💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-24
தன் நெஞ்சத்தில் உறங்கும் மனைவியை ஆசையாய் பார்த்து கொண்டிருந்தவன் மனதில் பல கேள்விகள் ஓடி கொண்டிருந்தன.
"எதை பத்தியும் யோசிக்காம தூங்கு வருண். உன் கேள்விக்கெல்லாம் அப்புறம் பதில் சொல்றேன்." என்று இன்னும் தன் முகத்தை அழுத்தி கணவனின் நெஞ்சத்தில் இதழ் பதித்தாள்.
இதமானவளின் இதழ் முத்தம் மெல்லிய வருடலாய் தோன்ற அனைத்தையும் தள்ளி வைத்து உறங்க தொடங்கினான்.
மூன்று மணி நேரத்திற்கு பின் ஓலித்த அலைபேசியின் ஒலியில் விழித்த வருணின் பார்வை தன் காதல் மனைவியின் மீது விழ வெகு நாட்களுக்கு பிறகு உறங்கிய நிம்மதியான உறக்கம் என்பதால் ஓர் ஒளி வீசியதில் புன்னகை மிளிர்ந்தது.
'இவ மனசுல என்ன தான் இருக்கு...?' என்று புன்னகையுடன் புலம்பிக்கொண்டே அலைபேசியை எடுத்து காதில் வைத்தான்.
"ஹலோ!" என்றதும் எதிரில் இருந்தவரின் குரலில் பரபரப்பானான்.
"மாமா! எப்படி இருக்கீங்க? எங்க இருக்கீங்க?" என்றான் பதட்டமாக.
அவனின் பதட்டமான குரலில் எழுந்த தாரணி, "அப்பாவா?" என்றாள் மெதுவாக.
"ஆமா" என்றவுடன் வாங்கி, "அப்பா! நீங்க சேப் தான?" என்றாள் அலட்டலாக.
"....."
"எல்லாம் நம்ம பிளான் படி நடந்ததுதான?"
"....."
"அப்பா... நீங்க போன காரியம்?..." என்றாள் கரகரப்பான குரலில்.
"....."
எதிரில் என்ன கேட்டதோ கண்ணீர் ஆறாய் ஓடத்தொடங்கியது.
"நான் வரேன்." என்றாள் உடனே.
"...."
"இல்ல எங்களுக்கு எதுவும் ஆகாது. என்னை மீறி அவரை யாரும் தொட முடியாது. நான் இன்னைக்கு நயிட் ங்க இருப்பேன். பத்திரம் பா. என்ன நடந்தாலும் வெளிய வரக்கூடாது." என்றாள் உறுதியாக.
"சரி. இதோ தரேன்." என்று வருணிடம் கொடுத்தாள்.
"மாமா என்ன நடக்குது இங்க? எனக்கு எதுவும் புரியல?" என்றான் வருண் குழப்பமாக.
"சரி மாமா. நான் பார்த்துக்குறேன்." என்று போனை வைத்தபின், தாரணியை பார்த்து ஒற்றை புருவம் உயர்த்தி பதில் கேட்க, "நீ எவ்ளோ ஸ்டைலா கேட்டாலும் அங்க போய் தான் பதில் கிடைக்கும் போலாமா?" என்று எழுந்து கொள்ள, வருண் இழுத்த இழுப்பில் மீண்டும் அவன் மார்பிலே பூங்கொத்தாய் விழுந்தாள்.
"வ..ரு..ண்.." என்று புன்னகையோடு விழிகள் உருட்ட... "உனக்கு முதல்லையே ஏதோ தெரிஞ்சுருக்கு. அதனால உனக்கு ஒன்னுமில்லை. ஆனா எனக்கு எதுவும் தெரியலை இ எவ்ளோ வருத்தப்பட்டேன்னு வார்த்தைல சொல்ல முடியாது. அதுக்கு பனிஷ்மெண்ட் தரணும்..." என்று மீண்டும் அவளை வஞ்சிக்க தொடங்க நேரம் நீண்டு கொண்டே போனது.
"ம்ப்ச்... வருண்... உன்னால தான் லேட்.. போ..." என்று அவசரமாக தலையை வாரிக்கொண்டு கிளம்பினாள் தாரணி.
"என்னாலையா... நான் என்ன பண்ணேன்?" என்றான் ஏதும் அறியாதவன் போல்.
"என்ன செய்யலை?" என்று இடையில் கரம் வைத்து முறைத்தாள்.
"செல்வா நாம எங்கேயோ போகணும்னு சொல்லிட்டு இப்படி நின்னா எனக்கு போகிற மூடே இல்ல... இப்போ... " என்றான் குறும்பாக.
"நீ இப்போ என்கிட்ட சாவடி வாங்க போற?" என்று வெளியேறியவள் குழந்தையின் அறைக்குள் வர அங்கே தன் தாயை கண்டதும்.
"அம்மா சாப்பிட்டிங்களா?" என்று புன்னகைத்தாள்.
"சாப்பிட்டேன்டா" என்று புன்னகைத்தார்.
"என்ன சொல்றா என் பொண்ணு?" என்று குழந்தையின் கன்னத்தை வருடினாள்.
"எல்லோரையும் சிரிச்சே மயக்க போறேன்னு சொல்றா." என்றார் செல்லமாய் குழந்தையை கொஞ்சி.
இவர்களின் உரையாடலில் மனம் நிறைந்தவனாய் வாசலில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தான்.
"சரிம்மா. எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு போய்ட்டு வந்துடறேன். நீங்க பாப்பாவை பார்த்துக்குறிங்களா? நான் முடிஞ்சா இன்னைக்குள்ள வந்துருவேன் இல்லைன்னா நாளைக்கு காலைலயே வந்துருவேன்." என்றாள்.
"சரி. நீ மட்டுமா போற?" என்றார்.
"இல்லைமா. வருணும் தான் வரான்." என்றதும் தலையில் ஒரு கொட்டு குட்டியவர்.
"என்னடி பேச்சு இது? புருஷனை மரியாதையில்லாம பேர் சொல்லி கூப்பிடறதும் இல்லாம அவன் இவன்னு மரியாதை இல்லாம பேசுற...? இன்னொரு வாட்டி பேசின உதை விழும் பார்த்துக்கோ." என்றார்.
"ஹுக்கும்.. ரொம்ப தான் மாப்பிள்ளைக்கு சப்போர்ட் பண்றம்மா நீ?" என்று நகர்ந்தாள்.
"சாப்டிங்களா தம்பி?" என்று வருணிடம் கேட்க
"நான் சாப்பிட்டேன் அத்தை தாரணி தான் ஒழுங்கா சாப்பிடலை."என்றான் குறும்பாக கண்ணடித்து.
"ஏன்டா உனக்கு அம்மா ஏதாவது சமைச்சு தரட்டுமா?" என்றதும்...
"மா அவர் சும்மா சொல்றார் நாங்க ரெண்டு பேருமே சாப்பிட்டோம். நீங்க சாப்பிடுங்க. பாப்பாவை பத்திரமா பார்த்துக்கங்க." என்றாள் தாரணி.
"சரிம்மா. அவன் வரலையா?" என்றார் அம்மா.
"போன் பண்ணிட்டேன். வந்துட்டே இருக்கேன்னு சொன்னார். இப்போ வந்துருவார்." என்றாள் தாரணி.
'யாரு?' என்பது போல் பார்த்து கொண்டிருந்தான் வருண்.
மூன்று நிமிடங்கள் கடந்திருக்கும் வேலையாள் ஒருவர் வந்து, "சின்னம்மா உங்களை பார்க்க ஒருத்தர் வந்துருக்கார்." என்றான்.
"இதோ வரேன்." என்று வேகமாய் வெளியேறினாள் தாரணி.
"ஏய் தாரு பார்த்து போ. இப்படி ஓடினா விழுந்துருவ. எதுக்கு இவ்ளோ அவசரம்?" என்று வருண் திட்டி கொண்டிருந்ததை காதில் வாங்க அவள் அங்கு இருந்தால் தானே...
'யாரை பார்க்க இவ்ளோ வேகமா ஓட்றா?' என்று குழம்பி யோசித்து கொண்டிருக்கும் போதே,
"உள்ள வாங்க." என்றாள் மலர்ந்த புன்னகையுடன்.
இதம் தரும் புன்னகையுடன் உள்ளே நுழைந்தான் அழகான வாலிபன் ஒருவன்.
புருவங்கள் முடிச்சிட யாரென்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தான் வருண்.
'பார்க்க அழகா இருக்கான். யாரு இவன்?' என்று புகைய தொடங்கினான் வருண்.
"மா" என்று அழைக்க மலர்ந்த முகமாய் "வாப்பா." என்றார் தாரணியின் அம்மா.
"எப்படி இருக்கிங்க ம்மா?" என்று அவரின் காலை தொட்டு வணங்கினான் வந்தவன்.
"நல்லா இருப்பா. நீ எங்க கூட இருக்கும்போது எங்களுக்கு என்னப்பா குறை? ஊர்லர்ந்து எப்போ வந்த?" என்றார்.
"இப்போ தான் மா. நேரா இங்க தான் வரேன்." என்றான்.
"என்ன அம்மாகூட மட்டும் தான் பேசுவிங்களோ? எங்களை கண்ணு தெரியலையா? நாங்களும் இங்க தான் இருக்கோம்." என்றாள் தாரணி கோபித்து கொள்ளும் சிறுகுழந்தை போல்.
"நீ என்கிட்ட பேசாத? உன் மேல ரொம்ப கோபமா இருக்கேன்." என்றான் தாரணியை முறைத்து.
வருணுக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. 'யாருடா இவன் இவ்ளோ உரிமையோடு பேசுறான்?' என்று வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்தான்.
"ஏன் எதுக்காம் என் மேல கோபம்? நானே சின்ன புள்ள. அப்பாவி..." என்று கூறி முடிக்கும் முன் தாரணியின் காதை திருக தொடங்கினான்.
"உனக்கு எவ்ளோ கொழுப்பு இருந்தா நான் அந்த பக்கம் ஊருக்கு போனவுடன் அப்பாவும் பொண்ணும் சேர்ந்து இவ்ளோ பெரிய வேலை பார்த்துருப்பிங்க? நிறைய ரிஸ்க் இருக்கு.. நான் வந்தவுடனே செய்யலாம்னு எவ்ளோ முறை வார்ன் பண்ணேன். எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையாட்டிட்டு... இப்போ இவ்ளோ ரிஸ்க் எடுத்துருக்கிங்க ரெண்டு பேரும்... உங்களை என்ன பண்றது?" என்றான் செல்லமான அதட்டலுடன்.
"அய்யோ அண்ணா ப்ளீஸ்.. தங்கச்சி பாவம்.. காது வலிக்குது.. விட்ருண்ணா.." என்று கெஞ்சினாள்.
அப்பொழுது தான் அங்கிருந்த வருணை கவனித்தவன் மகிழ்ச்சியோடு வேகமாய் சென்று அணைத்து கொண்டான்.
"ஒரு வழியா ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்துட்டீங்களா? எங்க இந்த வாலு கடைசி வரைக்கும் உங்க நினைப்போடவே இருந்துருவாளோன்னு பயந்துட்டு இருந்தேன். இப்போ தான் நிம்மதியாவும் ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு." என்றான்.
"நீங்க..?" என்று புன்னகைத்தாலும் யார் என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தான் வருண்.
"என்னை பத்தி எதுவுமே சொல்லலையா மேடம்?" என்று மீண்டும் பொய் கோபத்தோடு முறைத்தான் தாரணியை.
"அண்ணா நாங்களே இன்னும் சரியா பேசிக்கலை.. " என்று கையெடுத்து கும்பிட்டு விட்டு.
"இப்போ என்ன உங்களை அறிமுக படுத்தனும் அவ்ளோ தானே.. இப்போ பாருங்க எப்படி இன்ட்ரோ பண்றேன்னு.." என்று வருணிடம் திரும்பினாள்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top