💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-18
"என்ன என்னது? சும்மா வாய பிளக்காம வாடி என் செல்லக்குட்டி." என்று அவள் தோளில் கரம் போட்டு அழைத்து சென்றான்.
சுடிதார் செக்க்ஷனில் அவளிற்கு ஏற்றவாறு மெரூன் நிறத்தில் சிறிய வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு சுடிதாரை எடுத்து கொடுத்து, "நான் இங்கே வெய்ட் பண்றேன். நீ போய் இந்த ட்ரெஸ் போட்டுகிட்டு அந்த ட்ரெஸ்ஸை கவர்ல மடிச்சு எடுத்துட்டு வந்துரு." என்றான் வருண்.
"என்ன வருண் இது? இப்போ எதுக்கு இந்த ட்ரெஸ்? அதுவும் கடைல எதுக்கு ட்ரெஸ் சேஞ் பண்ணனும்? வேணாம் நான் வீட்ல போய் கூட மாத்திக்கிறேன்டா." என்றாள் கெஞ்சலாக.
"அடியேய் என் சுகர் கேண்டி... உன்னை பத்தி எனக்கு தெரியாதா? பயப்படாம போய் மாத்திட்டு வா. இது நம்ம கடை தான். போ" என்றான்.
அரைமனதுடன் சென்று அவளும் உடைமாற்றி வர, வெளியே வந்தவுடன், அவளின் கரத்தில் இருந்த கவரை வாங்கி தன் பைக்குள் வைத்து கொண்டான்.
"அடேய் லூசு... என்ன பண்ற? அது நான் போட்டுட்டு இருந்த ட்ரெஸ். கொடு என் பேக்ல வச்சுக்குறேன்." என்று கரம்நீட்ட, தட்டிவிட்டவன்.
"தெரிஞ்சு தானே வச்சேன் பொண்டாட்டி. என் பர்த்டேக்கு தானே எடுத்த சோ, அந்த ட்ரெஸ்ஸையும் நான் பத்திரமா வச்சுக்குறேன். பதிலுக்கு தான் இந்த ட்ரெஸ். ஒகேவா?" என்று அவளின் மூக்கை பிடித்து கிள்ளிவிட்டு வண்டியை கிளப்பினான்.
"உன்கூட ஒரே இம்சையா போச்சுடா... அழுக்கு ட்ரெஸ்ஸை வச்சுக்கிட்டு நீ என்ன பண்ண போற பக்கி?" என்று திட்டி கொண்டே ஏறி உட்கார்ந்தாள்.
"அதெல்லாம் உணக்கெதுக்கு? என் வீட்டுக்கு பொண்டாட்டியா வரும்போது பார்த்துக்கோ.." என்றான் சிரித்து.
"உனக்கு முத்திருச்சு." என்று தலையில் அடித்துக்கொண்டாள் தாரணி.
"ஆமா. உன் மேல அன்பு முத்திட்டே இருக்கு." என்று கோவிலுக்கு சென்று விட்டு அவளது வீட்டின் தூரத்தில் நிறுத்தி இறக்கிவிட்டான்.
"ஏய் பொண்டாட்டி... இன்னைக்கு எனக்கு பர்த்டே..." என்றான்.
"ஏன் நான் மறந்து போன மாதரி சொல்லிட்டு இருக்க?" என்றாள் நக்கலாய்.
"ஒரே ஒரு முறை கிஸ் கொடுத்தா... நானும் நிம்மதியா போவேன்ல?" என்றான்.
"என்னது? உனக்கு இன்னைக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன். முதல்ல கிளம்பு. இல்லன்னா மண்டைய உடைச்சுக்கிட்டு போக போற." என்று வீட்டை நோக்கி நடக்க தொடங்கினாள்.
"இதுக்காகவாவது உன் கழுத்துல சீக்கிரமே தாலி கட்டறேன்டி... ரொம்ப ஓவரால்ல.. காதலிக்க ஆரம்பிச்சு ஒரு வருஷமாச்சு. ஒரே ஒரு முத்தம் தானே கேட்டேன். என்னமோ மொத்தமா கேட்ட மாதிரி சிலுப்பிக்கிட்டு போற?" என்று பொய்யாய் முறைத்து கொண்டே சென்றான் வருண்.
"டேய் நில்லு!" என்று திரும்பி வந்தாள்.
"முடியாது உன்கிட்ட எவன் அடிவங்குறது?" என்றாலும் வண்டியை நிறுத்தினான்.
"சின்ன குழந்தைக்கு சாக்லேட் கிடைக்காத மாதரி மூஞ்சியை வச்சுக்காதடா. சகிகலை. இப்போ என்ன உனக்கு முத்தம் வேணும் அவ்ளோ தானே?" என்று திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தவள் தங்கள் நிற்கும் இடத்தை யாரும் பார்க்க முடியாது என்று தெரிந்த பின், "கண்ணை மூடு." என்றாள்.
"எதுக்கு ஓடி போறதுக்கா?" என்றான் நம்பாமல்.
அவனை முறைத்துக்கொண்டே அவள் லேசாய் குனிய, 'உண்மையாவே கொடுக்க போறாளோ?' என்று எண்ணிய நொடியில் இதயம் இரண்டுமடங்காக எம்பி துடிக்க தொடங்கியது.
மெதுவாய் குனிந்தவள் அவனை பார்த்துக்கொண்டே, அவன் இதயம் இருக்கும் இடத்தில் அழுத்த இதழ் பதித்தாள்.
இதழோடு இதழ் சேர்ந்தாலும் கிடைக்காத இன்பமும் நிறைவும் அவன் விழிகளில் தெரிந்திட, "இந்த பப்பி டாக் பேஸ் வச்சு இனி கேட்ட, மிளகாய்த்தூளை மூஞ்சில பூசிறுவேன் பார்த்துக்கோ. " என்று கூறிக்கொண்டே வேகமாய் நடந்தாலும் வெட்கத்தில் முகம் சிவந்து தான் ஒடுகிறாள் என்பதை அறிந்து கொண்டவன் செலவில்லாமல் வானில் மிதந்தபடி நகர்ந்தான்.
******
இருவரும் கடந்த காலத்தில் இருந்து வெளிவர, ஏதோ நினைத்தவளாய் அவனின் கபோர்டில் தேடினாள்.
'ஆஹா... தேட்றாளே கண்டு பிடிச்சுருவாளோ?' என்று உள்ளம் ஒரு பாக்ஜம் பதறினாலும் ஒரு பக்கம் இனிமையாய் இருந்தது.
அவன் நினைத்தது போல் அவளும் எடுத்துவிட்டாள்.
நடுங்கும் கரத்தில் அவளுடைய உடை ஆறு வருடத்திற்கு முன் எப்படி மடித்து கொடுத்தாளோ அப்படியே மடிப்பு கலையாமல்... எதை நினைத்து அழுகிறோம் எதற்காக அழுகிறோம் தெரியாமல் விழிகளில் கண்ணீர் நிற்காமல் ஊற்ற தொடங்கியது.
அவளின் அசைவுகளை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கோ அவளின் கண்ணீர் உள்ளத்தில் செந்நீர் வழிவது போல் தோன்ற, கரங்கள் அவளை அள்ளி அனைத்திட பரபரத்தன.
சில நொடிகள் உடையையே பார்த்து கொண்டிருந்தவள், மெதுவாய் அவனிடம் வந்தாள்.
அவள் திரும்புவதை கவனித்த கள்வனோ விழிகளை மூடிக்கொண்டு அமைதியாய் படுத்திருந்தான்.
அவளின் விழிகள் அவன் விரல்களில் பதிந்து நின்றன.
அவள் அளித்த முதல் பரிசான மோதிரத்தை இன்றும் போட்டுக் கொண்டிருந்தான் வருண்.
அவளுக்கு எதுவுமே புரியவில்லை.
என்னை இவ்வளவு விரும்புபவன் எதற்கு இன்னொரு பெண்ணின் கழுதில் தாலி கட்ட வேண்டும்.
'அயோ தலையே வெடிக்கிற மாதரி இருக்கு.' என்று ஒரு நொடி தடுமாறியவள்.
'என்னவோ இருக்கு. சீக்கிரமே தெரிஞ்சிக்கணும்.' என்று நினைத்தவளாய் அவனின் முன் நெற்றி முடியை கொதிவிட்டு மெல்ல தன் இதழை பதித்துவிட்டு மீண்டும் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
'என் பொண்டாட்டி யோசிக்க ஆரம்பிச்சுட்டா? இனி எல்லாமே சரியாகிடும்னு நம்பிக்கை வந்துருச்சு.' என்று மனதிற்குள் குத்தாட்டம் போட்டவன் கதவு திறக்க போகும் சத்தம் கேட்டதும் வேகமாய் எழுந்து வெளியே சென்றுவிட்டான்.
அந்த சுடிதாரை போட்டு கொண்டு வெளியே வந்தவள், அவனை காணாது, 'எங்க போனான் அதுக்குள்ள?' என்று தலையைத் துவட்ட தொடங்கினாள்.
வெளியே வந்தவினின் விழிகளில் விழுந்தது தோட்டத்தில் நடந்து கொண்டிருந்த தாரணியின் அப்பா தான்.
'மாமாகிட்ட இன்னைக்கு பேசணும்' என்று யோசித்துக்கொண்டே நடக்கவும் அவன் அலைபேசி அடிக்க, "டேய் என்னடா நைட் 2 மணிக்கு போன் பண்ணிருக்க?" என்றான் அவனின் நண்பன்.
"உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்டா." என்றதும், "வீட்ல தானே இருக்க.. இரு வரேன்." என்றான் நண்பன்.
"வராத.. நான் சொல்றதை மட்டும் கேட்டுக்கோ." என்று நேற்று இரவு நடந்ததை கூறிவிட்டு.
"எனக்கு அவங்க ரெண்டு பேர் டீடெயில்ஸ் ஈவ்னிங் குள்ள வேணும்." என்றான்.
"சரி டா. நான் விசாரிக்கிறேன்." என்று நண்பன் வைத்துவிடவும் தாரணியின் அப்பாவிடம் வந்து புன்னகையோடு நின்றான்.
"குட் மார்னிங் மாமா." என்றான்.
இவான் குரலை கேட்டு திரும்பியவர், சிரித்துக்கொண்டே, "குட் மார்னிங் பா." என்றார்.
"காபி குடிச்சிங்களா?" என்றான் வருண்.
"நான் காபி குடிக்கிறதில்லை. லெமன் டி தான் குடிச்சிட்டேன் பா." என்று அங்கிருந்த திட்டில் அமர்ந்து அவனையும் அமர சொன்னார்.
"மாமா... நேத்து ஏதோ பேசனும்னு சொன்னிங்களே?" என்றான் வருண்.
"ஆமா பா. இங்க வேணாம். ரொம்ப பெர்சனல் உள்ள போய் பேசுவோம்." என்று வீட்டின் உள்ளே நடக்க தொடங்கினார்.
தீவிரமான யோசனையுடன், அவனும் பின் தொடர, அப்பொழுதுதான் மேலிருந்து கீழே இறங்கி வந்தாள் தாரணி.
"தாரும்மா. எப்படி டா இருக்கு இப்போ?" என்றார் அன்பாய் அவரை பார்த்ததும்.
"இப்போ பரவால்லப்பா. நான் நல்லா இருக்கேன். நீங்க எதுவும் யோசிச்சு ஹெல்த் ஸ்பாயில் பண்ணிக்காதிங்க." என்று புன்னகையுடன் கூறியவள், பின்னே நடந்து வரும் வருணை கண்டதும் முறைக்க தொடங்கினாள்.
அவனோ கண்ணடித்து இதழ் குவித்து முத்தத்தை பறக்க விடவும், பி.பி ஏற தொடங்கியது.
'திமிர் பிடிச்சவன் மூஞ்ச பாரு.' என்று திட்டி கொண்டே முறைத்தாள்.
"தாரு." என்று சத்தமாய் அவளின் தந்தை அழைக்கவும் நினைவு திரும்பியவளாய்.
"சொல்லுங்கப்பா." என்றாள்.
"என் கூட கொஞ்சம் வாம்மா." என்றவர் திரும்பி, "மாப்பிள்ளை போலாமா?" என்று கேட்கவும், "போலாம் மாமா வாங்க" என்று தனி அலுவலகத்திற்கு அழைத்து சென்று கதவை மூடி தாழிட்டான்.
"இப்போ சொல்லுங்க மாமா. இந்த ரூம் மட்டும் சவுண்ட் ப்ரூப். பயப்படாம என்ன விஷயம்னு சொல்லுங்க." என்றான் அக்கறையாக.
தாரணியோ எதுவும் புரியாமல், 'இங்கே என்ன நடக்கிறது?' என்று இருவர் முகத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"மாப்ள. இதுவரைக்கும் இந்த விஷயம் என்னையும் என் மகனையும் தவிர, யாருக்குமே தெரியாது. அப்படித்தான் நினைச்சுட்டு இருந்தேன். ஆனா நேத்து அந்த மதன் ஹாஸ்பிட்டல்ல வச்சு பேசியதை பார்த்தா, இந்த விஷயம் எப்படியோ தெரிஞ்சு தான் வந்திருப்பானோன்னு சந்தேகமா இருக்கு." என்று நிறுத்தினார்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top