13 சந்தர்ப்பம்

13 சந்தர்ப்பம்

இதற்கிடையில்,

ருத்ரனை தேடி சேலம் வந்தடைந்தான் சிவா. ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கிக்கொண்டு ருத்ரனை தேட துவங்கினான். இறுதியில் ருத்ரன் தங்கி இருந்த ஹோட்டலை கண்டுபிடித்தான். காலதாமதம் செய்யாமல், அந்த ஹோட்டலை நோக்கி விரைந்தான். ஆனால் அவனுக்கு ஏமாற்றம் அளிக்கும் வண்ணம், ருத்ரன் அங்கு இருக்கவில்லை. அது அவனுக்கு எரிச்சலை தந்தது. ருத்ரன் அங்கு எவ்வளவு நாள் தங்கி இருந்தான் என்ற விவரம் மட்டும் தான் அவனுக்கு கிடைத்தது. ருத்ரனை எங்கே தேடுவது எப்படி தேடுவது என்று அவனுக்கு புரியவில்லை. ஓயாத அலைச்சலினால் சோர்ந்து போயிருந்த அவன், கட்டில் விழுந்தான்.

அப்பொழுது அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பு பரமேஸ்வரனுடையது. சிவா எதுவும் கூறும் முன்,

"பெரிய மச்சானை பத்தி ஏதாவது தெரிஞ்சிதா சிவா?" என்றான் பரமேஸ்வரன்.

"உங்க பெரிய மச்சான் ஒன்னும் அவ்வளவு சுலபமான ஆள் இல்ல... அவன் சேலத்துலேயே இல்ல" என்றான் சிவா.

"என்ன சொல்றீங்க சிவா?" என்றான் பரமேஸ்வரன் அதிர்ச்சியுடன்.

"ஆமாம், நேத்து சாயங்காலம் தான் இங்கிருந்து ரூமை காலி பண்ணிக்கிட்டு போனானாம்"

"அது உண்மை தானா?" என்றான் பரமேஸ்வரன் நம்ப முடியாமல்.

"ஆமாம்"

"நிச்சயமா தெரியுமா?" என்று பரமேஸ்வரன் கேட்க, துணுக்குற்றான் சிவா.

ஆம்... ஒருவேளை ருத்ரன் அவனை திசைத்திருப்புவதற்காக கூட அப்படி செய்திருக்கலாம்.

"நான் மறுபடியும் செக் பண்ணி பார்க்கிறேன்" என்றான் சிவா.

"அதை சீக்கிரம் செய்யுங்க" என்றான் பரமேஸ்வரன்.

"சரிங்க மாமா" என்று அழைப்பை துண்டித்தான் சிவா.

சென்னை

சக்தியை தன் அறையில் விட்டுவிட்டு வெளியேறினான் ருத்ரன். அவன் செல்லட்டும் என்று காத்திருந்த சக்தி, ஓடி சென்று கதவை உள்புறம் தாளிட முயன்றாள். கதவை சாத்திக் கொண்டால், ருத்ரனாள் உள்ளே நுழைய முடியாது என்பது அவளது நினைப்பு. ஆனால் அவளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், அந்த கதவில் தாழ்ப்பாளே இல்லை. அது கைப்பிடியை திருகி திறக்கும் கதவு. அதில் சாவியும் இருக்கவில்லை. குளியல் அறைக்குச் சென்று அதன் கதவை பரிசோதித்த போது, அதிலும் திருகு கைப்பிடி தான் இருந்தது. ஆனால் அவளுக்கு நிம்மதி அளிக்கும் வண்ணம், அதில் ஒரு சாவியும் பொருத்தப்பட்டு இருந்தது.

அந்த அறையின் ஜன்னல்களை பரிசோதித்து பார்த்தாள். அவள் அங்கிருந்து தப்பிச்செல்ல ஒரு வழியும் அவளுக்கு தென்படவில்லை. அந்த வீடு சென்னையில் புறநகரில் அமைந்து இருந்தது. அந்த பங்களாவின் அருகில் வேறு எந்த வீடும் இருக்கவில்லை. மீண்டும் கதவருகே வந்து, கதவை திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். அந்த நீண்ட வரண்டாவில் யாரும் இருக்கவில்லை. முதல் மாடியில் இருந்து கீழே பார்த்தால், அந்த வீட்டின் வரவேற்பறையை தெள்ளத்தெளிவாய் காண முடிந்தது. அவள் இருந்த அறையின் பக்கத்தில் மேலும் இரண்டு அறைகள் இருந்தன. ஆனால் அவை பூட்டப்பட்டிருந்தன. மீண்டும் ருத்ரனின் அறைக்கே சென்று அமர்ந்து கொண்டாள், வேறு எந்த வழியும் இல்லாததால்.

.....

ஒரு ஆன்லைன் வியாபாரியை தொடர்பு கொண்டு, சக்திக்கு தேவையான துணிமணிகளை ஆர்டர் செய்தான் ருத்ரன். பிறகு, அந்த வீட்டின் வேலை ஆட்களை அழைத்தான். சமையல் காரர்,  காவல்காரர், மற்றும் தோட்டகாரரும் அவன் முன் வந்து நின்றார்கள். கால் மீது கால் போட்டபடி சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டான் ருத்ரன்.

"அந்தப் பொண்ணோட பேரு சக்தி. அவ நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு. அவளை கவனமா பார்த்துக்கோங்க. அவ இந்த வீட்டை விட்டு வெளியே ஒரு அடி எடுத்து வைக்கக் கூடாது. புரிஞ்சுதா?"

"சரிங்க சார்" என்றான் கவலாளியான ஏகாம்பரம்.

"நாங்க அவங்களை கண்காணிக்கிறோம்னு அவங்களுக்கு தெரியாம பார்த்துக்கிறோம்" என்றாள் சமையல்கார காமாட்சி.

"இல்ல... நீங்க கண்காணிக்கிறீங்கன்னு அவளுக்கு தெரியணும்" என்றான் ருத்ரன்.

சரி என்று அவர்கள் தலையசைத்துக் கொண்டார்கள்.

"அவ என்ன கேட்டாலும் கொடுங்க" என்றான் ருத்ரன்.

அவர்கள் மறுபடியும் தலையசைத்தார்கள். சோபாவில் இருந்து எழுந்து நின்ற ருத்ரன்,

"எங்களுக்குள்ள என்ன நடந்தாலும், அதுல யாரும் தலையிடக்கூடாது. கண்டும், காணாம, உங்க வேலையை பார்த்துக்கிட்டு போய்கிட்டே இருக்கணும்" என்ற அவனது வார்த்தைகள் எச்சரிக்கையாய் ஒலித்தன.

அவர்கள் மீண்டும் தலையசைத்தார்கள்.

மீண்டும் தன் அறைக்கு வந்தான் ருத்ரன். அந்த அறையின் மூலையில் சக்தி அமர்ந்திருப்பதை பார்த்தான். லேசாய் புன்னகைத்துவிட்டு குளியல் அறைக்கு சென்றான். குளியலறையை நோக்கி ஓடிய சக்தி, தன்னிடமிருந்த சாவியால் அந்த குளியல் அறையை பூட்டிவிட்டு, அந்த சாவியை கட்டிலின் மீது வீசி எரிந்து விட்டு வெளியே ஓடி வந்தாள்.

அவள் வீட்டை விட்டு வெளியே ஓடுவதை பார்த்த காமாட்சி, இன்டர் காமை எடுத்து செக்யூரிட்டிக்கு ஃபோன் செய்தாள்.

"சக்தி மேடம் வெளியில் வராங்க. கேட்டை பூட்டு" என்றாள்.

"அது ஏற்கனவே பூட்டி தான் இருக்கு" என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் ஏகாம்பரம்.

வெளி கேட்டை நோக்கி ஓடிவந்த சக்தியை பார்த்த ஏகாம்பரம், கேட்டின் முன் நின்றான்.

"அண்ணா ப்ளீஸ் கதவை திறங்க அண்ணா" என்றாள் சக்தி

"இல்லம்மா தங்கச்சி... என்னால முடியாது. நீங்க உள்ள போங்க" என்றார் மரியாதையுடன்.

"தயவுசெய்து புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. இவன் என்னை கடத்திக்கிட்டு வந்துட்டான்" என்று கெஞ்சினாள்.

"தெரியும்... நாங்க அவருக்கு மட்டும் தான் கட்டுப்பட்டவங்க. நீங்க தயவுசெய்து உள்ள போங்க"

வீட்டின் முகப்பில் நின்றுஅந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரன். அவனைப் பார்த்த காவலாளி அவனுக்கு விரைப்பாய் ஒரு சல்யூட் வைத்தான். ருத்ரனை கண்ட சக்தி அதிர்ச்சி அடைந்தாள். அவன் எப்படி வெளியே வந்தான்? அவள் தான் அவனை குளியல் அறைக்குள் வைத்து பூட்டினாளே...! தன்னிடம் இருந்த மற்றுமொரு சாவியை அவளிடம் காட்டி சிரித்தான் ருத்ரன். தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது சக்திக்கு. அவள் எப்படி இதை பற்றி யோசிக்காமல் போனாள்?

அவள் கையைப் பிடித்து உள்ளே இழுத்துச் சென்றான் ருத்ரன்.

"என்னை விடு... என் கையை விடு... " என்று திமிறியபடி சென்றாள் சக்தி.

உள்ளே வந்த ருத்ரன் தலைவாசலை மூடி தாளிட்டான். அவர்களைப் பார்த்துக் கொண்டு நின்ற காமாட்சியை நோக்கி,

"எங்களுக்கு பிரேக்ஃபாஸ்ட் கொண்டு வாங்க" என்றான்.

சரி என்று தலையசைத்த காமாட்சி, சமையலறைக்கு சென்றாள்.

மாடிப்படியின் கைப்பிடியை கெட்டியாய் பிடித்துக் கொண்ட சக்தி,

"என் கையை விடு" என்று மேலே ஏறாமல் திமிறினாள்.

வேறு வழி இன்றி அவளை தன் தோளில் தூக்கிக்கொண்டு, மாடிபடி எரிச்சென்றான் ருத்ரன். அறைக்குள் வந்தவுடன், அவளை கீழே விட்டு அறையை சாத்தி தாளிட்டான்.

"என்கிட்ட இருந்து உனக்கு எதுவுமே கிடைக்காது" என்று கூக்குரலிட்டாள் சக்தி.

"நிதர்சனத்தை புரிஞ்சுக்கிட்டு, அதை ஏத்துக்க பாரு சக்தி. நீ இந்த இடத்தை விட்டு போக முடியாது. நான் உன்னை போக விடமாட்டேன்" என்றான் திடமாய்.

அவனது சட்டை காலரை பற்றி கொண்ட சக்தி,

"ஏன்? ஏன் என்னை போக விட மாட்ட? இங்கிருந்து போக, எனக்கு உன்னோட அனுமதி தேவையில்ல. உன்னை மாதிரி ஒரு திமிர் பிடிச்ச ஆள் கூட நான் இருக்க மாட்டேன்"

அவளை தன் கரத்தால் சுற்றி வளைத்து, அவளுக்கு அதிர்ச்சி அளித்தான் ருத்ரன்.

"நீ என்கூட இருக்க விரும்புறியா இல்லையா அப்படிங்கிறது விஷயமே இல்ல. நான் உன் கூட இருக்கத்தான் விரும்புறேன்... நீ என்கூட சண்டை போட்டாலும்...  புரிஞ்சுதா?"

"என்னை பத்தி நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க? என்னோட கல்யாணத்தை நிறுத்தின... என்னை கடத்திக்கிட்டு வந்திருக்க... இன்னமும் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்குவேன்னு நினைக்கிறாயா...?"

"ஆமாம். நான் உன்னை கடத்திக்கிட்டு தான் வந்தேன். அப்படின்னா என்ன அர்த்தம்? எனக்கு எதுக்காகவும் உன்னோட பர்மிஷன் தேவை இல்ல... உன்னோட அனுமதி இல்லாம உன்னை கடத்திக்கிட்டு வந்த மாதிரி தான் எல்லாம் நடக்கும்"

அவள் பற்றி இருந்த காலரின் பிடி தளர்ந்தது. ஆனால் அவளை பற்றி இருந்த ருத்ரனின் பிடி இறுகியது.

"அதை செக் பண்ணி பாக்கணும்னு நெனச்சா, இப்போ என் கையிலயிருந்து வெளிய வர முடியுதான்னு பாரு" என்று சவால் விட்டான்.

அவள் எடுத்த எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. இரும்பு வளையத்தை ஒரு சிறு மலரால் என்ன செய்து விட முடியும்? அவளது முயற்சியை பார்த்து புன்னகை புரிந்த ருத்ரன், அவளைச் சுற்றி இருந்த தன் வலது கரத்தை நீக்கினான்.

"இப்போ ட்ரை பண்ணு" என்றான்.

உஹும்... ஒன்றும் நடக்கவில்லை.

"சக்தி..." அவள் பெயரை ரகசியம் போல் உச்சரித்த ருத்ரன்,

"நீ இந்த இடத்தை விட்டு போகணுமா?" என்றான்.

திமிறுவதை நிறுத்திவிட்டு அவனை ஏறிட்டாள் சக்தி.

"சரி, உனக்கு நான் ஒரு சான்ஸ் கொடுக்கிறேன். ஒரே ஒரு சான்ஸ் தான்... அதை யூஸ் பண்ணிக்கோ"

"என்ன சான்ஸ்?"

"உனக்கு நான் 24 மணி நேரம் டைம் தரேன். அதுக்குள்ள நீ இந்த இடத்தை விட்டு வெளியே போயிட்டா, அதுக்கு அப்புறம் உன் வாழ்க்கையில் நான் எப்பவும் தலையிடவே மாட்டேன்"

மென்று விழுங்கினாள் சக்தி. உண்மையிலேயே இது அவளுக்கு அளிக்கப்படும் சந்தர்ப்பமா? அல்லது அவளுக்கு வைக்கப்படும் பொறியா?

அலமாரியில் இருந்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கட்டை எடுத்த அவன், கட்டிலுக்கு பக்கத்தில் இருந்த மேஜையில் வைத்தான்.

"சேலத்துக்கு திரும்பி போக உன் கிட்ட காசு இல்லன்னு எனக்கு தெரியும். இந்த பணத்தை வச்சுக்கோ" என்றான்.

திகைத்து நின்றாள் சக்தி. அங்கிருந்து அவள் தப்பிச் செல்ல அவனே அவளுக்கு பணம் கொடுக்கிறான்... இவன் என்ன ரகத்தைச் சார்ந்தவன்? அவன் மனதில் என்ன இருக்கிறது? அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

"உங்க சவாலை நான் ஏத்துக்கிறேன்" என்றாள்.

அவளது தன்னம்பிக்கை அவனை வெகுவாய் கவர்ந்தது.

"நான் ஜெயிச்சா நீ எனக்கு என்ன தருவ?" என்றான்.

"என்கிட்ட என்ன இருக்கு?நான் சேலத்துக்கு போக நீங்க தானே பணம் கொடுத்து இருக்கீங்க? அப்படி இருக்கும் போது, நான் உங்களுக்கு என்ன கொடுக்க முடியும்?"

"எல்லா விஷயமும் பணத்தை மட்டுமே சார்ந்தது இல்ல, சக்தி..."

"பின்ன?"

"நான் ஜெயிச்சா, நான் என்ன சொன்னாலும் நீ கேட்கணும்"

"நான் ஜெயிச்சா, என்னை வாழ்நாள் முழுக்க நீங்க நினைச்சு கூட பாக்க கூடாது"

அலட்சியமாய் தன் தோள்களை குலுக்கினான் ருத்ரன்.

"இந்த வீட்ல இருக்கிற செக்யூரிட்டியை நீங்க அதிகப்படுத்த கூடாது"

"டன்..." என்று புன்னகைத்தான் ருத்ரன்.

எப்படி அவள் இந்த சவாலை ஏற்றுக் கொண்டாள் என்று தான் நமக்கும் புரியவில்லை.

எப்படியும் ருத்ரன் அவளை அங்கிருந்து செல்ல அனுமதிக்கப் போவதில்லை. அப்படி இருக்கும் பொழுது, அவனே ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் போது, அதை அவள் பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு? ஜெயிப்போமா இல்லையா என்பதை பற்றி யோசிக்காமல், அதை பயன்படுத்திக் கொண்டால் தான் என்ன? தான் அங்கிருந்து தப்பிச்செல்ல கடவுள் தனக்கு துணை புரிவார் என்று அவள் நம்பினாள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top