💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-15

"சங்கீ மா... எனக்கும் இப்போ நீ சொல்றதெல்லாம் வச்சு பார்க்கும் பொழுது. சந்தேகம் வருது. ஆனா நீ சொன்னதெல்லாம் தாண்டி வேற எதுவோ இருக்கு. என்னை இவகிட்ட இருந்து பிரிக்கவும் உன்னை நான் கல்யாணம் பண்ணவும் கூட இவனுக்கும் ஏதோ பெரிய சம்மந்தம் இருக்கு. என்னன்னு கண்டுபிடிக்கனும். சரி சங்கீ இதுக்கான பதிலை நான் கண்டுபிடிக்கிறேன்." என்றான்.

"சரி மாமா. இதுக்கான விடை தெரிஞ்சப்புறம் தான் என் ஆத்மாக்கு ஒரு வேளை விமோசனம் வரும் போல..." என்றாள் சங்கீதா.

அதோடு அவளின் அசைவும் ஒலியும் மறைந்து போனது.

பெருமூச்சொன்றை வெளியிட்டவன் தன் அருகில் இருக்கும் தாரணியை காதலோடு பார்த்துக்கொண்டே இருந்தான்.

"நீயும் நானும் சேரக்கூடாதுன்னு தான் அவன் இப்படி செஞ்சுருப்பானோ? அது தான் நிஜம்னா ஏன் இப்படி செய்யணும்...? அய்யோ நம்மளால தான் சங்கீ வாழ்க்கையை இழந்துட்டு நிக்கறாளா? உன்னை அடையனுமன்றது மட்டும் தான் அவன் நோக்கமா இல்லை வேற எதுவும் இருக்குமா? ஒன்னும் புரியலையே? சீக்கிரமே இது எல்லாத்தையும் கண்டுபிடிக்கிறேன்." என்று அவளை பார்த்துக்கொண்டே கூறியவன் மெல்ல அவளின் முகத்தை ஆசையாய் லேசாக வருடினான்.

அவனின் தூக்கம் தான் இருந்த இடம் தெரியாமல் போனது.

தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவன், மெதுவாய் எழுது ஜன்னல் திரைச்சீலையை விளக்கி வேடிக்கை பார்க்க, தன் வீட்டின் எதிர்புரத்தில் யாரோ நிற்பது போல் தெரியவும் நன்கு உற்று பார்த்தான்.

அங்கே மதன் தான் நின்று இவர்களின் வீட்டை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.

'இவன் ஏன் இங்க நிக்குறான்?' என்று யோசித்தபடி மீண்டும் பார்க்க, மதனை நோக்கி இன்னொரு உருவம் வருவதை கண்டவன் யாரென்று மீண்டும் பார்வையை கூர்மையாக்கி பார்த்தான்.

அங்கு மதனுடன் பேசிக் கொண்டிருந்தவனை கண்டதும் வியர்க்க தொடங்கியது வருணுக்கு.

'இவனுக்கும் இந்த மதனுக்கும் என்ன சம்மந்தம்? இவனுங்க ரெண்டு பேருக்கும் இப்ப தான் பழக்கமா இல்லை ஏற்கனவே ரெண்டு பேரும் கூட்டு களவானிங்களா? இவனுங்க ரெண்டு பேரை பத்தியும் முதல்ல நல்லா விசாரிக்கனும்.' என்று அவர்களையே நோக்க, வந்தவன் மதனை சமாதானப்படுத்தி அழைத்து செல்வது போல் தெரிந்தது.

மீண்டும் மெத்தையில் படுத்தவன் தாரணியின் நெற்றியில் இதழ் பதித்து, "இனி என்ன நடந்தாலும் நீ எனக்கு மட்டும் தான் சொந்தம். எவனாலையும் உன்னை நெருங்க முடியாது.' என்று அவளை அணைத்தபடி நெடுநேர போராட்டத்திற்கு பின் உறங்கி போனான்.

விடிந்ததும் முதலில் கண் விழித்தது தாரணி தான்...

அவளின் முகத்தருகே வருணின் மூச்சுக்காற்று படுமளவு நெருக்கத்தில் உறங்கி கொண்டிருந்தான்.

அவனின் முகத்தையே சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்தவள் இதழ்கள் தானாய் விரிந்தது.

'இப்படி அவன் முகம் காண தான் எழ வேண்டுமென்பது அவளின் எத்தனை வருட தவம், கனவாய் சென்றுவிட்டது என்று நினைத்திருக்கையில் இன்று நிஜமாய் அவள் மனம் கவர்ந்தவனோ அவளின் மிக அருகே உறங்கி கொண்டிருக்கிறான்.

என்னதான் அவனின் மேல் கோபம் பெருமளவிற்கு இருந்தாலும் அதை மறைக்குமளவிற்கு அவன் மேல் காதல் உள்ளதென்பதை இந்த நொடி அறிந்து கொண்டாள், உடனே அவனை மன்னித்து ஏற்க முடியுமா என்பது சந்தேகமாய் இருந்தாலும் அவளின் கணவனாய் வருண் இருப்பது அவளுக்கு கிடைத்த வரமாய் எண்ணினாள்.

லேசாய் அவன் முன் நெற்றி முடியை அசைத்து விளையாடியவள் மெல்ல அவன் நெற்றியில் இதழ் பதித்து எழுந்து குளியரை நோக்கி சென்றாள்.

அவள் குளியறை நுழைந்து தாழ் போட்டது தான் தாமதம்.

பட்டென எழுந்து அமர்ந்தான் வருண்.

'ஹப்பா... எவ்ளோ நேரம் என் முகத்தையே பார்த்துட்டு இருக்கா... எங்க மாட்டிப்போமோன்னு எவ்ளோ பயமா இருந்துச்சு. மேடம் அவ்ளோ வச்சிருந்தாலும் காட்டிகமாட்டாங்களாம்.. என் தாரும்மா எனக்காக முதல் முறையா ஆசையா அவளே ஒரு முத்தம் கொடுத்துருக்கா... ஹைய்யோ... செம ஜாலி...' என்று அவள் இதழ் படித்த இடத்தை தொட்டு பார்த்து, தனக்குள்ளே பேசிக் கொண்டிருந்தவன் தாழ் திறக்கப்படும் சத்தம் கேட்டு மீண்டும் படுத்து கண்களை இருக்க மூடிக்கொண்டான்.

"என்ன இன்னும் தூங்கிட்டு இருக்கான்.?" என்று கேட்டுக்கொண்டே வந்தவள் தான் போட்டுக்கொள்ள மாற்று துணி இருக்குமா என்று அவன் அறையின் அலமாரியை திறந்து பார்த்தாள்.

அங்கே அவன் துணிகள் மட்டுமே இருந்தது.

'சே எல்லாம் இவன் துணியா இருக்கே..? இப்போ எந்த ட்ரெஸ்ஸை போட்டுக்குறது? இது என்ன ஏதோ கவர் போல இருக்கு?' என்று யோசித்தபடி அவன் துணி இடுக்கில் இருந்த ஒரு கவரை எடுத்து பிரித்தவள் மூச்சு ஒரு நிமிடம் நின்றுவிட்டது.

'என்ன பண்றா இவ்ளோ நேரம்? கபோர்ட் திறந்த சத்தம் வந்துச்சு?' என்று லேசாய் விழி திறந்து பார்த்தவன் இதயம் வேகமாய் துடிக்க தொடங்கியது.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top