💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-20
"நான் என்ன சொல்ல வரேன்னு ஒழுங்கா கேட்டா உனக்கே எல்லாம் புரியும்.. ஆனா, நீயெங்க... என்னை பார்த்ததும் காணாததை கண்ட தீக்குச்சி போல் சரவெடியா உரசிட்டு வர" என்று வம்பிழுத்தான்.
"சரி நா வெளிய போறேன்." என்று எழ போக,
"ஏஹ் இருடி. அன்னைக்கு நான் நீ வரதுக்காக தான் ரொம்ப ஆசையா உனக்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தேன். ஆனா, அதுக்குள்ள கல்யாண மண்டபத்திலுருந்து அம்மா ஓடி வந்து அவசரம்னு உள்ள கூட்டிட்டு போனாங்க."
*********
அன்று,
"வருண்! கொஞ்சம் உள்ள வா ப்பா." என்று அழைத்துவிட்டு நிற்காமல் சென்ற தன் தாயை கவனித்தவன் வேகமாக அவர் பின்னே மாடியில் பெண் வீட்டினர் தங்க ஏற்பாடு பண்ண அறைக்குள் சென்றான்.
"என்னாச்சும்மா...? கிழ எல்லோரும் வந்திட்டு இருக்காங்க. இப்போ போய் மேல வான்னு கூட்டிட்டு வந்துருக்கிங்க?" என்றவன் அங்கிருந்த தன் குடும்பத்தினரை கண்டான்.
"என்ன கல்யாண வேலைக்கு அவளோ கிடக்கு இங்க நின்னுட்டு இருக்கீங்க எல்லோரும்? அய்யர் பொண்ண கூட்டிட்டு வர சொல்றார்." என்றவன் மாப்பிள்ளையும் அங்கே இருப்பதை பார்த்ததும் எதுவோ சரியில்லை என்பதை உணர்ந்து,
"என்னாச்சு?" என்றான்.அவர்களின் முகத்தில் தெரிந்த கவலையால் இவனுக்குள் பதற்றம் தொற்றி கொண்டது.
"இந்த கல்யாணமே நடகுமான்னு தெரியலைடா.." என்றார் அவனின் தாய்.
"மா என்னம்மா நல்ல நாள் அதுவுமா இப்படி பேசிட்டு இருக்கீங்க? என்ன விஷயம் ஏன் எல்லோரும் இங்க இருக்கீங்க?" என்றான்.
"இவங்க என்னென்னவோ சொல்றாங்கடா. இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்றாங்க." என்றார் கண்ணீருடன்.
"என்னது நடக்காதா? ஏன் நடக்காது?" என்றான் அதிர்ச்சியும் கோபமும் கலந்து.
எல்லோரும் அமைதியாக இருக்க, "மாப்பிள்ளை என்னாச்சு? நீங்களாவது சொல்லுங்க?" என்றான்.
"சாரிங்க. உங்க பொண்ணை என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாது." என்று தலை குனிந்தான் அவன்.
"ஏன்?"
"எவன் பிள்ளையோ வயித்துல சுமந்திட்டு நிக்கிறவளுக்கு என் பிள்ளை கேட்குதா? இப்படி ஒரு உண்மையை மறைச்சு என் பையன் தலைல கட்டி வைக்கலாம்னு பார்க்கிறீங்களா? சே என்ன ஜென்மமோ? பொண்ணு தப்பு பண்ணிட்டு வந்துருக்கா? அதையும் மறைச்சு ஏமாத்த பார்க்குறிங்களா? இந்த கல்யாணம் நடக்காது." என்று கத்தினார் மாப்பிள்ளையின் தாய்.
"என்ன பேசறீங்க? உங்களுக்கு இந்த கல்யாணம் வேணாம்னா சரி.. அதுக்காக எங்க வீட்டு பொண்ணு மேல அபாண்டமா பழி சொல்ல கூடாது. இதுக்கு மேல எங்க பொண்ணை தப்பா பேசினிங்க அவ்ளோ தான் மரியாதை ஜாக்கிரதை." என்றான் கோபமாய்.
"அவங்க சொல்றது உண்மை தான்." என்றான் மாப்பிள்ளை.
"என்னடா சொன்ன?" என்று சட்டை காலரை பிடித்து அடிக்க போக,
"நான் ஒரு டாக்டர். எனக்கு தெரியும் அவங்க ப்ரக்நண்ட் தான்." என்றான் அடித்து.
"இவங்க சொல்றது உண்மையா சங்கீ?" என்றான் நம்பாமல்.
அவள் அமைதியாய் தலைகுனிய.
அவனின் சட்டையை மெதுவாய் விடுத்து, "சொல்லு அவங்க சொல்றது..?" என்று அவளிடம் நெருங்கி கேட்டான்.
'ஆமாம்' என்று தலையாட்டிய நொடி, அவளின் கன்னத்தில் பளார் என்று அரை விழுந்திருந்தது.
சங்கிதாவின் அம்மா, "அடிப்பாவி எங்க தலையில இப்படி குண்டை தூக்கி போட்டுட்டியே? பாவி பாவி" என்று மாறி மாறி அடிக்க, அவளை வலுக்கட்டாயமாக பிரித்தவன்.
"யாரு அவன்?" என்றான் அடைக்கிய கோப குரலில்.
"அவர் என்னை ரொம்ப விரும்பினார். வீட்டுக்கு வந்து பேசுறேன்னு சொன்னார். ஆனா, ஒரு இரண்டு மாசத்துக்கு முன்னாடி கார் ஆச்சிட்டேன்ட்ல இறந்துட்டார்." என்று குலுங்கி குலுங்கி அழுதாள்.
"என்ன சொல்ற?" என்றான் பெரும் அதிர்ச்சியில்.
"எப்படி சொல்றதுன்னு தெரியலை வருத்தப்பட்டுட்டு இருந்தேன். அதனால தான் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டே இருந்தேன்." என்றாள்.
"இந்த காரணத்தை சொல்லி நிறுத்திருக்கலாமே?" என்றான் வருண்.
"இவர் என்னை பெண் பார்க்க வந்த அன்னைக்கே இந்த விஷயத்தை சொல்லி என்பதை பிடிக்கலைன்னு சொல்ல சொன்னேன். இவர் தான் எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால இந்த விஷயம் வெக்கிய தெரிய வேண்டாம்னு ரொம்ப வற்புறுத்தினார்." என்றாள்.
அனைவரும் அதிர்ச்சியாய் மாப்பிள்ளையை பார்த்தனர்.
"ஆமா. என்கிட்ட சொன்னாங்க. எல்லா உண்மையும் மறைக்காம சொன்னது எனக்கு பிடிச்சிருந்தது. அதனால அவங்களை கல்யாணம் செய்துக்க விரும்பினேன்." என்றான்.
"இப்போ ஏன் நிறுத்துறீங்க?" என்றான் வருண்.
"எங்களுக்கு இந்த அசிங்கமெல்லாம் எதுவும் சொல்லாம மறைச்சுட்டான். கொஞ்ச நேரத்துக்கு முன்ன உங்க பொண்ணுகிட்ட பேசிட்டு இருந்ததை மட்டும் கேட்கலைன்னா எங்களை ஏமாத்தி கல்யாணம் பண்ணிருப்பிங்க தானே?" என்றார்.
"எல்லா உண்மையும் தெரிஞ்சுதானே சரின்னு சொல்லிருக்கார். இப்படி திடீர்னு நிறுத்தினா எங்க பொண்ணோட வாழ்க்கை என்னாகிறது? கொஞ்சம் யோசிச்சு பாருங்க. ப்ளீஸ்." என்றான் வருண்.
"அதெல்லாம் உங்க பாடு... எங்களால இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க முடியாது. எவனோ எச்சில் செய்து தூக்கி போட்ட உங்க பொண்ணை ஏத்துக்க என் பையனுக்கு என்ன தலையெழுத்து. அதையும் மீறி நடத்தினா இப்போவே வெளிய போய் எல்லா உண்மையும் சொல்லி அங்கேயே நாங்க ரெண்டு பேரும் தற்கொலை பண்ணிப்போம்." என்றார் அவனின் தாய்.
"அம்மா" என்று அதட்டினார் மாப்பிள்ளை.
"நீ சும்மா இருடா. உங்க பொண்ணுக்கு ஏத்த இளிச்சவாயன் யாராவது கிடைச்சா கட்டி வைங்க. என் புள்ளைய விட்டுடுங்க. வா என்கூட... " என்று மாப்பிள்ளையின் கையை பிடித்து தரதரவென வெளியே இழுத்து சென்றார்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top