💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-32

'என்ன தான்டா பார்த்தீங்க? இப்படி சாக்கடிச்ச மாதிரி நிக்கிறிங்க?' மை வாய்ஸ்.

அங்கே தாரணி வருணின் நிழற்படம் மிகவும் தத்ரூபமாக வரைய பட்டிருந்தது.

ஒரே வித்தியாசம் அந்த கால உடைகளில் இருந்தனர் இருவரும்.

ஒரு மாமர கிளையில் இருவரும் நெருக்கமாக அமர்ந்திருப்பது போல் இருந்தது.

வருணின் விழிகளில் காதல் ததும்ப தாரணியின் முகத்தை கைகளில் ஏந்தியபடி இருக்க வருணின் முகத்தை வெட்கம் கலந்த ஆளுமையான அழகோடு நேருக்கு நேர் தாரணி காண்பது போல் இருந்தது.

"தாரு இது..." என்று அதிர்ச்சியாய் அப்படத்தை கை காட்டி கேட்க...

"முற்பிறவியில் இருந்த நாம ன்னு நினைக்கிறேன் வரு." என்றாள் விழிகளை அகற்றாமல்.

"நிஜமா நம்பவே முடியலை தாரு. நாம ஏற்கனவே கணவன் மனைவியா?" என்றான் நம்பாமல்.

"அப்படி தான் இருக்கும். அதனால தான் இப்போ நம்மளால உள்ள வர முடிஞ்சுருக்கு." என்றாள் தாரு.

"நமக்கு என்ன நடந்தது? நாம ஏன் இங்க வந்திருக்கோம்? இந்த படத்தை யார் வரைஞ்சா?" என்று அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்டதும் "எனக்கும் தெரியலை வரு. இதுக்கு பதில் வெளிய இருக்கவங்க தான் சொல்லணும். சரி கொஞ்ச நேரம் தூங்கலாம் வரு. எனக்கு ரொம்ப டையர்ட்டா இருக்கு." என்று மெத்தையில் படுக்க போக, "ஹுஹும்.. நோ தாரு. பர்ஸ்ட் போய் குளிச்சுட்டு வா." என்று அவளை எழுப்பி குளியலறைக்கு அனுப்பினான்.

"போ வரு. எனக்கு டையர்டா இருக்கு." என்று சிணுங்கவும்.

"ஓகே டா தங்கம். நீ ஏன் கவலை பட்ற? நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்." என்று கூறவும் விழிகள் விரிய, "திருட்டு பயலே! ஒன்னும் வேணாம் போடா." என்று ஓடி குளியறைக்குள் நுழைந்தாள்.

அவளின் ஓட்டத்தை கண்டு வாய் விட்டு சிரித்தவன். பின் ஏதோ யோசித்தவனாக அந்த நிழற்படத்திடம் சென்று உற்று நோக்கினான்.

விழிகள் விரிய மெல்ல அப்படத்தை வருடினான்.

அதில் இருந்த பெயரை உச்சரித்து பார்த்தான்.

"பாலசித்ரா"

"எவ்ளோ அழகான பேர்.." என்று முணுமுணுத்தபடி மீண்டும் படத்தை பார்க்க, அதில் இருக்கும் தாரு வருனிடம், "என்கிட்ட வர இவ்ளோ நாளா பாலா?" என்று கேட்க அதிர்ந்து தன் கரத்தை உருவி கொண்டவன் தான் கண்டது கனவா? இல்லை நினைவா? என்று மீண்டும் படத்தை பார்க்க, "என்ன?" என்று சிரிக்கவும் அதிர்ந்து ஒரு நொடி பின்னே நகரவும் குளியலறை கதவை திறந்து தாரணி வரவும் சரியாக இருந்தது.

"என்ன ஏன் பேயறைஞ்ச மாதிரி இருக்க?" என்றாள் தாரணி.

அதிர்ச்சியில் இருந்து மீளாமல் படத்தையே வருண் பார்த்து கொண்டிருக்க, "வருண் என்ன டா? ஏன் இப்படி நிக்கிற? அந்த படத்துல என்ன இருக்கு?" என்று அவன் தோளை தொடவும் வேகமாய் திரும்பியவன் எதுவும் பேசாமல் தாரணியை அணைத்து கொண்டான்.

"ஒண்ணுமில்லடா..." என்று தோளை வருடி கொடுக்கவும் அவன் நினைவுகளில் ஏதேதோ எண்ணங்கள் பிம்பங்கள் தோன்றி மறைந்தது.

"தாரு... தாரு..." என்று அவளின் பெயரை ஜபித்து கொண்டிருந்தான்.

"என்னடா கண்ணா? நான் குளிச்சுட்டு வரதுக்குள்ள என்னாச்சு?" என்று மெத்தையில் வருணை அமர வைத்தவள் நீர் இருக்கும் பாட்டிலை எடுக்க திரும்பவும் விடாமல் அணைத்திருந்தான்.

"அந்த போட்டோல இருக்க நீ என்கிட்ட பேசின..." என்றான் மெதுவாக.

"என்ன உளர்ற வரு? நான் உன்கிட்ட இங்க இருக்கும் போது அங்க யார் பேசுவா? நீ இங்க நடந்ததெல்லாம் நினைச்சு குழம்பிருக்க." என்றாள் மெதுவாய் அவன் தலையை கோதி.

"ஏய் தாரு. எனக்கென்ன பைத்தியமா பிடிச்சுருக்கு சும்மா உளற? உண்மையை தான் சொல்றேன். அந்த படத்துல இருந்த பொண்ணு பேசுச்சு. என்கிட்ட வர இவ்ளோ நாளாச்சா பாலான்னு கேட்குறா? நீ என்னடா ன்னாநான் சும்மா சொல்றேன்னு சொல்ற?" என்று கோபத்தில் எகிறினான்.

"சரி சரி டென்சன் ஆகாத." என்று அவனை மடியில் தலை சாய்த்து படுக்க வைத்து தட்டி கொடுக்க யோசனையிலேயே உறங்கி போனான் வருண்.

"என்னாச்சு ஏன் திடீர்னு இப்படி சொல்றான்?"  என்று படத்தின் அருகே சென்று உற்று பார்க்க, அதில் இருந்த இருவருமே அவளை பார்த்து புன்னகைத்தனர்.

பலத்த அதிர்ச்சியாக இருந்தாலும் தைரியமாய் மீண்டும் பார்க்க தொடங்கினாள்.

"என்ன சித்து இங்க வர உனக்கு இவ்ளோ நாளா?" என்று அப்புகைப்படத்தில் இருப்பவன் அழகாய் புன்னகைத்து கேட்க மேலும் அதிர்ச்சியோடு வேகமாய் வெளியேறினாள்.

அவள் கரத்தில் இருந்த போன் அடிக்கவும், எடுத்து பேச, "ஹ்ம் ஓகே பா. நீங்க வாங்க. நான் வாசலுக்கு வரேன்." வேகமாய் ஓடினாள்.

அவள் சென்று நிற்கவும் ஒரு மினி வேன் வந்து நின்றது.

ஆவலாய் தன் விழிகளை சுழட்டி தேட, கதவை திறந்து கொண்டு முதலில் இறங்கியது அவளின் தந்தை.

"அப்பா." என்று ஓடி சென்று அணைத்து கொண்டவள், "உங்களுக்கு ஓன்னுமில்லைல. நல்லா இருக்கிங்க தானே" என்றாள்.

"எனக்கு எதுவும் இல்லடா. இரு முதல்ல இந்த வேலை முடியட்டும்." என்று வண்டியின் உள் நோக்க, இரண்டு பேர் இறங்கினர்.

"பார்த்து பத்திரமா இறக்குங்க." என்றார்.

"ஓகே சார்." என்று இருவரும் வண்டியில் இருந்து ஸ்ட்ரக்சரில் இறக்கினர்.

அதில் படுத்திருந்த உருவம் ஆள் மெலிந்து தேகம் பொலிவிழந்து நிறம் மங்கி விழிகள் திறக்காமல் உறக்கத்திலிருக்க கரத்தில் ட்ரிப்ஸ் போட பட்டிருந்தது.

அவ்விருவரும் வீட்டின் வாசல் வரை தள்ளி சென்றவுடன், "நில்லுங்க." என்றாள் கட்டளையாக.

அதிர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு, "என்னாச்சு மேடம்?" என்று கேட்க, "அப்பா கூட இருந்து பார்த்துக்க நான் ஆள் ஏற்பாடு பண்ணிட்டேன். சோ இனி நாம உள்ள கூட்டிட்டு போகலாம். இவங்க கிளம்பட்டும்." என்றாள் தந்தையை பார்த்து அழுத்தமாக.

மகளின் பார்வையில் அர்த்தம் புரிந்தவர், "சரிம்மா. இனி நாங்க பார்த்துக்குறோம் நீங்க கிளம்புங்க." என்று அனுப்பினார்.

"எங்க இருக்கிங்க மஞ்சு?" என்று போனில் கேட்கவும்.

"இதோ வந்துட்டேன் பா." என்று பின்னாலிருந்து குரல் கேட்கவும் புன்னகையுடன் திரும்பினாள்.

"ஹேய்! எப்போ வந்திங்க? உங்க ஜர்னி எப்படி இருந்தது." என்று மஞ்சுவை அனைத்து கொண்டாள் தாரணி.

"ஐம் பைன். ஆல் இஸ் குட்." என்று புன்னகைத்தாள்.

"அப்பா! இவங்க மஞ்சரி. என்னோட பிரென்ட் பேமஸ் நியூராலஜிஸ்ட். கனடால இருந்து நான் கூப்பிட்டதால எனக்காக வந்திருக்காங்க." என்றாள் தாரணி.

ஒரு நொடி யோசனையாய் மஞ்சுவை பார்த்தவர்.

கரம் குவித்து "வணக்கம் மா. வாங்க உள்ள போகலாம்." என்றார்.

"தாரணி எங்க அவங்க?" என்றாள் மஞ்சு விழிகளில் தேடலுடன்.

முகத்தில் சோர்வுடன், "அது மஞ்சு இதோ இங்க இருக்கார்." என்று இருவரும் நகர அங்கிருந்த உருவத்தை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டே நெருங்கியவள் விழிகள் கண்ணீரை ஆறாய் ஊற்றிட, தன்னை கேள்வியாய் நோக்கிய தந்தையை எண்ணம் சரியென தலையசைத்து புன்னகைத்தாள் தாரணி.

"தாரு... உள்ள கூட்டிட்டு போகலாம்." என்றாள் கண்ணீரை துடைத்து கொண்டு.

"ஹம்..." என்று மூவரும் உள்ளே அழைத்து சென்று கீழே இருந்த ஒரு அறையில் படுக்க வைத்தனர்.

அந்த அறை மிகவும் விசாலமானதாகவும் காற்றோட்டமாகவும் இருந்தது.

"மஞ்சு உங்களுக்கு பக்கத்துல இருக்க ரூமை க்ளீன் பண்ணிருக்கு." என்று முடிக்கும் முன், "இல்ல தாரு. எனக்கு இங்கயே அந்த கார்னர்ல ஒரு பெட் மட்டும் போட்ருங்க போதும். நான் இங்கேயே இருக்கேன்." என்றாள் மஞ்சரி முடிவாகவும் அழுத்தமாகவும்.

தந்தையும் மகளும் ஒரு நொடி விழிகளில் பேசி, "சரி மஞ்சு நீங்க கேட்ட மாதிரியே செஞ்சுரலாம்." என்றாள்.

"இப்போவே இவரை செக் பண்றேன்." என்று தன் கிட் பேகில் இருந்து உபகரணங்களை எடுத்து சோதிக்க தொடங்கினாள்.

"அப்புறம் மஞ்சு இந்த பேலஸ் பத்தி நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிருக்கேன்." என்றாள் மெதுவாக.

"ஹ்ம்... சொன்னிங்க. இங்க நிறைய ஆத்மாக்கள் இருக்கங்கன்னும் சொன்னிங்க. சோ வாட்? கிட்ட தட்ட நாலு வருஷம் ஆகிருக்கும் நான் செத்திருந்தா அவங்களை மாதிரி இந்நேரம் ஆத்மாவா தான் இருந்திருப்பேன்." என்றாள் விழிகள் கலங்கி படுத்திருப்பவனை பார்த்து.

"என்ன ஏன் இப்படி பேசறீங்க மஞ்சு?" என்று பதறினாள் தாரணி.

"நீங்க அன்னைக்கு வரலைன்னா அது தான் நடந்திருக்கும். நான் இன்னைக்கு இங்க உயிரோட இருக்கிறதுக்கு நீங்களும் முக்கிய காரணம். இருந்தாலும் வெறும் கூடா தான் இருந்தேன். இன்னைக்கு என்னை காப்பாத்தினதுக்கு உயிர் கொடுத்துட்டிங்க. நான் எவ்ளோ நன்றி சொன்னாலும் போதாது." என்று கரம் கூப்பினாள்.

தன் தந்தையை திரும்பி பார்த்தவள்.

"ஆறு வருஷமா விரும்புறாங்கப்பா. அண்ணன் இல்லன்ன உடனே சாக துணிஞ்சிட்டாங்க. நான் தான் அப்ராட் அனுப்பி வச்சேன். நிச்சயமா ஒரு நாள் அண்ணனை உங்ககிட்ட சேர்ப்பேன்னு வாக்கு கொடுத்தேன். என் அண்ணனும் இவங்களை நேசிச்சார். உங்ககிட்ட சீக்கிரமே சொல்லி கல்யாணம் செஞ்சுக்கணும்னு சொன்னார். ஆனா அதுக்குள்ள என்னென்னவோ நடந்துருச்சு." என்றவள் வாசலில் நிழலாடுவதை திரும்பி பார்க்க வருண் அதிர்ச்சியாய் தாரணியின் அண்ணனை பார்த்து கொண்டிருந்தான்.

"வரு நான் சொன்னேன்ல உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னு... பாரு இந்த உலகத்தில் சில வேண்டாதவங்க இறந்து போய்ட்டதா நம்ப வைத்த இதோ இங்க இத்தனை வருஷம் கழிச்சு என்னோட அண்ணன் உயிரோட இருக்கார்." என்று கண்ணீர் சிந்த அவளின் அருகில் வந்தவன்.

"இது எப்படி தாரு? இவ்ளோ நாள் உன் அண்ணன் எங்க இருந்தார்." என்றான் பார்வையை அகற்றாமல்.

"என் அண்ணனை இறந்துட்டதா சொல்லி ஊரை நம்ப வச்சு ஏமாத்திருக்காங்க. முதல்ல நானும் இதை நம்பி கொஞ்ச நாள்  வருத்ததுல இருந்தேன். ஆனா அதன் பிறகு எனக்கு லேசா சந்தேகம் வர ஆரம்பிச்சுது. என் அண்ணன் எதோ ஆபத்துல இருக்கார். இன்னும் உயிரோட தான் இருக்கார்னு என் உள் மனசு சொல்லிகிட்டே இருக்கும். யாருக்குமே தெரியாம யாரையும் நம்பாம யாருக்கும் சந்தேகம் வராம கொஞ்சம் கொஞ்சமா தேட ஆரம்பிச்சேன். முதல்ல அதுக்கான ரிசல்ட் ஜிரோ." என்றாள் லேசாக புன்னகைத்து.

"என்ன சொல்ற தாரு? எனக்கு எதுவும் புரியலை. உனக்கு எப்படி சந்தேகம் வந்துச்சு? யார் மேல சந்தேகம்? எப்படி தேட ஆரம்பிச்ச?" என்றான் வருண் ஒன்றும் புரியாமல்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top