பயணம் - 5

ராணி  கிளம்பிய பத்து நிமிடத்தில் ராகினியின் தந்தை வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பினார்.

"வாங்க அப்பா... உங்களுக்காக தான் வெயிட்டிங்..." என்ற ராகினியை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு "ரெப்ரஸ் ஆகிட்டு வரேன் மா" என்றார் அவளின் தந்தை.

"சரிங்க அப்பா, நான் உங்களுக்கு டிபன் எடுத்து வைக்கிறேன் வாங்க" என கூறிவிட்டு சமயல் அறைக்குள் நுழைந்தாள் ராகினி.

தன் தந்தை வந்ததும் சாப்பாட்டை பரிமாறினாள், பின் இருவரும் காற்று வாங்க மாடிக்கு சென்றனர்.

"ஏதோ சொல்ல வந்தியே என்னது மா..." என ராகினியின் தந்தை வினாவினார்.

" ஆமாம் பா, ராணி இந்த விடுமுறையில ஒரு ட்ரிப் ப்ளான் வச்சிருக்கா அதுவும் அட்வன்சர் ட்ரிப் பா.... என்னையும் கூப்பிட்டா,  நான் உங்கக்கிட்ட கேட்டு சொல்லரேன்னு சொன்னேன், என்னப்பா போகட்டா? " என ராகினி கேட்டு முடிக்க, " எந்த ஊரு? எவ்வளவு நாள் ட்ரிப்" என ராகினியின் தந்தை கேட்டார்.

"ஜவ்வாது மலை, ஐந்து நாள் " என பதில் கூறினாள் ராகினி.

"ஜவ்வாது மலையா? " என அதிர்ச்சியாக கேட்டார் ராகினியின் தந்தை.

"ஆமாம் பா.... ஏன் இவ்வளவு அதிர்ச்சி... " என்றாள் ராகினி.

"வேண்டாம்மா... ஜவ்வாது மலை வேண்டாம். நீயும் போக வேண்டாம், ராணியையும் போகமல் தடுத்து நிறுத்து" என்றார்.

"ஏன் அப்பா, என்னனு சொல்லுங்க... ப்ளீஸ் " என கெஞ்சினாள் ராகினி.

"அது ஒரு பெரிய கதை, நான் விஏஓ வா இருந்த காலத்துல எனக்கு ஜவ்வாது மலையில தான் போஸ்டிங் போட்டாங்க, மலைமேல கிராம மக்கள் வசிக்கிராங்க, ஆனா பேருந்து வசதி, பாதை எதுவும் இல்ல, அங்க இருக்க ஒரே அரசு கட்டிடம் விஏஓ க்காக அரசு கொடுக்கும் கட்டிடம் தான். மத்தபடி மக்கள் எந்த ஒரு பொருள் வாங்கவும், வெளியூர் போகவும் மேல இருந்த அடர்ந்த காடு வழியா தான் கீழே வரனும். நான் ஜவ்வாது மலையில வேலை செய்யும் போது எனக்கு கல்யாணம் ஆகல, அதனால எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலகத்திலேயே இருந்துப்பேன். சனி ஞாயிறு லீவ்ல இங்க வந்திடுவேன். ஓட்டு கேட்க மட்டும் வரும் அரசியல்வாதிகள் இந்த மக்களின் கோரிக்கை எல்லாம் கேட்டிட்டு தேர்தல் முடிஞ்சதும் காத்தோட விட்டிடுவாங்க, அரசின் எல்லா சலுகைகளும் இவங்களுக்கு வாங்கி தரனும் என்ற என்னம் எனக்கு இருந்தது. ஒரு நாள் வழக்கம் போல வெள்ளிக்கிழமை சாயுங்காலம் மலையை விட்டு கீழே இறங்கினேன் வீட்டிற்கு போக, என் கூட துணைக்கு ஒருவன் வந்தான். இருட்டிக் கொண்டே போனதும் பயம் நெஞ்சை உலுக்கியது. என்ன செய்வது என தெரியாமல் முழித்தேன்."

"வேகமா நடங்க அண்ணே கீழே போயிடுவோம்" என்றான் துணைக்கு வந்தவன்.

இருவரும் வேகமாக நடக்க துவங்கினோம், பல வித்தியாசமான சப்தங்கள் காதில் விழுந்தது, பயத்தில் செய்வதறியாது விழித்தோம்.

நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்த போதே ஒரு உருவம் எங்கள் கண்முன் தோன்ற இருவரும் மயங்கி கீழே விழுந்தோம்.

மறுநாள் காலையில் தான் எங்களுக்கு மயக்கம் தெளிந்தது, அதற்கு பின் என்னை வேறு ஊருக்கு பணி மாற்றம் செய்துவிட்டனர் என தன் அனுபவ கதையை முடித்தார் ராகினியின் தந்தை.
" இன்ட்ரஸ்டிங் அப்பா..... அந்த உருவம் யாரு, எதற்கு உங்க முன்னாடி அந்த உருவம் வந்தது " என கேள்வி மேல் கேள்வி கேட்டாள் ராகினி.

"அந்த உருவம் யாரு?, எதற்கு எங்க முன்னாடி வந்ததுனு அதெல்லாம் தெரியல  மா, நாங்க பாத்ததுக்கு பிறகு கூட அந்த உருவம் அடிக்கடி அங்கயே தான் உலாவுதுனு சொல்ராங்க, மலைப்பகுதி மக்களே அந்த காட்டை பயந்து பயந்து தான் தாண்டி கீழ வராங்க, நீங்க எல்லாம் போயிட்டு பயந்தடிச்சி வந்தீங்க உன் அம்மா என்ன சும்மா விட மாட்ட, நீயும் போக வேண்டாம், அந்த ராணி கிட்டயும் சொல்லிடு" என கூறிவிட்டு தன் படுக்கை அறைக்கு சென்றார் ராகினியின் தந்தை.

இந்த கதைகளை கேட்டதும் ராகினியின் மனம் அந்த இடத்திற்கு போக வேண்டும், அப்படி என்னதான் இருக்கிறது அங்கே என பார்க்க வேண்டும் என எண்ணிணாள்.

காலையில் பிள்ளையார் படத்தில் இருந்து பூ விழுந்ததை கெட்ட தருணம் என என்னிய ராணி வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. அவ்வளவு பயந்தாங்கோலி. ராணியின் என்னப்படி காடு என்றால் மரம் அருவி செடி கொடி பசுமை இவை மட்டுமே.

ராணியிடம் தன் தந்தை கூறியதை தெரிவித்தால் அவள் ப்ளானையே க்ளோஸ் பண்ணிடுவா, அவக்கிட்ட இத சொல்ல வேண்டாம், வேற மாதிரி பேசுவோம் என முடிவெடுத்தாள் ராகினி.

செல்போன் சப்தம் கேட்க ராணி வந்து போனை எடுத்தாள்.

"ஹாலோ நான் தான் டி, என்ன பண்ற" என்றாள் ராகினி.

"டிவி தான் டி, நீ என்ன பண்ற? சாப்பிட்டயா?, நம்ம ட்ரிப் பத்தி அப்பா கிட்ட பேசினயா? " என வினாவினாள் ராணி.

" கேட்டேன் டி, காடுலாம் வேண்டாம் அது இதுனு அட்வைஸ் செய்யராரு, உன்னையும் போக வேண்டாம்னு சொல்ராரு" என்றாள் ராகினி.

"ஏன் டி, அங்க எதாவது பிரச்சினை இருக்குமோ? " என்றாள் ராணி.

"அதெல்லாம் ஒன்னும் இல்லடி, நாம பெண் பிள்ளைங்க , அங்க போயிட்டு எப்படி சமாலிப்போம்னு பயப்படுராங்க, பேசாம வேற எதாவது ஊருக்கு போரோம்னு சொல்லிடரேன், ஆனால் நாம போக போரது ஜவ்வாது மலைக்கு தான், எப்படி என் ப்ளான்" என ராகினி கூற, " நீ எதாவது சொல்லு, எங்க கூட நீயும் வந்தா போதும் , ஜாலி தான் " என கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள் ராணி.



Bạn đang đọc truyện trên: AzTruyen.Top