💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-07
உள்ளம் படபடக்க நடுங்கும் கரத்தோடு அவளின் உயிர் சுமந்த அவர்களின் காதல் சின்னத்தை எடுத்தாள்.
'எனக்கு பயமா இருக்கு. இப்போ எதுக்கு இது? உங்க குடும்பமும் ஊர்ல நல்ல மரியாதையான குடும்பம். அதனால நீ எங்கப்பா கிட்ட வந்து கேளு நிச்சயமா சம்மதிப்பார்.' என்றாள் கடைசி முறையாக.
பெருமூச்சு விட்டவன் அவளின் விழிகளையே நேருக்கு நேர் பார்த்தான்.
"சரி டா. நானும் வேற வழி இல்லாம தான் இவ்ளோ கட்டாய படுத்தினேன். ஆனால் உனக்கு இதில் விருப்பம் இல்லாமல் இருக்கும் பொழுது வேண்டாம் கண்ணம்மா." என்றான் மென்மையாக புன்னகைத்து.
இருந்தும் அவனின் விழிகளில் தெரியும் ஒரு தவிப்பையும் பயத்தையும் காண
அவளுக்கே என்னவோ போல் இருந்தது.
"இப்போ என்ன உனக்கு. இந்த உடம்புல என் உயிர் இருக்க வரைக்கும் அதுக்கு நீ மட்டும் தான் சொந்தக்காரன். புரிஞ்சுதா?" என்றாள்.
"என்னை தவிர உன்னை நெருங்க யாராலும் முடியாது" என்று கூறிக்கொண்டே அவளின் கழுத்தில் திடீரென்று தாலியை கட்ட, அதிர்ச்சியோடு அவனை பார்த்தாள்.
"இருந்தாலும் ஒரு நுனி சான்ஸ் கூட நான் யாருக்கும் விட்டு தரதா இல்லடா. நீ இல்லைன்னா நான் என்னைக்கும் பிணம் தான். இனி வாழ்நாள் முழுக்க உன் முகத்தை பார்த்ததே வாழ்வேன்." என்றாலும் அவளின் கரம் அவன் கன்னத்தில் பதிந்தது.
"இவ்ளோ தூரம் சொல்லியும் இப்படி பண்ணிட்டல்ல?" என்று விழிகளில் நீரோடு அவனை முறைக்க.
"சாரி டி. எனக்கு என்னவோ தப்பு நடக்க போகுது. உன்னை யாரோ என்கிட்ட இருந்து பிரிக்க நினைக்கிற மாதிரி ஒரு உள்ளுணர்வு சொல்லிட்டே இருக்கு. எவ்ளோ சமாதானம் சொன்னாலும் என்னால அமைதியா இருக்க முடியலை. இனி எனக்கு பயமில்லை. நீ எவ்ளோ அடிச்சாலும் என்ன பண்ணாலும் வாங்கிக்குவேன். நீ எனக்கு சொந்தமாகிட்ட. யாரும் இனி உன்னை என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது" என்றான் சோகமாய் சிரித்து.
ஒரு புறம் அவனின் காதல் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரு புறம் இப்படி பண்ணிட்டானே என்ற கோபமும் இருந்தது.
"ப்ளீஸ் டி. நீ கோபமா இருந்தா என்னால தாங்க முடியாது. இன்னும் ரெண்டு அடி கூட அடிச்சுக்கோ" என்றான் பாவமாக.
இவனுடன் தான் தன் வாழ்க்கை என்று முடிவு செய்த பின், தன் பெற்றோர் இல்லாமல் தாலி கட்டிக்கொண்டது தான் அவளை மிகவும் வருத்தியது.
அவள் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவரமுடியாமல் தவித்தபடி நின்றாள்.
வருணின் அலைபேசி அழைக்க, "ஹலோ!" என்றான் காதில் வைத்து.
"ஹ்ம் வரேன்" என்று வைத்துவிட்டான்.
"கண்ணம்மா இன்னும் கோபமா ப்ளீஸ் எனக்கு நீ வேணும். நீ இல்லாம என்னால இருக்க முடியாது" என்று தொடரவும் எதுவும் பேசாமல் கோவில் வாசலை நோக்கி வேகமாய் நடந்தாள்.
அவனும் எவ்வளவோ கெஞ்சியபடி பின் தொடர, திரும்பி நின்று அவனை முறைத்து, "இதுக்கு மேல என் பின்னாடி வராத" என்று விரல் நீட்டி எச்சரித்து சென்றுவிட்டாள்.
தான் என்னவோ செய்ய வந்து என்னவோ நடக்கின்றதே என்று பெருமூச்சு விட்டவன் தன் நண்பனை அழைத்தான்.
"டேய் என்னடா? எதுக்கு போன் பண்ணிட்டே இருக்க?" என்றான்.
"டேய் இங்க எவ்வளவு நேரம் இருக்க முடியும்? சீக்கிரம் வா" என்றான் தோழன்.
"இதோ வரேன்" என்று வேகமாய் கோவிலின் பின் புறம் சென்று அங்கிருந்து ஒற்றையடி பாதை போல் இருந்த மண் பாதையில் கீழே. சிறிது தூரம் இறங்கியவுடன், அங்கிருந்தவர்களை பார்த்து தலையசைத்தபடி அவர்களை நோக்கி நடந்தான்.
"என்னடா சொல்றான்?" என்று தன் நண்பனிடம் கேட்டுக்கொண்டே அங்கிருந்த தாண்ணீரை எடுத்து பருகினான்.
"என்ன சொல்றார்? தன்னை பற்றி ஒரே புகழ்ச்சி ... இவர் பெரிய இவராம்? வந்ததுலர்ந்து இதே தான் சொல்லிட்டு இருக்கான்." என்றதும் அவனை முறைத்து திரும்பினான்.
அங்கே அங்காங்கே முளைத்த செடிகள், வளர்ந்த முட்புதர்கள் என்று யாரூமில்லா காடாய் தோன்ற, அருகில் இருந்த மரத்தில் கட்டி வைத்திருந்தார்கள்.
"எவ்ளோ திமிர் இருந்திருந்தா நீ இப்படி செய்யலாம்?" என்று ஓங்கி ஒரு அரை விட்டான்.
"டேய் நீ ஆள்தெரியாம கை நீட்ற... தேவையில்லாத பிரச்சனையில் போய் மாட்டிக்காத. மரியாதையா என்னை விட்று." என்றான் அவன் முறைத்துக்கொண்டே.
"நீ யாரு? என்ன மாதிரி வேலை பார்த்திருக்க, என்ன மாதிரி வேலை பார்க்க இருந்த எல்லாம் தெரிஞ்சு தான் உன்னை தூக்கிருக்கேன் டா" என்று மீண்டும் ஒரு அரை விட்டான்.
"டேய் விட்டா என்ன கை நீட்டிட்டே இருக்க? எங்க மாமாக்கு இது தெரிஞ்சுது நீங்களாம் ஒருத்தனும் இருக்க மாட்டிங்க" என்றான் வாயில் இருந்த குருதியை கீழே துப்பியவாறு.
"ஒஹ்! அப்படி சொல்றியா? ஆனா எனக்கென்னமோ உன் மாமாக்கு தெரிஞ்சா உன்னை கொன்னுடுவார்னு நினைக்கிறேன். " என்றான் வருண்.
"என்ன லூசு மாதிரி பேசுற? என் மாமா ஏன் என்னை கொல்ல போறார். அவரோட ஒரே தங்கச்சி பையன். என்னை அவர் தான் வளர்க்கிறார்." என்றான் எதுவும் நடக்காது போல்.
"உண்மை தான் நீ அவரோட பாசமான தங்கச்சி பையன் தான். அவர் தான் உன்னை வளர்த்தார். ஆனாலும் அவர் பொண்ணு மேல அவர் உயிரையே வச்சுருக்கார்ன்னு நினைக்கிறேன். நீ என்ன சொல்ற?" என்றான் வருண்.
"டேய்! நீ என்ன சொல்ற? நீங்கள்லாம் யாரு? எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்துருக்கிங்க..." என்று பதற்றமானான்.
"ஷாக்க்கை குறை ஷாக்க்கை குறை... இவ்ளோ நேரம் தில்லா பேசிட்டு இருந்த... இப்போ என்ன கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி பதட்டப்பட்ற?" என்றான் வருண் ஏளனமாக சிரித்து.
"டேய்!" என்று மீண்டும் பதறினான்.
"உனக்கு பிடிச்ச ஒரு வீடியோ வை காட்டட்டா?" என்று தன் அலைபேசியில் ஒரு விடியோவை காட்டியதும் எதிரில் இருந்தவன் முகம் மிகவும் கலவரமானது.
அதில்,
"டேய்! என்னடா உங்க மாமா அவர் பொண்ணுக்கு வரன் பார்க்க சொல்லிருக்கார் போல இருக்கு. வீடலையே ராஜாவாட்டம் நீ இருக்கும் போது எதுக்கு டா வெளிய பார்க்கிறார்?" என்ற தோழனிடம்.
"எல்லாம் காசிறுக்கிற திமிருதான்டா... வேறென்ன? நான் அவர் சொல்றதெல்லாம் செய்து கிட்டு அவருக்கு அடிமையா இருக்கேன்ல அதான். அவருக்கு என் அருமை புரியல... அவர் தகுதிக்கு ஏத்தாப்புள மாப்பிள்ளைக்கு பார்க்க சொல்லிருக்கான் அந்தாளு. நினைச்சாலே எரியுது" என்றான் கிரி கோபம் தலைக்கேற.
"பேசாம உன் மாமா பொண்ணையாவது உன்னை காதலிக்க வச்சுருக்கலாம்." என்றான் உடனிருந்தவன்.
"டேய்! அவ யாரையோ விரும்புறான்னு நினைக்கிறேன். இருந்தாலும் அப்பன் ரத்தம் அப்டியே ஓடுது அவளுக்கு. என்னை ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை. திமிர்ப்பிடிச்சவ." என்றான் கிரி.
"ஒஹ் அப்போ கூடிய சீக்கிரம் உங்க மாமாகிட்ட சொல்லி காதலிச்ச பையனையே கல்யாணம் பண்ணிக்குவா?" என்று தூபம் போட்டான் இன்னொருவன்.
"டேய் ஏன்டா நீ வேற? என்ன ஆனாலும் மாமன் பொண்ணும் எனக்கு தான். மாமன் சொத்தும் பாதி எனக்கு தான்." என்றான் கிரி ஏதோ முடிவாய்.
"என்னடா சொல்ற? " என்றான் தோழன் எதுவும் புரியாமல்.
"உண்மை தான்டா சொல்றேன். அதுக்கு நான் ஒரு திட்டம் வச்சுருக்கேன்." என்றான் கிரி.
"என்ன திட்டம்டா?"
"இன்னைக்கு என் மாமன் பொண்ணு எப்படியும் வீட்டைவிட்டு வெளியே வருவா... வரும்போது அவளை தூக்கிட போறேன்." என்றான் கிரி விஷமாய் சிரித்து.
"டேய் என்னடா சொல்ற?" என்றான் பதட்டமாய்.
"ஆமாடா! மயிலே மயிலே இறகு போடுன்னா கேட்க மாட்டாங்க.. என் மாமனும் எனக்கு கட்டி தரமாட்டான். அவன் பொண்ணும் அதுக்கு சம்மதிக்க மாட்டா. அதான் நேத்தே என் மாமா ஏதோ வேலை இருக்குன்னு வெளியூருக்கு போயிருக்கான். வர நாலு நாள் ஆகும். அவ அண்ணனும் சென்னைல படிச்சிட்டு இருக்கான். சோ இன்னைக்கு தூக்கி அவ கழுத்துல தாலி கட்டபோறேன்." என்று பயப்படும்படி பயங்கரமாய் சிரித்தான் கிரி.
"என்னடா என்னென்னவோ சொல்ற?" என்று உடன் இருந்தவர்கள் பதட்டமாகிட.
"டேய் பயபடாதிங்க. கடத்துறது மட்டுமில்ல. தாலி கட்டி இன்னைக்கே அவளை என் பொண்டாட்டியா ஆகிட்டா அவங்க யாராலையும் எதுவும் செய்ய முடியாது. பொண்ணு மானத்துக்கு பயந்துட்டு என்னை மாப்பிள்ளையா ஏத்துகிட்டு தான் ஆகணும். அவளும் என்கூட வாழ்ந்து தான் ஆகணும்" என்று சிரித்து அனைவரும் குடிக்க ஆரம்பித்தனர்.
அந்த விடியோவை பார்த்து அரண்டு போயிருந்தான் கிரி.
"டேய் இதை எப்போ எடுத்திங்க? யார் எடுத்தது? யாரடா நீங்க எல்லாம்? " என்று மரணபயத்தில் கேட்டான் வெலவெலத்து.
"டேய் உனக்கு அதெல்லாம் வேணாம். இப்போ நீ சொன்னியே இதை கொண்டு போய் உன் மாமன் கிட்ட கொடுக்க போறேன்னு சொல்வேன்னு நினைக்காத... ஏன்னா என் போலீஸ் பிரெண்டுக்கிட்ட ஏற்கனவே அனுப்பிட்டேன். உன்மேல கொலைவெறில இருக்கான். இப்போ சொன்னா உன்னை அழகா தூக்கி உள்ள வச்சு கும்மிருவான். என்ன சொல்ற?" என்றான் வருண்.
"வேணாம் அது மாதிரி எதுவும் செய்துறாதீங்க. நான் எதுவும் செய்யமாட்டேன். ப்ளீஸ் விட்றுங்க" என்று பயத்தில் கெஞ்சினான் கிரி.
"இனி உன்னை இந்த பக்கம் பார்க்கவே கூடாது. உங்க வீட்ல என்ன சொல்வியோ எங்க போவியோ அதெல்லாம் எனக்கு தெரியாது" என்றான் வருண்.
"சரி நான் இங்கே இருக்க மாட்டேன்" என்றான் கிரி தலை குனிந்து.
பின் வீட்டிற்கு வந்தவனது நினைவுகள் தன்னவளை சுற்றியே இருந்தது.
"அப்புறம் பொண்டாட்டி. இன்னைக்கு தான் நமக்கு கல்யாணம் நடந்திருக்கு. அத்தானை கவனிக்க மாட்டேன் என்கிறாயே?" என்று வம்பிழுக்க அவனின் முதுகில் இரண்டு அடிகளை போட்டு, "திமிரு டா. உனக்கு. எல்லாம் சரியாகி எல்லாரும் ஏத்துக்குற வரைக்கும் என் பக்கத்துல வரணும்னு கனவுல கூட நினைக்காத" என்றாள் விரல் நீட்டி எச்சரித்து.
"அப்படியா சொல்ற?" என்று கண் சிமிட்டி அவளின் நெற்றியில் இதழ் பதித்து, "பார்ப்பபோம் அதையும் தான்" என்றான் குறும்பாக.
"டேய்! எந்திரிடா" என்று குரல் கேட்டு கண்விழித்தவன் அய்யோ சே அவா ஞாபகத்துலையே இருக்கிறதால இப்படி கனவு வந்துருக்கு போல?" என்று தனக்குள் கூறிக்கொண்டே எழுந்து சென்றான்.
அதன் பின் எவ்வளவு முயன்றும் அவளை காண முடியாமல் போக, அவளும் வீட்டை விட்டு வெளியேறவில்லை என்பது கேட்டு, அவசரப்பட்டு தான் தவறு செய்து விட்டோமோ? என்று மிகவும் நொந்து போனான் வருண்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top