபத்தில் பார்த்தாள் நைநி.

இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டிருக்க நிரோவிடம் "ஹய்! இன்னைக்கு உங்க வீட்டுக்கு கால் பண்ணியா? அம்மா நேத்தே கால் பன்னிருந்தாங்க, இரண்டு நாளா நீ கால் பண்ணவே இல்லியாமே?" என்று அவளை குற்றபார்வையோடு நோக்கினாள் நைநிதா.

அதற்க்கு நிரோ சிரித்துக்கொண்டு "ஹ! ஹ! ஹா! மேடம் அங்க கம்பிளய்ண்ட் பண்ணிட்டாங்களா! நான்....".

நிரோ தான் கூறிக் கொண்டிருப்பதை தொடரும்முன் அவர்கள் பயணித்து கொண்டிருந்த பேருந்து திடீரென தடம் மாறியதது. அனைவரின் முகத்திலும் பயம் ஒட்டிக்கொண்டது. பள்ளிக்கு செல்லவிருந்த சிறுவர்கள் அழத்தொடங்கினர்.

அப்போது இடது புறம் இருந்த சுவற்றில் பேருந்து மோதி.......

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top