💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-29

"அக்கா..." என்ற பெண்ணின் குரல் மட்டும் பின்னே இருந்து கேட்க, வேகமாக திரும்பினாள் தாரணி.

அங்கே உருவம் இல்லா ஏதோ ஒரு நிழல் போல் தெரிந்தது.

கண்ணீர் நிற்காமல் வந்தது தாரணிக்கு.

"சங்கீதா... " என்றாள் மெதுவாக.

"ஏன்கா அழறிங்க? அழாதிங்க..." என்று அவளின் கண்ணீர் துடைக்க முயல முடியவில்லை.

"என்னால தான் உனக்கு இந்த நிலைமை... இல்லைன்னா இந்நேரம் நீயும் எங்க கூட இருந்திருப்ப... என்னை மன்னிச்சிரும்மா. எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு." என்றாள் தாரணி அழுவதை நிறுத்தாமல்.

"அக்கா அப்படி சொல்ல முடியாது. இது என்னோட தவறு தான். இவன் இல்லைன்னா வேற ஒருத்தன் நாளைக்கு வந்து ஏமாத்திருப்பான். ஆனா நான் மட்டும் உறுதியா இருந்து அவனை கிட்ட நெருங்காம பார்த்துட்டு இருந்திருந்தேன்னா எதுவுமே தப்பா நடந்திருக்காது. நடக்குறதுக்கு முன்ன தடுத்துருக்கலாம். எல்லாம் என் நேரம். புத்தி கெட்டு போச்சு. அவன்கிட்ட மாட்டிக்கிட்டேன். விடுங்க அக்கா. என்னை பத்தி யோசிக்கிறதை விடுங்க. என்னால மாமாவும் நீங்களும் பிரிஞ்சுட்டிங்கன்னு எவ்ளோ பீல் பண்ணேன். தெரியுமா? இப்போ தான் நிம்மதியா இருக்கு." என்றாள் சங்கீதா.

"சங்கீ நான் ஒண்ணு கேட்பேன். நீ கரெக்ட்டான பதிலை சொல்லணும். சரியா?" என்றாள் தாரணி.

"சொல்லுங்க அக்கா" என்றாள் சங்கீதா.

"இவ்ளோ தெளிவா பேசுற பொண்ணு நிச்சயமா தடுமாறி தப்பு பண்ணிருக்க வாய்ப்புகள் ரொம்ப குறைவு. தயவு செஞ்சு எப்படி இது நடந்ததுன்னு சொல்லு?" என்றாள் தாரணி.

"அக்கா அதுவந்து.." என்று சங்கீதாவும் தடுமாற,

"ஏன் தயக்கமா இருக்கா? உங்க மாமாவை வெளிய போக சொல்லட்டா?" என்றாள்.

"இல்ல இல்ல அக்கா. தடுமாறி போன என் வாழ்க்கையை நீங்க ரெண்டு பேரும் தான் தடம் மாறாம  பார்த்துகிட்டிங்க. சொல்றேன். அது இந்த மதன் தான் அன்னைக்கு நான் எவ்ளோ வேண்டாம்னு ஒதுங்கி போனாலும் ரொம்ப நல்லவன் மாதிரி வந்து அமைதியா நின்னு நின்னே என் மனசுல இடம் புடிச்சுட்டான். எப்பவுமே நான் எல்லை மீறி நெருங்கி பழக விட்டதில்லை. ஒரு நாள் காலேஜ் டூர் அப்போ தான் கூல் ட்ரிங்க்ஸ்ல ஏதோ கலந்துருக்கிறது தெரியாம குடிச்சுட்டேன். விடிஞ்சதும் தான் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சது. நானும் கூல் ட்ரிங்க்ஸ் குடிச்சதால எனக்கும் என்ன நடந்ததுன்னு ஞாபகம் இல்லேன்னு சொன்னான். அதுக்கு பிறகும் எப்பவும் போல தான் அன்பா இருந்தான். அப்ப அம்மாவை வீட்டுக்கு அடுத்த வாரம் வந்து பேச சொல்றேன்னு ஊரு போய்ட்டு வரேன்னு போனவன் தான். அதோட அவன் இறந்துட்டான்ற செய்தி தான் வந்தது. யாரை போய் கேட்கிறது என்ன கேட்கிறது எதுவும் தெரியலை." என்றாள் சங்கீதா.

விழிகள் மூடி தன்னை நிதானித்தவன், "இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்லலை சங்கீ..?" என்றான் வருண்.

"இல்ல மாமா அவனே உயிரோட இல்ல இறந்துட்டான்னு சொன்ன பிறகு இதெல்லாம் எதுக்கு சொல்லி இன்னும் வருத்த படனும்னு தான் சொல்லலை. " என்றாள் சங்கீதா.

"எனக்கு இன்னொரு விஷயம் சொல்லு சங்கீ. உனக்கு டெலிவரி அப்போ ஹாஸ்ப்பிட்டல்ல யாரையாவது பார்த்தியா?" என்றாள்.

"யாரை சொல்றிங்க அக்கா? மாமா தான் என்கூட இருந்தார்.. வேற யாரும் இல்லையே?" என்றாள் சங்கீ.

"நல்லா யோசிச்சு பார்த்து சொல்லு."

சில நொடிகள் கழித்து, "ஹ்ம்ம் ஆமா அக்கா. அன்னைக்கு வலில உள்ள கூட்டிட்டு போகும் போது எதிர்ல ரெண்டு பேர் வந்தாங்க. அதுல ஒருத்தர் திடிர்னு திரும்பி போய்ட்டார். இன்னொருத்தர் அந்த டாக்டர் மாப்பிள்ளை தான். " என்றாள் சங்கீதா.

வருணும் தாரணியும் ஓர் அர்த்த பார்வையை பரிமாறி கொண்டனர்.

"அக்கா அந்த மதனை என்னால நெருங்க முடியலை. அவன் கைல ஏதோ ஒரு காப்பு கட்டிருக்கான்." என்றாள்.

தாரணியின் போன் அடிக்கவும் எடுத்து பார்க்க, "ஹான் சொல்லுங்கப்பா. எல்லாம் ஓகே தானே? சேபா தானே இருக்கிங்க?" என்றாள் லேசான பதற்றத்துடன்.

"....."

"சரிப்பா.. நாங்களும் நம்ம பகுதிக்குள்ள நுழைஞ்சுட்டோம்." என்றாள் தாரணி.

"...."

"சரிப்பா. நீங்க பயப்படாதீங்க.. நாங்க பத்திரமா வந்துடறோம்." என்று வைக்கவும் அவர்களின் ஊருக்குள் நுழையவும் சரியாக இருந்தது.

இரு பக்கமும் அடர்த்தியான மரங்கள் ஓங்கி வளர்ந்து நிற்க... அவ்விடத்தில் வேறு எந்த வாகனமோ மனித நடமாட்டமோ எதுவுமே இல்லாமல் ஏதோ ஒரு மனதை பிழியும் பேரமைதி அங்கே குடி கொண்டிருந்தது.

பட்டப்பகலில் நிழல் சூழ்ந்த இருள் போல் காட்சியளித்தது. அளவுக்கு மீறிய குளிர் தோன்றி சில்லென காற்று வீசியது. ஏதோ ஒரு சுகந்தமான வாசம் அவர்களை சுற்றி வீச செய்தது.

வண்டி பெயர் பலகையை தாண்டியதும் வண்டியின் எவ்வளவு வேகமாக ஓட்ட நினைத்தாலும் முடியவில்லை. மிகவும் மெதுவாகவே நகர்ந்தது.

தாரணிக்குள் ஒரு பயம் துளிர் விட்டாலும் முகத்தில் காட்டாது அமர்ந்திருந்தாள்.

வருணுக்கும் என்ன நடக்கிறது என்று புரியவில்லை.

"தாரு... என்ன பண்ணாலும் வண்டி ஸ்பீட் எடுக்க மாட்டேங்குது. என்ன ஆச்சு ஒன்னும் புரியலை." என்றான்.

"மித்து பயப்படாத. நமக்கு எந்த கெடுதலும் வராது. நீ தைரியமா இரு." என்றாள்.

"அக்கா..." என்ற சங்கீதாவின் குரலில் தெரிந்த பதட்டம் கண்டு உள்ளம் பதறினாலும், "என்ன சங்கீ?" என்றாள் திரும்பாமல்.

"அக்கா! பயப்படாதீங்க... நம்ம இந்த எல்லைக்குள்ள வந்தவுடனே ஏகப்பட்ட மாற்றங்கள்." என்றாள் சங்கீதா.

"என்ன மாற்றம்? உனக்கு தெரியுதா?" என்றாள் நெற்றியில் பயத்தில் துளிர்த்த வியர்வையை புறங்கையால் துடைத்தபடி.

"ஹ்ம்ம்... தெரியுது... ஆனா சொன்னா பயப்படக்கூடாது." என்றாள் சங்கீ.

"சொல்லு" என்றாள் மெதுவாக.

"இங்க நம்மளை சுத்தி நிறைய பேர் இருக்காங்க." என்றாள் மிக மெதுவாய்.

திரும்பி சாலையை பார்த்தவள்

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top