💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-05
மெல்ல விழிகளை திறந்தவள் அங்கும் இங்கும் பார்க்க, "எனக்கு என்னாச்சு? நான் எங்க இருக்கேன்?" என்று இரு கரங்களால் தலையை அழுத்தி பிடித்து கொண்டு யோசிக்க, நடந்த அனைத்தையும் நடந்தவை நிழலாய் ஓடியது.
அங்கே யாரை முழுவதுமாக வெறுக்கிறாளோ யாரை தன் வாழ்நாள் முழுக்க பார்க்க கூடாதென்று நினைத்திருந்தாளோ அவனின் முகம் எதிர் சுவரில் அலங்கரித்திருந்தது.
வெடுக்கென்று வேகமாக எழுந்து அமர்ந்தவள் நாசியில் அவனின் வாசம் அந்த அறை முழுவதும் நன்கு நிரம்பியிருந்தது. ஒரு நிமிடம் கூட அங்கே இருக்க அவளுக்கு பிடிக்கவில்லை. என்ன ஆனாலும் அவனின் முகத்தை பார்க்க கூடாது. சீக்கிரம் வெளியேற வேண்டும் என்று அந்த அறையில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொண்டு மெதுவாக எழுந்து தள்ளாடியபடி வெளியே எட்டி பார்த்தாள்.
கீழே இருந்த ஒரு அறையில் தான், தான் இருக்கிறோம் அன்று உணர்ந்து மெல்ல வெளியே வந்தாள்.
அவளை கண்டவுடன் பணியாள் ஒருவர் ஓடி வந்து, "முழிச்சிட்டீங்களாம்மா?" என்றார் அக்கறையாய்.
"ஹ்ம்ம். என்கூட வந்தவர் எங்க?" என்றாள்.
"அய்யாவும் அவரும் ஆபிஸ் விஷயமா எதோ பேசிட்டு இருக்காங்க. அய்யா நீங்க முழிச்சிட்டீங்கன்னா உடனே சொல்ல சொன்னார்.. இருங்க இதோ வரேன்" என்று திரும்ப, அவசரமாய் அவள் "அண்ணா! தாகமா இருக்கு. குடிக்க ஏதாவது தரிங்களா?" என்று கேட்டாள்.
"சரிம்மா. இப்படி உட்காருங்க. ரெண்டே நிமிஷத்துல ஜூஸ் கொண்டு வரேன்" என்று உள்ளே ஓடினார்.
தான் தெரியாமல் வந்தாலும் வரக்கூடாத இடத்திற்கு வந்துவிட்டோம் என்று தீயின் மேல் நிற்பது போல் தேகம் பற்றி எரிந்தது அவளுக்கு.
'முதல்ல யாராவது வரதுக்கு முன்ன, இங்க இருந்து வெளியே போகணும்.' என்று நினைத்து கொண்டு வேகமாக உடல்நிலை சரியில்லாத பொழுதும் வெளியேறினாள்.
பழச்சாறுடன் வந்தவர் அவளை காணாது திகைத்து அங்கும் இங்கும் அழைத்து தேடினான்.
இவனின் குரல் கேட்டு வெளியே வந்தவன்.
"என்ன ஆச்சு? ஏன் சத்தம் போட்றிங்க?" என்றான்.
"ஐயா! அந்த பாப்பா கண் முழிச்சிட்டாங்க" என்று கூறிக்கொண்டிருக்கும் பொழுதே முழுதாய் கேட்காமல் அந்த அறைக்குள் ஓடினான்.
அவனுக்கு அதிர்ச்சி தரும் விதத்தில் யாரும் இல்லாமல் காலியாக இருக்க, அவளின் வாசம் மட்டும் நாசியில் ஏறியது. மெல்ல இதழ் விரிய, "இன்னும் நீ மாறவே இல்லடி" என்று வேகமாக வெளியே வந்தான்.
"எங்க. அவங்க அங்க இல்லையே?" என்று கேட்டான்.
"அய்யா. உங்களை கூப்பிட தான் வந்தேன். அதற்குள் நாக்கு வரண்டிருக்குக்குடிக்க ஏதாவது வேணும்னு கேட்டாங்க. எடுத்துட்டு வந்தா அதுக்குள்ள போய்ட்டாங்க." என்றார் வருத்தமாய்.
"போயிட்டாங்களா? அதுக்குள்ளவா? உங்களை அவங்களை பார்த்துக்க தானே சொன்னேன்" என்றான் கோபமாக.
இவை அனைத்தையும் ஒன்றும் புரியாமல் பார்த்து கொண்டிருந்தார் கேசவன்.
"என்னாச்சு சார்.?" என்றார் மெதுவாய்.
தான் எல்லோர் முன்னிலையில் சற்று அதிகமாக பதட்டப்படுவதை உணர்ந்து, மெதுவாக... "ஒன்னும் இல்ல சார். உடம்பு முடியாதவங்க. உங்க கூட அனுப்பி விடலாம்னு பார்த்தா.. அதுக்குள்ள போய்ட்டிருக்காங்க. அதான்" என்றான் சகஜமாக.
"பரவால்ல சார். நான் போற வழில வீட்டுக்கு போய் பார்த்துட்டு போறேன்." என்றார்.
"சரி சார். எனக்கு கொஞ்சம் அர்ஜெண்ட் மீட்டிங். நாளைக்கு ஆபிசுக்கு வரேன். மீதியை அங்க பேசுவோம்" என்றவனை சற்று வினோதமாக பார்த்துவிட்டு, "சரி சார்" என்று கிளம்பினார்.
வீட்டிற்கு சென்று தாரணியை பார்த்துவிட்டு வற்புறுத்தி தன்னோடு அழைத்தும் சென்று விட்டார்.
அவரறியாமல் அவரை பின் தொடர்ந்தவன் அவளின் வீட்டையும் அவர் தன்னோடு அழைத்து செலவதையும் பார்த்து மீண்டும் பின் தொடர்ந்தான்.
அவள் வீட்டின் முன் இறங்குவதை பார்த்தவன் இத்தனை ஆண்டுகள் கழித்து தாரணியை காண்பதால் விழிகள் நீரால் நிரம்பியது.
அவள் சிறு குழந்தை போல் உள்ளே செல்லாமல் முகம் சுருக்கி சிணுங்குவதை கண்டு அவனின் முகம் புன்னகை சிந்தியது.
அவளின் தலையில் செல்லமாய் தட்டியவர். உள்ளே குரல் கொடுக்க வெளியே வந்த பெண்மணி தாரணியை கண்டதும் முகம் மலர்ந்து நெற்றியில் முத்தம் கொடுத்தார்.
அணைத்தபடி உள்ளே அழைத்தும் சென்றார்.
"இப்போ தான் நிம்மதியா இருக்கு. தாரு நல்லா இருக்கா" என்று தனக்குள் கூறியவன் வீட்டை நோக்கி சென்றான்.
********
"என்ன கோபம் இருந்தாலும் உடம்பு முடியாத நேரத்துல கூட உன் ஆடம் பிடிக்கிற குணம் போகவே இல்லடி. உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்" என்று பெரு மூச்சு விட்டவன் வீட்டினுள் நுழைய, அங்கே அழும் குழந்தையை சமாதானம் செய்யும் வழி தெரியாமல் எல்லோரும் திண்டாடி கொண்டிருந்தனர்.
தன் சிந்தனைகளை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, மகளை நோக்கி சென்றான்.
"செல்ல குட்டி! எதுக்கு அழுகுறிங்க?" என்று செல்லம் கொஞ்சியபடியே குழந்தையை வாங்கி கொண்டான்.
"பால் குடிச்சிங்களா?" என்று குழந்தையின் முகத்தை பார்த்து கேட்க, அவனின் கரத்தில் வந்தவுடன் அழுகை மறைந்து புன்னகை மலர்ந்தது.
"பார்த்தியா என் மகளை அப்பா தூக்கினவுடனே சிரிப்பு வந்துச்சுருச்சு." என்று தனதறைக்கு சென்று குழந்தையை மெத்தையில் கிடத்தி கொஞ்சி கொண்டிருந்தான்.
அவனை சுற்றி சில்லென்ற குளிர் காற்று பரவுவதை உணர்ந்தவன் மெல்ல புன்னகை பூத்தான்.
"வந்துட்டியா?" என்று கேட்கவும், ஆம் என்பது போல் திரைச்சீலை அங்கும் இங்கும் அசைந்தாடியது.
"அதானே பார்த்தேன். உன் பொண்ணை பார்க்காம இருக்க முடியாதே உன்னால?" என்றதும் மெல்லிய புன்னகை அறையில் பரவியது.
"சந்தியா! நம்ம பொண்ணு உன்னை ரொம்ப தேடறா? நீ இருந்திருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்" என்று பெரு மூச்சு விட்டான்.
"என்ன செய்றது மாமா? எல்லாம் என் விதி. எல்லாம் நல்லதுக்கு தான். எனக்கு ஒரே ஒரு வருத்தம் பாப்பாகூட என்னால இருக்க முடியலையே அது தான். " என்றாள் மிக மெல்லிய குரலில்.
"ஏன் இப்படி பேசுற சந்தியா? நீ உயிரோட இருந்திருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்?" என்றான்.
"மாமா நான் இருந்திருந்தா என் பொண்ணை தவிர யாருக்கும் பிரயோஜனம் இல்ல. இப்போ தான் உங்க வாழ்க்கைக்கு ஒரு விடிவுக்காலம் வர போகுது." என்றாள்.
"என் வாழ்க்கைக்கு என்ன? என் பொண்ணு மட்டும் தான் இனி" என்றான் மகளை பார்த்து.
"மாமா" என்றாள் சந்தியா.
"என்ன மா?" என்றான் பார்வையை எல்ல இடத்திலும் சுழல விட்டு.
"தாரணி இங்க வந்தாங்கள்ல?" என்றதும் அவன் முகம் பல வித உணர்வுகளை வெளிக்காட்டி ஒரு நிமிடம் மூச்சை உள்ளிழுக்க, அவனின் கண்கள் பனித்தது.
"தாரணி என் வாழ்க்கைல முடிஞ்சு போன அத்தியாயம். விடுடா. இனி பேசி பயனில்லை." என்றான்.
"அதனால தான் அவளை பின் தொடர்ந்து போய் பார்த்துட்டு வந்திங்களா?" என்றாள்.
பதில் எதுவும் கூறாமல் அமைதியாய் இருக்கவும்.
"எனக்கு தெரியும் உங்க உயிரே அவங்க தான்." என்றாள் சந்தியா.
"சந்தியா" என்று பேச்சை ஆரம்பிக்கும் முன். "நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். எனக்கு உங்களை பத்தி நல்லா தெரியும் மாமா. எத்தனை வருஷம் என்ன எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உங்க காதல் அவங்களுக்கு மட்டும் தான் சொந்தமானது. அதனால" என்றாள்.
"வேணாம் சந்தியா. இதோட இந்த பேச்சை விடு. " என்று குழந்தையுடன் விளையாட ஆரம்பித்தான்.
"மாமா அங்க அவங்களுக்கு உடம்புக்கு முடியலை. நீங்க ஒரு வார்த்தை பேச கூடாதா?" என்றாள்.
"நானா?" என்று வருத்தம் கலந்த ஒரு புன்னகை பூத்தான்.
"ஆமா நீங்க தான். இது தான் அவங்க நம்பர்" என்று ஒரு தொலைபேசி எண் தோன்றிட, இவனுக்கு நா வரண்டது.
நீண்ட நேர யோசிப்புக்கு பின்,
தரணியின் தொலை பேசி அழைக்கவும்,
எடுத்து காதில் வைத்தாள்.
"ஹலோ"
இம்முறை அழைத்தவனின் குரலில் உயிர் முழுவதும் குளிர் காற்று தீண்டி சென்றது போல் ஒரு மென்மை.
"ஹெலோ" என்றாள் இவளும் மிக மெல்லிய குரலில்.
"நான் வருண் பேசுறேன். தாரணி தானே?" என்று கேட்டான்.
********
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top