38 பிடிபட்டான் ருத்ரன்
38 பிடிபட்டான் ருத்ரன்
"நம்ம, எங்க வீட்டுக்கு போகலாம்"
ருத்ரனின் பதிலை கேட்ட சக்தி அசந்து போனாள். அவன் உண்மையிலேயே அப்படி கூறினான்? அவளுக்கு தன்னை கிள்ளி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. தன் வீட்டிற்கு வருவதில்லை என்பதில் வெகு பிடிவாதமாய் இருந்தானே? அதற்காக தானே யாருக்கும் தெரியாமல், சென்னையில் இருந்து அவளை கொண்டு வந்தான்? இப்போது எது அவன் மனதை மாற்றியது? இவனை புரிந்து கொள்ளவே முடியாதா? பேச்சிழந்தவளாய் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"நீங்க உங்க வீட்டுக்கு போக விரும்பலைன்னு சொன்னீங்களே?" தன்னை அடக்க மாட்டாமல் கேட்டு விட்டாள் சக்தி.
"ஆமாம். நான் எங்க வீட்டுக்கு போக விரும்பலைன்னு சொன்னேன். ஏன்னா, எனக்கு சப்போர்ட் பண்ண யாரும் இல்லாததால... என் பக்கம் நிக்க யாரும் இல்லாததால... ஆனா இப்போ, எனக்காக நீ இருக்க" அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
சக்திக்கு தொண்டையை அடைத்தது. அவன் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ள காரணம், அவள் தன்னுடன் இருக்கிறாள் என்பதா? அவனுக்கு அவள் மீது அவ்வளவு நம்பிக்கையா? அவன் கழுத்தை ஆசையாய் கட்டிக் கொண்டாள் சக்தி.
"சக்தி, நான் ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு வந்த போது, என் குடும்பம் எனக்கு சப்போர்ட்டா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, நான் உன்னை பத்தி அவங்க கிட்ட சொன்னப்போ, என்னை சேலத்துக்கு வரவிடாம தடுக்க எல்லாரும் முயற்சி பண்ணாங்க. நான் பைத்தியம் முத்தி உளர்றேன்னு நினைச்சாங்க. என்னை அவங்க கண்ட்ரோல்ல வைக்க நினைச்சாங்க. எனக்கு அவங்க கண்ட்ரோலில் இருக்கிறதுல எந்த பிரச்சனையும் இல்ல... ஆனா, அது அன்பான கண்ட்ரோலா இருக்கனும்ல? இப்போ நான் உன்கிட்ட இருக்கிற மாதிரி...?"
அவன் அவளுக்கு அடங்கி இருக்கிறானா? அவன் கூறியதை கேட்டு திகைத்துப் போனாள் சக்தி, என்றாலும் அவனை குறுக்கீடு செய்யவில்லை.
"ஏன்னு தெரியல, அவங்க இதை எல்லாம் தெரிஞ்சே செய்ற மாதிரி எனக்கு தோணுது" என்றான் வருத்தம் தோய்ந்த குரலில்.
"ஏங்க உங்களுக்கு அப்படி தோணுது?" அவன் தலையை வருடினாள்.
"தெரியல... நான் எங்க வீட்டுக்கு போறதையே வெறுத்தேன். எனக்கு அங்க இருக்கவே பிடிக்கல"
"அவங்க உங்களோட குடும்பம். அவங்க எது செஞ்சிருந்தாலும் உங்க நல்லதுக்கு தானே செஞ்சிருப்பாங்க? அவங்க அதை வேணும்னே செய்ய என்ன காரணம் இருக்க போகுது?"
"அது தான் எனக்கும் புரியல" என்றான் தவிப்புடன்.
"உங்க தம்பியை பத்தி சொன்னீங்களே... அவர் பேர் என்ன?"
"சிவா"
"ஆங்... சிவா... நீங்க அவரை கூட நம்பலையா?"
"நான் அவனை மட்டும் தான் நம்புறேன்"
"நெஜமாவா?"
"ஆமாம். நான் ஹாஸ்பிடல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆன அடுத்த நாள், ஆஃபீசுக்கு போயிருந்தேன். ஆஃபிஸ் அக்கவுண்ட்ஸ் எல்லாமே அவ்வளவு பக்காவா வச்சிருந்தான். அவன் நினைச்சிருந்தா நான் இல்லாத நேரத்துல என்ன வேணா செஞ்சிருக்க முடியும். ஆனா அவன் அப்படி எதுவும் செய்யல..."
"இதைக் கேட்கவே ரொம்ப நல்லா இருக்கு"
"அவன் ஒரு டிடெக்டிவ். நம்ம எங்க இருக்கோம்னு அவன் நிச்சயம் கண்டுபிடிச்சிடுவான்" உறுதியாய் கூறினான் ருத்ரன்.
"அப்படின்னா அவர் இங்கயும் வருவார்னு நினைக்கிறீர்களா?"
"வரலாம்"
"அவர் உங்க குடும்பத்துல இருக்கிறவங்க கிட்ட நம்ம எங்க இருக்கோம்னு சொல்லிட மாட்டாரா?"
"அவன் சொல்லனும்னு நினைச்சா மட்டும் தான் சொல்லுவான்"
"அப்படின்னா?"
"நம்மளை கண்டுபிடிச்சா கூட உடனே போய் அவங்க கிட்ட சொல்ல மாட்டான். நான் ஏன் தனியா இருக்க விரும்புறேன்னு தெரிஞ்சுகிட்டு, அதுக்கப்புறம் தான் எந்த முடிவையும் எடுப்பான்" சிவாவின் எண்ணத்தை நன்றாகவே புரிந்து வைத்திருந்தான் ருத்ரன்.
"அவரு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான கேரக்டரா இருப்பாரு போல இருக்கே..."
"என்னோட கேரக்டர் இன்ட்ரஸ்டிங்கா இல்லையா?" என்ற கேள்வி பட்டென்று வந்தது.
"இந்த உலகத்திலேயே எல்லாரையும் விட இன்ட்ரஸ்டிங்கான கேரக்டர் நீங்க தான்" என்ற பதில், யோசனையின்றி பின் தொடர்ந்தது.
"அப்படியா?"
"ஆமாம்"
"எப்படி?"
"அதை வார்த்தையால சொல்லிட முடியாது. நீங்க செய்ற ஒவ்வொரு வேலையும் இன்ட்ரஸ்டிங்கா தான் இருக்கு. நீங்க என்னை சேலத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு போனது, சென்னையிலிருந்து ஓசூர் கொண்டு வந்தது, என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது, என்னை அக்கறையா பாத்துக்குறது, எல்லாமே இன்ட்ரஸ்டிங்கா இருக்கு."
"அவ்வளவு தானா? பெட்ல நான் நடத்துகிற விதம் இன்ட்ரஸ்டிங்கா இல்லையா?" என்றான் குரலில் காதலை குழைத்து.
அவன் கழுத்தின் இடுக்கில், வெட்கத்துடன் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள் சக்தி.
"உன்னோட பீரியட்ஸ் முடிஞ்சிடுச்சா?" ரகசிய வினா எழுந்தது ருத்ரனிடமிருந்து.
"ம்ம்ம்ம்" ரகசிய பதில் கிடைத்தது.
"அப்படின்னா நீ ரெடியா?" அவனது குரலில் ஆர்வம் மேலிட்டது.
அவன் மடியிலிருந்து இறங்க அவள் முயல, அவளை விடாப்பிடியாய் பிடித்துக் கொண்டான்.
"நான் உன்னை தொட்டு மூணு நாளாச்சு"
தன் இதழ்களால் அவள் காது மடலை வருடினான்.
"இன்னைக்கு கூட நீ டயர்டா ஃபீல் பண்ணுவியா?"
அவள் இல்லை என்று தலையசைக்க,
"அப்படின்னா எந்த பிரச்சனையும் இருக்காது இல்ல?" என்றான்.
"இருக்காது" என்று அவன் தோளில் சாய்ந்தாள்.
"உனக்கு பசிக்குதா?"
இல்லை என்று அவள் தலையசைக்க,
"சாப்பிடாம இருந்தா, நிச்சயம் பசி எடுக்கும். வா முதல்ல ஏதாவது சாப்பிடு"
அவளை தன் கையில் தூக்கிக் கொண்டு எழுந்து நின்றான், அவள் விழிகளை விரிவடையச் செய்து. தரைத்தளம் வந்தவன், நேராக சமையலறைக்கு சென்று, அவளை சமையலறையின் மேடை மீது அமரச் செய்தான்.
"என்ன செய்யணும்னு சொல்லு" என்றான்.
"நான் செய்றேன்" என்று அவள் கீழே இறங்க முயல, அவளை தடுத்து நிறுத்தி,
"நீ என்னோட ஸ்வீட் ஹார்ட். உனக்காக நான் ஏதாவது செய்யணும்னு நினைக்கிறேன். என்ன செய்யணும்னு சொல்லு"
"சரி, எனக்கு பால் மட்டும் போதும்" என்றாள் அவனை சோதனைக்கு உட்படுத்தாமல்.
"அது போதுமா?"
"நீங்க என்னோட ஸ்வீட் ஹார்ட். நான் எப்படி உங்களை வேலை செய்ய வைக்க முடியும்?" என்று சக்தி கேட்க, புன்னகை புரிந்தான் ருத்ரன்.
பாலை காய்ச்சி, ஒரு தம்ளரில் ஊற்றி, அதை அவளிடம் கொடுத்தான். அதைப் பெற்று பருகினாள் சக்தி.
"இப்போ இது என்னோட டர்ன். உங்களுக்கு நான் பிரேக்ஃபாஸ்ட் பண்ணி தரேன்" என்றாள் சக்தி.
"நீ எனக்கு அப்புறமா பண்ணி கொடுக்கலாம். இப்போ என் கூட வா"
மறுபடியும் அவளை தன் கையில் தூக்கிக் கொண்டு மாடிக்கு சென்றான்.
"உங்களுக்கு பசிக்கலையா?"
"ரொம்ப..."
"அப்படின்னா, என்னை இறக்கி விடுங்க. உங்களுக்கு ஏதாவது சமைச்சி, பரிமாறுறேன்"
"நீ எதுவும் சமைக்க வேண்டாம்... பரிமாறினா மட்டும் போதும்... பெட்ல..."
"உங்களுக்கு பசிக்குதுன்னு சொன்னிங்களே"
"பசிக்குது தான்... ஆனா அது சாப்பிட்டா அடங்காது"
"அப்படின்னா?"
"அதான் உன்னை சாப்பிட போறேனே..."
அவளது கன்னம், குங்குமத்தின் நிறத்தை கடன் வாங்கிக் கொண்டது. அவளை கட்டிலில் கிடத்தி, மூன்று நாள் தாபத்தை கொட்டி தீர்த்தான் ருத்ரன்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு,
ருத்ரனின் நெஞ்சில் சாய்ந்திருந்த சக்தி,
"நம்ம ரோஸ் கார்டனை போய் பார்க்கலாமா?" என்றாள்.
"ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டு போய் பார்க்கலாம்"
"ம்ம்"
"நான், நம்ம வீட்டுக்கு ஒரு குக்கை ஏற்பாடு பண்ணலாம்னு இருக்கேன். சமைக்கிறேன்னு சொல்லி, என்னை தனியா விட்டுட்டு போய் நீ எப்ப பாத்தாலும் கிச்சன்லயே இருக்க." அலுத்துக் கொண்டான் ருத்ரன்.
"நான் கிச்சன்ல இருக்கும்போது, நீங்க அந்த பக்கமே வராம இந்த ரூம்லையே அடஞ்சி கிடக்கிற மாதிரி பேசுறீங்க?"
"சமைக்கிறதுக்கு ஒரு ஆள் இருந்தா, நீ என் கூடவே இருப்ப இல்ல?"
"வேண்டாம். எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு"
"என்ன பிடிச்சிருக்கு?"
"நீங்க... நான்... நமக்கு வீடு... நம்மளுடைய இந்த சின்ன உலகம்... எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு"
சிரித்தபடி அவளை அணைத்துக் கொண்டான் ருத்ரன்.
அதே நேரம், புறநகர் பகுதிகளில் இருந்த தனி வீடுகளை பார்வையிட்டுக் கொண்டு வந்த உமாபதி, அந்த வீட்டின் வெளியே நின்றிருந்த ருத்திரனின் காரை கண்டான். தன்னிடம் சிவா கொடுத்த எண்ணையும் அந்த காரின் எண்ணையும் சரி பார்த்து, அது ருத்ரனின் கார் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான் அவன். உடனே சிவாவுக்கு ஃபோன் செய்தான். அந்த அழைப்பை ஏற்றான் சிவா.
"சிவா, நான் உங்க அண்ணனை கண்டுபிடிச்சிட்டேன்" என்றான் குதூகலமாய்.
"நெஜமாவா நீ அவனை பார்த்தாயா?" சிவாவின் குரலில் ஆர்வமும், சந்தேகமும் ஒருங்கிணைந்து இருந்தது.
"இன்னும் நான் அவரை பார்க்கல. அவரோட காரை பார்த்தேன். அவுட்டர் ஓசூர்ல இருக்குற, ரோஜா செடிகளால சூழப்பட்ட ஒரு தனி பங்களாவுக்கு வெளியில அந்த கார் நின்னுகிட்டு இருக்கு..."
"அப்படியா?"
"ஆமாம். அந்த பங்களாவுக்கு எதிர்ல தான் நான் நின்னுகிட்டு இருக்கேன்"
"அவசர படாதே. ருத்ரனையோ, சக்தியையோ பாக்குற வரைக்கும், அவன் அங்க தான் இருக்கான்னு நம்ம நம்ப முடியாது. நம்மளை டைவர்ட் பண்ண அவன் என்னவெல்லாம் செய்வான்" என்றான் சிவா.
"அப்படின்னா நான் இங்கேயே காத்திருக்கேன். அவங்களைப் பார்த்த உடனே நான் உனக்கு கன்ஃபார்ம் பண்றேன்"
"சரி" என்று யோசனையுடன் அழைப்பை துண்டித்தான் சிவா.
காலதாமதம் செய்யாமல், அத்தியாவசிய தேவைக்கான பொருள்களை மட்டும் எடுத்துக்கொண்டு, ஓசூர் நோக்கி பயணமானான் சிவா. ருத்ரன் அங்கு தான் இருக்கிறான் என்பதில் அவனுக்கு சந்தேகம் இருந்த போதும், உமாபதி அவனை நெருங்கி விட்டான் என்பதில் அவனுக்கு நம்பிக்கை இருந்தது.
சிவாவுக்கோ, உமாபதிக்கோ தங்களது பேச்சுக்கள், வேறு ஒருவனால் ஒட்டு கேட்கப்பட்டுக் கொண்டிருகிறது என்பது தெரியவில்லை. அவர்களது பேச்சை ஒட்டு கேட்ட அந்த மனிதனும், சிவாவை பின்தொடர்ந்து ஓசூருக்கு பயணமானான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top