💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-03
அலைபேசியை எப்பொழுது துண்டிப்போம் என்று இருந்தவளுக்கு வைத்தால் போதும் என்று வைத்து விட்டாள்.
அலைபேசியை வைத்துவிட்டாலும் மனம் மட்டும் தன் அண்ணனை எண்ணி பின்னோக்கி சுழல ஆரம்பித்தது.
"செல்லம்மா! செல்லம்மா! " என்று குரல் கொடுத்தபடியே வீட்டிற்குள் துள்ளி குதிக்காத குறையாக ஓடி வந்தான் ஹரிதரன்.
வேலையை நிறுத்திவிட்டு எல்லோரும் புன்னகையுடன் அவனை கவனிக்க தொடங்கினர்.
"இங்க என்ன மேஜிக் ஷோவா காட்றாங்க? எல்லோரும் வாய இப்படி திறந்துட்டு பார்க்கிறீங்க? இது தினமும் இந்த வீட்ல நடக்குறது தானே? தினமும் ஏதாவது காரணத்துக்காக இவன் இப்படி ஓடி வரதும் அவளை தூக்கி கொஞ்சுறதும் ஒன்னும் புதுசில்லையே? ஆகட்டும் வேலையை பாருங்க" என்றார் இவர்களின் அன்னை அஷ்டலக்ஷ்மி.
"நமக்கு இருக்கிறது ரெண்டே ரெண்டு முத்து பிள்ளைங்க அதுங்களை ஏன்டி திட்ற? அவங்க சந்தோஷமா இருந்தா நாமளும் சந்தோஷமா இருக்க முடியும்? " என்றார் கார்த்திகேயன்.
"ஹம்.. அவங்க சந்தோஷமா இருக்கிறது எனக்கென்ன வருத்தமா? நீங்க வேற.. இப்படி கத்திக்கிட்டே வராதடான்னு நூறு முறையாவது சொல்லிருப்பேன். ஒருமுறையாவது கேக்குறானா உங்க மகன்?" என்றார் அஷ்டலட்சுமி.
"ஹுக்கும்... அவன் உருப்படியா ஏதாவது செஞ்சா மட்டும் உன் மகன். எதாவது குத்தம் சொல்லனும்னா மட்டும் ஏன் மகனா? நல்லா வருவடி நீ?" என்று போலியாய் முறைத்தார் கார்த்திகேயன்.
"போதும் போதும் ரொம்ப நேரம் முகத்தை அப்டி வச்சுக்காதீங்க பார்க்க சகிக்கல... அதுவும் இல்லாம உங்களால என்மேல கோபப்படமுடியாது. " என்று புன்னகைத்தார் அஷ்டலட்சுமி.
"சரி தான் லட்சுமி. இந்த முப்பது வருஷ வாழ்க்கைல என்னை பத்தி அக்குவேர் ஆணி வேரா தெரிஞ்சி வச்சிருக்க. உன்கிட்ட ஏதாவது பேச முடியுமா? இந்த வீட்டு எஜமானி அதுமட்டுமா நாங்க ரன் பண்ற எல்லா பிஸின்ஸ்க்கும் அதிபதி" என்று வாயின் மேல் கை வைத்து பதுசாய் கூறினார்.
"ஹயோ! ஏங்க நீங்க வேற? பேச்சு எங்க ஆரம்பிச்சு எங்க போகுது பாரு? அதில்லைங்க... இவன் இப்படி தினமும் ஊரை கூட்டி தங்கச்சி புராணம் பாடிக்கிட்டு இருந்தா ஊர் முழுக்க பிள்ளைங்க மேல எவ்ளோ திருஷ்டி? அதான் எனக்கு பயம்" என்றாள் அஷ்டலட்சுமி.
"நீ அம்மா அதனால உனக்கு இந்த பயம். அவங்க பிள்ளைங்க அதனால நோ பயம்" என்று நகைத்தார்.
"அய்யா சாமி. உங்ககிட்ட பேசி ஜெய்க்க முடியுமா? நான் தான் பேசி பேசி டயர்ட் ஆகணும்." என்றார் அஷ்டலட்சுமி தலைக்கு மேல் கரம் கூப்பி.
"சரி சரி. இதுக்காக என்னை கும்பிட வேண்டாம். என்ன தான் இருந்தாலும் நீ என் இதயத்தின் ராணி" என்று கண்ணடித்தார்.
"அயோ! என்னங்க நீங்க? உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல. பிள்ளைங்க வளர்ந்துட்டாங்க. இப்போ போய் இப்படியெல்லாம் பேசிக்கிட்டு. பசங்க கேட்டா என்ன நினைப்பாங்க?" என்று கோபத்திலும் வெட்கப்பட்டார்.
"எத்தனை வருஷமானாலும் எனக்கு நீ... உனக்கு நான்... நம்மோடு அன்பு மாற போறது இல்லையே? ஹ்ம்ம்... உன்னை முதல் முதல்ல இப்படி வெட்க பட்டபோது பார்த்து விழுந்தவன் தான். இன்னும் எழ முடியலையே" என்றார் மனைவியை கனிவாய் பார்த்து.
"ம்ப்ச்... சும்மா இருங்க" என்றவரின் கரத்தை பற்றி அருகில் இழுத்தவர் அன்பாய் அவரின் நெற்றியில் இதழ் பதித்தார்.
"ஹ்ம்ம்.... சிக்கி
செல்லம்மா என்னடா இன்னைக்கு ஒரே லவ்ஸ் படமா ஓடுது" என்று கேலியாய் கேட்டபடி தங்கையின் தோளில் கரம் இட்டு அணைத்தபடி கூட்டி வந்தான் ஹரிதரன்.
"ஆமான்னா... நான் வேற சின்ன புள்ள.. இவங்க அடிக்கிற லூட்டியை தாங்க முடியலை" என்று சிரித்தாள் தாரணி.
"ஹயோ" என்று கணவனிடம் இருந்து வேகமாக விலகியவர் தள்ளி அமர்ந்தார்.
"டேய் ஏன்டா அம்மாவை சும்மா கிண்டல் பண்றிங்க?" என்று அஷ்டலட்சுமியை பார்த்து சிரித்தார்.
"ஆமா நீ என்ன காலைலயே உன் தங்கச்சி பேரை சொல்லி ஊரை கூப்பிட்டுட்டு இருந்த?" என்றார் அஷ்டலட்சுமி.
"ம்மா. பாப்பாக்கு ரிசல்ட் இன்னைக்கு மறந்துட்டீங்களா?" என்றான் ஹரி.
"நீ தான் மூச்சுக்கு முன்னூறு தடவை உன் தங்கச்சி பேரை சொல்லிட்டு இருக்கியே. அப்புறம் நாங்க எங்க இருந்து மறக்கிறது?" என்றனர் இருவரும் புன்னகைத்து.
"ஹ்ம்ம். என் செல்லம்மாக்கு ரிசலட்டுன்னு சொன்னேன் அவ்ளோ தான். அதை நீங்க இவ்ளோ பில்ட் அப் செஞ்சு சொல்றிங்க." என்றான்.
"அண்ணா! சொல்லுன்னா எவ்ளோ மார்க் ணா. நீ தான் நான் வந்து சொல்ற வரைக்கும் நீ எதுலையும் பார்க்க கூடாதுன்னு சொல்லிட்டா?" என்றாள் செல்லமாய் சிணுங்கி.
"என் செல்லக்குட்டி இதுக்குபோய் வாடலமா உன் முகம்? நீ தான் உங்க ஸ்கூலையே செகண்ட் மார்க்" என்றான் ஹரி சந்தோஷமாய்.
"செகண்டா..?" என்றாள் அதிர்ச்சியாய்.
"ஆமா டா. ஸ்கூல் செகண்ட் எவ்ளோ பெரிய விஷயம்? நீ பர்ஸ்ட் வாங்கலைன்னு பீல் பண்ணாதீங்க" என்றான் தங்கையின் தலையை வருடி கொடுத்து.
"ஆணா அண்ணா நான் பர்ஸ்ட் மார்க்குக்கு தான் எய்ம் பண்ணேன். யாரு பர்ஸ்ட் மார்க்கு? அந்த நெட்டை கொக்கு தான? " என்றாள் கோபமாய் தாரணி.
"ஆமா டா. உன்னை விட ரெண்டு மார்க் அதிகம் அவ்ளோ தான்" என்றான் ஹரி.
"எனக்கு அப்போவே தெரியும் அந்த கெமிஸ்ட்ரி டீச்சர் எனக்கு வேணும்னே ரெண்டு மார்க் இன்டெர்னல்ல கம்மி பண்ணிட்டாங்க. " என்று எந்த வழியில் மார்க் குறைந்ததுக்கு காரணம் தேடடலாம்னு யோசித்து புலம்பிக்கொண்டிருந்தாள்.
"டேய் விடுடா தங்கம். அதான் ஸ்கூல் செகண்ட் வந்துட்டல்ல... நமக்கு இருக்க வசதிக்கு உனக்கு வீட்லையே படிப்பு சொல்லிக்கொடுக்க முடியும். ஆனா நீ தான் ஸ்கூலுக்கு தான் போய் படிப்பேன்னு சொல்லிட்ட? நீ எவ்ளோ படிச்சாலும் நம்ம எல்லா பிசினஸ்சையும் நீங்க ரெண்டு பேர் தான் பார்த்துக்க போறீங்க?" என்றார் தந்தை.
"அப்பா எத்தனை தடவை சொல்றது? எனக்கு நிறைய படிக்கணும். எல்லா வேலையும் அண்ணா பார்த்துப்பான்" என்றாள் மூக்கு விடைத்தபடி தாரணி.
"ஹேய் செல்லம்மா எதுக்கு இப்போ டென்சன் ஆகுற? நீ உனக்கு எவ்ளோ வேணுமோ அவ்ளோ படி. அண்ணன் நான் பார்த்துக்குறேன் எல்லாத்தையும்" என்று சிரித்தான்.
"அண்ணன்னா அண்ணன் தான்" என்று துள்ளி குதித்து தமையனின் கழுத்தை கட்டிக்கொண்டு சிரித்தாள் தாரணி.
"அடியேய் வயசுக்கு வந்த பொட்டை புள்ள... என்னடி குழந்தை மாதிரி குதிச்சிட்டு இருக்க? " என்று தாரணியை அதட்டாலோடு முறைத்தார் அஷ்டலட்சுமி.
"பாருங்கப்பா" என்று அண்ணனின் பிடியில் இருந்து தந்தையிடம் தாவினாள் உடனே.
"ஹ்ம்ம்... உன்னை சொல்லி குத்தமில்லை. உன் அண்ணனையும் அப்பாவையம் சொல்லணும். இவங்க ரெண்டு பேர் தான் உன்னை கெடுக்குறதே?" என்றார் மீண்டும் முறைத்து.
"அம்மா எதுக்கு புள்ளயை திட்றிங்க? அவ நம்ம வீட்டு மஹாலக்ஷ்மி. " என்றான் ஹரி.
"சும்மா குழந்தையை ஏதாவது சொல்லிட்டே இருக்காதடி" என்றார் கோபமாய் கார்த்திகேயன்.
"நீங்களும் திருந்த மாட்டிங்க. அவளையும் திருத்த விடமாட்டிங்க. எப்படியோ போங்க" என்று தலையில் அடித்து கொண்டு உள்ளே சென்றார்.
"நீ ஒன்னும் கவலைப்படாதடா அம்மா உன் மேல இருக்க அதிக அன்புள்ள தான் அப்டி சொல்றாங்க."என்றார் கார்த்திகேயன்.
"சரி பா." என்று அண்ணனிடம் திரும்பியவள்.
"அண்ணா! நீ போற வழில என்னை ஸ்கூல்ல விட்டுடரியா?" என்றாள்.
"சரி டா. போய் ரெடியாகு." என்றான் ஹரி சிரித்து.
********
"என்னருகிலே கன்னருகிலே நீ வேண்டுமே... மண்ணடியிலும் உன்னருகிலே நான் வேண்டுமே... சொல்ல முடியாத காதலும் சொல்லில் அடங்காத நேசமும்" அலைபேசியின் அழைப்பை காட்டிலும் அதில் வந்த அந்த பாடல் என்றுமில்லாமல் இன்று மிகவும் பாதித்தது அவளை.
"ஹ்ம்ம் முடிஞ்சு போன என் வாழ்க்கைய பத்தி எதுவும் தெரியாத என் அம்மாவும் அப்பாவும் சந்தோஷமா இருக்க இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்" என்றாள் கசந்த புன்னகையுடன்.
மீண்டும் போன் அடிக்க.
"ஹலோ" என்றாள்.
"எங்கம்மா இருக்க? இன்னைக்கு நாம முக்கியமா ஒரு இன்வெஸ்ட்ரை பார்க்க போகணும்." என்றார் அவளின் மேலதிகாரி.
"எனக்கு கொஞ்சம் உடம்பு முடியலை சார்" என்றாள் மெதுவாக.
"என்னம்மா இப்படி சொல்ற? உனக்கு தான் கம்பெனி டீடெயில்ஸ் எல்லாம் தெரியும். எல்லாம் தெரிஞ்ச ஒருத்தங்க கூட இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். ஒன்னு செய்யலாம். நாம இப்போ அவங்க வீட்டுக்கு தான் போக போறோம். சோ அவரை பார்த்து பேசிட்டு நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு. நா ஆபிசுக்கு போகின்றேன்" என்றார்.
அவள் இவ்வளவு கூறும் பொழுது மறுக்க மனம் வரவில்லை தாரிணிக்கு.
"சரி சார். இன்னும் அரைமணி நேரத்துல அங்க இருப்பேன்" என்றாள்.
"இல்லம்மா. நீ ரெடியா இரு. நான் வீட்டுக்கு வரேன். அப்டியே என் கார்ல போய்டுவோம். நீ அங்கயும் இங்கயும் அலைய வேண்டாம்" என்றார்.
"சரி சார்" என்று அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு கிளம்பி தயாரானாள் தாரணி.
**********
படிச்சி பாருங்க குட்டிஸ்,😍😍.
பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க...
ரொம்ப பிடிச்சிருந்தா கமெண்ட் பண்ணுங்க...😍
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top