💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-26

"சரி அப்போ நீ கண்டுபிடிச்ச வரைக்கும் சொல்லு. மீதியை நான் சொல்றேன்." என்றாள் தாரணி.

"தாரு எனக்கு எதுவும் தெரியாதே...நான் என்னத்தை சொல்ல?" என்றான் ஏதுமரியாதவன் போல்.

"ரொம்ப நடிக்காதடா. கொஞ்ச நாளாவே உனக்கு நிறைய டௌப்ட் இருக்கு. அதை இன்வெஸ்டிகேட் பண்ணவும் ஆரம்பிச்சுட்டன்னு எனக்கு தெரியும். சரி நீ சொல்லலைன்னா நானும் சொல்ல மாட்டேன் போ." என்று வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.

"பொசுக்கு பொசுக்குன்னு ஏண்டி அந்த பக்கம் திரும்பிக்கிற? சரி சொல்றேன். ஒரு சில விஷயங்கள் கண்டுபிடிச்சுருக்கேன். ஒரு சிலது என்னோட அனுமானம் தான்." என்று ஆரம்பித்தான்.

அவன் சொல்கிறேன் என்றதும் ஆர்வமாக அவனை பார்த்தபடி திரும்பி உட்கார்ந்து கொண்டாள்.

உள்ளக்குள் சிரித்தாலும், "இப்போ மட்டும் கதை கேட்கிற குழந்தையாட்டம் உட்கார்ந்துக... ஆள பாரு.." என்று லேசாக புன்னகைத்து நெற்றியோடு நெற்றி முட்டி இதழ் பதித்தான்.

"இத்தனை நாள் என் தாரணியை பார்க்காம வெறும் உயிர் இல்லா உடம்பா தான் சுத்திட்டு இருந்தேன். இப்போதான் எனக்கு ஜீவன் வந்துருக்கு." என்று இறுக்கி அணைத்தவன்.

"இப்படியே இருக்கணும்னு ஆசையா இருக்குடி. இனி எப்பவும் என்னை விட்டுட்டு போய்டாத. நான் இல்லாமலே போயிடுவேன்." என்றவன் மெதுவாய் புன்னகைத்தான்.

அவனின் புன்னகையில் முழுவதும் தொலைந்தவள் விழி மூடாமல் பார்த்து கொண்டிருந்தாள்.

"ஹுக்கும்... இப்படி ஒப்பனா சைட் அடிச்சா நான் எப்டிடி வண்டி ஒட்றது?" என்றான் தடுமாற்றமாக.

"சரி நான் பார்க்கல... நீ ஸ்டார்ட் பண்ணு." என்றாள் உற்சாகமாய்.

நம்ம கல்யாணம் நடந்த அன்னைக்கு நீ மயக்கம் போட்டியே அன்னைக்கு தான் எனக்கு ஒரு டௌப்ட் வந்துச்சு... நீ ஹாஸ்ப்பிடல்ல இருந்தப்ப... எப்படி தெரிஞ்சுதுன்னு தெரியலை அந்த மதன் வந்தான்... நீ மயக்கம் போட்டுட்டேன்னு பதட்டமா வந்தவன் என்னை பார்த்ததும் ஒரு செகண்ட் ரொம்ப ஷாக்க்காகி நின்னுட்டான். அந்த நேரம் நர்ஸ் மூலமா நீ என்னோட மனைவின்னு தெரிஞ்சதும் தாம் தூம்னு குதிக்க ஆரம்பிச்சான். கோபத்துல எப்படி நீங்க மறுபடி ஒண்ணு சேர்ந்திங்க எவ்ளோ பிளான் போட்டு வச்சுருந்தேன் எல்லாத்தையும் கெடுத்துட்டியென்னு சத்தம் போட்டான்." என்று நிறுத்தினான்.

அப்போ தான் இவன் எதை பத்தி சொல்றான்னு யோசிக்க ஆரம்பிச்சேன். நாம ரெண்டு பேரும் லவ் பண்ணும்போதே உன்னை விரும்பி இருப்பானோன்னு ஒரு சந்தேகம் வந்துச்சு.

ஆனா, சங்கீ "இவன் தான் என்னை  காதலிச்சவன் இறந்துட்டான்னு சொன்னாங்க. இப்போ எப்படி இருக்கான்"னு சொன்னப்ப...

இவன் உன்னை ரொம்ப நேசிச்சதால உன்னை அடைய சங்கீ விஷயத்துல வேணும்னே ஏதாவது செஞ்சிருப்பானோன்னு தோணுச்சு." என்றான்.

"வேணும்னு செஞ்சானா?" என்றாள் தாரணி ஒன்றும் புரியாதது போல்.

"உன்னை என்கிட்ட இருந்து பிரிக்க பிளான் செஞ்சு என்னை கட்டாய கல்யாணம் செய்ய வச்சுட்டானோன்னு தோணிச்சு." என்றான்.

"அவ்ளோ தானா?" என்றாள் நெற்றி சுருக்கி.

"ம்ம்.. அவ்ளோ தான்" என்றான் எங்கோ பார்த்து.

"இல்லையே எனக்கு வந்த தகவல் படி இன்னும் இருக்கே..." என்றாள் லேசாய் சிரித்து.

"ரொம்ப தாண்டி ஓவரா பண்ற.." என்றவன்.

"ரெண்டு நாள் முன்ன நீ நம்ப வீட்டுக்கு வந்த அன்னைக்கு நைட் தூக்கம் வரலைன்னு நம்ம ஜன்னல் ஸ்க்ரீனை காத்து வர விலக்கினா நம்ம வீட்டு வாசலுக்கு அந்த பக்கமா இந்த மதனும் கூட இன்னொருத்தனும்  நின்னு நம்ம வீட்டை நோட்டம் விட்டுட்டு இருந்தானுங்க. யாருன்னு  தெரிஞ்சுக்க உத்து பார்த்தா ... .... ... அந்த மதனும் கூட இன்னொருத்தனும் இருந்தாங்க.. இந்த நேரத்துல இவனுங்களுக்கு என்ன வேலை இங்கன்னு யோசிச்சுட்டே... இன்னொருத்தன் யாரா இருக்கும்னு பார்த்தா பயங்கரமான ஷாக்... சங்கீதாக்கு பார்த்த அந்த டாக்டர் மாப்பிள்ளை தான் அவன். எனக்கு கொஞ்ச நேரம் எதுவுமே புரியலை. இவன் எப்படி மதன் கூடன்னு யோசிச்சு யோசிச்சு தலைவலி தான் வந்தது. என் பிரெண்ட்கிட்ட இவனுங்களை பத்தி விசாரிக்க சொன்னேன்." என்றான்.

"என்ன சொன்னாங்க?" என்றாள் ஆர்வமாய்.

"ஹ்ம்ம். அவனுங்க ரெண்டு பேரும் ஸ்கூல்லர்ந்தே திக் பிரெண்ட்ஸாம். ஒண்ணா தான் இருப்பார்களாம்.. சோ, அப்போ தான் எனக்கு கன்பார்ம் ஆச்சு. மதன் உன்னை கல்யாணம் பண்ணனும்னு பக்காவா பிளான் போட்டு சங்கீதாவை கன்சிவாக்கிட்டு நம்மளை பிரிச்சுருக்கான். அதே நேரம் அவன் பிரன்ட்டை வச்சு பொண்ணு கேட்க சொல்லி கல்யாணமேடை வரைக்கும் வரவெச்சு நிறுத்திருக்கான். எல்லோரும் கொடுக்குற நெருக்கடில நான் சங்கீதாவை கல்யாணம் பண்ணிகிட்டா உன்னை அவன் அடைய சிரமம் இருக்காதுன்னு இவ்ளோவும் செஞ்சுருக்கான். இது தான் எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நடந்திருக்கு. இப்போ நீ சொல்லு." என்று பார்த்தான்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top