💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-33

"அது ஒரு பெரிய கதை வருண். உனக்கு நான் தனியா சொல்றேன். இவங்க மஞ்சு எனக்கு அண்ணியா வர போறவங்க. என் அண்ணனை எனக்கு திரும்பி தர போறவங்க. சரி அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும் நாம வெளிய போகலாம். வாங்க." என்று வெளியே அழைத்து வந்தாள்.

"அப்பா சாப்டிங்களா?"

"நான் சாப்பிட்டேன் டா டேப்லட் போடணும்ல? உங்க அம்மா கரெக்டா போன் பண்ணி கேட்பா." என்று சிரித்தார்.

"சரிப்பா. நீங்க போய் கொஞ்ச நேர் ரெஸ்ட் எடுங்க." என்று ஒரு அறையை காட்டினாள்.

"வருண் எனக்கு ரொம்ப பசிக்குது. சாப்பிடலாமா?" என்றதும்.

"எனக்கும் பசிக்குது மா. ஆனா இங்க கிச்சன் எங்கன்னு கூட தெரியலையே?" என்றான் விழிகளை சுழற்றியபடி.

"எல்லோரும் இங்க தானே இருக்கிங்க... எனக்கு பசிக்குது. சமையல் ரூம்க்கு எப்படி போகணும்?" என்றாள் தாரு சுற்றி பார்த்து கொண்டே.

தாரணியின் கரத்தை பிடித்து மெதுவாக இழுத்து செல்வது போல இருக்கவும், "எங்க கூட்டிட்டு போறீங்க?" என்றாலும் வருணை உடன் வரும்படி சைகை செய்தபடி நடந்தாள்.

அங்கே ஒரு கூடத்தில் அந்த காலத்து மர வேலைபாடுகளுடன் கூடிய அழகிய பெரிய நீளமான சாப்பாட்டு மேசை இருந்தது. முப்பது பேர் அமர்ந்து சாப்பிடும் அளவுடையது போல் இருந்தது. அதில் நிறைய வகை பதார்த்தங்கள் பரப்பி வைக்க பட்டிருந்தன.

"நாங்க ரெண்டு பேரு தான் இருக்கோம். இதுக்கு இவ்ளோ சாப்பாடா? எனக்கு சாப்பாடு வேஸ்ட் பண்றது பிடிக்காது." என்றாள் முகத்தை சற்று கடுமையாக வைத்து கொண்டு.

"அக்கா! தேவையான அளவு சாப்பிட்டு முடிச்சவுடனே மீதியை அடுத்த ஊர்ல இருக்க ஆசிரமத்துக்கு போய்டுமாம். கோபப்பட வேண்டாம் சித்ரா ன்னு சொல்றாங்க." என்றதும் தாரணியும் வருணும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

"அதுவும் இல்லாம உங்களுக்காக எல்லோரும் போட்டி போட்டுக்கிட்டு ஆசையா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகை பதார்த்தம் செஞ்சுருக்காங்க. சாப்பிட்டு பாருங்க." என்றதும் இருவரும் அமர்ந்து சாப்பிட தொடங்கினர்.

தாரணி ஒரு நொடி தயங்கவும், "என்ன தாரு? ஏன் சாப்பிடலை? பிடிக்கலையா"  என்றான் வருண்.

"இல்ல வருண். பாப்பாவை வேற அங்க விட்டுட்டு வந்துட்டோம். சாப்பிட்டாளான்னு தெரியலை." என்றாள் கவலையாக.

"நீ பீல் பண்ணாத. நான் அத்தைக்கிட்ட பேசிட்டேன். பாப்பா சமத்தா சாப்பிட்டு விளையாடி தூங்குறாங்கலாம். முத்து அண்ணா இருக்கார் அவர் பார்த்துப்பார். நீ சாப்பிடு." என்று சிரித்தான்.

"ஹ்ம் சரி." புன்னகையோடு சாப்பிட தொடங்கினாள்.

எல்லாவற்றையும் ருசி பார்த்தவள்.

"எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு. எனக்கு வயிறு புல் போதும்." என்று எழுந்து கொள்ள கடைசியாக பாயசம் தரவும் அதையும் சிறிது சாப்பிட்டாள்.

"இது மாதிரி தினமும் சாப்பிட்டா அவ்ளோ தான் நான்." என்று புன்னகைக்கவும், "எல்லாம் கொஞ்ச நாள் தானே... அதெல்லாம் எதுவும் ஆகாதுன்னு சொல்றாங்க அக்கா." என்றாள் சங்கீ.

"ஏன் கொஞ்ச நாளைக்கு தான்?" தாரணி பதட்டமடைய, "நீங்க வந்த வேலை முடிஞ்சா இவர்களுக்கும் முக்தி கிடைச்சுரும்ல அதை தான் சொல்றாங்க." என்றாள் சங்கீ.

"இங்க ஏதோ மிக பெரிய வேலை என்னால ஆக வேண்டியது இருக்குன்னு சொன்னார் அப்பா. ஆனா என்னன்னு தெரியாது. என்ன அது?" தாரணி கேட்டதும்.

"போக போக தெரிஞ்சுபிங்கன்னு சொல்றாங்க." சங்கீ.

"சரி. எனக்கு ஒரு விஷயம் கேட்கணும். நான் முன்ஜென்மத்துல எப்படி இருந்தேன். எனக்கு எங்களுக்கு என்னாச்சு? ஏன் இப்படி ஒரு சாபம்?" என்றாள் தாரணி தன்னை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில்.

"எல்லாத்தையும் சொல்றாங்களாம். ஆனா மூணாவது நாள் முடிவுல அவங்க தெரிவாங்கள்ல அப்போ சொல்றாங்களாம்." என்றாள் சங்கீ.

"ஹ்ம்... ஓகே. இங்க எனக்கு எதுவும் நடக்காதுல்ல?" என்றதும்...

"இவங்களுக்கு விமோசனம் தர தான் நீங்க இங்க வந்துருக்கிங்க. அதுவுமில்லாம உங்களை பார்க்க தான் இவங்க இவ்ளோ காலம் ஆத்மாவா சுத்திட்டு இருக்காங்க. அப்படி இருக்கும் போது உங்களுக்கு எந்த கெட்டதும் நடக்காது நடக்கவும் விடமாட்டோம்னு சொல்றாங்கக்கா." என்றாள் சங்கீ.

"சரி. நான் என் ரூம்க்கு போறேன்." என்று தங்கள் அறைக்குள் இருவரும் நுழைந்தனர்.

இங்கே மெத்தையில் விழிமூடி படுத்திருப்பவனையே பார்த்து கொண்டிருந்தாள் மஞ்சு.

"எவ்ளோ வருஷம் தேடறது உங்களை? உங்களுக்காக இங்க ஒருத்தி காத்திட்டு இருப்பான்ற எண்ணம் கொஞ்சமாச்சும் இருக்கா உங்களுக்கு? இப்படி போய் சிக்கிருக்கிங்க. அவனுங்க இவ்ளோ மோசமானவங்களா இருப்பாங்கன்னு நினைக்கல. ஏதோ அதுவரைக்கும் உயிரோட எனக்கு கிடைச்சிங்களே அதுவே போதும். போதும் இவ்ளோ நாள் என்னை வதைச்சது சீக்கிரம் எழுந்துருங்க." என்று தன் கரத்தை தன்னவனின் கரத்தோடு கோர்த்தபிடி கண்ணீரோடு பேசி கொண்டிருந்தாள்.

அன்றிரவு அங்கே அமைதியாக கழிந்து விடியல் புலர்ந்ததும் கண்விழித்த தாரணி கணவனின் நெஞ்சத்தில் தலை சாய்த்து படுத்திருப்பதை பார்த்து வெட்கமும் மகிழ்ச்சியும் கொள்ள மெல்ல எழ பார்க்க எழ விடாமல் வருணோ இறுக்கி கொள்ள, "வரு விடிஞ்சிருச்சு. விடுங்க எழனும்." என்று சிணுங்கினாள்.

"விடறேன். ஆனா என்னை எப்பவும் கூப்பிடுவியே அப்படி கூப்பிடு." என்றான் வருண் விழி திறக்காமல்.

"ஹுஹும்... அது நீ கேட்க கூடாது நானா தான் கூப்பிடனும்." என்று அவனின் கன்னத்தை கிள்ளி கொஞ்சியபடி எழுந்து குளியறைக்குள் புகுந்துவிட, "ரொம்ப திமிர்டி உனக்கு." என்றான்.

"எனக்கு கேட்டுச்சு." என்றாள் உள்ளே இருந்து."

"ராட்சசி. மனசாட்சி இல்லடி உனக்கு." என்றான் லேசாக புன்னகைத்து.

"கரெக்ட்." பதில் வர, "நீ வெளிய வா. உனக்கு இருக்கு." என்றான் வருண்.

"போதும் போதும் முதல்ல போய் அப்பா என்ன பண்றாங்கன்னு பாருடா." என்றாள்.

"போறேன் போறேன். புருஷனுக்கு ஒன்னும் தராத. அப்பாவை மட்டும் பூனைக்குட்டியாட்டம் சுற்றிக்கிட்டே இரு." என்று முணுமுணுத்து கொண்டே செல்லவும்.

"யோவ் மக்கு மாமா! அவர் என் அப்பாடா எனக்கு உயிர் கொடுத்த சாமி. நீ அப்படியா?" என்றதும் எதுவும் பேசாமல் அமைதியாய் நின்று கொண்டான்.

"அப்போ நான் யாரு?" என்றான் உள்ளே சென்ற குரலில்.

"அதெல்லாம் சொல்ல முடியாது முதலில் சொன்ன வேலையை போய் சமத்தா செய்." என்றாள்.

"நீ வெளிய வாடி இருக்கு உனக்கு." என்று ஓரமாய் இருந்த ஜன்னலில் வேடிக்கை பார்க்க தொடங்கி விட்டான்.

ஐந்து நிமிடங்கள் கழித்து வந்தவள்.

"ஹ்ம் போய்ட்டானா? " என்று புன்னகைத்தபடி சுற்றி பார்க்க அவளையே வைத்த கண் மூடாமல் ஒவ்வொரு அடியாய் வந்து கொண்டிருந்தான் வருண்.

"வருண் நீ இங்க என்ன பண்ற? உன்னை..." என்று தன் மேல் போர்த்தியிருந்த துவாலையை இறுக்கமாய் பிடித்து கொண்டாள்.

அது ஒன்னுமில்ல தியா நானும் நீ சொன்னதை செய்ய தான் போனேன். ஆனா சும்மா போனவனை இங்க நிறுத்தி வச்சது நீ தான். என்ன அப்படி பார்க்கிற? அழகு பொண்டாட்டி நீ தானே நான் எப்படின்னு சொல்லலை. அதான் தெரிஞ்சுக்கணும்னு வெய்ட் பண்றேன்." என்று அவளின் முன் வந்து நிற்கவும் அவனின் நெருக்கத்தில் மூச்சை இழுத்து பிடித்து கொண்டவள் தடுமாறியபடி, "தமிழ் ப்ளீஸ்! வெளிய போ. நான் வந்து சொல்றேன்." என்றாள் தடுமாற்றமாய்.

"ஹுஹும் ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்." என்றவன் மழைத்துளி போல் சொட்டிக் கொண்டிருந்த அவள் கேசத்தின் நீர்த்துளிகளில் இதழ் பதிக்க, "தமிழ் ப்ளீஸ் இங்க எதுவும்..." என்னும் பொழுதே வேகமாய் அருகிலிருந்த அவளின் துப்பட்டாவை எடுத்து அங்கிருந்த படத்தின் மேல் போர்த்தியவன்.

"சரி! நான் உனக்கு எப்படி பட்டவன்னு சொல்லிடு நான் போகின்றேன்." என்று நெருங்கி வர வர விழிகளை மூடியபடி நிதானத்தை இழந்து கொண்டிருந்தாள்.

"தமிழ்" என்ற அவளின் குரலில் எதை கண்டானோ ஆரம்பித்த வார்த்தைகளை முடிக்கவிடாமல் இதழோடு விளையாட தொடங்கியப்பின் யுகங்கள் கடந்து பிறவிகள் கடந்து வருடங்கள் கடந்து வாழ்க்கையில் இணைந்தவர்கள் இசையாய் ஒருவருள் ஒருவர் மீட்ட தொடங்கினர்.

*****

"உங்க தங்கச்சின்னா அவ்ளோ உயிரா இருப்பிங்க. எழுந்து பாருங்க. அவ விரும்பினவரையே கல்யாணம் செஞ்சுட்டு ரொம்ப சந்தோஷமா இருக்கா. உங்களுக்காக தான் தன் உயிரையும் மதிக்காமல் இங்க வந்துருக்கா. சீக்கிரம் எழுந்துருங்க." என்று அவன் காதருகில் பேசி கொண்டிருக்க கதவு திறக்கும் ஓசையில் விலகி அமர்ந்தாள்.

"மஞ்சு எப்படி இருக்கான் மா?" என்று வந்தார் தாரணியின் தந்தை.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top