பயணம் 24
குழந்தைகளை உள்ளே அனுப்பியப் பின், சுற்றிமுற்றிப் பார்த்தான் ராஜா. அந்த உருவம் தென்படவில்லை, ராஜாவின் கோபம் தலைக்கு மேல் ஏறியது, நேராக ராணி இருக்கும் இடத்தை நோக்கி நடந்தவன், அவளின் முகத்திற்கு முன் சென்றான், அவளின் மென்மையான கன்னத்தை தன் இரு கரங்களால் பிடித்தவன், தன் இதழினை அதனில் பதித்தான், பின் அங்கே நிற்காமல் வேகமாக மீண்டும் அந்த மரத்தின் அருகில் சென்று, கைக்கட்டி நின்றான். இதனை எதிர்பார்க்காத ராணி பயந்துப்போனால், "இவனுக்கு என்னவாயிற்று, திடீரென வந்தான், முத்தம் கொடுத்தான், வேகமாக நடந்து மரத்தின் கீழே சென்று நிற்கிறான்" என யோசித்தவளாய் இருந்தாள்.
ராணியிடம் ஏதேனும் உரிமை எடுத்துக்கொண்டால் அந்த உருவம் இவன் முன் வரும் என ராஜா நன்கு தெரியும், அதனால் தான் ராணியிடம் அப்படி நடந்துக்கொண்டான். ராஜா நினைத்தது போலவே அவ்வுருவம் அவன் முன் வந்தது, "ராணிய நெருங்காதனு உனக்கு எத்தன முறை சொல்வது? கேக்க மாட்டியா??" என்ற அச்சிறுவனின் குரல் ராஜாவின் செவிக்கு விழ, "நீ எனக்கு தானே இந்த விதிகளை போட்டாய், குழந்தைகளை ஏன் தள்ளிவிட முயற்சித்தாய்?? எதுவா இருந்தாலும் அது என்னோட முடியட்டும், தேவையில்லாம மத்தவங்களுக்கு தொந்தரவு கொடுத்த, நான் பயங்கரமானவனாக மாறிடுவேன்" என ராஜா சற்று குரலை உயர்த்தி கோபத்துடன் பேச, "ஹா ஹா ஹா....." என சிரித்துக்கொண்டே அங்கிருந்து மறைத்தது அவ்வுருவம்.
கடுப்பில் இருந்த ராஜா தலையில் கையை வைத்துக்கொண்டு கீழே அமர்ந்தான், அங்கே வந்த ராதிகா "என்ன ராஜா? ஏன் இப்படி உடைஞ்சிபோயி உட்காந்திருக்க? என்ன விசயம் ? எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லு? " என ராதிகா கேட்க, "அதெல்லாம் ஒன்னுமில்லை அண்ணி" என பதில் கூறினான் ராஜா. "நான் உன்கிட்ட அண்ணி மாதிரியா நடந்துக்கறேன்? ஒரு பிரண்ட் போல தானே ப்ரியா பேசுறேன், ஏன் என் கிட்ட மறைக்கிற?? " என்று கேட்ட ராதிகாவின் கைகளை பிடித்துக்கொண்டு சற்று கண் கலங்கினான் ராஜா.
"டேய் ராஜா, என்னடா கண் கலங்குற? அப்படி என்னாச்சிடா?" என சற்று பதற்றத்துடன் மீண்டும் கேட்டாள் ராதிகா.
"அண்ணி, அது வந்து ..." என முதலில் இழுத்த ராஜா, பின் ராதிகாவுக்கும் இவ்விசயம் தெரிவது நல்லது தான் என நினைத்து நடந்த அனைத்தையும் கூறினார். ராஜா பேசி முடித்தப்பின் ராதிகாவிற்கு தலையே சுற்ற ஆரமித்துவிட்டது.
"டேய் இவ்வளவு பெரிய விசயத்தை நீங்க ஏன் கிட்ட இருந்து மறைச்சிருக்கிங்க ? உங்கள ஏதோ விளையாட்டு பிள்ளைங்கனு நினைச்சா இந்த விசயத்தை இவ்வளவு சாதாரணமா இத்தனை நாள் மறைச்சிருக்கிங்க" என கோபமாக பேசினால் ராதிகா.
"இல்ல அண்ணி, நாம என்ஜாய் பண்ண வந்தோம் , இப்ப இந்த பிரச்சினைய சொன்ன எல்லாரும் பயந்து இருப்போமே தவிர யாரும் ஜாலியா இருக்க மாட்டாங்க , அதான் அண்ணி, இது எங்களுக்குள்ளயே வச்சிக்கிட்டோம்" என ராஜா கூறினான்.
"சரி ராஜா, கவலைய விடு , இனி நான் பார்த்துக்கொள்கிறேன், யூ டோன்ட் வோரி...." என ராதிகா கூற, "டேங்க் யூ அண்ணி" என கூறிவிட்டு அவ்விடத்தைவிட்டு சென்றான் ராஜா.
"சித்தப்பா நாம எப்போ மலை மேல ஏற போகிறோம் ???" என குட்டீஸ் கோரசாக கேட்க, பதில் அளிக்க முடியாதவனாய் விழித்தான் ராஜா. "இதோ கண்ணா, ஒரு பத்து நிமிசத்துல கிளம்பிடலாம்" என கூறிவிட்டு அவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆனான் ராஜா.
ராணியும் ராகினியும் மலையேர தயாராகிவிட்டு ராஜாவிற்காக காத்திருந்தனர்.
"இந்த ராஜா, அக்கா குட்டீஸ் எல்லாம் எங்க இருக்காங்க?" என ராணி கேட்க, "அதான் எனக்கும் தெரியல டி, சீக்கிரம் கிளம்பி இருங்க புரப்படலாம்னு சொல்லிட்டு இப்போ எங்க போனாங்க" என ராணியிடம் புலம்பிக்கொண்டிருந்தாள் ராகினி.
"அது சரி ராணி, உங்க லவ் பத்தி எப்போ ராதிகா அக்காவுக்கு சொல்ல போறிங்க? என்ற ராகினியை பார்த்து, " அட நீ வேற டி, இந்த ராஜாவ நான் லவ் பண்ணுரேன்னு சொன்னா கூட ராதிகா அக்கா நம்ப மாட்டாங்க, இவங்க மட்டும் இல்ல, எங்க வீட்டுல என் அம்மா அப்பா கூட நம்ப மாட்டாங்க" என ராணி கூற, "ஏன் டி? என ஆச்சரியத்துடன் கேட்டாள் ராகினி.
"ராஜாக்கும் எனக்கும் சின்ன வயசுல இருந்தே பிரச்சனை மட்டும் தான் டி, எப்பவும் என்னை வம்புக்கு இழுப்பான், இல்லையினா நான் அவன அவன் அம்மா கிட்ட எதுக்காச்சும் போட்டுக்கொடுப்பேன், இதே தான் எங்க வேலையே, இப்ப போயிட்டு நான் இதை சொன்னா, நல்லா என்ன கலாய்க்க போறாங்க " என வெட்கத்துடன் கூறிக்கொண்டு இருந்தாள் ராணி.
"சூப்பர் டி, அப்போ நீ வீட்டுல சொல்லும் போது என்னையும் கூப்பிடு, நானும் பார்க்கனும் , ஜாலியா இருக்கும்ல " என்ற ராகினியை, "அடிப்பாவி என்ன எல்லாரும் சேர்ந்து கிண்டல் அடிப்பாங்க நீ அதை ரசிச்சிக்கிட்டு இருப்பியா??, கண்டிப்பா உன்ன கூப்பிட மாட்டேன் போடி" என்றாள் ராணி.
பெண்களுக்கு கேலிப்பேச்சு எப்போதும் கைவந்த கலை, தன்னால் இயன்ற வரை ராணியை கிண்டலடித்து வெறுப்பேற்றி, அதில் ஆனந்தப் பட்டால் ராகினி. "என்ன பண்றது இந்த ட்ரிப்புல நமக்கு யாரும் செட் ஆகல, அட்லீஸ்ட் இவளை கிண்டலடிச்சாச்சும் மனச தேத்திக்க வேண்டியது தான்" என ராகினி மனதிற்குள் நினைக்க, "ஹோலோ மேடம், நீங்க மையின்ட் வாய்ஸ்னு நினலச்சி சத்தமா பேசுறிங்க" என அவளிடம் கூறிட்டு அங்கிருந்து ஓடினாள் ராணி.
அவளை துரத்தியவேறே ஓடினாள் ராகினி. நேராகா ஓடிக்கொண்டே முன் நின்ற ராஜாவைப் பார்க்காமல் அவன் மீது ராணி மோத, பத்தடி தொலைவிலேயே நின்றுவிட்டாள் ராகினி.
"ஏய் லூசு, உனக்கு கண்ணு தெரியாதா?? இப்படி வந்து இடிக்கிற, உனக்கு என்ன சின்ன பிள்ளையினு நினைப்பா? ஓடி பிடிச்சி விளையாட்டிக்கிட்டு, போ அந்தப்பக்கம் கடுப்பேத்தாம" என சுள்ளென எரிந்து விழுந்தான் ராஜா.
"நேத்து வரைக்கும் நல்லா தானே இருந்தான், இன்னைக்கு என்னாச்சி?? இப்போ எதாச்சும் பேசினா கண்டப்படி திட்டுவான், அப்புரம் இவனுக்கு இருக்கு கச்சேரி" என மனதில் நினைத்துக் கொண்டே அங்கிருந்து நிகர்ந்தாள் ராணி.
அவளின் அருகில் வந்த ராகினி, "என்னாச்சி டி ராஜாக்கு இப்படி திட்டிட்டு போறான்?" என கேட்க, "தெரியல டி, ஏதோ டென்ஷன்ல இருக்கான், இந்த டைமில பேசி அவன இன்னும் கடுப்பேத்த கூடாதுனு தான் அமைதியா வந்துட்டேன்" என ராணியின் பதிலை கேட்ட ராகினி, "சூப்பர் டி, இப்படி தான் இருங்கனும், ஒருத்தர் கோபமா இருக்கும் போது இன்னோருத்தர் அவங்கள புரிஞ்சிக்கிட்டு அமைதியா போயிடனும், ஏட்டா போட்டியா பேசினா தான் பிரச்சினை பெருசாகும், காதல் என்ற மூன்று எழுத்து மந்திரத்தை கடைசி வரை கட்டி காப்பாத்த அமைதி,பொறுமை, அன்பு இந்த மூன்றெழுத்து வார்த்தைகள் ரொம்ப முக்கியம், ஒருத்தர் மனநிலைய இன்னோருத்தர் புரிச்சிக்கனும், நீ கிடைச்சதுக்கு ராஜா ரொம்ப லக்கி டி" என்றாள் ராகினி.
"இல்ல டி, நான் தான் லக்கி ராஜா எனக்கு கிடைச்சதுக்கு" என ராணி கூற, ராகினி அவளை பார்த்து புன்னகை உதிர்த்தாள்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top