💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-16
'ஐயையோ! என்ன பண்றா? பார்த்துருவாளோ?' என்று இதயம் வேகமாய் துடிக்க, 'என்னை எழுப்பிருக்கலாம்ல? அவளுக்கு வாங்கின ட்ரெஸ் எல்லாம் கிழயே வச்சுட்டேனே? நைட்டே எடுத்துட்டு வரணும்னு நினைச்சேன். மறந்துட்டேன். எல்லாம் இவளால தான். இன்னைக்கு இல்ல ஏழு வருஷத்துக்கு முன்ன எப்போ இவளை பார்த்தேனோ அப்பயே எல்லாமே மறந்து மறந்து போகுது. உள்ளுக்குள்ள உட்கார்ந்துட்டு ஆட்டி வைக்கிறா என்னை...' என்று மனதிற்குள் வஞ்சித்தவன், அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
'இந்த ட்ரெஸ்... இந்த ட்ரெஸ்... இன்னுமா வச்சுருக்கான்? ' என்று அதை வருடியவள் மெல்ல அந்த சட்டையை முகர்ந்து அவன் வாசனையை ரசித்தாள்.
வெடுக்கென்று திரும்பி அவனை பார்க்க, அவள் திரும்பி நொடியில் விழிகளை மூடியிருந்தான் வருண்.
மறுபடியும் அதை நுகர்ந்தவள், ஆசையாய் போட்டுக் கொண்டாள்.
அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் விழிகளில் தெரியும் அவனுக்கான அன்பையும் கண்டவன் அவளை வற்புறுத்தி தாலி கட்டியதால் மனதில் இருந்த சிறு நெருடலும் பறந்தோடியது.
திடீரென அவள் விழிகள் கலங்குவதை கண்டவன், 'எதுக்கு இப்போ அழுகிறா?' என்று யோசித்து கொண்டே காண, அவளின் விழிகளும் அவனின் விழிகளும் ஒரே நேரத்தில் விரிந்தன.
'பார்த்துட்டா'
மெதுவாய் மிக மெதுவாய் அந்த சட்டையில் இருந்த தன் இதழ் தடத்தை வருடினாள்.
'ஆறு வருஷமாகியும் இதை அப்டியே வச்சுருக்கான். பொத்தி வைச்சு பாதுகாதிருக்கான்.' என்றவள் எண்ணம் அந்த நாளில் நடந்ததை நினைத்தது.
******
"வருண்! எங்க இருக்க?" என்றாள் தாரணி போனில்.
'காலைலயே போன் பண்ணிட்டா. என் பிறந்தநாளுக்கு விஷ் பண்ண போறா என் செல்லம்' என்ற குத்துக்களிப்பில், "காலேஜ் கிளம்பிட்டு இருகேன்டி.. நீ கிளம்பிட்டியா?" என்றான் உற்சாகமாய்.
"ஹ்ம்ம்.. எங்க வருண் எனக்கு டையர்டா இருக்கு... அதான் பேசாம லீவ் போடலாமானு யோசிச்சுட்டு இருக்கேன்." என்றாள் தாரணி.
'என்னாது லீவா? அடிப்பாவி நீ கூட எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல போறேன்னு நினைச்சேன். அப்போ உனக்கு என் பர்த்டே ஞாபகம் இல்லையா? நாம காதலிக்க ஆரம்பிச்சு வர முதல் பிறந்தநாள். இப்படி சொதப்பிட்டியே செல்லம்' என்று நொந்து கொண்டவன், "சரி டா. உடம்பை பார்த்துக்கோ. நாளைக்கு பார்க்கலாம்' என்று போனை வைத்துவிட்டான்.
இங்கு இவ்ளோ, 'பையன் நொந்துட்டான் போலையே?' என்று சிரித்து கொண்டே கல்லூரிக்கு கிளம்பினாள்.
'ஹ்ம்ம்.. நீ தான் என் உயிரே.. உன் பர்த்டே போய் மறப்பேனா டா.. வரேன்..' என்று உள்ளே நுழைந்தாள்.
கல்லூரியும் முடிந்து மாலை இவள் வரவில்லை என்று முகத்தை தொங்க போட்டுகொண்டு வெளியில் வந்தவன் எதிரில் சென்று நின்றாள்.
'யார்ரா இது நம்ம முன்னாடி வந்து நிக்குறது?' என்று தலையை தூக்கி பார்த்தவன் இவளை கண்டதும் விழிகளில் அப்படி ஒரு மகிழ்ச்சி.
"ஹே.. நீ வரலன்னு சொன்னியே? எப்போ வந்த? எப்பிடி வந்த? வீட்ல எப்படி அனுப்புனாங்க?" என்று கேள்விகளை அடுக்கி கொண்டே போக, "பொறுமையா கேளூடா... ஏன் இவ்ளோ அவசரம்?" என்றவள்.
"வா நம்ம இடத்துக்கு போவோம்." என்று அவர்கள் வழக்கமாய் பேசும் சற்று தள்ளியிருந்த ஒரு மரத்தின் கீழ் அமர்ந்தனர்.
"இப்போ எப்டி டா இருக்கு?" என்றான் கவலையான குரலில்.
"ஹ்ம்ம்.. சொல்றேன். நீ முதல்ல கண்ணை மூடு." என்றாள்.
"எதுக்குடி?" என்றான் படபடக்க,
"டேய் நான் என்ன உன்னை கடத்திட்டா போக போறேன்? சும்மா கண்ணை மூடுடா. ஓவரா பண்ணாத." என்று அதட்டினாள்.
"ஆமா அப்டியே கடத்திட்டாலும்.. வாய் கொழுப்பு ஜாஸ்திடி உனக்கு.." மெல்ல சிரித்துக்கொண்டே விழிகளை ஆர்வத்துடன் மூடினான்.
ஏதோ சத்தம் மட்டும் வர, 'என்னடா இது? சத்தம் மட்டும் வருது? கண்ணை மூட சொல்லிட்டா? பேசாம லைட்டா கண்ணை திறந்து பார்ப்போம். அவளுக்கு தெரியவா போகுது?' என்று நினைக்கவும்..
"இவ என்ன பார்க்கவா போறான்னு கண்ணை திறந்த, திறந்த கண்ணை நோண்டிருவேன் தெரிஞ்சுக்கோ" என்றாள் மிராட்டலாய்.
'ஆத்தி! இவ செஞ்சாலும் செய்வா.. கிராதகி.. பிறந்தநாள் அதுவும் என்னடா இது என் கண்ணுக்கு வந்த சோதனை..' என்று தனக்குள் புலம்பி கொண்டிருந்தவனை அழைத்தாள்.
"அதெல்லாம் ஒரு சோதனையும் இல்ல.. போதனையும் இல்ல.. கண்ணை திறந்து பாரு." என்றாள் புன்னகையோடு.
ஆவலாய் கண்ணை திறக்க, அவளின் கரத்தினில் அழகிய இதய வடிவில் சிறிய கேக் இருந்தது.
"ஹாப்பி பர்த்டே டா." என்று கேக்கை வெட்ட சொன்னாள்.
"ஹ்ம்ம்.. போ எனக்கு ஒன்னும் வேணாம்... காலைலர்ந்து எவ்ளோ ஆசையா இருந்தேன். நீ என்னை விஷ் பண்ணனும்னு... நீ தான் சொல்லவே இல்லையே?" என்றான் பொய்யாய் முறைத்து.
"கோபத்தை கூட ஒழுங்கா காட்ட தெரியலை உனக்கு... போடா.. கேக்கை வெட்டு வா. அப்போ தான் கிப்ட் தருவேன்." என்றாள் சிரித்து.
"அயோ கண்டு பிடிச்சிட்டியா? சரி கேட் பண்றேன்." கேக்கை வெட்டி அவளுக்கு ஊட்டி விட்டான். அவளும் ஊட்ட ஆசையாய் வாங்கி கொண்டு." எங்க கிப்ட் கொடு." என்று கை நீட்டினான்.
ஒரு பாக்ஸை நீட்ட, "என்னடி இது? ட்ரெஸ் மாதிரி இருக்கு?" என்று பிரிக்கவும் அழகாய் ஆகாய நீலத்தில் ஒரு சட்டை இருந்தது.
"அழகா இருக்குடா." என்று பிரித்தான்.
"சரி எனக்கு போட்டு காட்டு." என்றதும்.
"நான் போடறேன்.." என்றான் குறும்பாக.
"உன் மாடுலேஷனே சரி இல்லையே?" என்றாள் சந்தேகமாய்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top