53 இறுதி பகுதி
இறுதி பாகம்
அது சக்திக்கு ஐந்தாவது மாதம். ருத்ரன் தவியாய் தவித்துக் கொண்டிருந்தான், தன் மனைவியை இறுக்கமாய் கட்டிக் கூட பிடிக்க முடியாமல். 'கர்ப்பமாய் இருக்கும் பெண்ணை இறுக்கமாய் அணைப்பது என்பது அவளுக்கு நல்லதல்ல' என்ற ஒற்றை வரி, அவனை அவளிடமிருந்து தள்ளி நிறுத்தியது. தன் கையும் காலும் கனமான இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு இருப்பதை போல் உணர்ந்தான் ருத்ரன். அவனால் சக்தியிடமிருந்து விலகி இருக்கவே முடியவில்லை. நமக்குத் தான் தெரியுமே, எந்த அளவிற்கு அவன் தன் மனைவியிடத்தில் பைத்தியமாய் இருந்தான் என்று... ஆனால் அவனுக்கு வேறு வழி இல்லை. சக்தி விஷயத்தில் அவன் எந்த தவறையும் செய்ய துணியவில்லை. இவற்றையெல்லாம் எண்ணியபடி தன் அறையில் உலவி கொண்டிருந்தான்.
அப்பொழுது, அறையின் கதவை சாத்தி தாளிட்டுவிட்டு வந்தாள் சக்தி.
"பால் குடிச்சியா சக்தி?" என்றான் அக்கறையுடன்.
"குடிச்சிட்டேன்"
"அதுல குங்குமப்பூ போட்டுகிட்ட இல்ல?"
"போட்டுக்கிட்டேங்க"
"மாத்திரை சாப்பிட்ட இல்ல?"
"ஆங், சாப்பிட்டேன்... எல்லாத்தையும் தவறாம எடுத்துக்கிட்டேன். இப்போ உங்களை எடுத்துக்க போறேன்"
சில நொடி திகைத்து நின்றான் ருத்ரன். அவன் தொண்டையில் இருந்து மெல்லிய சிரிப்பொலி, நம்பகத்தன்மை இல்லாமல் வெளியேறியது. அவன் முக பாவத்தை படித்தபடி அவன் அருகில் அமர்ந்த சக்தி, குழப்பமே வடிவாய் இருந்த அவனைப் பார்த்து சிரித்தாள்.
"என்ன அப்படி பாக்கறீங்க?" என்றாள் அவன் கன்னத்தில் கோடு வரைந்த படி.
"நீ... என்... ன சொன்ன?" அதே முகபாவத்துடன் கேள்வி எழுப்பினான் ருத்ரன்.
"உங்களை எடுத்துக்க போறேன்னு சொன்னேன்... அப்படின்னா என்ன அர்த்தம்னு உங்களுக்கே தெரியும்"
"சக்தி, உனக்கே நல்லா தெரியும், நீ பிரக்னண்டா இருக்க... நம்ம அஞ்சு மாசமா டிஸ்டன்ஸ்ல இருக்கோம்... நீ சொல்றதை நான் சீரியஸா எடுத்துக்குவேன், அது விளையாட்டா இருந்தாலும் கூட..." என்றான் தடுமாற்றத்துடன்.
"நான் உங்ககிட்ட விளையாடுவேன்னு நினைக்கிறீங்களா? அதுவும், இந்த விஷயத்துல? அதுவும் நீங்க கையாலாகாம நிற்கும் போது...? அதுவும் உங்களுக்கு அது ஏமாற்றத்தை தரும்னு தெரிஞ்ச பிறகு? அதுவும்..."
அவள் வாயை தன் கையால் பொத்தினான்.
" உன்னோட *அதுவும்* லிஸ்ட் போதும். நீ சொன்னதை சத்தியமா என்னால நம்ப முடியல" அவள் வாயில் இருந்து தன் கையை எடுத்தான்.
"நீ தானே சொன்ன, நான் உன்னை இறுக்கமா கட்டிக் கூட பிடிக்க கூடாதுன்னு? அப்புறம் இது எப்படி...?"
"இது எனக்கு அஞ்சாவது மாசம். இப்போ குழந்தை ஸ்ட்ராங்கா ஆகியிருக்கும். அதனால அவ சேஃபா இருப்பா. அதனால, நீங்க என்னை தொடலாம்... ஆனா, ஜாக்கிரதையா..."
"நிஜமா தான் சொல்றியா? அதனால ஒன்னும் பிரச்சனை ஆயிடாதே?"
"ஒன்னும் ஆகாது. அதனால டெலிவரி ஈஸியா தான் ஆகுமாம்"
"அப்படியா?" என்ற அவன் முகம் பளபளத்தது.
"அப்படித் தான்"
"ஆனா, ரொம்ப நாள் ஆயிடுச்சு... ஒருவேளை நான் என்னோட கண்ட்ரோலை இழந்துட்டா...?" என்றான் லேசான பயத்தோடு.
"மாட்டிங்க. உங்களைப் பத்தி எனக்கு தெரியும். என் மேல உங்களுக்கு நிறைய அக்கறை இருக்கு" அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
ருத்ரனின் கண்கள் பெருமையில் மின்னியது.
"சக்தி..."
"ம்ம்ம்?"
"நம்ம என்ன செய்றோம்னு பாப்பாவுக்கு தெரியுமா?"
அதைக் கேட்டு சிரித்தாள் சக்தி.
"இல்ல... நம்மளோட எமோஷன்சை தான் பாப்பாவால புரிஞ்சிக்க முடியும். அது கூட இப்போ இல்ல. ஆறு மாசத்துக்கு பிறகு தான்"
"யாரோ அவளோட அம்மாவை தொடர்றாங்கன்னு அவளுக்கு தெரியாதா?"
"தெரியாது" என்று சிரித்தாள் சக்தி.
ருத்ரனின் முகத்தில் நிம்மதி தெரிந்தது.
"ஏதோ உலக மகா தப்பு செய்யறதா ஏன் பயப்படுறீங்க? உங்க பொண்ணு, உங்களை கேள்வி கேப்பான்னு பயமா இருக்கா?"
"ச்சேச்சே, அவ என்ன என்னை கேள்வி கேட்கிறது? நம்மளே அவளுக்கு இதையெல்லாம் சொல்லிக் கொடுத்த மாதிரி இருக்கக் கூடாது இல்ல?"
வாய்விட்டு சிரித்தாள் சக்தி.
காய்ந்த மாடு கம்பம் கொள்ளையில் விழுந்தது போல் அல்லாமல், வெகு எச்சரிக்கையாய் சக்தியை கையாண்டான் ருத்ரன். ஐந்து மாத இறுக்கம் தளர்ந்தது. அப்பாடா என்றானது அவனுக்கு.
"உனக்கு வலிக்குதா சக்தி?" என்றான் மெல்ல அவள் வயிற்றை தொட்டு.
"இல்ல..."
"நம்ம பேசுறதை குழந்தை எப்ப கேப்பா?"
"ஏழாவது மாசத்துல இருந்து அவளுக்கு சத்தம் எல்லாம் கேட்க ஆரம்பிக்கும். அதனால தான் ஏழாவது மாசத்துல வளைகாப்பு செஞ்சு, கையில வளையல் போட்டு விடுறாங்க. அப்போ தான், குழந்தைக்கு, நம்ம கூட யாரோ இருக்கிறாங்க அப்படிங்கற தைரியம் இருக்குமாம். ஏழாவது மாசத்துக்கு பிறகு, நீங்க அவ கூட பேசினா கூட அவளுக்கு கேட்கும்"
"நெஜமாவா?"
"ஆமாம். அவகிட்ட பேசிப் பேசி, நீங்க அவளை அப்பா செல்லமா கூட மாத்திடலாம்"
ருத்ரன் யோசனையில் ஆழ்ந்தான். அந்த நாளிலிருந்து அவன் குழந்தையுடன் பேசத் துவங்கினான். ஆனால் அவனது எதிர்பார்ப்பையோ ஆவலையோ காட்டிக்கொள்ளாமல், சக்தி உறங்கும் நேரங்களில் மட்டும் அதை செய்தான். முதன்முறை, குழந்தையின் அசைவை கண்ட போது, அவனுக்கு சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷம் தோன்றியது. அவனது பேச்சுக்கு குழந்தை செவி சாய்ப்பதாய் நம்பிக்கை எண்ணம் உதித்தது.
*காலம்* மிகவும் நேர்மையானது... யாருக்கும் காத்திருப்பதில்லை. அப்படித் தான் அது ராக்கெட் வேகத்தில் பறந்து சென்றது. சக்தியின் பேறு நாள் வந்தது. பயம் ருத்ரனின் மனதை வாட்டியது. முடிந்த வரையில் தனது வலியை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருக்க முயன்றாள் சக்தி. ருத்ரன் தான் எல்லாவற்றையும் வித்தியாசமாய் யோசிப்பவன் ஆயிற்றே...! சக்திக்கு வலியை கொடுப்பது யாராக இருந்தாலும் அவர்களை அவன் விரோதியாக அல்லவா பார்ப்பான்...! குழந்தை மீது அவன் கோபம் கொள்வானோ என்று பயந்தாள் சக்தி. ஆனால் அவளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை, சக்திக்கு வலி தராமல் இந்த உலகத்திற்கு வந்து விட வேண்டும் என்று அவன் தன் குழந்தையுடன் நடத்திய பேச்சு வார்த்தையை பற்றி.
தன் குழந்தை தன் பேச்சை ஏற்று நடக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பேராவல் ருத்ரனின் மனதில் இருந்தது.
சக்தியின் பிரசவ வலி வெகு நேரம் நீடிக்கவில்லை. அது ருத்ரனை வேறு லோகத்திற்கு அழைத்துச் சென்றது. சக்தியை அதிகம் சிரமப்படுத்தாமல் குழந்தை பிறந்து விட்டிருந்தாலும், அது, தான் பேசியதால் தான் நிகழ்ந்ததா என்ற சந்தேகம் ருத்ரனுக்கு இருக்கவே செய்தது.
குழந்தைக்கு ருத்ரன் தான் பெயர் வைக்க வேண்டும் என்று எண்ணினாள் சக்தி. முதலில் தனக்கு விருப்பம் இல்லாததை போல் இருந்தான் ருத்ரன். அது சக்திக்கு வருத்தத்தை தந்தது.
"ஏன் இப்படி இன்ட்ரஸ்ட் இல்லாம இருக்கீங்க?"
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல, சக்தி. நீயே அவளுக்கு ஒரு நல்ல பேரா செலக்ட் பண்ணு"
"அதை எனக்காக நீங்க செய்யக் கூடாதா?"
"சரி, உனக்காக செய்றேன்"
இறுதியில், தன் மகளுக்கான பெயரை தேர்ந்தெடுத்தான் ருத்ரன், அதை அவன் சக்திக்காக மட்டுமே செய்வதாய் காட்டிக்கொண்டு. மரியாதை, வளம், என்று பொருள்படும் *வைஷ்ணவி* என்ற பெயரை தேர்ந்தெடுத்தான்.
குழந்தையிடம் இருந்து விலகியே இருந்தான் ருத்ரன். அவனுக்கு அவ்வளவு சிறிய குழந்தையை எப்படி கையாள்வது என்றே தெரியவில்லை. அவன் பேசிய போதெல்லாம் அந்த திசை நோக்கி திரும்பிய குழந்தை, அவனை தேடியது. அது ருத்ரனுக்கு ஆச்சரியம் அளித்தது. அவள் அப்படி செய்யும் போதெல்லாம்,
"ஏங்க, இங்க பாருங்களேன், அவ உங்களை தான் தேடுறா" என்று குதூகளித்தாள் சக்தி.
மென்மையான புன்னகையுடன் நிறுத்திக் கொண்டான் ருத்ரன்.
மேலும் அவனுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில், *அப்பா* என்ற வார்த்தையை தான் முதன் முதலில் உதிர்த்தாள் வைஷ்ணவி. ருத்ரனை விட சக்திக்கு அது அதிக சந்தோஷத்தை தந்தது. ருத்ரன் பக்கத்தில் வரும் போதெல்லாம், சக்தியிடம் இருந்து ருத்ரனிடம் செல்ல தாவினாள் வைஷ்ணவி, ருத்ரனுக்கு பேருவகையை தந்து. அவனுக்கு குழந்தையை தூக்கிக் கொள்ள அச்சமாக இருந்தாலும், அவளை தன் மடியில் வாங்கிக் கொள்ள அவன் தயங்கவில்லை. வேண்டுமென்றே வைஷ்ணவியை அவன் மடியில் அமர வைத்து பழகினாள் சக்தி. அவள் அப்படி செய்யும் போதெல்லாம், ருத்ரனிடம் பேசும் தோரணையில், அவனைப் பார்த்து, ஊஊஊ... ஆஆஆ... என்று என்று குரல் எழுப்பினாள் வைஷ்ணவி.
"இந்தப் பொண்ணு உங்க கிட்ட மட்டும் தான் இப்படி எல்லாம் பேச ட்ரை பண்றா. அது ஏன்னு தான் எனக்கு புரியல" என்று முகம் சுருக்கினாள் சக்தி.
மர்ம புன்னகை வீசினான் ருத்ரன். அப்பாவுக்கும் மகளுக்கும் இடையில் இருந்த மிக நீண்ட வரலாறு சக்திக்கு தெரியாதல்லவா...? கர்ப்பத்தில் இருந்த அபிமன்யு, சக்கர வியூகத்தை பற்றி தெரிந்து கொண்டான் என்று கூறுகிறது இதிகாசம். அதை பெரிதாய் நம்பியவன் அல்ல ருத்ரன். இப்போது அதை அவனால் நம்பாமல் இருக்க முடியவில்லை. தனக்கும் தன் மகளுக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலின் விளைவு தான் இது என்பதை நம்ப துவங்கினான் ருத்ரன். அதற்கு சாட்சியம் கூறும் வண்ணம், அவனிடம் ஒரு ஆழ்ந்த ஒட்டுதல் இருந்தது வைஷ்ணவிக்கு. சக்தியுடன் இருப்பது போல் அவனுடனும் இருக்க விரும்பினாள் வைஷ்ணவி.
"எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்ல... இவ உங்க குரலை நல்லா அடையாளம் கண்டு பிடிக்கிறா. நீங்க பேசும் போதெல்லாம் உங்களை தேடுறா. நீங்க பக்கத்துல வந்தா, உங்க கிட்ட பேச முயற்சி பண்றா. உங்ககிட்ட மட்டும் இந்த பொண்ணுக்கு எப்படி இவ்வளவு அட்டாச்மெண்ட் வந்ததுன்னு எனக்கு தெரியல" என்றாள், ருத்ரனின் சட்டை பொத்தானை கடித்து விளையாடிக் கொண்டிருந்த வைஷ்ணவியை பார்த்து.
"நான் தான் அவளை என்கிட்ட அட்டாச் பண்ணிக்கிட்டேன்" என்று இறுதியாய் ரகசியத்தை உடைத்தான் ருத்ரன், சக்தியை குழப்பத்தில் ஆழ்த்தி.
"நீங்க அவளை அட்டாச் பண்ணிக்கிட்டிங்களா?"
"ஆமாம்"
"என்ன சொல்றீங்க நீங்க?"
"அவ உன்னோட வயித்துல இருந்தப்போ, நான் அவகிட்ட நிறைய பேசியிருக்கேன்..."
"இது எப்போ நடந்தது?" என்றாள் ஆச்சரியம் தாங்காமல்.
"நீ தூங்கும் போது"
"நெஜமாவா?"
"ம்ம்ம்"
"ஆனா நீங்க ரியாக்ட் பண்ணவே இல்லையே...?"
"அது வேலை செய்யுமா இல்லையான்னு எனக்கு நிச்சயமா தெரியல. தேவையில்லாத எக்ஸ்பெக்டேஷன்ஸை வளர்த்துக்க வேண்டாம்னு தான் நான் அதை காட்டிக்கல"
"அப்பாவும் மகளும் சீக்ரெட் மெஷன்ல இருந்திருக்கீங்க போல இருக்கு... "
"இதுல எந்த சீக்ரெட்டும் இல்ல... அதனால தான் உன்கிட்ட சொல்லிட்டேன்"
"அவளுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்"
"உன்னை விட ஒண்ணும் அதிகமா இல்ல... உன்னை விட அதிகமா என்னை யாராலையும் நேசிக்க முடியாது"
"இந்த வார்த்தை எதிர் காலத்துல மாறாம இருக்கான்னு பாக்கலாம்" என்றாள் சக்தி கிண்டலாய்.
"என்னை சந்தேகப்படுறியா சக்தி?"
"சந்தேகமே இல்ல. இந்த குட்டி பொண்ணு நிச்சயம் உங்களை அவகிட்ட கட்டிப் போட்டுடுவா"
"அவ நம்ம குழந்தை. அவளை பாத்துக்க வேண்டியது நம்மளுடைய பொறுப்பு. அவளுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் நம்ம தான் அவளுக்கு பாதுகாப்பு. அம்மாவோட அக்கறையும் அப்பாவோட அரவணைப்பும் அவளுக்கு தேவை. அவளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை சொல்லிக் கொடுத்து நம்ம அவளை வளர்க்கணும் அவ்வளவு தான் எனக்கு வேணும்" என்ற அவனை, ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி.
"*உங்க பொண்ணோட* எதிர்காலத்தை பத்தி ரொம்ப பெரிய பிளான் வச்சிருக்கீங்க போல இருக்கு?"
"நம்ம பொண்ணு" என்று சக்தியை தன்னுடன் சேர்த்துக் கொண்டான்.
அதைப் புரிந்து கொண்ட சக்தி, மெல்லிய புன்னகை பூத்தாள்.
"நீங்க ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும். நான் உங்க மேல வச்சிருக்கற பாசத்தை விட அவ உங்க மேல அதிகமா வச்சா, அதை நினைச்சு நான் சந்தோஷம் தான் படுவேன். அதை ஒத்துக்க நீங்க தயங்க வேண்டிய அவசியம் இல்ல. அவ உங்க மகள்... உங்களுடைய ரத்தம்... அவளோட பாசம் தான் உங்களோட பெருமை. அவளுக்கு உங்களை பிடிக்குது, உங்க குரல் அவளுக்கு அடையாளம் தெரியுது, உங்க கூட இருக்க அவ விரும்பறா, அது எனக்கு சந்தோஷம் தான்"
அவள் கையைப் பிடித்து முத்தமிட்ட ருத்ரன்,
"தேங்க்யூ ஃபார் எவ்ரிதிங். வாழ்க்கையோட அழகான பக்கத்தை நீ எனக்கு காட்டியிருக்க. குழந்தை வடிவத்துல எனக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்க. ஆனா நீ எனக்கு வேணும் சக்தி, என்னோட கடைசி மூச்சு வரைக்கும். என் கூட யார் இருக்காங்களோ, இல்லையோ நீ என் கூட இருக்கணும். ஏன்னா, நீ தான் என்னோட வாழ்க்கை. உன்னோட அன்புக்கு மாற்றே கிடையாது"
"நான் எப்பவும் உங்க கூட தான் இருப்பேன்" அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் சக்தி.
ருத்ரனின் கையில் இருந்த வைஷ்ணவி, க்றீச்சிட்டு சந்தோஷமாய் சிரித்தாள், தன் பெற்றோரின் புரிதலை புரிந்து கொண்டவள் போல...!
முற்றும்.
அடுத்த தொடர்...
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்,
*நான் என்பதே நீ தானடி...!*
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top