3


வீட்டிலோ நான்கு பிள்ளைகள் எங்களை காக்கும்
பெற்றோரோ இரண்டு கண்கள்,

காட்டிலே என் அம்மா சேற்றிலே கை வைத்தால்
வீட்டிலே நாங்கள் சோற்றிலே எங்கள் கை.

விதியின் தாண்டவபிடியில் சிக்கினார் எந்தந்தை
வறுமையின் கோரப்பிடியில் வீழ்ந்தாள் எந்தாய்

வீட்டில் நானோ முதல்பிள்ளை அதனால்
முழுப்பொறுப்புக்களையும் ஏற்பதில் தப்பில்லை

வேறுவழியுமின்றி என்னை நம்பி இருக்கின்ற
மூன்று தங்கைகள் நான் என்ன செய்ய, ஐயகோ

நான் படிப்பதோ பத்தாவது எந்தாய்
ஒருவேளை சமைப்பதோ பத்தாது.

எனக்கோ மூன்று தங்கைகள், அவர்கள்
நம்பியிருப்பதோ என் இரு கைகளை

விதியின் விளையாட்டை தன்பிடியில் கொண்டான் இறைவன்
அதை வெல்ல நம்மால் முடியுமோ

படிக்க கற்றுக்கொண்டால் படிக்கலாம், ஆனால்
ஏழ்மையின் பிடியில் தப்பிக்க என்ன வழி

ஏழ்மை ஒரு நோயல்ல, அது தீர்க்க மருந்துமில்லை
பிறக்கும்போதே நாம் ஒன்றும் லச்சாதிபதியுமில்லை

இறக்கும் போதும் எதையும் கொண்டு செல்வதுமில்லை
பிறகு ஏன் வாழும்போது ஏழ்மை வாட்டுகிறது..

மக்களை காக்கும் இறைவா எங்கிருக்கிறாய்
எழுந்து வா.. ஏழ்மையினை போக்க வா...
ஒன்றே நிலையின்பதை நிலை நாட்டிட வா..
வாழ்க சமுதாயம்...வளர்க மக்கள்.....................!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top