34 உத்திரவாதம்
34 உத்திரவாதம்
இதற்கிடையில்,
பரமேஸ்வரனும், துர்காவும் வீடு வந்து சேர்ந்தார்கள். ருத்ரனையும், சக்தியையும் காண ஆவலோடு காத்திருந்த அவர்களது குடும்பத்தார் அவர்களை சூழ்ந்து கொண்டார்கள்.
"எங்க நம்ம ருத்ராவும் சக்தியும்?" என்றார் பாட்டி.
"அவங்க வரல பாட்டி" என்றாள் துர்கா.
"ஏன்? எதுக்காக நீ அவங்களை கூட்டிகிட்டு வரல?"
"நான் அவங்களை எங்க கூட வர சொல்லி கேட்டேன். அவனும் ஒத்துக்கிட்டான். ஆனா..." என்று இழுத்தாள் துர்கா.
"அவர் ஒத்துக்கல... ஒத்துக்கிட்ட மாதிரி நடிச்சாரு..." என்றான் பரமேஸ்வரன்.
"அவன் சொன்னதை நீ கேட்டிருக்கக் கூடாது. சரி, வா போகலாம். நானும் வரேன். நான் வந்து அவன் கிட்ட பேசுறேன்" என்றார் பாட்டி.
"இல்ல பாட்டி... அவன் இப்போ அங்க இல்ல" என்றாள் துர்கா.
"அவன் அங்க இல்லன்னா என்ன அர்த்தம்?"
"அவன் சக்தியோட ஃபார்ம் ஹவுஸை விட்டு போயிட்டான்"
"எங்க போனான்?"
"எங்களுக்கு தெரியல..."
"அவனைத் தடுத்து நிறுத்த சக்தி எந்த முயற்சியும் செய்யலையா?"
"அதை செய்யறதுக்கு முன்னாடி, அவர் அவங்க கிட்ட பர்மிஷன் கேட்டிருப்பாருனு நினைக்கிறீங்களா? அவர் அவங்களை சென்னைக்கு தூக்கிகிட்டு வந்தப்போ, அவங்க கிட்ட பர்மிஷன் கேட்டுட்டா தூக்கிக்கிட்டு வந்தாரு? அவர் எதையாவது செய்யணும்னு நினைச்சா, அவருக்கு யாரோட பர்மிஷனும் தேவையில்ல, பாட்டி" என்றான் பரமேஸ்வரன்.
தலையில் கை வைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தார் பாட்டி. மற்றவர்கள் ஒருவரை ஒருவர் இயலாமையுடன் பார்த்துக் கொண்டார்கள்.
"இப்ப நம்ம என்ன செய்யறது?" என்றார் பாட்டி.
"எதுவும் செய்யாம அமைதியா இருக்க சொல்லி சிவா சொல்றாரு. அவரு ஏதாவது செய்யட்டும். அது வரைக்கும் நம்ம எதுவும் செய்யாம இருக்கிறது தான் நல்லது" என்றான் பரமேஸ்வரன்.
சரி என்று கவலையுடன் தலையசைத்தார் பாட்டி. அப்போது எதேச்சையாக தன் பாக்கெட்டில் கைவிட்ட பரமேஸ்வரன், தன் பாக்கெட்டில் ஏதோ தட்டு பட, அதை வெளியே எடுத்தான். அது அவனது பாக்கெட்டில் அவனுக்கே தெரியாமல் மகேஷ் போட்ட மைக்ரோஃபோன் தான்.
"இது என்ன?" என்றார் அபிராமி.
ஒன்றும் புரியாமல் விழித்தான் பரமேஸ்வரன். அவன் கையில் இருந்து அதை பிடுங்கினாள் துர்கா.
"என்னங்க இது?" என்றாள் அதை உற்றுப் பார்த்தபடி.
"அது என்னன்னு எனக்கும் தெரியல. இதை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததே இல்லையே... இது எப்படி என்னோட பாக்கெட்டில் வந்தது?" என்றான் பரமேஸ்வரன்.
துர்காவுக்கு அருகில் வந்த தியாகு, அதை அவள் கையிலிருந்து பெற்று,
"இதை பார்த்தா மைக்ரோஃபோன் மாதிரி இருக்கு" என்றான்.
"மைக்ரோஃபோனா?" என்றார்கள் அனைவரும் ஒருமித்த திடுக்கிடும் குரலில்.
"இது உங்களுக்கு எப்படி கிடைச்சது மாம்ஸ்?"
தெரியாது என்று குழப்பத்துடன் தலையசைத்தான் பரமேஸ்வரன்.
"நம்ம ருத்து தான் இதை அவர் பாக்கெட்டில் போட்டிருக்கணும்னு நினைக்கிறேன்" என்றார் அபிராமி.
"அதுக்கு வாய்ப்பே இல்ல. ஏன்னா, அவரு அவனுக்கு பக்கத்திலேயே போகல. ருது கிட்ட பேசினது எல்லாம் நான் தான்" என்றாள் துர்கா.
"ஆமாம், அதுமட்டுமில்லாம, நாங்க அங்க வரப்போற விஷயமே அவருக்கு தெரியாதே...! அதுக்கு அவர் தயாரா இருந்த மாதிரியே தெரியல. எங்களைப் பார்த்த உடனே ரொம்ப டென்ஷன் ஆனாரு. நாங்க அங்க போற விஷயமே அவருக்கு தெரியாதபோ, அதை எப்படி அவர் போட்டிருக்க முடியும்? அதோட மட்டுமில்லாம, நாங்க அங்க போய் சேர்ந்ததுக்கப்புறம், அவரை நாங்க ஒரு தடவை தான் பார்த்தோம். அதுக்கப்புறம் நாங்க அவரை பார்க்கவே இல்ல. அவர் எங்களை ரூமுக்குள்ள வச்சு பூட்டிட்டு, சக்தியோட அங்கிருந்து ஓடிப் போயிட்டாரு"
"இதை உங்க பாக்கெட்டில் போட்டது ருத்ரன் இல்லனா, வேற யார் போட்டா?" என்றார் அபிராமி.
"எனக்கு ஒன்னும் புரியல. ஒருவேளை... "
"மாம்ஸ்..." என்று அவன் மேலும் எதுவும் கூறுவதற்கு முன், அவனை தடுத்து நிறுத்தி, தன் வாயின் மீது விரல் வைத்து, பேசாமல் இருக்கும்படி சைகை செய்தான் தியாகு.
அந்த மைக்ரோஃபோனை துர்காவின் கையில் இருந்து பெற்று, அதை கீழே போட்டு மிதித்து உடைத்தான் தியாகு.
"அய்யய்யோ... அதை ஏன் உடைச்ச?" என்றார் பாட்டி.
"இதை மாமாவோட பாக்கெட்ல போட்டு, நம்ம பேசுறதை எல்லாம் யாரோ ஒட்டு கேக்குறாங்கன்னு நினைக்கிறேன்" என்று சரியாய் யூகித்தான் தியாகு.
"இதை உடைச்சிட்டா, அப்புறம் அதை யார் போட்டதுன்னு நம்ம எப்படி கண்டுபிடிக்க முடியும்?" என்றார் பாட்டி.
"அந்த மைக்ரோஃபோன் இருந்தாலும், அதை வச்சு நம்ம அவங்களை கண்டுபிடிக்க முடியாது பாட்டி"
"அப்புறம் நம்ம எப்படி அவங்களை கண்டுபிடிக்கிறது?"
"வேற ஏதாவது ஒரு வழியில தான் கண்டுபிடிக்கணும்"
"அதை சிவா செய்வாரு" என்றான் பரமேஸ்வரன்.
"அப்படின்னா, அவனுக்கு ஃபோன் பண்ணி உடனே அதைப் பத்தி சொல்லுங்க" என்றார் பாட்டி.
சிவாவுக்கு ஃபோன் செய்து விவரத்தை கூறினான் பரமேஸ்வரன். அந்த மைக்ரோஃபோன் விவகாரம், சிவாவுக்கும் கூட குழப்பத்தை அளித்தது.
"அதை செஞ்சது, உங்க எதிரிங்கள்ல யாராவது, இல்லனா, உங்களோட போட்டி வக்கீல் யாராவதா இருக்க முடியுமா, மாம்ஸ்?"
யோசனையில் மூழ்கினான் பரமேஸ்வரன். அப்படி நடக்கவும் வாய்ப்பிருக்கிறது.
"நீங்க சொல்றது சரியா இருக்கலாம், சிவா. என்னோட போட்டி வக்கீல் யாராவது, என்னை ட்ராப் பண்ணி, நான் என்ன செய்றேன்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணி இருக்கலாம்"
"உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?"
"நான் யாரைனு சொல்றது சிவா? ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா நிறைய கேஸை பார்த்துகிட்டு இருக்கேனே"
"இப்போ நீங்க என்ன கேஸை டீல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?"
"அது ஒரு டைவர்ஸ் கேஸ்"
"அதைப் பத்தின எல்லா டீடைல்ஸையும் எனக்கு அனுப்புங்க. அந்த கேஸ் சம்பந்தப்பட்ட ஆளுங்க இதுக்கு பின்னாடி இருக்காங்களான்னு நான் செக் பண்ணி பார்க்கிறேன் "
"சரிங்க சிவா, ரொம்ப தேங்க்ஸ்"
அழைப்பை துண்டித்த சிவா, தீவிர யோசனையில் ஆழ்ந்தான் தற்சமயத்திற்கு அவன் பரமேஸ்வரனை ஏதோ கூறி சமாதானப்படுத்தி விட்டான். ஆனால் இதை ஒரு பக்கமாக இருந்து மட்டும் பார்ப்பது சரியாகாது. வேறு கோணத்திலும் இதை ஆராய வேண்டியது அவசியம்.
ஓசூர்
சப்பாத்தி செய்வதற்காக மாவு பிசைந்து கொண்டிருந்தாள் சக்தி. அங்கு வந்த ருத்ரன் அவளுக்கு பின்னால் நின்று, அவளை அணைத்தபடி தானும் அந்த மாவை பிசைய தொடங்கினான். திடீரென்று ஏற்பட்ட அவனது அருகாமையினால் அவளுக்கு உடல் சிலிர்த்தது. அவளது தோளின் மேலெழுந்த புள்ளிகள், அதை தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டியது. மாவு பிசைவதை நிறுத்திவிட்டு, திரும்பி அவனை ஏறிட்டாள்.
"நமக்குள்ள தான் எல்லாம் ஏற்கனவே முடிஞ்சிடுச்சே... எதுக்காக இவ்வளவு பதட்டமா இருக்க? என்னை பார்த்தா பயமா இருக்கா?" என்றான்.
அவள் இல்லை என்று தலையசைத்தாள்.
"அப்புறம் என்ன?"
"இந்த திடீர் நெருக்கத்தை நான் எதிர்பார்க்கல" என்றாள் திணறலோடு.
"இன்னும் அதிகமான நெருக்கத்தை எதிர்பார்க்கத் தொடங்கு... நான் எப்ப வேணா, என்ன வேணா செய்வேன்" லேசாய் அவள் கன்னத்தில் ஊதினான்.
வெப்ப காற்று பட்டவுடன் கண்களை மூடினாள் சக்தி.
"நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன், சக்தி. நீ எனக்கு எதையும் இல்லைன்னு சொல்ல மாட்டல்ல?"
மாட்டேன் என்று தயக்கத்துடன் தலையசைத்தாள்.
"நீ என்னை எதுக்காகவும் தடுக்க கூடாது... எதுக்காகவும்னா, எதுக்காகவும் தான்..."
அவள் அவனுக்கு பதில் கூறும் முன், அவள் முகத்தை உயர்த்தி, அவள் இதழ்களில் முத்தமிட்டான். அதை சற்றும் எதிர்பார்க்காத சக்தி ஒன்றும் செய்யாமல் அப்படியே நின்றாள். எதை வேண்டுமானாலும் எதிர்பார்க்கச் சொல்லி அவன் கூறினான் என்றாலும், அவ்வளவு சீக்கிரம் அவள் அதற்கு தயாராக முடியாது தானே...!
முத்தத்திலிருந்து பின் வாங்கிய ருத்ரன்,
"என்ன பார்த்தா உனக்கு பயமா இருக்கு தானே?" என்றான்.
கண்களை திறக்காமல் இல்லை என்று தலையசைத்தாள் சக்தி.
"என்னை பார்த்து பயப்படாதே"
அவள் மீண்டும் சரி என்று தலையசைப்பை பதிலாய் தந்தாள்.
"என்னை பாரு, சக்தி"
அவள் கண் திறந்து அவனை பார்க்க, அவள் கன்னத்தில் இதழ் பதித்து பிரிந்தான்.
"உங்களுக்கு பசிக்கலையா?"
"பசிச்சது... ஆனா இப்போ இல்ல. வயிறு ஃபுல்லானா மாதிரி இருக்கு" அவளை முத்தமிட்டதில் மனம் நிரம்பி விட்டதை குறிப்பிட்டான்.
"நான் உங்களுக்கு டிஃபன் பண்ணி தரேன்"
"நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்"
"வேண்டாம். நீங்க இருங்க. நானே செஞ்சிடுவேன்"
"நிஜமா தான் சொல்றியா?"
"உங்களுக்கு நான் யாருன்னு தெரியுமா?"
"என்னோட வைஃப்"
"உங்க வைஃபால நூறு பேருக்கு சாப்பாடு சமைச்சு போட முடியும்..."
"நீ நூறு பேருக்கெல்லாம் ஒன்னும் சமைக்க வேண்டாம். எனக்கு சமைச்சா போதும்... எனக்கு மட்டும்... புரிஞ்சுதா?"
அவள் புரிந்தது என்று புன்னகை புரிந்தாள்.
"எனக்கு சப்பாத்தி செய்யணும்னு ரொம்ப ஆசை" என்றான்.
"அப்படின்னா அதை நீங்களே தனியா செய்யுங்க" என்றாள் முகத்தை சீரியஸாய் வைத்துக் கொண்டு.
"இல்ல... நான் என்னோட ஒய்ஃப்க்கு ஹெல்ப் பண்ணனும்னு நினைக்கிறேன்"
"உங்க வைப்புக்கு உங்க ஹெல்ப் வேண்டாம். ( ருத்ரன் ஏதோ சொல்ல முயற்சிக்க, அவள் கூறியதைக் கேட்டு, சொல்லாமல் நிறுத்தினான் ) நீங்க தான் வேணும்"
அது அவன் முகத்தில் புன்னகையை துளிர்க்கச் செய்தது.
"அவன் உன் கூட தான் இருக்கான்... இருப்பான்... எப்பவும்..."
"எனக்கு தெரியும்"
"சக்தி, நீ என்னை எதுக்காக காதலிக்கிற?"
"உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால காதலிக்கிறேன்"
"நீ என்னை விட்டுட்டு போக மாட்ட இல்ல?"
அவனை அதிர்ச்சியுடன் ஏறிட்ட சக்தி,
"நமக்குள்ள இவ்வளவு நடந்ததுக்கு பிறகு... நான் உங்களுக்கு என்னையே தந்ததுக்கு பிறகு... இன்னும் நீங்க என்னை சந்தேகப்படுறீங்களா?" என்றாள் முகத்தில் வேதனையை காட்டி.
அவளை அணைத்துக் கொண்ட ருத்ரன்,
"இல்ல, நான் உன்னை சந்தேகப்படல. ஆனா..." என்று அவளை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்தபடி மென்று விழுங்கினான்.
"நீங்க ஏன் இவ்வளவு இன்செக்குயூர்டா இருக்கீங்க?"
"ஏன்னா, நான் இன்செக்குர்யூடா இருக்கேன் சக்தி. எனக்கு யாருமே வாழ்க்கை மேல ஒரு நம்பிக்கையை கொடுத்ததே இல்ல. எனக்கு மத்தவங்களை பத்தி எல்லாம் கவலை இல்ல. எனக்கு உன் கூட இருக்கணும். அவ்வளவு தான்... எனக்கு அது மட்டும் போதும். நீ என்னை விட்டுட்டு போனா, நிச்சயமா நான் உன்னை கொன்னுடுவேன்"
"கொல்லுங்க... நான் உங்களை விட்டுட்டு *போனா* (என்பதை அழுத்தி) என்னை கொல்லுங்க"
அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டு,
"ஐ அம் சாரி, சக்தி"என்றான்.
"இல்லங்க... நான் உங்களை விட்டுட்டு போனா, நிச்சயம் நீங்க என்னை கொல்லணும். ஏன்னா, நீங்க இல்லாம என்னோட வாழ்க்கைக்கு அர்த்தமே இருக்காது. ஏன்னா, நானும் உங்களை ரொம்ப காதலிக்கிறேன்" என்று அவன் எதிர்பாராத வண்ணம், அவன் இதழில் அழுத்தமாய் இதழ் பதித்தாள் சக்தி.
அது, அவள் நிச்சயம் அவனை விட்டு செல்லப் போவதில்லை என்பதற்கான உத்திரவாதத்தை தந்தது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top