46 முன்னுரிமை

46 முன்னுரிமை

சக்தியுடன் தன் இல்லம் வந்து சேர்ந்தான் ருத்ரன். அங்கு வந்து சேர்ந்த பிறகு தான் நிம்மதி பெருமூச்சு விட்டாள் சக்தி. ருத்ரன் அழைப்பு மணியை அழுத்த, கதவை திறந்த துர்கா, தன் தம்பியை பார்த்தவுடன் கண்கலங்கினாள். தவிப்புடன் அவனை அணைத்துக் கொண்டாள்.

"அக்கா ப்ளீஸ் அழுகையை நிறுத்துங்க. இல்லனா, நான் மறுபடியும்  ஓடிப் போயிடுவேன். என்கிட்ட அதுக்கும் பிளான் இருக்கு" என்றான் சீரியஸாக.

அவனை பட்டென்று ஒரு அடி போட்ட துர்கா, சக்தியை வாஞ்சையுடன் தழுவிக் கொண்டாள். மற்றவர்களும் அவர்களை சூழ்ந்து கொண்டு தங்கள் உணர்வுகளை கொட்டித் தீர்த்தார்கள். அங்கிருந்து செல்ல ருத்ரன் முயன்ற போது,

"இப்போ நீ எங்க போற ருத்து?" என்றாள் துர்கா.

"வேற எங்க போவேன்? என்னோட ரூமுக்கு தான்"

"இவ்வளவு நாள் கழிச்சு வந்திருக்க... எங்க கூட கொஞ்ச நேரம் இருக்கலாம் இல்ல?"

"உங்க கூட தானே கா இருக்க போறேன்?"

"நான் அதைப்பத்தி சொல்லல. எங்க கூட உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசு"

"நான் இங்க வந்திருக்கவே கூடாது" முணுமுணுத்தான் ருத்ரன்.

"எங்க மேல உனக்கு பாசமே இல்லையா?" என்றாள் முகத்தை உம் என்று வைத்துக்கொண்டு.

அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த சக்தியை நோக்கி,

"இதுக்காகத் தான் நான் இங்க வரமாட்டேன்னு சொன்னேன்" என்றான் ருத்ரன்.

"நீ ரொம்ப மாறிட்ட ருத்து"

"அக்கா நான் ரொம்ப தூரம் வண்டி ஓட்டிக்கிட்டு வந்திருக்கேன். தயவுசெய்து என்னை ரெஸ்ட் எடுக்கவிடுங்க"

அவன் அங்கிருந்து செல்ல முயன்ற போது, அவனை அமருமாறு சைகை செய்தாள் சக்தி. பெருமூச்சு விட்டபடி அமர்ந்து கொண்டான் ருத்ரன். அவளும் புன்னகையுடன் அவனுடன் அமர்ந்து கொண்டாள். அதை பார்த்த சித்தி அபிராமியும் பாட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

"நீ எப்போ சென்னைக்கு வந்த?" என்றாள் துர்கா.

அவளை ஒரு ஏளன பார்வை பார்த்தான் ருத்ரன்.

"என்னை அப்படி பாக்காத. உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும்" என்றாள் துர்கா.

அவளை அதிசயமாய் பார்த்தாள் சக்தி.

"நான் தட்சிணாமூர்த்தியை பார்க்க போயிருந்தேன்" என்று அவன் கூற, அனைவரும் அதிர்ச்சியுடன் அவனை ஏறிட்டார்கள்.

"ஆனா ஏன்? எதுக்காக அவரைப் பார்க்க நீ போன?"

"அவர் தான் சக்தியை கொல்றதுக்கு ஆள் அனுப்பி இருந்தவரு"

"என்ன்னனது?" என்று ஒரே நேரத்தில் அனைவரும் கேட்க,

"அவருக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?" என்றான் தியாகு.

"அவர் அனுப்புன ஆள், இன்னும் உயிரோட தான் இருக்கானா?" என்றான் மற்றொரு சித்தி மகனான விசு.

"ஆமாம், நாங்க அவனை போலீஸ்ல ஒப்படைச்சிட்டு தான் சென்னைக்கு வந்தோம்" என்றாள் சக்தி.

"அப்போவே நான் அவனைக் கொன்னிருப்பேன். இந்த முட்டாள் சிவா தான் என்னை தடுத்துட்டான்"

"அவன் பொய் சொல்றான். அவன் சொல்றதை நம்பாதீங்க" என்ற சிவாவின் குரல் வாயிற் படியில் இருந்து கேட்டது.

அவனை பார்த்த ருத்ரன் முறைத்தான்.

"அவன் சொன்னதை, நீங்க எல்லாம் நம்பிட்டிங்களா? நான் சொன்னதை கேட்டு, அவன் என்னைக்கு  நடந்திருக்கான்?" என்றான் சிவா.

அனைவரும் தங்களது பார்வையை சக்தியை நோக்கி திருப்பினார்கள்.

"சரி... ஆமாம்... சக்தி சொன்னான்னு தான் அவனை கொல்லாம விட்டேன். இப்போ என்ன அதுக்கு?" என்றான் ருத்ரன்.

"நீ ஜெயிலுக்கு போக வேண்டாம்னு தான் அவங்க நினைச்சிருப்பாங்க" என்றான் தியாகு.

ஆமாம் என்று தலையசைத்தாள் சக்தி.

"தக்ஷிணாமூர்த்தி அனுப்பின ஆளோட கதி என்ன ஆச்சு?" என்றான் பரமேஸ்வரன்.

அமைதியாய் இருந்தான் ருத்ரன்.

"நீ அவனை என்ன செஞ்ச ருத்து?" என்றான் சிவா.

"அவர் அவனை ஒன்னும் செய்யல" என்றாள் சக்தி.

அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.

"நிஜமாவா சொல்றீங்க சக்தி?" என்றான் சிவா நம்ப முடியாமல்.

"தக்ஷிணாமூர்த்தி வேற யாரும் இல்ல. அவர் தான் என்னை பெத்த அப்பா"

"என்ன சொல்றீங்க சக்தி?" என்றான் பரமேஸ்வரன் நம்ப முடியாமல்.

"என்னோட அம்மாவும், தக்ஷிணாமூர்த்தியோட வைஃபும் அக்கா தங்கச்சிங்க"

"அதனால...?" என்றான் தியாகு.

தக்ஷிணாமூர்த்தி கூறிய கதையை அவர்களிடம் கூறினாள் சக்தி.

"சக்தியும், மாயாவும் அக்கா தங்கச்சிங்கன்னு என்னால நம்பவே முடியல" என்றாள் துர்கா.

"உங்க எல்லாரையும் நான் வார்ன் பண்றேன். எனக்கு தெரியாம, சக்தியை யாரும் வீட்டை விட்டு எங்கேயும் கூட்டிகிட்டு போகக்கூடாது" என்று அனைவரையும் எச்சரித்தான் ருத்ரன்

"இதுல நாங்க முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டியது ஏதாவது இருக்கா?" என்றான் சிவா.

"அந்த பைத்தியக்கார பரதேசி, என்னை விட்டுட்டு வரச் சொல்லி சக்தி கிட்ட சொன்னாரு"

"என்ன்ன்னனனது?"

"நான் யாருன்னு அவருக்கு காட்டுறேன்" என்றான் ருத்ரன் கோபமாய்

"நீங்க அவரை எதுவும் செஞ்சிடாதீங்க ருத்ரன். அவர்கிட்ட நான் பேசுறேன்" என்றான் பரமேஸ்வரன்.

"நீங்க என்ன வேணா பேசிக்கங்க. ஆனா அவரு என்னையோ, என் வைஃபையோ டிஸ்டர்ப் பண்ணா, நான் பொல்லாதவனா மாறிடுவேன். அதை அவர் கிட்ட சொல்லிடுங்க" என்றான் ருத்ரன்.

"நிச்சயம் சொல்லிடுறேன்"

"ஆனா அவரு ஏதாவது ஏடாகூடமா செஞ்சா, நான் ரொம்ப கேடாகூடமா நடந்துக்குவேன்"

"அப்படியெல்லாம் அவர் எதுவும் செய்யாம நான் பார்த்துக்கிறேன், ருத்ரன்"

"ஏற்கனவே அவர் செஞ்சிட்டாரு... என் முன்னாடியே என்னை விட்டுட்டு வரச் சொல்லி சக்தி கிட்ட சொல்றாரு அவருக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?"

அவனை அவர்களது அறைக்கு அழைத்துச் செல்லுமாறு சக்தியிடம் சைகை செய்தார் சித்தி அபிராமி.

"அந்த ஆளு எப்படி என் பொண்டாட்டி கிட்ட அப்படி சொல்லலாம்? அவருக்கு என்ன உரிமை இருக்கு? அவரு அவளை பெத்தவரா இருந்தா என்ன வேணா சொல்லுவாரா? மறுபடி என் பொண்டாட்டி கிட்ட அவர் நெருங்க நினைச்சாருன்னா, அவர போட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்"

சோபாவை விட்டு எழுந்த சக்தி அவனது தோளை பற்றி மெல்ல அழுத்தினாள்.

"அமைதியா இருங்க. மாமா மேல கோவப்பட்டு என்ன பிரயோஜனம் இருக்கு?"

தன் கோபத்தை விழுங்க முயன்றான் ருத்ரன்.

"சக்தி, நீங்க ரெண்டு பேரும் உங்க ரூமுக்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க" என்றார் அபிராமி.

சக்தி எதுவும் கூறும் முன்,

"வா சக்தி" என்று அவள் தோள்களை சுற்றி வளைத்துக் கொண்டு, அங்கிருந்து அவளை அழைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான் ருத்ரன்.

தங்கள் அறைக்கு வந்தவுடன், கதவை சாத்தி தாழிட்ட ருத்ரன், சக்தியை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.

"நீ எனக்காக தட்சிணாமூர்த்தி கிட்ட சண்டை போட்டப்போ, உன்னை எனக்கு கட்டிப் பிடிச்சுக்கணும்னு தோணுச்சி"

அவனது தோள்களை சுற்றி வளைத்துக் கொண்ட சக்தி,

"ஏன் இங்க இருக்குறவங்க கிட்ட சுத்தமா இன்ட்ரஸ்ட் இல்லாத மாதிரி காட்டிக்கிறீங்க?" என்றாள்.

"அப்ப தான், சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கிட்டு, இவங்க ரொம்ப ஓவரா நடந்துக்க மாட்டாங்க"

"அப்படியெல்லாம் ஒன்னும் செய்ய மாட்டாங்க"

"அதை விடு" என்று அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான் ருத்ரன்.

"நீங்க ஏதாவது சாப்பிடறீங்களா?" என்றாள் சக்த.

"இப்போ எதுவும் வேண்டாம்"

அவளை அழைத்துச் சென்று கட்டிலில் மீது அமர வைத்தவன், அவள் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டான்.

"ஏன் இவ்வளவு டிஸ்டர்ப்டா இருக்கீங்க?"

"எல்லாம் அந்த தக்ஷிணாமூர்த்தியால தான்"

"அவரை விடுங்க" என்று அவன் நெற்றியை வருடி கொடுத்தாள். அவள் கையில் பிடித்து, தன் கன்னத்தில் வைத்துக் கொண்ட அவன்,

"உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு" என்றான்.

மென்மையாய் புன்னகைத்தாள் சக்தி.

"இவங்க எல்லாரும் உன்கிட்ட ரொம்ப அன்பா, அக்கறையா இருக்காங்கன்னு நினைச்சுடாத. அவங்க உன்னை வச்சு, என்கிட்ட காரியத்தை சாதிக்க பார்ப்பாங்க"

"ம்ம்ம்"

"சக்தி உனக்கு நல்லா தெரியும். நீ என்கூட மட்டும் தான் இருக்கணும், நீ முழுசா எனக்கு மட்டும்தான் வேணும்னு நான் நினைப்பேன்"

"எனக்கு தெரியும்"

"அப்படின்னா, இப்போ நான் உன்னோட இன்டிமேட் பண்ணலாமா?"

தன் விழிகளை விரிவடையச் செய்த சக்தி,

"இப்போவா? நம்ம உங்க வீட்ல இருக்கோம்... "

"அதனால என்ன?"

"யாராவது வந்துட்டா என்ன செய்றது?"

"இதுக்காகத் தான் நான் இங்க வரவேண்டாம்னு சொன்னேன்"

"ஏங்க இப்படி பண்றீங்க?"

"நான் தான் உன்னுடைய ஃபர்ஸ்ட் ப்ரிஃபரன்ஸா இருக்கணும். என்னை தவிர வேற எத பத்தியும் நீ கவலைப்படக்கூடாது"

பெருமூச்சுவிட்டு சக்தி,

"சரி" என்றாள்.

"நிச்சயமா தான் சொல்றியா?"

ஆமாம் என்று தலையசைய்தாள்.

"அதுக்கப்புறம் நான் உன்னை கட்டிப்பிடிச்சிகிட்டு தூங்குவேனே"

" பரவாயில்ல"

"நிச்சயமா பரவாயில்லயா?"

"நீங்க என்ன சொன்னாலும் எனக்கு பரவாயில்ல"

"உன்னை நாள் முழுக்க கட்டிலை விட்டு கீழே இறங்க கூடாதுன்னு சொன்னா என்ன செய்வ?"

"சின்ன குழந்தை மாதிரி நடந்துக்காதீங்க. என்னை ரொம்ப டெஸ்ட் பண்றதை நிறுத்துங்க. நான் என்ன செய்வேன்னு உங்களுக்கு தெரியாதா?"

"தெரியும். இருந்தாலும் நீ சொல்லி கேட்கணும்னு எனக்கு  ஆசை"

"கேட்டுட்டீங்க இல்ல? சந்தோஷமா?"

"ரொம்ப சந்தோஷம். சரி, என்கிட்ட சொல்லாம எங்கேயும் போகாத"

"போக மாட்டேன்"

"எதையும் என்கிட்ட மறைக்காத. அது எவ்வளவு சீரியஸான விஷயமா இருந்தாலும் சரி"

"சாரிங்க, இங்க வந்த விஷயத்தை நான் உங்ககிட்ட வேணும்னு  மறைக்கல"

"எனக்கு தெரியும். நானும் அதை பத்தி பேசல"

"நீங்க ரொம்ப இன்செக்யூரா இருக்காதீங்க"

"இருக்கக் கூடாதுன்னு தான் நினைக்கிறேன். ஆனா என்னால யாரையும் நம்ப முடியல... உன் ஒருத்தியை தவிர. அதனால தான் நீ என் கூடவே இருக்கணும்னு நினைக்கிறேன்"

"நான் உங்க கூட தான் இருப்பேன்"

"சரி, நீ போ. நான் தூங்குறேன்னு அவங்க கிட்ட சொல்லு"

"அப்படின்னா நம்ம இன்டிமேட் பண்ண போறது இல்லையா?"

"அதை ராத்திரி பாத்துக்கலாம்"

"அப்படின்னா, நீங்க நிஜமாவே ஒரு கிஸ் கூட பண்ண போறது இல்லையா?"

"கிஸ் பண்ண ஆரம்பிச்சா, அது ஒன் ஹவர் ப்ரோக்ராமா வளர்ந்திடும்"

"பரவாயில்லை"

"நெஜமா தான் சொல்றியா?"

"ம்ம்ம் "

"ஒருவேளை அவங்க உன்னை கூப்பிட்டா என்ன செய்வ?"

"பதில் சொல்ல மாட்டேன்"

"ஏன்?"

"அவங்க நம்ம ரெண்டு பேரும் தூங்குறதா நினைச்சுக்கட்டும்"

"அதையெல்லாம் அவங்க நம்ப மாட்டாங்க" என்று சிரித்தான்.

"அதை பத்தி என்ன கவலை இருக்கு?"

"உனக்கு அவங்களைப் பத்தி கவலை இல்லையா?"

"நான் உங்களை பத்தி மட்டும் தான் கவலைப்படுறேன்"

புன்னகையுடன் அவளை அணைத்துக் கொண்டான் ருத்ரன். இது தான் அவன் அவளிடம் எதிர்பார்த்தது. எந்த நிலையிலும் அவள் அவனுக்குத் தான் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அவன் எதிர்பார்த்தான். அது இன்று நடந்து விட்டது.

தொடரும்....

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top