30 இது உண்மையா?
30 உண்மையா?
வேகநடை நடந்து, கோபத்துடன் சக்தியை நோக்கி சென்ற ருத்ரன், அவளது மேற்கரத்தை பற்றி தன்னை நோக்கி திருப்பினான்.
"என்ன வேலை செஞ்சிருக்க சக்தி நீ? எதுக்காக இப்படி எல்லாம் செய்ற? நேத்து தானே எனக்காக விரதம் இருந்த...! இன்னைக்கு, தாலியை கழட்டி வச்சிட்டியா...? அப்புறம் நீ விரதம் இருந்ததுக்கு என்ன அர்த்தம்? இது தானா நீ இந்த கல்யாணத்துக்கு கொடுக்கிற மரியாதை? வாயை திறந்து பேசு சக்தி" என்று கோபமாய் கத்தினான் ருத்ரன்.
"எந்த ஒரு உறவுக்குமே நம்பிக்கை தான் அடித்தளம். நீங்க என்னை நம்பாத போது, நான் வேற என்ன செய்ய முடியும்?"
"தாலியை கழட்டி வைக்கிறதுக்கு பதில், என்னோட நம்பிக்கையை எப்படி சம்பாதிக்கிறதுன்னு நீ யோசிச்சிருக்கணும்..."
"அதைத் தான் நான் செய்றேன்... உங்களோட நம்பிக்கையை சம்பாதிக்க தான் நான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். அதுக்காக தான் இப்படி செஞ்சேன்"
"பேசிப் பேசியே என்னை சமாளிச்சிடலாம்னு நினைக்காத சக்தி"
"நான் பேசிப் பேசி உங்களை சமாளிக்க நினைக்கல. நீங்க தான் என் கழுத்துல தாலி கட்டுன அன்னைக்கு என்ன பேசினீங்கன்னு மறந்துட்டீங்க"
"நான் எதையும் மறக்கல"
"இல்ல, மறந்துட்டீங்க"
"நீ எதை பத்தி பேசுற சக்தி?" என்றான் தன் பொறுமையை மொத்தமாய் இழந்து.
"நான் தாலியை கழட்டினா, அன்னிக்கு நமக்கு முதல் ராத்திரியா இருக்கும்னு நீங்க சொன்னீங்க இல்ல?"
"ஐயோ, நீ அதைக் கழட்ட கூடாதுன்னு தான் நான் அப்படி சொன்னேன்..."
"அப்படின்னா நீங்க சொன்ன வார்த்தை நிஜம் இல்லையா?" என்றாள் அவனது கண்களை ஊடுருவி.
"நான் அப்படி..." மேலே பேசாமல் நிறுத்திய ருத்ரன், பெயர் கூற முடியாத ஒரு முக பாவத்துடன் அவளை ஏறிட்டான். அவளை இறுக்கமாய் பற்றி இருந்த அவனது கரங்கள் தளர்ந்தன.
அவள் கூறிய வார்த்தைகளின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாமல் திணறினான் ருத்ரன். அவனது முகத்தில் ஏற்பட்டிருந்த விசித்திரமான பாவமே அதற்கு அத்தாட்சி. அவன் கட்டிய தாலியை கழட்டி வைத்துவிட்டு, அவன் அன்று கூறியதையும் நினைவு கோருகிறாள் என்றால், அதற்கு என்ன அர்த்தம்? உண்மையிலேயே அவன் புரிந்து கொண்ட அர்த்தத்தில் தான் அவள் பேசுகிறாளா?
தனது இதயத்துடிப்பு வேகமாய் வளர்ந்து கொண்டே செல்வதை உணர்ந்தான் ருத்ரன். என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்கு புரியவில்லை. என்ன கேட்க வேண்டும் என்பதிலும் அவனுக்கு தெளிவில்லை. ஆனால் அதை செய்து தான் ஆக வேண்டும். அவனுக்கு எழுந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும். அவள் எந்த அர்த்தத்தில் கூறினாள் என்று அவனுக்கு தெரிந்தே ஆக வேண்டும்.
ஆனால், தான் கூற வந்தது என்ன என்பதை அவன் புரிந்து கொண்டு விட்டான் என்பதை, அவன் முக பாவத்திலிருந்து உணர்ந்து கொண்டாள் சக்தி.
"நீ.... நீ என்ன சொல்ற, சக்தி?" வாழ்க்கையில் முதல் முறையாய் பேசுவதற்கே தடுமாறினான் ருத்ரன்.
"நான் உங்க நம்பிக்கைக்கு பாத்திரமானவளா இருக்கணும். அந்த நம்பிக்கையை உங்ககிட்ட இருந்து பெற, நான் என்னை உங்களுக்கு கொடுக்கிறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன் . அதுக்கு பிறகாவது நீங்க என்னை நம்புவீங்க இல்லையா?"
வெலவெலத்துப் போனான் ருத்ரன். சக்தியின் வார்த்தைகளை நம்ப முடியாத அவனது தொண்டை, வறண்டு போவதை உணர்ந்தான்.
"நீங்க என் கழுத்துல எப்போ, எப்படி தாலிகட்டினீங்கன்னு கூட எனக்கு தெரியாது. இப்போ அதை நான் மானசீகமா உணரணும்னு நினைக்கிறேன்..." அவளது கண்கள், மாறிக்கொண்டிருந்த அவனது முகபாவத்தை தான் கவனித்துக் கொண்டிருந்தன.
"நான்... அன்னைக்கு..." அவன் வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை.
"உங்களுக்கு விருப்பமில்லைனா பரவாயில்ல, விட்டுடுங்க..."
கட்டிலுக்கு சென்று அமர்ந்து கொண்டு, தலை கவிழ்ந்து கொண்டாள் சக்தி.
ருத்ரனின் பார்வை, அவள் செல்லும் வழியெங்கும் சென்றது. தன் தாடையை இறுக்கி, கை விரல்களை மடித்து, மெல்ல கண்களை மூடி திறந்தான் ருத்ரன். உண்மையிலேயே அவள் தன்னைத் தர சித்தமாய் இருக்கிறாளா? உண்மையிலேயே அவள் அவனை தொடவிடப் போகிறாளா?
கட்டிலுக்கு சென்ற ருத்ரன், தன் தலையணையின் மீது வைக்கப்பட்டிருந்த தாலியை எடுத்து, சக்தியின் தோள்களைப் பற்றி அவளை தூக்கி நிறுத்தினான். அவனது முகத்தைப் பார்த்தபடி எழுந்து நின்றாள் சக்தி.
அவளது கண்களை சந்தித்தபடி, அந்த தாலியை அவள் கழுத்தில் கட்டினான் ருத்ரன். சந்தேகமில்லாமல், சக்தியின் கண்கள் ருத்ரனின் முகத்தில் தான் நிலைத்திருந்தன. ருத்ரன் எதிர்பாராத வண்ணம், சக்தி அவனது நெஞ்சத்தில் தஞ்சம் புகுந்தாள், அவனை மேலும் நிலைகுலையச் செய்து. செயலிழந்து நின்றான் ருத்ரன்.
அந்த நாள் முழுவதுமே அவனுக்கு இன்ப அதிர்ச்சியை வாரி வழங்கிக் கொண்டிருந்தது. தன் வாழ்க்கையில், 'இவையெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை' என்று அவன் நினைத்திருந்த விஷயங்கள் எல்லாம் நடந்து கொண்டிருந்தது.
அவன் அமைதியாய் நிற்பதை பார்த்த சக்தி, தன்னை அவனிடமிருந்து பின்னால் இழுத்துக் கொண்டாள். அப்பொழுது தான், தான் தவறவிட்டது என்ன என்பதை உணர்ந்தான் ருத்ரன். அவனுக்கு முதுகை காட்டியபடி கட்டிலில் படித்துக் கொண்டாள் சக்தி. ருத்ரனும் கட்டிலின் மறுபக்கத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, சக்தியை ஏறிட்டான்.
"நீ நிஜமா தான் சொல்றியா சக்தி?" என்றான்.
அவனை நோக்கி திரும்பிய சக்தி, ஒன்றும் கூறாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"நீ ஏன் இந்த முடிவுக்கு வந்தேன்னு எனக்கு தெரியல. ( மென்று விழுங்கினான் அவன் ) நீ உண்மையிலேயே என்னோட நம்பிக்கையை சம்பாதிக்க தான் இந்த முடிவை எடுத்தியா?" என்றான் நம்ப முடியாமல்.
இப்பொழுதும் சக்தி ஒன்றும் பேசவில்லை.
"நான்.... நான்... நிஜமாவே... உன்னை தொடலாமா?" வார்த்தைகளை தேடிப்பிடித்தான் ருத்ரன்.
"ம்ம்ம்ம்" என்றாள் அது வரை அமைதியாய் இருந்த சக்தி.
தன் உடலில் மின்னல் பாய்ந்தது போல் உணர்ந்தான் ருத்ரன். அவனுக்குள் ஏதேதோ நடப்பது போல் தோன்றியது அவனுக்கு. ஆனால் அதற்கு என்ன பெயர் என்று அவனுக்கு புரியவில்லை. இப்போதும் சக்தி அமைதியாய் இருப்பதைக் கண்டான். எப்படி இந்த பெண்ணால் எப்பொழுதும் ஒரே சமநிலையில் இருக்க முடிகிறது? அவளை விட அவன் அவ்வளவு பலவீனமானவனா? அப்படித்தான் தெரிகிறது. சக்தி என்று வந்துவிட்டால், ருத்ரன் பலவீனமானவன் தான். அதை அப்பொழுது தான் தெரிந்து கொண்டான் ருத்ரன்... அதுவும் சக்தி தன்னை முழுதாய் தர தயாராக இருக்கும் போது...!
அவனிடமிருந்து தப்பிச் செல்ல வேண்டும் என்று அவள் நினைத்த போது, அவன் அவளை மீண்டும் கொண்டு வந்தே திரிவேன் என்று விடாப்பிடியாய் நின்றான். ஆனால், இப்போது, அவள் தனது முந்தைய செயல்களுக்கு முரண்பட்டு நிற்கும் போது, அவளை எதிர் கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு *அது* வேண்டாம் என்பதல்ல... இந்த முக்கியமான கட்டத்திற்கு, அவன் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால், தன் வாழ்நாளின் இந்த காலகட்டத்தை இவ்வளவு சீக்கிரம் எதிர்கொள்வோம் என்று அவன் எதிர்பார்த்து இருக்கவில்லை.
அவன் அதற்கு தயார் இல்லை தான்... ஆனால் வந்ததை விடவும் அவனுக்கு மனமில்லை. சக்தி தானாகவே வந்து தன்னை தருகிறேன் என்று கூறும் போது அதை எப்படி அவனால் விட்டுவிட முடியும்? அப்படி விட்டு விட்டு அவன் நிம்மதியாக தான் இருந்து விடுவானா? நிச்சயம் முடியாது.
தனக்கு முதுகை காட்டி படுத்துக் கொண்டிருந்த சக்தியின் மீது தன் கண்களை ஓட்டினான். அவள் தன் இடுப்புயர கூந்தலை முன்புறம் போட்டபடி படுத்திருந்தாள். அவன் கட்டிய தாலியை தங்கி இருந்த அவளது வழுவழுப்பான கழுத்து, அவனது கண்களுக்கு வெகு அழகாய் தெரிந்தது. இதற்கு முன், அவளது அங்கங்களை ரசிக்க வேண்டும் என்று கூட அவனுக்கு தோன்றியது இல்லை. ஏனென்றால் அவனது மனதில் *அப்படிப்பட்ட* எண்ணமே இருக்கவில்லை. ஆனால் இப்பொழுது, சக்தி அவன் மனதில் அதற்கான விதையை ஊன்றி விட்ட பின், அவன் மனதில் இருந்த ஆசைகள் மெல்ல மெல்ல முளைத்தெழுந்தன அவனைப் பார்த்து சிரித்தன.
அப்பொழுது, அவன் மனதில், *அந்த* ஒன்றைத் தவிர, வேறு எதுவும் இல்லை. அவன் மனதில் இருந்த மற்ற அனைத்து எண்ணங்களும் அழிந்து போயின... அவன் வீட்டிற்கு வந்திருந்த துர்காவை மறந்தான்... அவள் அவனுக்கு முன்னால் வைத்திருந்த பிரச்சனையை மறந்தான்... தன்னையும் சேர்த்து அனைத்தையும் மறந்தான்.
தனக்கு முன்னாள் படுத்திருந்த அந்த ஒரு பெண்ணைத் தவிர அவன் மனதில் வேறு எந்த எண்ணமும் இல்லை. மெல்ல அவன் அவளது கையை தொட, உணர்வுகளின் கலப்படமாய் இருந்த ருத்ரனை, முகத்தில் எந்த உணர்வும் இன்றி திரும்பி பார்த்தாள் சக்தி.
"சக்தி... நான்..." அவனது வாய் குழறியது.
அதற்கு மேலும் அவனை சோதிக்க விரும்பாத சக்தி, தன்னை அணைத்துக் கொள்ளுமாறு தன் கைகளை அவனை நோக்கி நீட்டினாள். அதற்காகவே காத்திருந்த ருத்ரன், உணர்ச்சி குவியலாய் அவளை ஆறத்தழுவிக் கொண்டான். தன் கண்களை மூடி புன்னகை புரிந்தாள் சக்தி.
அந்த அணைப்பில் இருந்து சற்று பின்வாங்கிய ருத்ரன், தன் கையில் இருப்பது, காணக்கிடக்காத அபூர்வ பொக்கிஷம் என்பது போல், அவளைக் கண்டு களித்தான். அவன் அவளது கன்னம் வருடியபோது, அவளது இதழ்களில் அவனது விரல் உரச, மெல்ல கண் மூடினாள் சக்தி. என்னை தருகிறேன் என்று அவள் கூறிய உண்மை வார்த்தைகளை உணர்ந்த ருத்ரன், *விரல் தீண்ட உருகிய பெண்மை, இதழ் தீண்ட என்ன ஆகும்?* என தெரிந்து கொள்ள முயன்றான். அவள் என்ன ஆனாலோ... அவளது இதழை பற்றிய இவன், உருகி நெகிழ்ந்தான். அவனுக்குள் கொப்பளிக்கும் ஆர்வம் கிளர்ந்தெழுந்தது. தான் ஆசைப்பட்ட பெண்ணை, ஆசை தீர முத்தமிட்டு தீர்த்தான்.
அதன் பிறகு அவன் மனதில் எந்த தயக்கமும் இல்லை. தொடுதலின் மூலம், பெறுதலும், கொடுத்தலும், பாரபட்சமின்றி பரிமாறிக் கொள்ளப்பட்டது. தனது நம்பிக்கையை பெற, தன்னை முழுமையாய் அர்ப்பணித்த பெண்ணை, சிந்தாமல் சிதறாமல் ஆட்கொண்டான் ருத்ரன். தன்னை தருகிறேன் பேர்வழி என்ற சாக்கில், அவனை முழுமையாய் எடுத்துக் கொண்டாள் சக்தி. அவனை தன்னிலை இழக்கச் செய்து, அவனை தனதாக்கிக் கொண்டாள் அந்த பெண். தன்னை முழுமையாய் அவளது காலடியில் சமர்ப்பித்தான் ருத்ரன். அதை செய்ய அவன் சிறிதும் யோசிக்கவில்லை.
அவன் மனநிலையை சரியில்லாதவன் என்று யார் கூறியது? தன் மனைவியை இவ்வளவு கவித்துவமாய் அவன் கையாள்வதை பார்த்தால், எந்த மனநல மருத்துவரும் அவன் ஒரு மன நோயாளி என்று கூற மாட்டார். அவனது செயலில் வேகம் இருந்தது தான்... ஆனால் அதில் ஒரு *தன்மையும்* இருந்தது. தன் மனைவி, f கட்டிலை பார்த்து பயந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு அதில் தெரிந்தது.
தாம்பத்திய சாகரத்தில் மூழ்கி முத்தெடுத்த ருத்ரனின் மனதில், இதற்கு சிற்றின்பம் என்று பெயரிட்டது யார்? என்ற கேள்வி எழுந்தது. ஆசை ஆசையாய் காதலித்த தன் மனைவியுடன் கலந்தது அவனுக்கு பேரின்பமாய் தெரிந்தது. அவனை இந்த அளவிற்கு நம்பிய ஒரே பெண் அவள் தான் என்பதால் இருக்கலாம்...! அவளது கன்னங்களிலும் நெற்றியிலும் மாறி மாறி முத்தமிட்ட ருத்ரன், தன் பிறவிப் பயனை அடைந்து விட்ட பெருமிதத்துடன், அவள் கழுத்திடுக்கில் முகம் புதைத்தான்.
தன் மூச்சின் வேகம் தனியும் வரை காத்திருந்த அவன், மெல்ல தலை உயர்த்தி,
"சக்தி..." என்று அழைத்தான்.
கண்களை மூடி படுத்திருந்த சக்தி கண் திறந்து அவனைப் பார்த்து புன்னகைத்தாள். தன் இதழ்களால் அவளது இதழ்களை ஒற்றி எடுத்த அவன்,
"தேங்க்யூ சோ மச் ஃபார் எவ்ரிதிங்" அவளுக்கு நன்றியுரை கூறிவிட்டு, மீண்டும் அவள் நெஞ்சில் தஞ்சம் புகுந்தான்.
அவனது நெற்றியில் அன்பாய் முத்தமிட்டு அவன் இதழ்களை பூக்க செய்தாள் சக்தி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top