9
மண் வாசனை மாறாது மண்ணிலே கிடக்கிறோம், வறட்சியில் வறுமையில், பச்சை பசேல் என பூத்துக் குலுங்கும் வயல் வெளிகளெல்லாம் காய்ந்து கிடைக்கிறதே, என்று மனம் புழுங்கி கதறி அழுவதை யாரறிவார்.
மழை பெய்யவில்லை எனும் இயற்கைக் காரணி ஒரு புறமென்றால் சுற்றுப்புறச் சூழலை குப்பைகளாக்கி, யாவற்றையும் விசமாக்கிக் கொண்டிருக்கிறோமென்ற ஆதங்கம் மேலோங்க கண்ணீர் விடுவதைத் தவிர வேறென்ன செய்வதென்று புலம்புகிறோமே.
வேடிக்கை பார்ப்பதே வாடிக்கையாகி விட்டதென்பதால்,
யாரிடம் சென்று பேசுவது??
மனதில் சோம்பேறியென்னும் பேய் பற்றிக் கொண்டதாலேயே வெட்டியாய் உட்கார்ந்து வெட்டிநியாயம் பேசிறேனென்று என்னை தூற்றும் நண்பர்களே அதிகமென்று நானறிகிறேன் நடைமுறையிலே
கற்களாக பல மன உணர்வுகள் தாக்க, மரியாதை இல்லாத இடத்திலே வாழ்வதே கொடுமையாய் நாளும் அனுபவிக்க, பையில் வெறுமையோடு, பயணம் தொடர, பயணத்தின் முடிவுதான் புனிதம் தந்திடுமோ???
கடமை யாதெனக் குழம்பும் மனதின் குழப்பம் தீர குளறுபடியான சமுதாயம் எப்போது மாறிடுமோ, என்று கேள்விக் கேட்டு காலம் கரைகிறது....!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top