37

என் வறுமையை போக்க நான் வேலைக்கு சென்றது குற்றமோ ?

இல்லை பெண்மை என்னும் குணம் மறந்து
குடும்ப பலு அதிகம் சுமந்தது என் தவறோ ?

கற்பிழந்து நான் கல்லறை சென்ற பின்னும்
இந்த காமுகர்களுக்கு கரிசனம் காட்டுவது ஏன் ?

என்னை ரத்தமும் சதையும் என எண்ணி
ஒரு மாமிச விருந்தாக்கினர் – இந்த மனித மிருகங்கள்

இந்த கல்லறையிலும் கண்ணித்தன்மை இழந்தவள் என
கலங்கம் சூட்டப்பட்டேன் நான் !

கதிரவன் மறைந்த நேரத்தில் என் கதறல்கள் கேட்கவில்லலையோ !

என்னை திரும்பவும் பார்க்க முடியாது என்பதை ஏற்க
முடியாமல் கதறி கண்ணீர் சிந்திடும் என் உறவுகள் ஒரு புறம் !

என்னைச் சுமந்த கருவறை கறைந்து போனது
போல் வலி கொல்லும் என் தாய் !

என் வீட்டு துயரத்தை துடைக்க தலை நிமிர்ந்த எனக்கு
துணிச்சல் கொடுக்கல கடவுள் இந்த தலை குனிவை சந்திக்க
ஏனோ தெரியல !   

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top