51 சூழ்ச்சிக்காரன்
51 சூழ்ச்சிக்காரன்
"தக்ஷிணாமூர்த்தி" என்றான் சிவா.
அவனை சுற்றி இருந்தவர்கள் அதிர்ச்சியுடன் பார்க்க, ருத்ரன் மட்டும் சாதாரணமாய் நின்றான். அவனுக்கு அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நிச்சயம் சிவா தக்ஷிணாமூர்த்தியை பற்றி ஆராய்ந்து இருப்பான். சாதாரணமாய் நின்ற ருத்ரனை பார்த்து சக்திக்கு வியப்பாக இருந்தது.
"உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றார் இன்ஸ்பெக்டர்.
"நான் சிவா... டிடெக்டிவ் ஏஜென்ட். தக்ஷிணாமூர்த்தியோட பொண்ணு மாயா, ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டா. அவ ருத்ரனை ரொம்ப ஆழமா காதலிச்சவ. அவளோட சாவுக்கு ருத்ரன் தான் காரணம்னு தக்ஷிணாமூர்த்தி நினைச்சுகிட்டு இருக்காரு. அதுக்கு பழிவாங்க, ருத்ரனுடைய வைஃப் சக்தியை கொல்ல ஒரு ஷூட்டரை அனுப்பினாரு. ஆனா, யாரும் எதிர்பாராத விதமா சக்தி, தக்ஷிணாமூர்த்தியோட மகள்னு தெரிய வந்தது. மாயாவும் சக்தியும் இரட்டை பிறவிங்க. அதை தட்சிணாமூர்த்தியே சக்தி கிட்ட சொன்னாரு. சக்தி, ருத்ரன் கூட இருக்கிறது தக்ஷிணாமூர்த்திக்கு பிடிக்கல. ருத்ரனை விட்டுட்டு சக்தி தன் கிட்ட வந்துடனும்னு அவர் நினைச்சாரு. சக்தி கிட்ட அவர் நேரடியாக கேட்கவும் செஞ்சாரு. ஆனா, சக்தி அதற்கு ஒத்துக்கல. அதனால, ருத்ரனை ஹாஸ்பிடலுக்கு அனுப்பணும்னு முடிவு பண்ணாரு, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவர் அவனை எப்படி ஹாஸ்பிடலுக்கு அனுப்பினாரோ அதே மாதிரி. அவருக்குத் தெரியும், ஹாஸ்பிடல் ஸ்டாஃபை இங்க பார்த்தா நிச்சயம் ருத்ரனுக்கு கோபம் வரும், அவன் வெறி பிடிச்ச மாதிரி நடந்துக்குவான், அவனோட கோபத்தையே காரணமா வச்சு, ஹாஸ்பிடல் ஸ்டாஃப் அவனை ஈசியா ஹாஸ்பிடலுக்கு கொண்டு போயிட முடியும்னு அவர் நினைச்சாரு. ஆனா, சக்திக்கு ருத்ரனை பத்தி நல்லாவே தெரியும். அவனை எது கோபப்படுத்தும்னு அவங்க புரிஞ்சு வச்சிருந்தாங்க. அதனால, புத்திசாலித்தனமா அவன் எதுக்காகவும் கோவப்பட கூடாதுன்னு அவன்கிட்ட சத்தியம் வாங்கிட்டாங்க. அதனால ஹாஸ்பிடல் ஸ்டாப்பை பார்த்ததுக்கு பிறகும், ருத்ரன் தன் கோபத்தை கட்டுப்படுத்திக்கிட்டான்"
எல்லாவற்றையும் விளக்கிக் கொண்டிருந்த சிவாவை, ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டு நின்ற சக்தியை பார்த்து புன்னகைத்தான் ருத்ரன். சிவாவும் ருத்ரனை மருத்துவமனைக்கு அனுப்புவதற்காக திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறான் என்று அவள் நினைத்திருந்தாள். ஆனால் நடப்பதை எல்லாம் பார்க்கும் போது, அவனுக்கு அப்படி ஒரு எண்ணம் இருப்பதாக தோன்றவில்லை. அவனுக்கு அப்படிபட்ட எண்ணம் இல்லை என்றால், அவன் எதற்காக அவளிடம் ருத்ரனை மருத்துவமனைக்கு அனுப்பச் சொல்லி கேட்டான்? அவளை சோதித்துப் பார்த்தானா சிவா?
"எல்லாம் சரி சார். ஆனா ஆதாரமில்லாம நாங்க யார் மேலேயும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது" என்றார் இன்ஸ்பெக்டர்.
"ஆதாரம் இருக்கு சார். சக்தியை கொல்ல வந்த தக்ஷிணாமூர்த்தியோட ஆளை, நாங்க ஓசூர் போலீஸ் ஸ்டேஷன்ல சரண்டர் பண்ணியிருக்கோம். நீங்க அதை செக் பண்ணி பார்த்துக்கலாம். இந்த வீட்ல இருக்கிற ஒரு ஆள் மூலமா ருத்ரனை ஹாஸ்பிடலுக்கு அனுப்ப தக்ஷிணாமூர்த்தி முயற்சி செஞ்சாரு..." என்று சிவா நிறுத்த, பதட்டமானான் பரமேஸ்வரன்.
"யார் மூலமா?" என்றாள் துர்கா.
தன் பார்வையை பரமேஸ்வரனின் பக்கம் அவன் திருப்ப, அதிர்ச்சியில் துர்காவின் விழிகள் விரிந்தன.
"நீங்களா?"
"ஆமாம் கா. அவர் தான். ஆனா, அதுக்கு மாமா ஒத்துக்கல. அவர் சொல்றதை கேட்டு நடக்கலன்னா, உங்களை கொன்னுடுவேன்னு மாமாவை தக்ஷிணாமூர்த்தி மிரட்டினாரு"
அது, அங்கிருந்த அனைவருக்கும் மேலும் அதிர்ச்சியை அளித்தது.
"அவர் மாமாவுக்கு இரண்டு நாள் டைம் கொடுத்தாரு. அவர் சொல்லுக்கு கட்டுப்படாம உங்களை காப்பாத்த நினைச்சார் மாமா. அதனால அவர் என்கிட்ட ஹெல்ப் கேட்டார். தக்ஷிணாமூர்த்தியோட பெயரை என்கிட்ட சொல்லாம, உங்களை வேற யாரோ மிரட்டுறதா என்கிட்ட சொன்னாரு"
துர்கா நிம்மதி பெருமூச்சு விட, மனதிற்குள் சிவாவுக்கு நன்றி கூறினான் பரமேஸ்வரன்.
"அவர் உங்க கிட்ட எதுவும் சொல்லலனா, அவரை மிரட்டுறது தட்சிணாமூர்த்தி தான்னு உங்களுக்கு எப்படி தெரியும்?"
"தக்ஷிணாமூர்த்தியோட வீட்ல என்னோட ஆள் இருக்கார். ருத்ரனையும் சக்தியையும் தக்ஷிணாமூர்த்தி பிரிக்க நினைக்கிறாருன்னு தெரிஞ்சதுக்கு பிறகு, அவருடைய நடவடிக்கைகளில் கண்ணு வைக்க சொல்லி, நான் என் ஆள் கிட்ட சொல்லி இருந்தேன். அவர் ஏதாவது செய்வார்னு நான் எதிர்பார்த்தேன்... அவர் தான் சக்தியை கொல்ல ஆள் அனுப்பியவர் ஆச்சே..."
"ஓஹோ..."
"நீங்க டாக்டரை கூட விசாரிச்சு பார்க்கலாம். ஒருவேளை, அவரையும் தக்ஷிணாமூர்த்தி மிரட்டி இருக்கலாம். தக்ஷிணாமூர்த்தியும் மாமாவும் பேசின ரெக்கார்டிங்கை, மாமா உங்களுக்கு அனுப்புவார்"
"ஓ... நீங்க அதை ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கீங்களா?"
திருதிருவென விழித்தான் பரமேஸ்வரன். ஏனென்றால், அவன் அதை பதிவு செய்திருக்கவில்லை. ஆனால் சிவா அவனுக்கு ஜாடை காட்ட,
"ஆமாம் சார், நான் அதை ரெக்கார்ட் பண்ணேன்" என்றான்.
பரமேஸ்வரனுக்கு புரிந்து போனது, அவர்கள் பேசியதை சிவா ஒட்டு கேட்டிருக்கிறான் என்பதோடு மட்டும் அல்லாமல், அதை அவன் பதிவும் செய்து வைத்திருக்கிறான் என்பது.
"நாங்க இந்த கேஸை எடுத்துக்கிறோம்" என்றார் ஆய்வாளர்.
"என்னை கொல்ல பார்த்ததற்காகவும், என் புருஷனை என்கிட்ட இருந்து பிரிக்க பார்த்ததற்காகவும், தட்சிணாமூர்த்தி மேல நான் கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன்" என்றாள் சக்தி.
"அப்படின்னா நீங்க அதை எழுதிக் கொடுக்க வேண்டியிருக்கும் மேடம்."
பரமேஸ்வரன் பக்கம் தன் பார்வையை திருப்பிய சக்தி,
"மாமா எழுதி கொடுப்பாரு. நான் உங்களுக்கு கையெழுத்து போட்டு கொடுக்கிறேன்" என்றாள்.
சிறிய புன்னகை ருத்ரனின் தொண்டையில் இருந்து வெளிவந்தது. வேறு வழி இல்லாமல், சரி என்று தலையசைத்தான் பரமேஸ்வரன். அவளது செய்கை சிவாவுக்கும் புன்னகையை வரவழைத்தது.
பரமேஸ்வரன் எழுதிக் கொடுக்க அதில் கையெழுத்திட்டு ஆய்வாளரிடம் ஒப்படைத்தாள் சக்தி. மருத்துவமனையின் ஊழியர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
"தட்சிணாமூர்த்தி இவ்வளவு கீழ்த்தரமா இறங்குவார்னு நான் நினைக்கவே இல்ல" என்றார் பாட்டி.
"அவருக்கு பைத்தியம் பிடிச்சிடிச்சி. இப்போ அவருக்கு தான் ட்ரீட்மென்ட் தேவை" என்ற சிவா, சக்தியை பார்த்து,
"நானும் ருத்ரனை ஹாஸ்பிடலுக்கு அனுப்ப நினைக்கிறேன்னு என்னை நீங்க தப்பா நினைச்சீங்க இல்ல?" என்றான். அதற்கு ஆம் என்று தலையசைத்தாள் சக்தி.
"நீங்க என்னை கேவலமா பாக்கும் போதே எனக்கு தெரியும்..." என்று சிரித்தான்.
"என்னை நீங்க பேக் செக் பண்ணீங்களா?"
"இல்ல. நான் உங்களை பேக் செக் பண்ணல. இந்த விஷயத்துல உங்களோட நிலைப்பாடு என்னன்னு தெரிஞ்சுக்க நினைச்சேன். அதைக் கூட நான் சந்தேகப்பட்டு செய்யல. ருத்ரனுக்காக நீங்க என்ன செய்வீங்கன்னு தான் நான் ஓசூர்லயே பார்த்தேனே...! ஆனா, இங்க வந்ததுக்கு பிறகு, எங்க வீட்டு ஆளுங்க உங்க மனசை குழப்பி இருப்பாங்களோன்னு நினைச்சேன். அதனால தான் அதே கேள்வியை நான் அவங்களையும் கேட்டேன். ஆனா நீங்க, அசஞ்சி கொடுக்காம ருத்ரனுக்காக நின்னீங்க"
"இங்க வந்தா, எல்லாரும் சேர்ந்து அவரை மறுபடியும் ஹாஸ்பிடலுக்கு அனுப்பிடுவாங்கன்னு அவர் நினைச்சுக்கிட்டு இருக்கிற விஷயம் எனக்கு தெரிஞ்சிது. அது தான் அவர் இங்க வரவே யோசிச்சதுக்கான காரணம். அதனால தான், எது எப்படி இருந்தாலும், அதை மட்டும் நடக்க விடக்கூடாதுன்னு நான் முடிவோட இருந்தேன். உங்க ஹெல்ப்புக்கு ரொம்ப தேங்க்ஸ்"
"நீங்க எனக்கு தேங்க்ஸ் சொல்ல வேண்டாம். எனக்கும் பொறுப்பு இருக்கு"
"என்ன மன்னிச்சிடு துர்கா. நான் உண்மையை உன் கிட்ட சொல்லாம மறைச்சிட்டேன்" என்றான் பரமேஸ்வரன்.
"இதுக்காக தான் என்னை வீட்டை விட்டு வெளியேவே அனுப்பாம இருந்தீங்களா?"
"ஆமாம்"
"உன்னை வீட்டை விட்டு எங்கேயும் அனுப்ப வேண்டாம்னு சிவா தான் என்கிட்ட சொன்னாரு. ஆனா, அவருக்கு தட்சிணாமூர்த்தி யோட எல்லா பிளானும் தெரியும்னு எனக்கு தெரியாது"
"அது கூட தெரியலன்னா அப்புறம் அவன் என்ன ஒரு டிடெக்டிவ் ஏஜென்ட்?" என்று சிரித்தாள் துர்கா.
"இல்லக்கா அந்த கிரெடிட் நான் எடுத்துக்க முடியாது. தக்ஷிணாமூர்த்தி வீட்ல இருந்து வந்த உடனேயே, அவரோட ஃபோனை ட்ராக் பண்ண சொல்லி என்கிட்ட சொன்னது ருத்ரன் தான்"
அனைவரும் வியப்புடன் ருத்ரனை பார்க்க அவன் அழகாய் புன்னகைத்தான்.
"ஆனா உன்னோட ஆள், அவர் வீட்டில் இருக்கிறதா போலீஸ் கிட்ட சொன்னியே..."
"அது உண்மை இல்ல. என்னோட ஆள் யாரும் தட்சிணாமூர்த்தி வீட்ல இல்ல. அவரோட ஃபோனை நம்ம டிராக் பண்ணதா நம்ம போலீஸ் கிட்ட சொல்ல முடியாது. அது இல்லீகள். அதனால தான், என்னை அப்படி சொல்ல சொல்லி ருத்ரன் சொன்னான். இப்போ, நம்ம தைரியமா நான் ரெக்கார்ட் பண்ணதை போலீஸ்ல கொடுக்கலாம். அதை ரெக்கார்ட் பண்ணது மாமா தான்னு நம்மால சொல்ல முடியும்"
"உங்களுக்கு முன்னாடியே எல்லாம் தெரியுமா?" என்றாள் சக்தி ருத்ரனிடம்.
தன் உதடுகளை அழுத்தி புருவம் உயர்த்தினான் ருத்ரன்.
"அவனுக்கு எல்லாம் தெரியும் சக்தி. அவனை மாதிரி பிளான் பண்ண யாராலும் முடியாது... உங்களை இரண்டு தடவை கடத்திக்கிட்டு போனானே, அப்பவே உங்களுக்கு அது புரியலையா?" என்று சிரித்தான் சிவா.
அவன் குடும்பத்தார் பக்கம் திரும்பிய சக்தி,
"இப்படிப்பட்ட சூழ்ச்சிக்கார மனுஷனுக்கா ட்ரீட்மெண்ட் வேணும்னு நீங்க எல்லாம் நினைக்கிறீங்க? அவர் திறமையால எல்லாத்தையும் தலைகீழா மாத்தி போட்டுடுவார் போலயிருக்கே..." என்றாள் தன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு.
அனைவரும் கொல் என்று சிரிக்க, அவளிடம் வந்த ருத்ரன் அவள் தோள்களை சுற்றி வளைத்துக் கொண்டு,
"எவ்வளவு பெரிய பைத்தியக்காரனா இருந்தாலும், உன்னை மாதிரி ஒரு வைஃப் கிடைச்சா, அவன் எல்லாத்தையும் தலைகீழா மாத்தி காட்டுவான்" என்று புன்னகைத்தான் ருத்ரன்.
"கரெக்ட்..." என்றான் சிவா.
"ரொம்ப கரெக்ட்" என்றான் பரமேஸ்வரன்.
வெட்கப் புன்னகை பூத்தாள் சக்தி.
"நீ வெட்கப்படும் போது ரொம்ப *ஹாட்டா* இருக்க சக்தி" என்று அவள் காதில் கிசுகிசுத்தான் ருத்ரன்.
விழி விரித்து தன்னை சுற்றி இருந்தவர்களை நோட்டமிட்ட சக்தி, அனைவரும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்து,
"எல்லாரும் நம்மளை தான் பார்க்கிறாங்க" என்றாள் மெல்லிய குரலில்.
"நான் என்ன சொன்னேன்னு அவங்க யாருக்கும் தெரியாது. ஆனா, உன் முகத்தை பார்த்தா, நான் என்ன சொல்லி இருப்பேன்னு அவங்க ஈசியா கெஸ் பண்ணிடுவாங்க" என்று சிரித்தான்.
"ஓகே பா... நம்ம எல்லாரும் அவங்கவங்க வேலையை பார்க்கிற நேரம் வந்துடுச்சின்னு நினைக்கிறேன். இதுக்கு மேல ருத்ரன் தாங்க மாட்டான். நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போறேன். நீங்களும் உங்க வேலையை பாருங்க" என்றான் கிண்டலாய் சிவா, ருத்ரனை கடைக்கண்ணால் பார்த்து.
"நானும் உன் கூட வரேன்" சிரித்தபடி அவனுடன் நடந்தான் பரமேஸ்வரன்.
ருத்ரனை பார்த்து கண்ணடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் சிவா, சக்தியை பார்த்து வாய்விட்டு சிரித்தான் ருத்ரன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top